
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,532
Date uploaded in London – 28 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!
உலக நதிகள் தினம்! (பகுதி 2)
ச.நாகராஜன்
பெயர்களில் மட்டும் உள்ள ஏரிகள்!
இது மட்டுமின்றி சென்னை, பெங்களூர் போன்ற நகர்களில் ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி அந்த ஏரிகள் அந்தப் பகுதிகளின் தெருக்களின் பெயர்களில் மட்டுமே இன்று இருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.
சீனாவின் மஞ்சள் நதி
இது இப்படி எனில் சீனாவின் இரண்டாவது பெரும் நதியும் வாழ்வாதாரமாகவும் திகழும் மஞ்சள் நதி பாழ்பட்டு அசுத்த நதியாகவே ஆகி விட்டது. அதன் 66 விழுக்காடு நீர் குடிக்க முடியாத அசுத்த நீர். 435 கோடி டன்கள் அளவு கழிவு நீர் அதில் கலக்கப்பட்டதாக 2005ஆம் ஆண்டு நதி நீர் அறிக்கை தெரிவித்தது. சீனாவின் 5464 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் நதியின் நிலையும் பரிதாபகரமாக ஆகி விட்டது.
நடந்தாய் வாழி அமேஸான்
அடுத்து உலகின் மிகப் பெரும் நதியான அமேஸானைப் பார்ப்போம்.
பெருவிலுள்ள ஆண்டஸ் மலையில் 17000 அடி உயரத்தில் உள்ளது அழகிய ஏரி லாரிகோச்சா. இதுவே அமேஸான் நதியின் மூலம்.
இங்கிருந்து பிறக்கும் நதி 4000 மைல் தூரம் நடை பயின்று பல இடங்களில் பல…………..
please continue in swamiindology.blogspot.com