கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 30 (Post No.12,484)

Picture of Durga Temple , Aihole

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,484

Date uploaded in London – –  30 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 30

127.ஐஹோல் Aihole Monuments

அய்கொள என்பது சரியான கன்னட உச்சரிப்பு. ஆர்யபுர என்ற பெயரும் உண்டு  பட்டடக்கல் ,பாதாமி குகைக்கோயில் இது அருகில் அமைந்துள்ளது. பாகல்கோட் ஜில்லாவில் மலப்பிரபா ஆற்றின் அருகில் இருக்கிறது இதுவும் சாளுக்கியர் கால கலைகளை உடைய கோவில்.

முதலில் இதுதான் சாளுக்கியர் தலைநகராக இருந்தது. இங்குள்ள கல்வெட்டுகள் தென்னிந்தியாவின் முக்கிய வரலாற்றை இயம்புகின்றன.

பெலகாமிலிருந்து 190 கி.மீ; பாதாமியிலிருந்து 23 கி.மீ ; பட்டக்கல்லி லருந்து பத்து கி.மீ

6-ஆம் முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை பல வம்சங்ககளின் புத்த , சமண, இந்து சமய சிற்பங்களை உடைத்து.

ஐஹோலி ல் 16 தனித்தனி கோவில்களும் 4 குடைவரை சிற்பங்களும் உள்ளன. 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள எல்லா கோவில்களையும் சேர்த்தால் 150 கோவில்களை நெருங்கிவிடும்; இந்துக் கோவில்களின் எண்ணிக்கை 100. ஏனையவை சமண, புத்த மத வழிப்பா ட்டு இடங்கள் இந்துக்  கோவில்களில் சிவன், விஷ்ணு, துர்க்கை, சூரியன் ஆகியோரைக் காணலாம். சமண சிற்பங்களில் மஹாவீரர், பார்ஸ்வநாதர், நேமிநாதர் ஆகியோர் அடக்கம் . ஆழமான படிக்கட்டு கிணறுகள், அழகான குளங்கள் முதலியனவும் கண்டு ரசிக்க வேண்டியவை.

கிபி 450களில் உருவாக்கப்பட்ட அய்கொளெ, சாளுக்கிய அரசர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. 

Historical Inscriptions

மகா பாரதம், காளிதாசர் , கலியுகம் பற்றிய வரலாறு சொல்லும் கற்கள் !!!

 Copy of Famous Aihole Inscription

இரண்டாம் புலிகேசியின் புகழை எடுத்துரைக்கும் கல்வெட்டு ஒன்று மெகுடி சமணர் கோவிலில் இருக்கிறது.. இக்கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அரசரவைப் புலவர் ரவிகீர்த்தியினதாகும். கிபி 634 காலத்தைச் சேர்ந்த இக் கல்வெட்டு ஸம்ஸ்க்ருத  மொழியில் பழைய கன்னட எழுத்துக்களைக்கொண்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு அய்கொளெAIHOLE INSCRIPTION  கல்வெட்டு என அழைக்கப்படுகிறது. இதில் ஹர்சவர்த்தனரை எதிர்த்து அடைந்த வெற்றி, பல்லவர்களை வென்றது, தலைநகரை அய்கொளெயிலிருந்து பாதாமிக்கு மாற்றியது போன்ற இரண்டாம் புலிகேசியின் சாதனைகள் பற்றிய குறிப்புகளும், காளிதாசர் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன.

மகாபாரதப் போர் மற்றும் கலி யுகம் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்கள் இதில் கிடைக்கின்றன.

Durga Temple

துர்க்கா கோவிலின் வடிவம் எல்லோரையும் கவரக்கூடியது. ‘துர்க’ என்றால் கோட்டை என்று பொருள். இது கோட்டை வடிவில் அமைந்திருப்பதோடு உள்ளே கண்ணைக் கவரும் சிற்பங்களைக் கொண்டுள்ளது.

 புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன

சிவன் கோவிலுக்கு முஸ்லீம் பெயர் !!

லாட்கான் கோவில் (LADKHAN) அய்கொளெயில் உள்ள சிவன் கோவிலாகும் பீஜப்புர் சுல்தானின் படைத்தளபதி லாட்கான், அங்கே குறுகிய காலத்துக்கு வசித்ததால் சிவன் கோவிலை முஸ்லீம் பெயரால் அழைத்தனர்  ; ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். லாட் கான் கோயில் ஒரு கருவறையையும் அதன் முன்பமைந்த இரு மண்டபங்களையும் கொண்டுள்ளது. கருவறைக்குள் லிங்கத் திருவுருவம் காணப்படுகிறது. கருவறையின் முன்புள்ள முகப்பு மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடமைந்த 12 தூண்கள் உள்ளன. முகப்பு மண்டபத்துக்கு முன்புள்ள அவை மண்டபத்தின் தூண்கள், . கூரைகளில் பூ வேலைப்பாடுகள் செதுக்கப் பட்டு ள்ளன

Xxx

சூரியநாராயணர் கோவில்

சூர்யநாராயணா கோவிலில் 2 அடி உயரமுள்ள சூர்யநாராயணர் சிலையும் உஷா தேவி சந்த்யா தேவி புடை சூழ நிற்கின்றனர் இது எட்டாம் நூற்றாண்டுக்கோவில் .

XXXX

இங்குள்ள மியூசியமும் காணவேண்டிய முக்கிய இட ங்களில் ஒன்றாகும்

XXXX

பார்க்க வேண்டிய ஏனைய இடங்களின் பட்டியல்

இராவண பாடி குகை,


ராவணபாடி எனும் குகைக்கோயில் இருப்பதில் பழமையான குடைவரைக் கோவில் ஆகும்

XXXX

காளகநாதர் கோவில்
காளகநாத கோயில்கள்  தொகுப்பானது மலப்பிரபா நதிக்கரையில் உள்ள 38 கோயில்களை உள்ளடக்கியதாகும். இந்த தொகுப்பின் பிரதான கோயில் காளகநாத கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது 8-ம் நூற்றாண்டைச்சேர்ந்தது  சிவன்  கோவில்.
R

ஜோதிர்லிங்க கோவில்குச்சப்பய்ய குடி (கருவறை) யேனியர் கோவில் கள் இராமலிங்கம் கோவில் கள் சக்ரா குடி குச்சிமல்லி கோவில்

படிகெர குடி (Badigera gudi)

அம்பிகெர குடி (Ambigera Gudi)

சிக்கி குடி (Chikkigudi Group)

கௌடர் குடி (Gaudara gudi)

ராச்சி குடி (Rachi gudi)

குச்சப்பய்ய மடம் (Huchappayya Matha)

காளபசப்பன்ன குடி (Halabasappana Gudi)

கொண்டி குடி (Kontigudi group of temples),

திரியம்பகேசுவரர் கோவில் (Triyambakeshvara Group)

 XXX SUBHAM XXXXX

TAGS- ஐஹோல், சாளுக்கியர், முக்கிய கல்வெட்டு, துர்கா கோவில், மெகுடி சமணர் கோவில் , கர்நாடக , புகழ்பெற்ற கோவில்கள் ,part- 30 

Leave a comment

Leave a comment