கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28 (Post No.12,472)

Kanakagiri Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,472

Date uploaded in London – –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pictures are taken from Wikipedia

 கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28

119.கனககிரி கனகாசலபதி கோவில்  (Kanakachalapathi Temple)

இது ஒரு விஷ்ணு கோவில். இந்தப் பெருமாள் கோவில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கொப்பல் Koppal என்னும் ஊருக்கு அருகில் உள்ளது கொப்பலிலிருந்து 3 கி.மீ. பழங்காலத்தில் சுவர்ண கிரி என்று அழைக்கப்பட்டது கனகம்ஸ்வர்ணம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு தங்கம் என்று பொருள்.

கனக முனி என்பவர் தவம் செய்தஇடம் ஆதலால் இந்தப்பெயர். பண்டைய கல்வெட்டுகளில் கோபனா என்று அழைக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள கிராமங்களான பாலிகுண்டு மற்றும் கவிமாதா ஆகிய இடங்களில் பேரரசர் அசோகரின் (BCE . 3 ஆம் நூற்றாண்டு) இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாம் அமோகவர்சனால் (CE  814-878) எழுதப்பட்ட மிகப்பழைய  கன்னட இலக்கியமான ‘கவிராஜமார்க ‘ என்ற நூலில், ‘விதித மகா கோபன நகரம்’ என்ற வாக்கியத்தில் இந்த ஊர் உள்ளது

கோயில் அமைப்பு

கனகாசலபதி கோயில் விஜயநகரக் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது  பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.  கோவில் விசாலமான மண்டபம், பிரம்மாண்டமான யாளி தூண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூன்று நுழைவாயில்களில் நன்கு கட்டப்பட்ட கோபுரங்கள் காணப்படுகின்றன கோயிலில் உள்ள சிற்பங்களில் புராண உருவங்களும், கருங் கல்லில் மன்னர்களும், இராணிகளும் செதுக்கப்பட்டுள்ளனர். கன்னட பழமொழி : “கண்கள் உள்ளவர்கள் கனககிரியையும்கால்கள் உள்ளவர்கள் ஹம்பியையும் பார்க்க வேண்டும்.” என்று  கூறுகிறது  பங்குனி மாதத்தில்,  “கனகாசலபதி திருவிழா” என்ற பிரபல திருவிழா நடைபெறுகிறது.

xxx

120.தார்வாட் வட்டார கோவில்கள்

அம்ருதேஸ்வர் கோவில் Amruteshwara temple

இது சிவன் கோவில்.; இங்குள்ள கோவில்கள் சாளுக்கியர் கால கோவில்கள ஆகும். சுமார் 1000 ஆண்டு வரலாறு உடையவை.; ஹூப்ளி நகரிலிருந்து 35 கி.மீ.

கருங் கல்லில் அமைக்கப்பட்ட 76 தூண்கள் உள்ளன. கல்யாணி சாளுக்கிய வம்ச கால சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம் .

சோமேஸ்வரர் கோவில் Someshwara temple

இதுவும் சிவன் கோவில் இது சுமார் 800 ஆண்டு பழமையானது . இரு புறத்திலும் பச்சைப் பசேலென்ற பயிர்களைக் காணலாம்.ஷால்மல நதி அருகில் ஓடுகிறது. சதுர் புஜ கணபதியையும், மஹிஷாசுர மர்தனியையும் தரிசிக்கலாம்..

நுக்கிகேரி  என்னும் இடத்தில் உள்ள ஹனுமார் கோவிலுக்கும் Hanuman temple at Nuggikeri பக்தர்கள் வருகின்றனர்.

xxxx

ஷண்முக லிங்கேஸ்வரர் கோவில் Shambhulingeshwara temple

சிவன், பார்வதி சிலைகளை வழிபடலாம் 11 ஆம் நூற்றாண்டு சாளுக்கியரின் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன .நுழை வாயிலில் உள்ள சிங்கத்தின் சிலை அனைவரையும் கவரும் .

மஹாலக்ஷ்மி கோவில் Mahalaxmi temple situated in Kalghatagi sub division

ஆண்டு முழுவதும் லெட்சுமியை வழிபட்டு அனுக்கிரஹம் பெற பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் .

தார்வாட் – ஹூப்ளி (பழைய தமிழ்ப் பெயர் பூப்பள்ளி ) ஆகிய இரண்டு நகரங்களும் சுமார் 20 கி.மீ

இடைவெளியில் அமைந்துள்ளதால் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன ; இந்த வட்டார ராய்பூரில் ஹரே கிருஷ்ணா கோவில் இருக்கிறது  ISCKON temple at Rayapur . ஹூப்ளி சித்தாரூட மடம்  Siddharoodha Math தார்வாட் ஸ்ரீ முருக மடம்  Sri Murugu Math , சங்கர மட ம் , Shankara Math , தபோவனம் , பசவண்ண கோவில்  Basavanna temple  ஆகியன பக்தர்களைக் கவரும் இடங்கள் ஆகும்.

Xxxxx

121. சந்திரமெளலீஸ்வர கோவில் Chandramouleshwara Temple

சந்திரமௌலீசுவரர் கோவில் (Chandramouleshwara Temple) சிவன் கோவில்.உன்கால் ஏரிக்கரையில் அமைந்துள்ளது Unkal lake  உன்கால் ஏரி, ஒரு  அழகான, இயற்கையான நீர்நிலை.

கோவிலின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் உள்ளன. மொத்தம் பன்னிரண்டு கதவுகள் உள்ளன. இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. சன்னதியின் பிரதான தெய்வமான சந்திரமௌலீசுவர் கிழக்கு நோக்கி உள்ளார் . மற்றொரு லிங்கமானது நான்கு முகங்களைக் கொண்டிருப்பதால் இது சதுர்முகலிங்கேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்

xxxx

122.நாகரேசுவர் கோவில் Nageshwar temple Bankapura

ஹூப்ளி- தார்வாட்டிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் ஹவேரி Haveri நகரம் உள்ளது  இங்குள்ள நாகேஸ்வரர் கோவில் கோட்டை, அருகிலுள்ள மயில்கள் சரணாலயம் (Peacock Sanctuary)  ஆகியன பிரசித்தமானவை .

அடில்ஷா என்ற மன்னனின் முஸ்லிம்படைகள் இங்குள்ள கோவில்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன.

 கோட்டைப்  பகுதியில் 66 தூண்களைக் கொண்ட நாகரேசுவர் கோயில் உள்ளது (உள்ளூர்வாசிகள் இதை ஆரவட்டு கம்படா குடி என்று அழைக்கின்றனர் – அதாவது கன்னடத்தில் 60 தூண்கள் கோயில் என்று பொருள்) இது சிவன் கோவில் . முஸ்தபா கானின் ஆட்சியின் போது, அதிகமாகச் சேதமடைந்தன. ஆனால் தூண்கள், கலைச் செதுக்கல்கள் , கூரை வடிவமைப்புகள் அப்படியே உள்ளன.

xxxx

123.ஹூலி (HOOLI )வட்டார கோவில்கள்

பெல்காம் மாவட்டத்தின் சௌந்தட்டி(Saundatti) யிலிருந்து சுமார் 9 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு நகரம்.  இங்கு, பஞ்சலிகேசுவரர் கோயில், திரிகூடேசுவரர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன . , ஏராளமான கோவில்களையும் கோட்டையையும் கொண்டுள்ளது. முன்காலத்தில்  மகிசிபதிநகர் என்று அழைக்கப்பட்டது.

இங்குள்ள பஞ்சலிங்கேசுவரர் கோயிலின் அழகிய கட்டிடக்கலை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தக் கோயிலுக்கு எதிரே நவீன ஹரி மந்திர் ஒன்று உள்ளது. ஞானேஷ்வரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள சாந்த் கலாச்சாரம் அல்லது நாத சைவப் பாரம்பரியம் இங்கு செழித்தது.

ஹூலியில் உள்ள பிற கோவில்கள் பின்வருமாறு:

அந்தகேசுவரர் கோயில்

பவானிசங்கர கோயில்

காலமேசுவரர் கோயில்

காசி விசுவநாதர் கோயில்

மதனேசுவரர் கோயில்

சூர்யநாராயணன் கோயில்

தாருகேசுவரர் கோயில்

ஹூலி சங்கமேசுவர் அஜ்ஜனாவரு கோயில்

பீர்தேவர் கோயில், ஹூலி

xxxxx

124. குந்தோல் சம்புலிங்கேஸ்வர கோவில் Shambulingeshwara Temple Kundgol

ஹூப்ளியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு.

பாரத் ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷியால் மேலும் புகழ் பெற்ற ஊர் இது .

பண்டிட் பீம்சென் ஜோஷி ஒரு குருவைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்தார். கடைசியாக ஒரு குந்தோலில் சவாய் கந்தர்வன் என்ற இசைக்கலைஞரை கண்டறிந்து அவரிடம் சீடராக சேர்ந்தார்.

11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கும் இடம்.

மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. . தூண்களில் உள்ள சிற்பங்களும் உருவங்களும் நன்கு வெட்டப்பட்டுள்ளன.

கோயிலின் கதவு படிகளின் பக்கத்தில், சிங்கத்தின் செதுக்கல்கள் அதன் வாயிலிருந்து ஒரு நீண்ட சுருளை வெளியிடுகின்றன.

இந்த கோயில் சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது சேதமடைந்தாலும், கோயிலின் வெளிப்புறம் தாமரை மற்றும் கீர்த்திமுக முகங்களாலும், நூற்றுக்கணக்கான உருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் படைகாளால் சேதப்படுத்தப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று .xxxx

Someswara temple at Lakshmaneswaram

125. லக்ஸ்மேஷ்வரர் சிவன் கோவில் Lakshmaneshwara Temple

இது கடக்GADAG கிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், ஹூப்ளி HUBLI யிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் உள்ளது.

முஸ்லீம்களால் கடுமையாக சேதமாக்கப்பட்ட கோவில் இது. இப்போது கோபுரங்கள் இல்லை

த்ரிகூட அமைப்புடையது; அதாவது மூன்று கருவறைகளையும் ஒரே மண்டபம் இணைக்கும் ஒன்றில் சிவலிங்கம் இருக்கிறது மற்ற இரண்டில் இல்லை

பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன; ஆயிரம் ஆண்டுக்கும் மேலான வரலாறு உடைத்து .

எஞ்சியுள்ள கட்டிடங்களின் சுவர்களில் சப்த மாத்ரிகா, கஜலட்சுமி, அன்னப் பறவைகள், பூ வேலைப்பாடுகள், அப்சரஸ்கள் குறிப்பிடத் தக்கவை

.xxxx

To be continued……………………………..

Tags: கர்நாடக மாநில, கோவில்கள் – Part 28, ஹூப்ளி, தார்வாட், கனககிரி

Leave a comment

Leave a comment