
Post No. 12,555
Date uploaded in London – – – 5 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 18
33.முழங்காவில் பிள்ளையார் கோவில்
MULANGAVIL PILLAIYAR TEMPLE
இருப்பிடம் – கிளிநொச்சி மாவட்டம், பூ நகரி வட்டாரம்
எங்கெங்கு எல்லாம் அதிசயங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் இறைவனைக் காண்பார்கள் இந்துக்கள். அல்லது இறைவன் இருக்கும் இடமெல்லாம் அதிசயங்கள் நடைபெறும் ; அப்போது பக்தி வலுப்படும்; நம் பிக்கை அதிகரிக்கும் என்றும் சொல்லலாம் .
முழங்காவில் கிராமத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்தது; ஒரு பிள்ளையார் வடிவம் இல்லாத கல்லை பிள்ளையார் என்று பூஜித்து வந்தனர். அருகில் ஒரு கிணறு இருந்தது. அபிஷேகத்துக்கு போதுமான அளவு நீர் ஊறாத கிணறு அது. அர்ச்சகரும் மனம் வெதும்பி ஆண்டவனை வேண்டினார். ஒரு நாள் இடி ஓசை கேட்டது; வானத்தில் மேகமும் இல்லை; இடிக்கு முன்னர் வரும் மின்னலும் இல்லை. கிணற்றின் மீது இடி விழுந்தது. அங்கே தண்ணீர் ஊற்று பொங்கி எழுந்தது ; இந்த அதிசயம் கல்லுப்பிள்ளையார் மீது மேலும் நம்பிக்கையை வளர்த்தது; பின்னர் முறையான விநாயகரை இந்தியாவிலிரிருந்து வடித்து எடுத்து பிரதிஷ்டை செய்தனர் .
முழங்காவில் கிராமம் , யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையே, கடலோர சாலையில் பாதி தூரத்தில் உள்ளது . வில்லு என்பது பள்ளம் போன்ற பகுதி. ; சுண்ணாம்பபுக் கல்லால் ஆன குகை போன்ற பகுதிகள் இருந்து, அவை இடிந்தபோது ஊற்று வெளியே தெரிந்திருக்கலாம் என்பது விஞ்ஞான பூர்வ விளக்கம். அது இடிந்தபோது எழுந்த ஓசையே இடி போல ஒலித்திருக்கலாம் . ஆயினும் அது நிகழவும் ஒரு காரணம் வேண்டும் அல்லவா? அதுவே இறைவனின் திருவிளையாடல் .
யாழ்ப்பாண – மன்னார் வழிப்பயணிகளுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் இந்த வில்லு.
திருக்கீதீஸ்வரத்தின் புகழ் பரவிய காலத்தில் 1951ம் ஆண்டில் வி. கே. செல்லப்பா சுவாமி என்பவர் தற்காலிக கூரை அமைத்தார். 1964 ஜூன் 24ம் தேதி பூமி பூஜை, அஸ்திவாரக் கல் நாட்டு விழா நடந்தது 1965-ம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பிள்ளையார் நிறுவப்பட்டார் அப்போது அங்கு GROUP PHOTO குரூப் போட்டோவுக்கு POSE கொடுத்தோர் படத்தை ( 16 சிறுவர்கள் உள்பட) திரு ஷண்முகம் ஆறுமுகம் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தில் காணலாம்.
FOR PICTURES GO TO PAGE 46, 47 IN HUNDRED HINDU TEMPLES OF SRI LANKA, SANMUGAM ARUMUGAM, 2014
மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததால் நன்னீர் ஊற்றாக மாறி இன்றுவரை வற்றாத புனித தீர்த்தமாக இருந்து வருகின்றது. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தமையாலே முழங்காவில் எனவும் அழைக்கப்பட்டது.. திருக்கேதீஸ்வரம் செல்லும் அடியவர்களின் முதல் வணக்கத்தலம் என்பதுடன் திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பி வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஓர் ஆலயமாகவும் விளங்குகின்றது.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ் பயணிகளுக்கு உதவும் பிள்ளையார் முழங்காவில் பிள்ளையார்.

XXXX
34.ஆத்திமோட்டை காத்தான் குளம் பிள்ளையார் கோவில்
மன்னார்- பூ நகரி சாலையில் ஆத்திமோட்டை பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. ஒருகாலத்தில் நல்ல செழிப்புள்ள இடமாக இருந்த இடம் காலப்போக்கில் நீர்வளம் குறைந்ததால் மக்கள் வெளியேறிய ஊர் ஆத்திமோட்டை. அங்குள்ள பழங்கால செங்கற் கட்டிடங்களும் பாழடைந்த கிணறுகளும் இதற்குச் சான்று .
இங்குள்ள பிள்ளையார் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது பரங்கி ஆற்றை அணை போட்டுத் தடுத்துக் கட்டப்பட்ட பெருங்குளம், உடைப்பெடுத்து , பாசனத்துக்கு இருந்த குளங்களுக்குத் தண்ணீர் வராமல் தடுத்தது . 1965ம் ஆண்டில் அது செப்பனிடப்பட்டது ஊர் மக்களும் திரும்பி வந்து பிள்ளையாரை ஆராதிக்கத் தொடங்கினர்.
35.மாமாங்க ஈஸ்வர பிள்ளையார் கோவில் , மட்டக்களப்பு

இருப்பிடம் – மாமாங்க பிள்ளையார் கோவில், அமிர்தகழி, மட்டக்களப்பு மாவட்டம்.
சிவலிங்கம் முக்கிய இடம்பெற்ற இந்தக் கோவில் பிள்ளையார் பெயராலே அழைக்கப்படுகிறது . சிவலிங்கத்தின் மீது வெள்ளிப் பிள்ளையார் உருவம் உள்ளது ; மட்டக்கிளப்பிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது
மாமாங்க தீர்த்தம், அமிர்தகழி தீர்த்தம், ஹனுமான் தீர்த்தம், ஆகியன இங்குள்ள புகழ் பெற்ற புனித நீர்நிலைகள் ஆகும் .
ராம பிரான், அனுமன், ராவணன் ஆகியோருடன் தொடர்பு உள்ளதால் இதிஹாச காலம் முதல் சம்பந்தம் இருக்கிறது.
ராவணன், திருக்கோணேஸ்வரம் செல்லும்போதெல்லாம் இங்குள்ள சிவ லிங்கத்தை வழிபட்டான். அனுமனோ இலங்கை நகரைத் தீயிட்டு எரித்த பின்னர் தன்னுடைய வால் பகுதி தீயை இங்குள்ள குளத்தில் மூழ்கி அணைத்தான்
ராமபிரான், இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அனைவர்க்கும் இங்கு இறுதிக்கடன் களைச் செய்தான்.
ஒரு ரிஷி முனிவர், புனித கங்கை நீரைக் கொணர்ந்து குளங்களில் கொட்டியதால் அவை அமிர்த கழி ஆயிற்று.
இந்த தீர்த்தத்தில் மருத்துவ குணம் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம் தீர்த்தத் திருவிழாவன்று இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அவர் மாமாங்கேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.. காட்டில் கிடைத்த லிங்க வடிவக் கல்லை இங்கே பிரதிஷ்டை செய்தனர்
இதே போல வெட்டர் இனச் சிறுவன், காட்டில் கண்டுபிடித்த ஒரு லிங்கமும் குமாரத்தான் கோவிலில் வழிபடப்படுகிறது இயற்கைச் சூழலில் அமைந்த இந்தக் கோவில், அனைவர்க்கும் மன நிம்மதியைத் தருகிறது. சிவபெருமான், குரு வடிவாகி , ஒரு குருந்த மரத்தின் கீழ், மாணிக்க வாசகருக்கு அருள் மழை பொழிந்ததை நாம் அறிவோம். அந்தக் குருந்த மரங்கள் இங்கே செழிப்பாக வளருகின்றன .
கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது.
ஆடி அமாவாசை உற்சவத்தின் பொழுது இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் .
TO BE CONTINUED…………………….
TAGS- அமிர்தகழி, மாமாங்க , பிள்ளையார், முழங்காவில், ஆடி அமாவாசை