
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,574
Date uploaded in London – 11 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நாலடியார்
(சமண முனிவர்கள் பலர் இயற்றியது)
ச.நாகராஜன்
கவின் மிகு சொற்றொடர்கள்
www.projectmadurai.org இணையதளத்தில் இந்த நூல் உள்ள
தொடர் எண் 16
(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)
மொத்தப் பாடல்கள் : கடவுள் வாழ்த்து + 400 பாடல்கள்
1. எம் உள்ளத்து முன்னியவை முடிக என்று (கடவுள் வாழ்த்து)
2. பகடு நடந்த கூழ் பல்லோரோடு உண்க (2)
3. செல்வம் சகடக்கால் போல வரும் (2)
4. சென்றன வாழ்நாள், செறுத்துடன் வந்தது வந்தது கூற்று (4)
5. வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே ஆழ்கலத்தன்ன
கலி (12)
6. கைத்துண்டாம் போதே கரவாதறஞ் செய்ம்மின் (19)
7. செத்தாரைச் சாவார் சுமந்து (24)
8. டுண்டுண்டுண்டென்னும் உணர்வினார் சாற்றுமே
டொண்டொண்டோடென்னும் பறை (25)
9. புல்நுனி மேல் நீர் போல் நிலையாமை (29)
10. அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும்
ஆற்றவே கொள்க (34)
11. அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த
சொல்லார் கறுத்து (63)
12. அறிவதறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி உறுவதுலகுவப்பச் செய்து (74)
13. தான் கெடினும் தக்கார் கேடெண்ணெற்க (80)
14. அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரா (82)
15. வடிவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணதெய்த \
இருதலையும் எய்தும் (114)
16. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தெருங்கால் யாஅர்
உபாயத்தின் வாழாதார்? (119)
17. பெரியவர் கேண்மை பிறை போல நாளும் வரிசை
வரிசையா நந்தும் (125)
18. குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும்
அழகல்ல் (131)
19. கல்வி அழகே அழகு (131)
20. கல்வி கரையில் கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி
பல (135)
21. எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று தம்மைத் தாம்
கொள்வது கோளன்று (165)
22. அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்
கடுஞ்சொல் (172)
23. பாலோடளாய நீர் பாலாகுமல்லது நீராய் நிறந்தெளிந்து
தோன்றாதாம் (177)
24. தெளிவிலார் நட்பின் பகை நன்று (219)
25. நல்லாரெனத்தாம் நனி விரும்பிக் கொண்டாரை
அல்லாரெனினும் அடக்கிக் கொளல் வேண்டும் (221)
26. நெல்லுக்குமியுண்டு நீர்க்கு நுரை உண்டு புல்லிதழ் பூவிற்கும்
உண்டு (221)
27. நெஞ்சம் சுடுதற்கு முட்டிய தீ (224)
28. களைபவோ கண் குத்திற்றென்று தங்கை (226)
29. நுண்ணுணர்வினாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே
யொக்கும் (233)
30. இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு (237)
31. நெடுமொழி வையம் நக (238)
32. பணிவில் சீர் மாத்திரையின்ற நடக்குமேல் வாமூர் கோத்திரம்
கூறப்படும் (242)
33. மனத்தனையர் மக்கள் என்பார் (245)
34. உணர உணரும் உணர்வுடையாரைப் புணரப் புணருமாம்
இன்பம் (247)
35. தன்னைத் தலையாகச் செய்வானும் தான் (248)
36. பட்டினம் பெற்ற கலம் (250)
37. நுண்ணர்வின்மை வறுமை (251)
38. எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை யொலி (256)
39. கள்ளி மேல் கைந்நீட்டார் சூடும் பூ அன்மையால் (262)
40. செல்வம் பெரிதுடையராயினும் கீழ்களை நள்ளார்
அறிவுடையார் (262)
41. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும் ஓதியனையார்
உணர்வுடையார் (270)
42. ஈட்டலும் துன்பம் ஈட்டிய வொண்பொருளைக் காத்தலும் ஆங்கே
கடுந்துன்பம் (280)
43. உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால் (324)
44. சிந்தியார் சிற்றறிவினார் (329)
45. நெய்யில்லாப் பாற்சோற்றின் நேர் (333)
46. எய்திய செல்வத்தராயினும் கீழ்கலைச் செய்தொழிலாற்
காணப்படும் (350)
47. கயவர்க்கு எழுநூறு நன்றி செய்தொன்று தீதாயின் எழுநூறும்
தீதாய் விடும் (357)
48. மகனறிவு தந்தையறிவு (367)
49. கட்கினியாள், காதலன் காதல் வகை புனைவாள், உட்குடையாள்,
ஊர் நாண் இயல்பினாள் (384)
50. உட்கி இடனறிந்தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள்
பெண் (384)

*****