72000 நாடிகளும் ஆரோக்கியம் தரும் ஆசனங்களும்! (Post No.12,506)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,506

Date uploaded in London –  21 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஹெல்த்கேர் மாத இதழில் செப்டம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

72000 நாடிகளும் ஆரோக்கியம் தரும் ஆசனங்களும்!

ச.நாகராஜன்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப, விண்வெளி, செயற்கை அறிவு யுகத்தில் முதலிடம் பெறுவது ஆரோக்கியத்துடனான நீண்ட நாள் வாழ்க்கையை அனுபவிக்கும் வழிகளை மனிதர்கள் கடைப்பிடிப்பது தான்!

இதை முன்னிறுத்தியே இப்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் அனைத்து ஆராய்ச்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் நமது நாட்டு ஆராய்ச்சிகளைக் கவனித்தோம் என்றால் நாம் ஒரு காலத்தில் மிகவும் முன்னணியில் இருந்திருப்பது தெரிகிறது.

சுஸ்ருதர் மிக நுண்ணிய கருவிகள் 122ஐக் கண்டு பிடித்துக் கையாண்டு………………………………………………………………….

Please continue in swamindology.blogspot.com

OR

my Facebook page (Santanam swaminathan)

Gold Treasures discovered in Sri Lanka with Sanskrit Inscription (Post No.12,505)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,505

Date uploaded in London – –  20 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PICTURES WERE TAKEN BY LONDON SWAMINATHAN WHEN HE VISITED  COLOMBO MUSEUM ON SEPTEMBER 8, 2023.

Anuradhapura Gold Plates

The script of the gold plates is in Sinhala of the 9th century and the language is Sanskrit. The appropriate weight of the gold plate is 73 ozs. The plates measure 25 inches in length 2.3 inches in breath (Seneviratna, 1994).

It is in Colombo Museum

After 30 years of excavation work, the wonders of this site can once again be viewed by the people. Citing the case of the Mahayana Buddhist statues offered by the South Indian
…………………………………………………………..

Please continue in swamiindology.blogspot.com

or

Facebook.

முன்னேஸ்வரம் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – 4 (Post.12,504)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 12,504

Date uploaded in London – –  20 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

13. முன்னேஸ்வரம் கோவில் contd…….

முன்னேஸ்வரம் கோவில் பற்றி இந்து இளைஞர் மன்றம் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திகள் இதோ:

குளக்கோட்டு மகராசனின் பணி:

சோழ நாட்டின் திருவாரூரில் மனுநீதி கண்ட சோழன் வம்சத்தவரான வாமதேவ மகாராஜாவின் புத்திரரான பாலசிருங்க மகாராஜா எனப்படும் குளக்கோட்டு மகாராஜா கலியுகம் 512ல் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகைத் தந்து பல்வேறு திருப்பணிகளை செய்வித்தான். குளக்கோட்டு மன்னன் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தருகையில் மிகவும் பழம் பெருமையை ஆலயம் இழந்து அழிந்து சிதைவடைந்து இருந்துள்ளது. மன்னன் மனம் வெதும்பி திருக்கோவிலை மீண்டும் கட்டுவித்தார்.

சித்தாமிர்த தீர்த்தம், சிவதீர்த்தம், முதலான குளங்களை சுத்தம் செய்து தன்குல குருவாகிய நீலகண்ட சிவாச்சாரியார், அவரது துணைவியார் விசாலாட்சி அம்மையார், அவர்களின புத்திரர்களையும் முன்னேஸ்வரம் வரவழைத்து மற்றும் சோழ நாட்டிலிருந்து பிரமண குருமார்களையும் வரவழைத்து சுபநாளில், சுப முகூர்த்தத்தில் கும்பாபிஷேகத்தையும் நடத்திவைத்தான்.

சோழ நாட்டிலிருந்து ஆலயத்தின் அனைத்து வேலைகளையும் செய்வதற்காக பிராமணர், செட்டி, வோளர், வீரமுட்டி, சங்கமநாதர், கொல்லர்,……………………………

PLEASE CONTINUE IN FACEBOOK OR

swamiindology.blogspot.com

ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!-Part 2 (Post.12,503)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,503

Date uploaded in London –  20 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!

இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் புவி வெப்பம்!

            ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்! 

(இரண்டாம் பகுதி) 

ச.நாகராஜன்

காற்றுத் தரக் குறியீட்டு எண்

காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸில் பூஜ்யம் முதல் 300க்கும் அதிகம் என ஆறு மட்டங்கள் உள்ளன. இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவு ஆகும். 350 என்ற எண் காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும். 400க்கும் மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். 999 என்ற எண் நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்.

PLEASE CONTINUE IN FACEBOOK OR SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

swamiindology.blogspot.com

Find the Hindu Stars/ Nakshatras in the Sky (Post No.12,502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,502

Date uploaded in London – –  19 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Following are Stars associated with Hindu Gods; can you identify the 13 stars?

ARUDRAP P
RATAOGUMU
UKTSHARAN
NIAVISAKA
DTRINTMAR
HTANIY MV
AI I A  A
TRISANKUS
IK ONAM U

COLOUR CLUES

Answers :–

Arudra, Onam, Punarvasu, Puram, Makam,

Agastya, Trisanku, Arundhati, Uttara, Rohini,

Visaka, Asvini, Krittika

—subham—-

London Swaminathan August 2023 Articles Index (Post No.12,501)

London Swaminathan in Anurathapura, Sri Lanka (September 2023)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,501

Date uploaded in London – –  19 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Index No.129

London Ratha Yatra லண்டன் ஹரே கிருஷ்ண ரத யாத்ரா (Post No.12,360) 2/8

Tamil Hindu Temples in Burma/ Myanmar (Post No.12,365) 3/8

London Swaminathan July 2023 Articles Index (Post No.12,371) 4/8

Sanskrit in Muslim Countries (Post No.12,397)10/8

Sanskrit in Muslim Countries- Part 2 (Post No.12,402)11/8

GOLDEN GANESH IN BRITISH PRIME MINISTER’S HOUSE  (Post.12,426) 16/8

Important Ayurveda Dictums (Post No.12,436)18/8

London Swaminathan’s Anecdote Book -First Part is available now! 22/8

Second Anecdote Book is out Now! 23/8

Interesting Titbits from Confucius life! (Post No.12,477) 28/8

London Swaminathan’s Two New Books are Available Now (Tamil and English Books) 31/8

English or Tamil Cross word puzzles on all days.

Xxxxx

London Swaminathan in Colombo with L & T Senior Manager Adayapalam Viswantha Dikshitar (September 2023)

Tamil Articles

இலண்டன் திருப்புகழ் விழா LONDON THIRUPPUGAZ FESTIVAL (Post No.12,359) 2/8

ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் -1 (Post No.12,405) 12/8

இரண்டு முயல்களைத் துரத்தாதே! பரமஹம்சரும் கன்பூசியஸும் (Post.12,453)22/8

QUIZ தமிழ் சங்கம் பத்து QUIZ (Post No.12,353) 1/8

QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ 2/8

QUIZ வள்ளலார் பத்து QUIZ (Post No.12,364) 3/8

QUIZ புராணப் பத்து QUIZ (Post No.12,368) 4/8

QUIZ காவிரி நதி பத்து QUIZ (Post No.12,373) 5/8

QUIZ வள்ளல்கள் பத்து QUIZ (Post No.12,381) 6/8

QUIZ தேன் பத்து QUIZ (Post No.12,385) 7/8

QUIZ மாதப்  பத்து QUIZ (Post No.12,388) 8/8

QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ (Post No.12,396) 10/8

QUIZ வில்லி பாரதம் பத்து QUIZ (Post No.12,425) 16/8

QUIZ சங்கீத முத்திரை பத்து QUIZ (Post.12,439) 18/8

QUIZ பகவத்கீதை பத்து (Part 2) QUIZ (Post No.12,450) 21/8

QUIZ ராமேஸ்வரம்பத்து QUIZ (Post No.12,462) 24/8

QUIZ சங்கீதத்தில் ஊர்கள் பத்து QUIZ (Post No.12,473)27/8

QUIZ செய்நன்றி பத்து QUIZ (Post No.12,423) 15/8

QUIZ தமிழ் இலக்கண பத்து QUIZ (Post No.12,406) 12/8

QUIZ ரிஷிகேஷ் பத்து QUIZ (Post No.12,476)28/8

QUIZ திரு ஓணம் பத்து QUIZ (Post No.12,480)29/8

மூகாம்பிகை, சாரதாம்பிகை, முருதேஸ்வர்- கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற……Part 15 (Post No.12,354) 1/8

டீ,காப்பி பிரசாதம்: கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …..– Part 16(Post No.12,363) 3/8

ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்! கர்நாடக மாநில புகழ்பெற்ற கோவில்கள் – 17 (Post.12,374) 5/8

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 18 (Post No.12,383) 7/8

ஒன்பது நரசிம்மர் சிலைகள்! கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19 (Post No.12,392) 9/8

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20 (Post No.12,401) 11/8

கப்பல் வடிவில் அதிசய கோவில்! கர்நாடக மாநிலத்தில்…… – Part 21 13/8

ஓம் வடிவ கடற்கரை: கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22 (Post No.12,420) 15/8

காந்திஜி நுழைய மறுத்த கோவில் கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 23 17/8

கோவிலில் பெரிய பீமன் முரசு!! கர்நாடக மாநிலத்தில் 108……. Part 24 (Post No.12,442) 18/8

அனுமன் பிறந்த கிஷ்கிந்தா :கர்நாடக மாநிலத்தில் 108…..– Part 25 (Post.12,449) 21/8

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 27 (Post No.12,466) 25/8

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28 (Post No.12,472) 27/8

உலகப் புகழ்பெற்ற ஹம்பி: கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற …..– Part 26 (Post12,458) 23/8

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 30 (Post No.12,484) 30/8

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 31 (Post No.12,488) 31/8

கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- Part 1 (Post No.12,437) 18/8

கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 3 (Post No.1,446) 20/8

xxx

பிஸினஸ் மேன் Business Man பற்றி குட்டிக்கதை (Post No.12,362) 3/8

கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416) 14/8

கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2 (Post No.12,241) 15/8

கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள் (Post No.12,469) 26/8

செப்டம்பர் 2023 காலண்டர்- கன்பூசியஸ் பொன்மொழிகள் (Post No.12,487) 31/8

பர்மாவில் தமிழ் இந்துக் கோவில்கள் (Post No.12,366) 3/8

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனித தலங்கள் புஸ்தகம் 20/8

லண்டன் முருகன் தேர் திருவிழா;London Skanda Temple Rath Yatra 2023 (Post.12,412) 13/8

பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப்  பிள்ளையார் ! (Post No.12,431) 17/8

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்  வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378) 6/8

பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1(Post No.12,387) 8/8

பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -2 (Post No.12,393) 9/8

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் -2 (Post No.12,384) 7/8

—Subham —–

Tags- London Swaminathan, August 2023 articles, Index,

முன்னேஸ்வரம் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – 3 (Post.12,500)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,500

Date uploaded in London – –  19 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

முன்னேஸ்வரம் சிவன் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – 3

இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரிலிருந்து சுமார் 82 கிலோமீட்டர் தொலைவில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் இருக்கிறது நாங்கள இரண்டு மணி நேரத்தில் கோவிலை அடைந்து விட்டோம் .

நல்ல பெரிய கோவில்.. கோவில்; பிரகாரத்தில் உள்ள விஸ்வ ரூப தரிசன  சிலை மிகவும் பெரியது. பார்த்தவுடனேயே அனைவரையும் போட்டோ எடுக்கத் தூண்டுவதும் ஆகும் . சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் நான் எழுதிய 106 புஸ்தங்களில் சைவ சமயம் தொடர்பான 14 புஸ்தகக்ங்களை கோவில் அலுவலகத்தில் அன்பளிப்பாகக் கொடுத்தேன்.

இனி கோவில் பற்றிய விஷயங்களைக் காண்போம் .

இந்தத் தீவில் ஐந்து சிவாலயங்களை இணைத்து பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைப்பதுண்டு. அவை — திரு கோணேஸ்வரம் (திருகோணமலை),  திருக் கேதீஸ்வரம் முன்னேசுவரம் நகுலேஸ்வரம் தொண்டீஸ்வரம் என்பன.

இவைகளில் முன்னேஸ்வரம், அங்கே நடைபெறும் விழாக்கள் காரணமாக தனிச் சிறப்பு உடையது.

இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் எப்படி முஸ்லீம் வெறியர்கள் நாசமாக்கினார்களோ அதே போல இலங்கை முழுதுமுள்ள இந்துக் கோவில்களை கிறிஸ்தவ வெறியர்கள்  நாசமாக்கினார்கள். போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கைவைக்காத  இந்துக் கோவில் இலங்கையில் இல்லை .

கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் மிகவும் வெறி பிடித்தவர்கள் போர்ச்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் ஆவர் . ஸ்பெயின் நாட்டு பாதிரிகள் தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்காவில் உள்ள இன்கா , மாயா , அஸ்டெக் (ஆஸ்தீக), ஒல்மெக்  நாகரீக சின்னங்களை அழித்து  தங்கக் கட்டிகளை TON டன் கணக்கில் ஐரோப்பாவுக்குக் கொண்டு  சென்றனர்

உலகிலுள்ள ஏனைய பண்பாடுகளுக்கும் இந்துப் பணப்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் , எத்தனை முறை அழித்தாலும் இந்துமதம் புத்துயிர் பெறும் . இந்து என்ற பெயரை நம் மதத்துக்கு கிரேக்கர்களும் பாரசீகர்களும் சூட்டுவதற்கு முன்னர் நம்முடைய மதத்தின் உண்மையான பெயர் சநாதன தர்மம் . அதன் பொருள் ஆரம்பமோ, முடிவோ இல்லாதது ; இந்தத் தனிச் சிறப்பு காரணமாக முன்னேஸ்வரமும் புத்துயிர் பெற்றது.

முன்னேஸ்வரம் கோவில் அருகிலுள்ள ஊர் சிலாவம் (Chilaw ) எனப்படும். இந்தக் கோவிலில் முன்னை நாதர்வடிவாம்பிகை சமேதராகக் காட்சி தருகிறார்

சிவ பெருமானை வழிபட, பிரம்மாவே இந்தக் கோவிலை, அமைத்ததாக தட்சிண கைலாசபுராணம் (அத்தியாயம் 16) கூறுகிறது

இராம பிரானும் இங்கே வந்து கவலைகள் நீங்கியவராகச் சென்றாராம் ; தர்மத்தின் உருவமாகத் தோன்றிய இராம பிரானுக்கு, போரில் பல வீரர்களை அழித்துவிட்டோமே என்ற கவலை இருந்தது . இந்தக் கோவில் அந்த மனச்சுமையை நீக்கியது என்பது ஐதீகம் ( வாய்மொழி வரலாறு).

அல்லி அரசாணியின் மூன்று முத்துக் குவியல்கள்

உலகில்,  நாட்டை ஆண்ட பெண்ணரசிகளில் மதுரை மீனாட்சியையும் அல்லி ராணியையும் அனைவரும் அறிவர். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட மீனாட்சி பற்றி மெகஸ்தனிஸும் குறிப்பிடுகிறார் (பண்டேயா ராணி = பாண்டிய ராணி). அதே போல அல்லி அரசாணி பற்றி நாட்டுப் புறப்பாடல்களும் உண்டு . அர்ஜுனனும் வந்து விட்டார் அல்லி ராணி என்ற பாடல் பிரசித்தமானது . அந்த அல்லி ராணி, கடலில் எடுத்து வந்த முத்துக்களை மூன்று  குவியல்களாக்கி ஒரு குவியலை மதுரை மீனாட்சிக்கும் இன்னும் ஒரு குவியலை முன்னேஸ்வரம் வடிவாம்பிகைக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது குவியல் முத்துக்களை தனக்கு எடுத்துக் கொள்ளுவாராம் .

மஹாவம்சம் கூறும் இலங்கையின் முதல் மன்னனான விஜயனும் , சோழ மன்னர்களும், குளக்கோட மஹாராஜனும் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும் கூறுவர் .

வரலாற்றுச் சான்றுகளின்படி ஆறாம் பராக்கிரம பாஹு (1412-1467CE ) இந்தக்கோவிலுக்கு நில தானம் செய்தார் என்று தெரிகிறது . 1578-ம் ஆண்டில் போர்ச்சிகீசிய வெறியர்கள் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர் .

ஆயினும் 1753ம் ஆண்டில் கீர்த்தி ராஜ சிங்கம் இக்கோவிலுக்கு புத்துயிர் ஊட்டினார் ; பின்னர் பிரம்ம ஸ்ரீ குமார சுவாமி குருக்கள் 1919ம் ஆண்டில் கோவிலை மேம்படுத்தினார் . 1963-ம் ஆண்டில் இலங்கை வாழ் சைவ அன்பர்கள் நன்கொடை மூலம் கோவிலின் கோபுரம் எழுப்பப்பட்டது.

27 நாள் உற்சவம்

இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு 27 நாட்களுக்கு நடக்கும் நீண்ட விழா ஆகும். ஆவணி பெளர்ணமியில் மாயவன் ஆறு தீர்த்தவாரியுடன் அது நிறைவுபெறும்.

9 நாள் நவராத்ரி உற்சவம்

ஆதிகாலத்தில் இது ஒரு சக்தித் தலமாகவே விளங்கியது.. ஆகையால் தீவிலுள்ள ஏனைய கோவில்களை விட இங்கு நவராத்ரி உற்சவம் வெகு விமரிசையாக் கொண்டாடப்படுகிறது; ஒன்பது நாட்களும் 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெறும். விஜயதசமி அன்று வடிவாம்பிகை மானம்பு நிகழ்ச்சிக்காக ஊர்வலமாக எழுந்தருளுவார் .

இத்துடன் விக்கிபீடியா தரும் தகவலையும் காண்போம் :–

இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமாஸ்

கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும்.

மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.

பிட்சாடணோற்சவத் திருவிழா நடைபெறுகையில் . இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட பிட்சாசாடண மூர்த்தி விக்கிரகம், கபாலம் ஏந்தி, அவிழ்த்துவிட்ட சடாமுடி அலங்காரங்களோடு  திரு வீதிவுலா வருவார்.

அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.

சிவனுக்கும் சக்திக்கும் சமமாக உள்ள இத்தகைய  விழாக்கள், மதுரை மீனாட்சி கோவிலை நமக்கு நினைவுக்குக் கொண்டுவரும்.

முன்னேஸ்வரம் கோவில் பற்றி இந்து இளைஞர் மன்றம் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திகள் இதோ:

To be continued…………………………………

Tags- வடிவாம்பிகை, அல்லி அரசாணிமுன்னேஸ்வரம் கோவில், விஸ்வ ரூப தரிசன  , முன்னை நாதர்

ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்! – 1 ( Post No.12,499)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,499

Date uploaded in London –  19 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!

இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் புவி வெப்பம்!

            ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

உயிர் காக்கும் ஓஸோன் மண்டலம்

பூமியைச் சுற்றி உள்ள ஓஸோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் பெரும் வளையமாகும். இது வாயுக்களினால் ஆன ஒரு உறையாகும்.

சூரிய மண்டலத்திலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பூமியை ஓஸோன் மண்டலம் காக்கிறது. மனிதர்களையும் தாவரங்களையும் காப்பது இந்த மண்டலம் தான்.

சூரியன் தனது அளவற்ற சக்தியை பூமியின் மீது வீசும் போது அது மனிதன் தாங்க முடியாத அளவு அளப்பரியதாகும். அதைத் தாங்கக் கூடியதாக ஆக்கி, மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர் வாழும்படி செய்வது இந்த ஓஸோன் மண்டலமே.

இந்த ஓஸோன் உறை மட்டும் இல்லாவிட்டால்  இன்னும் அதிக அளவில் புற்று நோயும் காட்ராக்ட்  போன்ற கண் நோய்களும  ஏற்படும்.

ஓஸோனில் துளை

ஆனால் நகரங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகைகள் இந்த ஓஸோன் உறை மீது பட்டுப் பட்டு   அதில் அபாயகரமான அளவில்  துளை

ஏற்பட்டுள்ளது;   ஆஸ்திரேலியாவிற்கு மேலே அபாயகரமான அளவு  பரந்து விரிந்தது மட்டுமின்றி பெரிதாகி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா  விண்ணில் ஏவிய

சாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படம் பூமியின் அபாயகரமான நிலையைக்  காட்டுகிறது. அண்டார்டிகாவின்  மேலே ஓஸோன் துளை  பெரிதாகிக் கொண்டே போகிறது. இதன் பரப்பு 110 லட்சம் சதுர மைல்கள்.

அதாவது அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது  மூன்று மடங்கு அதிகம்!

1970ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் ஓஸோன் மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றனர். கவலைப்படும்படியாக சீஸனுக்குத் தகுந்த படி இது சுருங்கியும், விரிந்தும் வருகிறது.

செப்டம்பர் 16 ஓஸோன் தினம்

1995ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் ஓஸோன் லேயர் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அது முதல் செப்டம்பர் 16ஆம் நாள் ஆண்டுதோறும் உலக ஓஸோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மெட்ரோலாஜிகல் கண்காணிப்பு மையம் ஓஸோன் துளை

பெரிதாகி வருவது குறித்துக் கவலை தெரிவித்து ஓஸோனைக் காப்பாற்றுமாறு உலக நாடுகளை வேண்டி கேட்டுக் கொண்டது.

1987ல் அனைத்து நாடுகளும் நச்சுப் புகை கக்கும் விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த உறுதி எடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டன.

ஆனால் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

போதுமானதாக இல்லை என்பதை இந்த ஓஸோன் துளை தெரிவிக்கிறது.

நச்சு வாயுக்களே காரணம்

நச்சு வாயுக்கள் பூமியிலிருந்து அதிக அளவில் வெளிப்படுவதால் தான் ஓஸோனில் துளை ஏற்பட்டது. இந்த அபாயகரமான வாயுக்களில் குறிப்பிடத் தகுந்தது CFC எனப்படும் க்ளோரோ ஃப்ளோரா கார்பன் – Chloro Floro Carbon – ஆகும். இது ரெப்ரிஜரேஷன் எனப்படும் குளிர் சாதனக் கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. PUF எனப்படும் பாலி யூரிதேன் ஃபோமிலும் (Poly Urethane foam) இந்த சி.எப்.சி உள்ளது. இது ரெப்ரிஜரேட்டர்களிலும்,  இன்சுலேடட் மற்றும் ரெப்ரிஜரேடட் வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலக நாடுகள் இதன் உபயோகத்தைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பொருளாக 134ஏ என்ற வாயுவை ரெப்ரிஜரேஷன் சம்பந்தப்பட்ட கருவிகளில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

இது மட்டுமன்றி அனேக ஆலைகள்  கக்கும் விஷப்புகைகள் பூமியின் மேலே உள்ள வளி மண்டலத்தை மோசமாகத் தாக்குகின்றன. ஆகவே விஷ வாயுக்களைத் தடுப்பதில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பர்டிகுலேட் மேட்டர்

காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.

இவை  மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமாக இருக்கிறது.

                                     தொடரும்

***

Hindu Festival Crossword (Post No.12,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,498

Date uploaded in London – –  18 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Find the names of Hindu Festivals in the crossword puzzle given below: – 

 Across

1.Its other name is Dasara

5.Great Tamil Festival on Thai First day

6.Kerala’s great festival

7.Full moon day in Thai month

8.Lamp Festival in Tamil Nadu  (left to right)

9.Rama’s Birthday

10.11th day ; fasting day for Hindus( left to right)

12.Nine Nights Festival

Xxxx

Down

2.Lord Krishna’s Birthday

3.Great Hindu festival of Fire works and light

4.New Moon day

11.Lord Siva’s night  (Go Up) 

Across

1.Vijayadasami ;5.Pongal; 6.Onam; 7.Thai Pusam; 8.Kartikai  (left to right);9.Ramanavami;

10.Ekadasi( left to right);12.Navaratri;

Down

2.Janmashtami; 3.Diwali; 4.Amavasai; 11.Shivaratri  (Go Up)

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 18 9 2023 (Post No.12,497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,497

Date uploaded in London – –  18 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குறுக்கெழுத்துப் போட்டி

இந்தக் கட்டத்தில் 11 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.இலங்கையின் கிழக்குக்கு கடற்கரையில் உள்ள பாடல் பெற்ற தலம் ; மறு  பெயர் தட்சிண கயிலாயம்  ,

 5.ஜெய ஜெய—– ஹர ஹர—– கோஷம்   ,

 7.பாக்கு மரத்தின் பெயர் ,

 8.மூன்று அடி ,

9.மரத்தை அறுக்கும் ,

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.கந்த புராணத்தின் முதல் சொல்

2.அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர் கோவிலுள்ள இடம் பறவைகள் புகலிடம் உள்ளது

3.மதுரை மீனாட்சியின் தந்தை

4.காலை என்பதன் எதிர்ச்சொல் ⇡  (Go upward)

4.கும்பகோணத்தில் குளத்தில் குளிக்கும் விழா நடைபெறும் மாதம், நட்சத்திரம்

6.மேடை என்றும் பொருள்; வைணவர்கள் கோவில் உள்ள இடத்தின் பெயரும் ஆகும்.

1 2 3 
     4
      
5  6  
      
7  8  
9     

விடைகள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1திருகோணமலை , 5.சங்கர ,  7.கமுகு, 8.கஜம், 9.ரம்பம்,

xxxxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.திகடசக்கர

2.கோடிக்கரை

3.மலையத்வஜன்

4.மாலை, ⇡  (Go upward)

4.மாசிமகம்,

6.ரங்கம்

—subham—