
Post No. 12,493
Date uploaded in London – – 17 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
Quiz Serial Number 73
1.அகண்டபாரதம் வந்தே தீரும் என்று பாரதி எங்கே ஆரூடம் சொல்கிறார் ?
Xxxx
2.மூன்று பேரின் மனைவியைப் போல மனைவி வாய்க்க ஆயிரம் ஆண்டு தவம் செய்தாலும் கிடைக்காது என்கிறார் பாரதி. அந்த மூவர் யார்?
XXXX
3.ஒரே பாட்டில் பாரதியார் 9 இந்திய அறிஞர்களை, புலவர்களைப் பாராட்டுகிறார் ? அது எந்தப் பாடல் வரிகள்?
Xxxx
4.துலுக்கர்களின் பர்தா ஒழிக என்று பாரதி எங்கே பாடுகிறார் ?
XXXX
5.பாதகர்களை அடித்து நொறுக்கு என்று என்கவுண்டர் Encounter Approach சித்தாந்தத்தை பாரதி எப்படிப் பாடுகிறார் ?
XXX
6.குருவி போல இருக்க வேண்டும் என்று பாரதி எத்தனை முறை பாடுகிறார் ?
xxxx
7. கிருஷ்ணன் பகவத் கீதையில் ‘நம்பிக்கை இல்லாதவன் அழிவான்’ என்கிறார் ; அதையே பாஸிடிவாக பாரதி எப்படிச் சொல்கிறார்?
xxx
8.’கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’ என்ற சொற்களை யார் மூலம் நமக்கு பாரதி போதிக்கிறார் ?
xxxx
9.காயத்ரி மந்திரத்தை பாரதி எப்படி மொழிபெயர்க்கிறார்?
XXXX
10. பாரதி தமிழை எப்படியெல்லாம் பாராட்டுகிறார்?
XXX

ANSWERS
1.சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – –இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
Undivided Hindu Land
Xxxxx
2.வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர் போல்
பசித்தோராயிரம் தவம் செய்து
பார்க்கினும் பெறல் சால வரிதுகாண்- பாரதி
xxxx
3.கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், 25
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;— பாரதி சுயசரிதை
XXXX
4.(முகத்திரை களைதல்)
நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை – முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? … 1
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? … 2
XXXX
5.பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
xxxx
6.குறைந்தது 3 முறை
பாரதிக்குப் பிடித்த பறவை சிட்டுக்குருவி !
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே..
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும்
மலையும் எங்கள் கூட்டம்
xxxx
7.நம்பினார் கெடுவதில்லை – இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்
கண்ணன் சொன்னது – ஸம்சயாத்மா விநஸ்யதி (சந்தேகப்படுபவன் அழிந்தே போவான்.)
xxxx xxxx
8.பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி மஹா பாரதக் கருத்தை — நோக்கத்தை, அழகாக இயம்புவான்:
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்;
கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனு உண்டு காண்டீவம் அதன்பேர்” என்றான்
-அர்ஜுனன் சொல்வது, பாஞ்சாலி சபதம், பாரதியார் பாடல்
xxxx
9.ஓம் பூர் புவஸ்ஸுவஹ, தத்சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோநஹ பிரசோதயாத் (GAYATRI MANTRA)
–என்ற இந்த மந்திரத்தை எல்லோரும் அறிந்து பயன் பெறுவதற்காக மஹாகவி பாரதியார்
செங்கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக
—-என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.
XXXX
10. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
xxxx
பாரதியார் QUIZ ‘க்விஸ்’- கேள்வி பதில் (Post No.5761)
Tamil and Vedas
https://tamilandvedas.com › பார…
11 Dec 2018 — டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். நாம் எல்லோரும் அறிந்த விஷயங்களை நினைவு படுத்திக்கொள்ள முயல்வோம். இதோ கேள்விகள்.
XXXX
TAGS- பாரதி, பத்து, குவிஸ், குருவி, மனைவி , அகண்ட பாரதம்