
Post No. 12,546
Date uploaded in London – – – 2 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 15
28.கருணாகர பிள்ளையார் , உரும்பிராய், யாழ்ப்பாணம்
தமிழ் நாட்டின் கருணாகரத் தொண்டைமான் பெயரால் அழைக்கப்படும் பிள்ளையார் இவர். மேலும் கோவில் சம்பந்தமான கல்வெட்டு உடைய ஒரே கோவிலும் இதுதான் .
இந்தக் கோவிலின் இன்னும் ஒரு புதுமை, கோவிலின் ஒரு பகுதி இணுவில் கிராமத்திலும் மற்றும் ஒரு பகுதி உரும்பிராய் கிராமத்திலும் அமைந்திருப்பதாகும்.
தமிழ் நாட்டில் குலோத்துங்க சோழனிடம் (1070-1118) படைத்தளபதியாக பணியாற்றியவர் கருணாகரத் தொண்டைமான். அவரை உப்பு வாங்கி வருவதற்காக சோழ மன்னன் அனுப்பினான். அவர் அத்தோடு நிற்காமல் பல நற்பணிகளையும் செய்தார். தொண்டைமான் ஆறு என்ற பெயரால் அழைக்கப்படும் கால்வாயை வெட்டியவரும் அவரே. கடலுடன் இணைக்கும் இக்கால்வாய் உள்நாட்டுப் பொருட்களை நேரடியாக கப்பலில் ஏற்ற உதவியது . அவர் இணுவில் கிராமத்தில் தங்கிய காலத்தில் ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோவிலை மேம்படுத்தி கட்டிடம் எழுப்பினார். அதற்குப்பின்னர் கூழங்கை ஆரிய சக்ரவர்த்தி எல்லாக் கோவில்களுக்கும் திருப்பணி செய்தது போலவே இக்கோவிலுக்கும் திருப்பணி செய்தார். இந்தத் தகவல் எல்லாம் யாழ்ப்பாண வைபவ மாலை, மற்றும் ராஜநாயகம் இயற்றிய பழங்கால சிலோன் என்ற நூல்களிலிருந்து நமக்குக் கிடைக்கினறன.
.
கோவில் தொடர்பான கல்வெட்டுகள் உள்ள ஒரே இடம் இதுதான் என்றாலும் அவை மிகவும் அழி ந்த நிலையில் உள்ளன. ஆயினும் வாக்கியங்கள், அதிலுள்ள விஷயங்கள், எழுத்தமைதி ஆகியன பல செய்திகளைத் தருகின்றன. கோவிலுக்கு வழங்கப்பட்ட தானம் பற்றிப் பேசும் இக்கல்வெட்டு, சோழர் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கல்வெட்டுதான்.
நயினாத் தீவு நாகபூஷணி அம்மன் கோவிலில, மேலும் ஒரு கல்வெட்டு இருக்கிறது. ஆயினும் அது கோவில் தொடர்பான கல்வெட்டு அல்ல.
போர்ச்சுகீசியர்களின் மதவெறி அட்டூழியங்களிலிருந்து இந்தக் கோவிலும் தப்பவில்லை. கோவில்களை இடிப்பதே அந்த கலியுக அரக்கர்களின் தொழிலாக இருந்தது. அவர்கள் கஜினி முகமது, மாலிக்காபூர் போல தங்க வெறி படைத்த கயவர்கள்; கோவிலுக்குள் தங்கத்தினால் ஆன விக்கிரகங்களும், நகைகளும் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவே யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கு கணக்கான கோவில்களைத் தரை மட்டம் ஆக்கினார்கள். ஆனால் புத்திசாலியான குருக்கள்களும் பக்தர்களும் அவர்கள் வரும் முன்னரே விக்கிரகங்களைக் குளத்திற்குள்ளும் கிணற்றுக்குள்ளும் மறைத்து வைத்தனர். இன்று அவை புத்துயிர் பெற்றுவிட்டன
பிற்காலத்தில் இக்கோவிலுக்கு புத்துயிர் ஊட்டியவர் பெயரும் கருணாகரன்தான். கருணாகர ஐயர் என்பவர் முறையான கோவிலை நிறுவி, பூஜை புனஸ்காரங்களைக் கொணர்ந்தார். இன்று வரை அவர்தம் பரம்பரை ஆகம விதிகளின் படி நித்திய பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்குள் நடராஜர் , சுப்பிரமணிய சுவாமி விக்கிரகங்களும் வழிபடப்படுகின்றன .
கல்வெட்டுகள் தரும் தகவல்
பேராசிரியர் இந்திரபால இந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்து 1973-ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் தான் கண்ட விஷயங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார் . வைத்தீஸ்வர குருக்கள் காலம் வரை கோவிலுக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்த கல்வெட்டைக் கோவிலுக்குள் அவர் கொண்டு வந்தபின்னர்தான் அதன் மதிப்பு தெரிந்தது.. 1928ம் ஆண்டில் ANCIENT JAFFNA ஏன்ஷியண்ட் ஜாப்னா நூல் எழுதிய முதலியார் சி. ராசநாயகம் கல்வெட்டின் காலம் 1567ம் ஆண்டு என்று கணித்தார் . பின்னர் பேராசிரியர் இந்திரபால இரண்டு கல்வெட்டுகளையும் நுணுகி ஆராய்ந்தார் .
முதல் கல்வெட்டில் 11 வரிகள் உள்ளன. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளைப் போலவே ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற சம்ஸ்க்ருத வாழ்த்துடன் துவங்கி இறுதியில் கல்வெட்டு சொல்லும் விஷ்யங்களை மீறுவோருக்கு சாபங்களும் இடப்பட்டுள்ளன. கல்வெட்டில் பிரபவ, சித்திரை என்ற சொற்கள் உள்ளதாலும் அதன் எழுத்து எந்தக் கால வடிவம் உடையவை என்பது தெரிவதாலும் 1567 CE என்று கணிக்கப்பட்டது . வைரவ சூலக் குறியும் கல்வெட்டில் உள்ளது. கோவிலுக்கு விடப்பட்ட நில தானம் பற்றிய கல்வெட்டு என்றும் ஊகிக்கப்படுகிறது .
இரண்டாவது கல்வெட்டு
முதல் கல்வெட்டுக்கு மேல் இது இருக்கிறது காலத்தில் பிந்தியது; அதாவது 16ம் நூற்றாண்டு.
ஐந்தே வரிகள்தான் இருக்கின்றன. கோவில் பண்டாரத்துக்கு 5 பணம் தானம் அளிக்கப்பட செய்தி இதில் கிடைக்கிற்றது .
வருங்காலத்தில் வரப்போகின்ற ஆபத்துக்களை எண்ணித்தான் இவைகளைக் கற்களில் வடித்தனர் போலும். கோவிலுக்கு ஊரு செய்வோர் கங்க நதிக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்களாக என்ற சாபம் கல்வெட்டில் இருக்கிறது. போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் மீது இடப்பட்ட சாபம் இது
வரலாற்றை உற்று நோக்குகையில் யாழ்ப்பாணக் கோவில்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது
1544 – மன்னார் மீது போர்ச்சுகீசியர் தாக்குதல்
1560- யாழ்ப்பாணம் மீது போர்ச்சுகீசியர் தாக்குதல்
1565 – இந்து மத பாதுகாவலன் சங்கிலி மரணம்
1575- முன்னேஸ்வரம் கோவிலை மத வெறியர்கள் தரை மட்டம் ஆக்கினார்கள்.
1589- திருக்கேதீஸ்வரத்தில் பூஜைகள் நிறுத்தம்
அதிசயத்திலும் அதிசயம்
இந்துக்களை யாராலும் ஒழிக்க முடியாது; ஒழிக்கப் புறப்பட்டவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது இந்து மதம் சனாதன தர்மம். அதாவது என்றுமே அழிக்க முடியாதது.
புத்தர், சமணர் பெயரில் சில கும்பல்கள் செய்த அட்டூழியங்களை ஆதி சங்கரர் அழித்தார் ;
தமிழ் நாட்டில் சில கடவுள் விரோதக் கும்பல்கள் செய்த அட்டூழியங்களை சம்பந்தரும் மாணிக்கவாசகரும் அழித்தார்கள் ;
முஸ்லீம் மதவெறியர்கள் அழித்த கோவில்களை விஜய நகரப் பேரரசும், நாயக்க மன்னர்களும் மீண்டும் உண்டாக்கி அவுரங்க சீப் கும்பல்களை அழித்தார்கள் .
இலங்கையில் நடந்த அழிவு வேலைகளுக்கு, ஆறுமுக நாவலர் முற்றுப்புள்ளி வைத்து, இந்து மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.
உரும்பிராய் வட்டாரத்தில் 1959-ம் ஆண்டில் கோவில் பாதுகாப்பு சபை தோன்றியது . 1965-ம் ஆண்டில் தேர்களை பாதுகாக்க அமைப்புகள் கட்டப்பட்டன
ஆவணி சதுர்த்தியில் துவங்கும் வருடாந்திர விழா பத்து நாட்களுக்கு நடை பெறும். தேர்த் திருவிழா நாளில் யாழ்ப்பாண பக்த்ர்கள் இங்கே குவிகின்றனர். அப்போது கருணாகர விநாயக மூர்த்தி கருணை மழை பொழிகிறார் .
கோவில் பற்றிய முழு விவரம் உள்ள பதிப்பு ,
1973ம் ஆண்டில் கோவில் வெளியிட்ட கும்பாபிஷேக மலர்.
–SUBHAM—
Tags- கருணாகர பிள்ளையார் , உரும்பிராய், யாழ்ப்பாணம் , சோழ,