
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,519
Date uploaded in London – 24 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மகான்களின் வாழ்வில்..
தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம் கிடைக்கும்!
ச.நாகராஜன்
தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம்
ஷீர்டி சாயிபாபா வாழ்க்கையில் அன்றாடம் நடந்த அற்புதங்கள் ஏராளம். (தோற்றம் 28-9-1835 என்று கருதப்படுகிறது சமாதி : 15-10-1918 விஜயதசமி தினத்தன்று.)
ஒவ்வொரு சம்பவமும் ஒரு பெரிய அரிய உண்மையை விளக்கும்.
அவரை தரிசிக்க வந்த பக்தர்களுள் ஒருவர் அவரிடம் கேட்டார்:” பாபா? கடவுள் எப்படி இருப்பார். கொஞ்சம் சொல்லுங்களேன்.
கேள்வி கேட்டவருக்கு பாபா பதில் சொல்லவில்லை.
அருகிலிருந்த ஒருவரைப் பார்த்து, “நீ போய் பாக்சந்த் மார்வாடியைப் பார்த்து பாபாவிற்கு நூறு ரூபாய் வேண்டும் என்று சொல்லி வாங்கி வா” என்றார்.
அவர் வெளியில் சென்று உடனே திரும்பி வந்தார்.
“மார்வாடி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்கிறார். தன்னுடைய நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொல்கிறார்” என்றார்.
“சரி நீ போய் இன்னொரு லேவாதேவிக்காரரைப் பார்த்து நான் கடனாகக் கேட்டதாகச் செல்லி நூறு ரூபாய் வாங்கி வா” என்றார் பாபா.
அவருடம் உடனே வெளியே சென்றார். போன வேகத்தில் திரும்பி வந்த அவர், “அவர் என்னிடம் பணம் இல்லை என்று சொல்கிறார்.”
“சரி, நீ போய் நானா சந்தோர்கரை என்னிடம் அழைத்து வா” என்றார் பாபா.
நானா சந்தோர்கர் அழைக்கப்பட்டார். அவர் உடனே பாபாவிடம் வந்தார்.
பாபா: நானா! எனக்கு ஒரு நூறு ரூபாய் வேண்டும்.
உடனே நானா ஒரு துண்டுச் சீட்டில் நூறு ரூபாய் வேண்டும் என்று பாக்சந்த் மார்வாடிக்கு எழுதி அனுப்பினார்.

உடனடியாக பாக்சந்த் மார்வாடியிடமிருந்து நானாவிற்கு நூறு ரூபாய் வந்து சேர்ந்தது.
பாபா கூறினார் உடனே: “உலகில் எல்லாமே இப்படித்தான் நடக்கிறது” என்று.
பாபாவிடம் வந்து கடவுள் எப்படி இருப்பார் என்ற கேட்ட அன்பர் தாஸ்………………
PLEASE CONTINUE ON FACEBOOK (SANTANAM SWAAMINATHAN)
OR
swamiindology.blogspot.com




