
Post No. 12,550
Date uploaded in London – – – 3 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 16
29.மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில்
MARUTHADY PILLAIYAR TEMPLE, MANIPAY, JAFFNA
மருத மரங்கள் நிறைந்த மானிப்பாயில் இருக்கும் பிள்ளையாரை யாழ்ப்பாண பக்தர்கள் மருதடி பிள்ளையார் என்று வழிபடுகின்றனர் . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் கிழக்கிலும், மேற்கிலும் வாசல்கள் இருப்பதாகும் . சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உலகை நிர்வகிக்கும் கடவுள்.
மூலஸ்தானம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
பல கோவில்களைப் போலவே தோற்றம் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. ஆயினும் போர்ச்சிகீசிய கிறிஸ்தவ அரக்கர்கள் தரை மட்டம் ஆக்கிய 500 க்கும் மேற்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று என்பதை 1925ம் ஆண்டில் வெளியான ஆலய மான்மியம் குறிப்பிடுறது . இந்தியாவிலிருந்து வந்த ஒரு மஹான் இங்கு தங்கிய பின்னர் இது புகழ்பெற்றது. இது வாய்மொழி வரலாற்றில் கிடைத்த செய்தி.
நவாலி பைரவர் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவதை வெறுத்த தியாகராஜ சைவ குருக்கள், அங்கிருந்த விநாயகரை இங்கே கொண்டுவந்தார். திருக்குளத்தின் கரையில் மருத மரத் தோப்பில் விநாயகர் அமர்ந்தவுடன், பக்தர்கள் மருத மரத்துக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்யத்துவங்கினர். பின்னர் நிலையான கட்டிடம் தேவை என்பதை உணர்ந்த மானிப்பாய் கிராம மக்கள், 1856–ம் ஆண்டில் அரசாங்கத்திடமிருந்து நிலத்தை வாங்கினர் . சுவாமிநாத முதலியார் இப்பணியில் முன்னணியில் நின்றார். எதிர்ப்புறம் கிறிஸ்தவ சர்ச் இருந்ததால் பிள்ளையார் அந்தப் புரம் நோக்காமல் அமர்த்தப்பட்டார்.. அப்போது முதல் இன்று வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் தேர்த் திருவிழாவிற்கு பெரும் கூட்டம் சேரும்.
விக்கிபீடியா தரும் தகவல் இதோ :-
பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்துவந்த நாட்களில், அவர்கள் தண்டத்திற்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலர் மருதமரத்தின்கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்புரமெரித்து விநாயகரை வழிபட்டு வந்தார்கள். இப்பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும் வெளிவீதிகளில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும் சனங்கள் உற்சவகாலங்களிலே கற்புரமெரித்து மருதத் த ளிரைப்பறித்துக் கண்ணில்ஒற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்துகொள்வதை காணலாம்.
யாழ்ப்பாணத்தில் எந்தப்பாகங்களில் இருப்பவர்களும் முதலில் எடுக்கும் நெற் தானியத்தை ”மருதடிப்பிள்ளையாருக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம்
XXXX
30. காசதுறை பிள்ளையார் கோவில்
காங்கேசன்துறையில் பெட்ரோல் ஸ்டேஷன் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஆனந்த பிள்ளையார் கோவில் பல நூற்றாண்டுகள் பழமை உடையது . அந்தக் காலத்தில் இந்த ஊருக்கு கயா துறை என்ற பெயர் இருந்தது இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் உள்ள கயா நகருக்குச் செல்லும் பக்தர்கள் இந்தத் துறைமுகம் வழியே சென்றதால் இப்பெயர் . கந்தனின் மறு பெயர் காங்கேயன். முருகன் சிலை இவ்வழியாக வந்ததால் காங்கேசன் துறை ஆயிற்று.
இந்த ஊரில் பவானந்த முனிவர் ஒரு சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . கப்பலில் யாத்திரை செய்வது , உயிருக்கு ஆபத்தாக இருந்த காலம் அது. விக்கினங்களை நீக்கும் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்று பிள்ளையாரை நிறுவி வழிபடத்துவங்கினர். . கடற்பயணத்தை இனிதே நிறைவேற்றியதால் யாத்திரைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.
ஆனந்த கணபதி என்ற தமிழ் நூலில் இந்தச் செய்தி உள்ளது .
XXX
31.பறாளை விநாயகர் ஆலயம், சுழிபுரம் , யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தின் வட மேற்கு வட்டாரத்தில் தொல் புரம் , சுழி புரம் என்று இரண்டு ஊர்கள் உள . தொல் புரம் என்றால் தொன்மையான இடம்; சுழி புரம் என்றால் சோழர்கள் தங்கிய இடம்.
தொல் புரத்துக்கு பெருமை சேர்ப்பது பொன்னாலயம் விஷ்ணு கோவில்; சுழி புரத்துக்குப் பெருமை கொணர்வது பறாளை விநாயகர் ஆலயம்.
பறாளை பிள்ளையையாருக்கு கண்ணைக் கொத்தி காத்த பிள்ளையார் என்ற பெயரும் உண்டு. இது பற்றிய கர்ண பரம்பரைக்கு கதை என்னவென்றால், போர்ச்சுகீசிய இந்து விரோத அரக்கர் படை, கோவிலைத் தரை மட்டம் ஆக்க வந்தபோது, ஒரு பெரிய காக்கைப் பட்டாளம் அவர்கள் கண்களைக் கொத்தி விரட்டியதாம்.
பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்து மறுமலர்ச்சி ஏற்பட்டபோது, நன்னித்தம்பி முருகேசு என்பவர் இந்த ஆலயத்தை சீரமைத்தார். இன்று பெரிய மண்டபங்களையும் தூண்களையும் காணமுடிகிறது. இப்போது முறையான பூஜைகளும் திரு விழாக்களும் நடத்தப்படுகின்றன.
இவ்வாலயத்தில் இந்தியாவிலிருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. தற்பொழுதும் சைவக்குருமார்களின் பரம்பரையினராலேயே நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.
அருகில் உள்ள கடலில் புனித நீராடுதல், அஸ்தி கரைத்தல் முதலியன நடைபெறுகின்றன . மஹா விஷ்ணுவின் பாதம் பட்ட திரு அடி தீர்த்தமும் அருகிலேயே உள.
இந்தத் தீர்த்தம் கடல் வரைக்கும், பூமிக்கு அடியில் செல்லுவதை புவிகர்ப்ப வியல் GEOLOGISTS அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பார்வதி அம்பாளின் சிலை கரை ஒதுங்கிய மாதா கல் என்னும் இடமும் அருகில் உள்ளது .
நல்லூர் சின்னத் தம்பி புலவர் , டச்சுக்காரர் ஆட்சிக்கு காலத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய பறாளை விநாயகர் பள்ளு இந்தக் கோவிலின் புகழ் பாடுகிறது 1889-ம் ஆண்ட்டில் சிவப்பிரகாச பண்டிதர் அதை முதலில் வெளியிட்டார்.
—-SUBHAM—-
TAGS – பறாளை விநாயகர், சுழிபுரம், காசதுறை, பிள்ளையார், மானிப்பாய், மருதடி