ஶ்ரீ கௌடபாதர் – 1 (Post No.12,557)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,557

Date uploaded in London –  6 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மகான்களின் வாழ்வில் .. 

ஶ்ரீ கௌடபாதர் – 1

ச.நாகராஜன் 

பதஞ்சலி முனிவர்

சம்ஸ்கிருத இலக்கியம் அகன்றது. ஆழ்ந்தது. அதில் உள்ள கோடிக்கணக்கான நூல்களை முற்றும் கற்றவர் இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம், அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் கலைகள் பற்றிய அவ்வளவு அபூர்வமான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. 

சம்ஸ்கிருத இலக்கணத்தை யாத்தவர் மாமுனிவரான பாணினி. ஆனால் அவரது இலக்கணத்தை சாமானியனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதை சுலபமாகப் படிக்கும் வகையில் பதஞ்சலி முனிவர் அதற்கு மஹாபாஷ்யம் – விரிவுரை – ஒன்றை எழுதினார். இந்த விரிவுரையே ஒரு அபூர்வமான பொக்கிஷம்.

காத்யாயன மஹரிஷி பாணினி இலக்கணத்திற்கு ஒரு உரையை – கார்திக் – எழுதினார்.

பாற்கடலில் லக்ஷ்மி பள்ளி கொண்ட நாராயணன் சேஷசயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் ஆதி சேஷனே அத்ரி மஹரிஷியின் புத்திரராக அவதரித்தார். பதஞ்சலி என்ற பெயரைக் கொண்டார். ஆதிசேஷனின் இதர அவதாரங்கள் : வாசுகி, த்ரேதா யுகத்தில் லக்ஷ்மணன், த்வாபர யுகத்தில் பலராமர், கலியுகத்தில் பதஞ்சலி.

மூன்று நூல்கள்

மனித குலம் உய்வதற்காக பதஞ்சலி முனிவர் மூன்று உயரிய அரிய நூல்களை யாத்தார்.

1) பதஞ்சலி யோகசூத்ரம்

2) மஹாபாஷ்யம்

3) சரக சம்ஹிதா.

பதஞ்சலி முனிவரின் இன்னொரு பெயர் சரகர்.

ஆயிரம் சீடர்கள்

பதஞ்சலியின் உயரிய ஞானத்தைக் கண்டு ஏராளமானோர் அவரை அண்டி அவரது சிஷ்யர்களாக ஆயினர்.

இப்படி ஓராயிரம் சிஷ்யர்கள் அவரிடம் சேர்ந்தனர். அவரைக் குருவாகக் கொண்டனர்.

இவர்களில் ஒருவரே ஶ்ரீ கௌடபாதர்.

இவரே பதஞ்சலி முனிவரின் அரிய ஞானத்தை உலகிற்கு அளித்துப் பரப்பியவர் எனலாம்.

பதஞ்சலி முனிவர் வாழ்க்கையிலும் கௌடபாதர் வாழ்க்கையிலும் ஏராளமான அற்புத நிகழ்ச்சிகள் உண்டு.

ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.

இந்த மண்டபத்தில் ஆயிரம் சிஷ்யர்களும் குழுமி தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை ஒரே சமயத்தில் எழுந்து கேட்பது வழக்கம்.

அந்த ஆயிரம் பேருடைய சந்தேகங்களையும் ஒரே சமயத்தில் அவர்கள் கேட்டாலும் அதை அப்படியெ நினைவிலிருத்தி ஒவ்வொருவருக்கும் தக்க பதிலை அளித்து சந்தேகங்களைத் தீர்ப்பது அவரது வழக்கம்.

அப்படிப்பட்ட ஞானமும் நினைவாற்றலும் கொண்ட மஹா யோகி அவர்.

சிஷ்யர்கள் கேள்விகளைக் கேட்கும் போது அவர் சேஷ உருவத்தை எடுத்துக் கொள்வார். ஒரு திரைக்குப் பின்னாலிருந்து பதிலைச் சொல்வார்.

அவர் இந்த சபையில் கூடும் அனைவருக்கும் இரு நிபந்தனைகளை விதித்திருந்தார்.

1) ஒருபோதும் திரையை விலக்கிப் பார்க்காதீர்கள். அது பெரும் தீமையை விளைவிக்கும்.

2) ஒரு போதும் பாதியில் சபையை விட்டுப் போகாதீர்கள். அப்படிச் செல்பவர்கள் பிரம்ம ராக்ஷஸர்களாக ஆவார்கள்.

ஶ்ரீ கௌடபாதர்

ஒரு நாள் சிஷ்யர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. எப்படி இவரால் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் கேட்கும் கேள்விகளை நினைவில் இருத்தி தக்கபடி விடைகளை அளிக்க முடிகிறது என்பதே அந்த சந்தேகம்.

ஒரு நாள் ஆர்வம் உந்த அவர் திரையை விலக்கினார். ஆதி சேஷனின் விஷம் அவர் மீது பாய்ந்தது. எங்கும் பரவியது. அங்கிருந்தோர் இறந்தனர்.

ஒரே ஒரு சிஷ்யர் பதஞ்சலி முனிவரின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவரது அனுமதியின்றி சபையை விட்டு வெளியேறினார்.

அவர் மட்டுமே உயிருடன் இருக்க முடிந்தது. அவர் பதஞ்சலி முனிவரின் அதே உருவத்தை அடைந்தார்.

அவரை அழைத்த பதஞ்சலி முனிவர், “நீ என்னிடமுள்ள அனைத்து ஞானத்தையும் பெறுவாய். ஆனால் என் சொல்லை மீறி அனுமதியின்றி வெளியே சென்றதால் நீ ஒரு ப்ரம்மராக்ஷஸனாக ஆவாய். எப்போது உனது ஞானம் அனைத்தையும் எதிர்காலத்தில் வரும் எனது சிஷ்யர்களுக்கு அளிக்கிறாயோ அப்போது அந்த பிரம்மராக்ஷஸ உருவம் நீங்கும்” என்றார்.

இந்த சிஷ்யர் தான் ஶ்ரீ கௌடபாதர்!

**

Leave a comment

Leave a comment