Ganesh intalled next to Tamil Scholar Kambavarithi Jeyaraj’s House in Colombo
Vajra Road Temple (of Ganesh), Colombo
Post No. 12,494
Date uploaded in London – – 17 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலவச இலங்கைச் சுற்றுப்பயணம்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும் , கர்நாடக மாநிலத்தின் 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும் இந்த பிளாக்கில் ஏற்கனவே வெளியாகின. அவை இரண்டும் புத்தகங்களாக வெளி வருகின்றன . அதே ஜோரில் ஆந்திரம், கேரளம் பற்றி எழுதுவதற்காக குறிப்புகளை எடுக்கும் தருணத்தில் செப்டம்பர் 2023-ல் இலங்கைத் தீவுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதலில் இலங்கைத் தீவில் உள்ள 108 புகழ் பெற்ற இந்துக் கோவில்கள் பற்றி எழுதிவிட்டு , பின்னர் ஆந்திரம், கேரளம் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன் .
இதோ முதல் கட்டுரை.
கர்நாடகம் பற்றி எழுதியபோது அங்குள்ள முக்கிய சமணர் கோவில்களையும் சேர்த்துக்கொண்டேன் . ஏனெனில் அவைகளுக்கு இந்துக்களும் செல்கின்றனர். அதே போல சமணர்களும் இந்துக் கோவில்களுக்கு வந்து பய பக்தியுடன் தரிசனம் செய்கின்றனர். அதே போல இலங்கையிலும் சிங்களர்கள், தமிழர்கள் என்ற வேறுபாடின்றி , இந்துக்கள், பெளத்தர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரும் கோவில்களுக்கும் பெளத்த விஹாரங்களுக்கும் விஜயம் செய்கின்றனர். இதற்கு பெரிய உதாரணம் கதிர்காமம் முருகன் ஆலயம் . கொழும்பிலுள்ள பிரபல பெளத்த வழிபாட்டுத்த தலங்களிலும் கூடப் பிள்ளையாரையும் முருகனையும் தரிசித்தேன் . கதிர்காமத்தில் கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டு இடங்களும் அண்மைக்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. .
இனி வரும் நாட்களில்…………………….
கதிர்காம முருகன் கோவில்
தெய்வந்துறை கோவில்
முன்னேஸ்வரம் கோவில், சிலாவம்
சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-
அசோகவனம்
ராவணன் மனைவியின் ஊர் மாந்தை
திருக்கேதீஸ்வரம் கோவில்
இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்
மிஹிந்தலை
தம்புல்ல குகைக் கோயில்
சிகிரியா குகை ஓவியம்
பொலன்னருவ
கல்விகாரை
மின்னேரி
ஸ்ரீபாதமலை (சிவனொளி பாதம் )7353 அடி உயரம்-
எல்லா மதத்தினரும் வணங்கும் மலை.
இரத்தினபுரி
கண்டி திருவிழா
தாலத மாளிகை/ புத்தர் பல் கோவில்
அமிர்தகழி
கொக்கட்டுச்சோலை
திருக்கோயில்
கல் ஓயா- கல் முனை
கண்ணகி வழிபாடு
திருகோணமலை கோவில்
கன்னியாய் வெந்நீர் ஊற்று
சிங்கை நகர்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்
புத்தூர் கோவில்
வல்லிபுரம்
மாவிட்டபுரம்
வல்வெட்டித்துறை
நகுலேஸ்வரம்
கிழாலி
நயினா தீவு
கொழும்பு (தலைநகர்) கோவில்கள்
விபீஷணன் ஆலயம், களனி கங்கை– உள்பட நூற்றுக்கும் மேலான இந்துக் கோவில்களையும் புத்த விஹாரங்களையும் பற்றி எழுத ஆசை. முடிந்தவரை முயல்கிறேன்.
xxxxxx
பிள்ளையார் கோவில்கள்:
கொழும்பு நகர பிள்ளையார் கோவில்கள்
இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரில் ஆறு பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன. நான் அவற்றில் மூன்று கோவில்களுக்குச் சென்று வந்தேன். பம்பலபிட்டிய பகுதியில் வஜ்ரா ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வந்து சென்றனர் . அந்த வளாகத்திற்குள் சாய் பாபா கோவிலும் உள்ளது . வியாழக்கிழமைகளில் அபிஷேகம் செய்த பாலை எல்லோருக்கும் பாலிதீன் பைகளில் நிரப்பி விநியோகித்தனர். அத்துடன் அவல்- வெல்லப் பிரசாதமும், பாயசமும் கிடைத்தது .
இதே வளாகத்தில் கோவிலின் பின்பகுதியில் உள்ள சந்நிதி, பழைய கதிரேசன் கோவில் எனப்படுகிறது. இந்தப் பிள்ளையார் கோவிலில் நல்ல சாந்நித்தியம் உள்ளது . பிரதான சந்நிதியில் பிள்ளையாரும் இடது, வலது புற சந்நிதிதிகளில் சிவன், அம்பாள், சுப்பிரமணியரும் இருக்கின்றனர் ..
இதற்கு சற்று தொலைவில் புதிய கதிரேசன் கோவிலும் , அருகிலேயே மாணிக்க விநாயகர் கோவிலும் இருக்கின்றன . இங்கு குறிப்பிட்ட மூன்று கோவில்களும் கோபுரங்களுடன் காட்சி தருகின்றன .
Xxx
ஆறு கோவில்களின் பெயர்கள்
1.Pillayar Kovil பிள்ளையார் கோவில் පිල්ලෙයාර් කෝවිල – Kotahena, Address: WVW4+QWC, Colombo 01300, Sri Lanka
2.Visakha Pillaiyar Kovil | விசாக பிள்ளையார் கோவில், Address: VV95+PG6, International Buddhist Centre Rd, Colombo, Sri Lanka
3.Kathiresan Pillayar kovil | கதிரேசன் பிள்ளையார் கோயில், Address: 333 Galle Rd, Colombo 00500, Sri Lanka
4.Sri Manika Vinayagar Kovil | ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், Address: Sri Manika Vinayagar Kovil, Lorenz Rd, Colombo 00500, Sri Lanka
5.பம்பலபிட்டிய பிள்ளையார் கோவில், வஜ்ரா ரோடு,Pillayar Kovil, Bambalapitiya, Address: 12 Vajira Rd, Colombo 00400, Sri Lanka
6.ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் Sri Sithi Vinayagar Temple Annamalai
xxx
தேர்த் திருவிழா
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள கதிர்வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து திருவிழா காலத்தில் தேர் புறப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு கொழும்பு நகரின் முக்கிய வீதிகளினூடாக இழுத்துவரப்படுகின்றது. இது கொழும்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்துவரும் தேரோட்ட விழா ஆகும்.
xxxx
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஒரு கூட்டத்தில் சொன்ன விஷயம் :–
“தகர்த்தெறியப்பட்ட எத்தனையோ அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, விநாயகன் ஆலயங்களின் பட்டியல் எங்களிடம் உண்டு. சமகாலத்தில் தம்புள்ளையிலும்,கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும், வடக்கில் மயிலிட்டியிலும் தகர்த்தெறியப்பட்டு காணாமல் போன ஆலய விபரங்களும் எம்மிடம் உண்டு. இவற்றை சிங்கள மக்கள் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆலயங்களில் அவர்களும் வந்து வணங்குகிறார்கள். இவற்றை யார் செய்வது என்பது ஒரு பகிரங்க இரகசியம்”–. என்று ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் பேசியுள்ளார் . இது கடந்த கால நிலையை விளக்குகிறது.
XXXX
7.ஸ்ரீ பொன்னம்பலம் வாணேசர் கோவில்
கொழும்பு நகர சிவன் கோவில்கள்
7.Sri Ponnamabalam Vanesar Kovil , Shiva temple in Colombo
கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள Sri Ponnamabalam Vanesar Kovil ஸ்ரீ பொன்னம்பலம் வாணேசர் கோவில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது இந்த சிவன் கோவில் தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோவில் அமைப்பில், வாஸ்து சாஸ்திர, ஆகம விதிகளின்படி, கட்டப்பட்டது ; கோவிலில், வெள்ளிக்கிழமைகளில் பெரும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம். கருங்கற்களாலலான அழகிய சிற்பங்களைக் காணலாம் . இரண்டு நுழை வாயில்கள் அமைந்த இந்தக் கோவிலில் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
1912ம் ஆண்ட்டில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோவிலில் கர்ப்பகிரகத்தில் மஹாலிங்கமும், இன்னும் ஒரு கருவறையில் அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர் . ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி வெகு சிறப்பாக நடை பெறுகிறது
XXX


8., ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவில்/ தேவஸ்தானம்
Sri Kailasanathar Temple, Colombo
ஸ்ரீ கயிலை ஈஸ்வரன் கோவில்
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஸ்ரீ கைலேஸ்வரம் கோயில், சிவன் மற்றும் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும். இது கொழும்பில் உள்ள பழமையான இந்துக் கோவிலாகும். அங்கே மிகவும் பிரபலமான திருமணங்களும் நடத்தப்படுகின்றன. இந்தக் கோவிலில் சிவன் மற்றும் விநாயகர் சந்நிதிகள் உண்டு
கோவில் கோபுரத்தில் நல்ல சிலைகளைக் காணலாம்.சிவன் , அம்பாள் சந்நிதிகளோடு பரிவார தேவதைகளுக்கும் கருவறைகள் இருக்கின்றன ; பழ மையான இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தைப்பொங்கல் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சிவன் கோவில் வரலாறு
கேப்டன் கார்டன் கோவில்/ தீவுக்கோவில் The Captain’s Garden Kovil, is located on Kovil Street
கொழும்பு -10 விஜயவர்த்தன மாவத்தையில் கோவில் தெருவில் கேப்டன் கார்டன் கோவில்/ தீவுக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலும் அருகில் பிள்ளையார் கோவிலும் உள்ளன. இவைதான் கொழும்பு நகரின் மிகப்பழைய கோவில்கள்
அங்கே பால விநாயகர் கோவிலும் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலும் இருக்கின்றன.
முன் காலத்தில் இந்தக் கோவில் நிலம் பெய்ரா ஏரியால சூழப்பட்டிருந்தது . பக்தர்கள் படகில் வந்து சாமி கும்பிட்டனர். டச்சுக் காரர்கள் ஆட்சிக்காலத்தில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் கட்டப்பட்டது . தென்னிந்தியாவிலிருந்து வியாபாரம் செய்ய வந்த வணிகர்கள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள். ஒரு டச்சுக்கார அதிகாரிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இங்குள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டு வணங்கினார். அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன், அவர் ஏக்கர் கணக்கில் நிலத்தை தானம் செய்யவே, செட்டியார்கள் அங்கே கோவிலை எழுப்பினார்கள் . செட்டியார்கள் அந்த இடத்தில் மிளகு , பட்டை சோம்பு லவங்கம் ஆகியவற்றை சேமித்துவைக்கும் கிடங்கை வைத்திருந்தனர் .
பால விநாயகர் சந்நிதியும் , கைலாச நாரதர் சந்நிதியும் ஒரு தாழ்வாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன . கோவில் கூரை, வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது விநாயக சதுர்த்தி பெரிய அளவில் கொண்டாட்டப்படுகிறது. அப்போது கோவிலுக்குள் தேர், வலம் வரும்.
டச்சு கேப்டன் நில தானத்தால் எழுந்த கோவில் ஆதலால் கேப் டன்ஸ் கார்டன் கோவில் என்றும் அக்காலத்தில் ,தீவின் நடுவில் இருந்ததால் தீவுக் கோவில் என்றும் அழைக்கப்பட்டது.
கோவிலில் பஞ்ச மூர்த்திகளுக்கும் ரதங்கள் இருக்கின்றன — விநாயகர், சுப்பிரமணியர், சிவன், அம்பாள், சண்டிகேஸ்வரர் ரதங்கள் .
சிவன், நடராஜர், அம்பாள் , கொடி மரம், நந்தி , மஹாவிஷ்ணு நவக்கிரகங்கள் , சண்டிகேஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி பிரம்மா, துர்கா, காளி அம்மன் மூர்த்திகள் இருப்பதால் மதுரை மீனாட்சி கோவில் போலவே காட்சி தரும்.
காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சந்நிதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும் .
கோவிலுடன் இணைந்த மடம் , கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு தங்கும் வசதியை அளிக்கிறது. கோவில் நடத்தும் பாடசாலை, கல்வி வசதியைத் தருகிறது

Manikka Vinayakar Temple, Colombo


New Kathiresan Temple, Colombo Bambalapittiya Area
.XXXX
To be continued……………………………………