
Post No. 12,510
Date uploaded in London – – 22 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
· சிறிய விஷயங்களில் பொறுமை காட்டா விட்டால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன –கன்பூசியஸ்
பொறுத்தார் பூமி ஆள்வார் –தமிழ்ப் பழமொழி
குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]
xxxx
· அறிவால் உழைப்பவர்கள் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர். –கன்பூசியஸ்
·
புத்திமான் பலவான் ஆவான் –தமிழ்ப் பழமொழி
குறள் 430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]
Xxxx
- ரோஜாக்களைக் கொடுக்கும் கையில் எப்பொழுதும் கொஞ்சம் நறுமணம் ஒட்டிக்கொண்டிருக்கும். நீங்கள் பெருந்தன்மையுடன் இருந்தால், நீங்கள் அனைத்தையும் அடைவீர்கள். –கன்பூசியஸ்
•பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்– தமிழ்ப் பழமொழி
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் –தமிழ்ப் பழமொழி
மூதுரை –அவ்வையார்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
விளக்கம்
உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்………………………………
please continue in
swamiindology.blogspot.com
or
Facebook (santanam swaminathan)