விண்வெளி, அயல் கிரகவாசிகள் பற்றி இலங்கைத் தமிழ் அறிஞருடன் விவாதம் (Post.12,536)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,536

Date uploaded in London – –  29 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

செப்டம்பர் 7, 2023 முதல்  11, 2023 வரை ஐந்து நாட்களுக்கு ஸ்ரீ லங்காவில் இருந்தேன் . எனக்கு பல்வேறு உதவிகளைச்  செய்த அடையபலம் ஏ ஆர் விஸ்வநாத தீட்சிதர் , கொழும்பு நகரில் லார்சன் அண்ட் டூப்ரோ கம்பெனியில் சீனியர் மனேஜராகப் பணியாற்றுகிறார். வஜ்ரா ரோடு பிள்ளையார் கோவிலில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிக்குதித்து வேறு ஒரு கோவிலுக்கு விரைந்தோம். ஆனால் போகும்போதே கோவில் மாலை 7 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்று எச்சரித்தார் ; அப்படியானால் இன்னொரு நாள் பார்க்கலாமே ! என்ன அவசரம்? மணி 7 ஆகப்போகிறதே என்றேன். இல்லை ; அதில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம்  இருந்தால் கிடைக்கும் என்றார் . ஏற்கனவே அவர் துவாரகா, ஷண்முகா வெஜிட்டேரியன் உணவு விடுதிகள் பற்றிச் சொல்லி பசியைக் கிளப்பி விட்டிருந்ததால் அதுதான் அடிக்கப்போகும் அதிர்ஷ்டமோ என்று எண்ணிக்கொண்டே சென்றேன். ஆட்டோவும் ஒரு இருண்ட தெருவுக்குள் நுழைந்தது .நாங்கள் எதிர்பார்த்துச் சென்ற ஐச்வர்ய லட்சுமி அம்மன் கோவில் மூடப்பட்டிருந்தது Aishwarya Lakshmi Amman Temple is a Hindu temple located in Colombo. It is one of the 3909 Hindu temples in Sri Lanka. . அது கொழும்பு வெல்லவத்தைப் பகுதியில் தோன்றிய புதிய கோவில் ஆகும் . இலங்கையில் உள்ள 3909 இந்துக்கோவில்களில் அதுவும் ஒன்றாகும்

அங்கு தேவியருடன் எல்லா மூர்திதகளும் ஆஞ்சனேயரும்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கோவிலை 7 மணிக்கே மூடிவிடும் கா ரணம் தெரியவில்லை .

கோவிலுக்கு எதிரே கம்பவாரிதி ஜெயராஜ் வீடு இருப்பதாகவும் அவர் பெரிய தமிழ்அறி ஞர் என்றும் என் காதில் ஓதினார் விசுவநாதன்.

அடடா, எனக்கு யு ட்யூப் YOU TUBE மூலம்  தெரிந்தவர் அவர் ; ஆனால் லண்டனில்,   முன்பின் சொல்லாமல் யார் வீட்டுக்கும் போய்ப் பழக்கமில்லையே; இது முறையா? என்றேன்.அதனால் என்ன அவர் அனுமத்தித்தால் தானே பார்க்கப் போகிறோம் என்று சமாதானம் சொன்னார். வீட்டிற்குள் தைரியமாக நுழைந்தோம். திரு ஜெயராஜின் செக்ரட்டரி போல செயல்படும் அன்பரிடம் , அடையபலம் விஸ்வநாதன் என்னை  அறிமுகம் செய்துவைத்து பத்து நிமிடம் அவரைப் பார்க்க வந்திருப்பதாக சொன்னார். அவரும் எங்களை இருக்கையில் அமரச் சொன்னார். எதிர்பாராத விஜயம் என்பதால் கையில் பழமோ SWEET சுவீட்டோ வாங்கிச் செல்லவில்லை. பெரியவர்களை சந்திக்கும்போது ஒரு எலுமிச்சம்  பழமாவது கொண்டு செல்ல வேண்டும். நல்ல வேளையாக, நான் எழுதிய புஸ்தகங்களில்  ஏழு எட்டு என் பையில் இருந்தது .

அவரும் எங்களை சில நிமிடங்களுக்குள் உள்ளே அழைத்தார். அவருக்கு முறையான வணக்கம் செய்துவிட்டு நான் இலங்கை வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு என் புஸ்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவைகளைப்  பார்த்துவிட்டு  ஒரு புஸ்தகத்தை ஆர்வ த்தோடு எடுத்துக்கொண்டு முகத்தில் வியப்புக்குறிகளுடன் பேசத் தொடங்கினார்.

என்னுடைய அந்த புஸ்தகத்தின்  தலைப்பு –

இந்துமத நூல்களில் வெளி உலக வாசிகளும் காலப்பயணமும்

அதைப்பார்த்த அவர் நானும் இந்த விஷயம் பற்றித்தான்  சிந்தித்துக்……

please continue in swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment