Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!
உலக நதிகள் தினம்! (பகுதி 1)
ச.நாகராஜன்
செப்டம்பர் 24 – நதிகள் தினம்
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு! (குறள் எண் 20)
சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் மனிதர் உயிர் வாழ முக்கியமானவை. நாளுக்கு நாள் மோசமாகி வரும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக நதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நதிகள்………………….
பண்டிகை நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி; 14- மஹாளய அமாவாசை; 15- நவராத்ரி ஆரம்பம்; 23- சரஸ்வதி பூஜை; 24- விஜயதசமி; 28- சந்திர கிரஹணம்
அமாவாசை – 14; பெளர்ணமி – 28/ சந்திர கிரஹணம்
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 10, 24
சுப முகூர்த்த நாட்கள்– 18, 20, 27
பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து எடுக்கப்பட்ட 31 பொன்மொழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை
கல்வி என்பது திருடர்களால் காணமுடியாதது;
எப்போதும் பேரின்பம் நல்குவது;
கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும் 1-16
xxx
அக்டோபர் 2 திங்கட் கிழமை
யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்? 1-17
xxx
அக்டோபர் 3 செவ்வாய்க் கிழமை
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளைதாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
xxx
அக்டோபர் 4 புதன் கிழமை
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.1-18
xxx
அக்டோபர் 5 வியாழக் கிழமை
மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;
நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.
நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ
ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.
xxx
அக்டோபர் 6 வெள்ளிக் கிழமை
ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.
நல்ல பேச்சு உண்மையானஅணிகலனாக நிற்கும்.1-19
xxxx
அக்டோபர் 7 சனிக் கிழமை
கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;
அவனுடைய ரஹஸிய செல்வம் அது;
வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது 1-20
xxx
அக்டோபர் 8 ஞாயிற்றுக் கிழமை .
‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;
வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; 1-20
xxx
அக்டோபர் 9 திங்கட் கிழமை
கல்வியே உயர்ந்த கடவுள்.
மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு. 1-20
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் –Part 9
20. திருக்கேதீஸ்வரம் Ketheeswaram temple
திருக்கேதீஸ்வரம் THIRUKETHEESWARAM , திரு ஞான சம்பந்தராலும் அப்பர் பெருமானாலும் பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டு வரலாறு உடையது. அவர்கள் இருவரும் மஹேந்திர பல்லவர் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள். பிற் காலத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரும் பாடியுள்ளார்.
இந்த ஆலயம் இலங்கையின் வடபுறத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது . இந்தத் தலம் பஞ்ச லிங்க ஈஸ்வரம் என்று அழைக்கப்படும் ஐந்து சிவத்தலங்களில் ஒன்று. ஏனைய நான்கு- கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் .
இங்கு கிடைத்த இரண்டு சோழர்கால கல்வெட்டுகள் கொழும்பு மியூசியத்தில் உள்ளன. ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனும் , அவனுக்குப் பின்னர் வந்த பாண்டிய மன்னர்களும் வழிபட்டு திருப்பணி செய்த பெருமை உடைத்து .கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன், இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான்.
இலங்கையின் வடபகுதியில் போர்ச்சுகீசிய கிறித்தவ வெறியர்கள் தாக்கி அழித்த 500க்-கும் மேற்பட்ட கோவில்களில் புகழ்பெற்ற, பாடல் பெற்ற………………………………..
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா!
ச.நாகராஜன்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (பிறப்பு 15-10-1931 மறைவு 27-7-2015) வெல்லிங்டனுக்கு வந்தது பற்றி நியூஸ் பாரதி தனது 4-4-2022 தேதியிட்ட இதழில் தெரிவித்த சுவையான செய்தி இது:
தலைநகர் (டில்லியிலிருந்து) வெல்லிங்டன் வந்த ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் (ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் 2002-2007) நேராக தான் மிகவும் பிரமித்துப் போற்றும் ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷாவைப் பார்க்கச் சென்றார்.
ஆம், அப்படி ஒரு ஈர்ப்பு மானெக்ஷாவின் மீது அப்துல்கலாமிற்கு இருந்தது.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மானெக்ஷா நீலகிரியையே தன்………………
All the geographical names have Snake in their names! Find them.
1.This town in Maharashtra is the Head quarters of RSS
Down
1.This town in Tamil Nadu is very near Kanyakumari; 2.This town is in Kashmir; 3.This town in Kodagu district of Karnataka has a tiger reserve(two places up or down); 4.The lake with snake name is in Kashmir; associated with Lord Shiva; 5.This snake island name is in Tamil Kavya Manimeghalai, now identified with a part of Sri Lanka .
Answers
Across
1.Nagpur
Down
1.Nagerkoil ; 2.Anantnag ; 3.Nagerhol (two places up or down);
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் –நல்லூர் கோவில் Part 8
19.நல்லூர் கந்தசாமி கோவில்
யாழ்ப்பாணம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நல்லூர் கந்தசாமி கோவிலாகும். இது மிகப் பழங்காலக் கோவில் இல்லை. சுமார் 600 ஆண்டுகள் வரலாறு கொண்டதே. போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்களாலும், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்கார கிறிஸ்தவ படைகளாலும் பழைய கோவில் தரை மட்டமாக்கப்பட்டது . இப்போதுள்ள கோவில் ஒரு மடாலயத்திலிருந்து கோவிலாக உருவானது!
இந்தக் கோவிலின் சிறப்பு கர்ப்பக்கிரகத்தில் வேல் இருப்பதாகும். கருவறைக்கு வெளியே பிற இந்துக் கடவுளரின் விக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவிலின் சிறப்புக்குக் காரணம் , நேரம் தவறாது நடக்கும் நித்திய பூஜைகள் ஆகும். கோவிலின் வருடாந்திர உற்சவம் ஆடி மாதம் துவங்கி ஆவணி வரை 25 நாட்கள் நடைபெறும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான……………………….
அவருக்கு பாபா கற்றுத் தந்த வாழ்வியல் ரகசியங்கள் ஏராளம்.
அவற்றில் ஒன்று இது.
ஒரு சமயம் நானாவைக் கூப்பிட்ட பாபா அவரிடம் பேசலானார்.
பாபா: நானா! யாராவது ஒருவர் உன்னிடம் வந்து பிச்சை கேட்டால் அவருக்கு உன்னால் முடிந்ததைக் கொடு. இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கேட்டால் அவர் மீது கோபப்படாதே. திட்டாதே. உன்னுடைய அதிகார தோரணையைக் காட்டாதே.
நானா அதன்படியே நடப்பதாக உறுதி கூறி விட்டுச் சென்றார்.
ஆறு மாதங்கள் கழிந்தன.
ஒரு நாள் நானா சாஹிப் கல்யாணில் தனது சொந்த வீட்டில் மாடியில் உட்கார்ந்திருந்தார்.
ஒரு பிச்சைக்காரி அவர் வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்டாள்.
நானா சாஹிப்பின் மனைவி வறுத்த பருப்பை அவளுக்கு கொடுத்தார். அந்த பிச்சைக்காரி இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்றாள்.
அதன் படியே நானா சாஹிப்பின் மனைவி இன்னும் கொஞ்சம் போட்டார்.
பிச்சைக்காரியோ விடவில்லை. முழு பருப்பையும் கேட்டாள். முழு பருப்பும் வரும் வரையில் அவள் அங்கிருந்து நகர்வதாயில்லை. பொறுமையிழந்த திருமதி நானா அவரிடம் சென்று நடப்பதைச் சொன்னார்.
நானா சாஹிப்பிற்கு மிகவும் கோபம் வந்து விட்டது. ஒரு பியூனைக்…………………………………………..
எப்பொழுது இந்தியாவுக்குப் போனாலும் குறைந்தது 30 புதிய கோவில்களுக்காவது செல்வேன். இந்த முறை செப்டம்பரில் (2023) இலங்கைப் பயணம் சேர்ந்துவிட்டதால் ஒரே ஒரு தமிழக கோவிலைத்தான் தரிசிக்க முடிந்தது. அந்த மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், சென்னையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து 15 கிலோமீட்டர்தான். காலை 7 மணிக்கே சென்றதால் கூட்டமே இல்லை; நல்ல தரிசனம். கொஞ்சம் தள்ளிப் போனால் திருவேற்காடு அம்மனையும் தரிசிக்கலாம். ஆனால் சென்னை traffic டிராஃபிக்கை கண்டு அஞ்சி விரைவில் திரும்பிவிட்டோம்.
முதல் நாள் ஆட்டோ டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சார் வாங்க ஸார் , நான் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார் ; இல்லையப்பா, கார் வருகிறது. வேறு சில வேலைகளுக்கு உன்னை அழைக்கிறேன் என்றேன். அவன் கோவில் பற்றி சொன்ன விஷயத்துக்காக இதை இழுக்கிறேன். முன்னர் எல்லாம் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான “மாங்காடு சவாரி” வருமாம். 300 ரூபாய்க்குள் போய்விட்டு வருவார்களாம். இப்பொழுது மாங்காட்டுக்கு யாருமே போவதில்லையாம். இவ்வாறு அவன் அலுத்துக் கொண்டவுடன் நான் சொன்னேன். இல்லை; இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் கார் வசதி வந்து விட்டது; மேலும் கணவனும் மனைவியும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர். ஆகையால் அவர்களே போய்விட்டு வந்துவிடுகிறர்கள் போலும் என்று.
xxxx
மாங்காடு காமாட்சியை (10-9-22023) தரிசித்தேன் !
இனி இந்த உரையாடலை நிறுத்திவிட்டு அம்மனைத் தரிசிப்போம்.
சென்னையிலிருந்து போரூரைத்த தாண்டிச் செல்ல வேண்டும்.
மாங்காடு காமாட்சி கோவில் அமைப்பு
உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் நமக்குத் தரிசனம் அளிக்கிறார். பின்னர் கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையலாம். மிகப்பெரிய மேரு சக்கரம் இருக்கிறது. அதற்குப் பின்னால் சிறிய , அழகிய விக்ரமாக நின்று நமக்கு காமாட்சி அருள்பாலிக்கிறாள்.. ஒரு தம்பதியர் புடவை வாங்கி வந்திருந்தார்கள்.
அம்மனுக்கு சார்த்தி விடலாமா ? அல்லது அம்மனிடம் வைத்து………………………………………………