
Thia is NOT Sri Lanka; only representative picture.
Post No. 12,583
Date uploaded in London – – – 13 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 26
54.மறைந்து போன சிவன் கோவில்கள்
இலங்கைத் தீவில் மறைந்துபோன, அழிந்துபோன, காணாமற் போன சிவன் கோவில்கள் பற்றிய விவரங்கள் பிள்ளையாய் கல்வெட்டுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் கிடைக்கின்றன. மேலும் பல இடங்களில் சிவன் தொடர்பான சின்னங்கள் கிடைக்கின்றன. சிதைந்து போன ஆவுடையார், கோவில் தூண்கள் ஆகியன பற்றி பல இடங்களிலிருந்த்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
புத்த மதம், ஒரு மதம் மாற்றும் மதம்.( proselytizing religion); அதாவது இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முன்னரே தங்கள் மதத்திற்க்கு வாருங்கள் என்று இந்துக்களை அழைத்த மதம்.. அது மட்டுமல்ல ராமாயண மஹாபாரத , பஞ்ச தந்திரக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதகக்கதைகளில் இணைத்து ஒவ்வொன்றிலும் போதிசத்துவர் என்னும் கதா பாத்திரத்தை நுழைத்த மதம் ; அதாவது புத்தர், முன் ஜென்மத்தில், போதிசத்துவராக இருந்தார் என்று சொல்லி இந்து மதத்தைக் கபளீகரம் செய்ய புத்த சந்யாசிகள்/ பிட்சுக்கள் முயற்சி செய்தனர். புத்தருக்கும் இந்த வேலைகளுக்கும் சம்பந்த மில்லை. அவர் இறந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இதெல்லாம் நடந்தது.
அசோகரும் இந்த வேலையில் இறங்கி தன்னுடைய மகள் சங்க மித்திரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரிஸ்ஸா (கலிங்கம்) மாநிலத்தில் வசித்த ஜெயதேவர் , புத்த பிட்சுக்கள் செய்ததையே செய்து பவுத்த மதத்தை சுவாஹா செய்தார். அதாவது புத்தரும் விஷ் ணுவின் அவதாரம் என்று சொல்லி கீத கோவிந்தம் என்னும் நூலில் பாடிவைத்தார். இன்றும் கூட தமிழ் நாட்டில் எல்லா பஜனைகளிலும் பாடும் அஷ்டபதியில் இதைக் கேட்கிறோம். அத்தோடு தென் இந்தியாவில் புத்த மதத்துக்கு முடிவு கட்டப்பட்டது .
இப்போது கிறிஸ்த மதத்தினரும் கர்நாடக சங்கீதப் பாடகிக ளுக்கு காசு கொடுத்து மும்மூர்த்திகள் எழுதிய கிருதிகளில் ஏசுவின் பெயரை நுழைத்ததையும் அதை இந்துக்கள் கடுமையாக எதிர்த்ததையும் பத்திரிகைகளில் படிக்கிறோம். அந்த பாடகிகளுக்கும் தமிழர்கள் முடிவு கட்டிவிடனர். இந்த வேலையை முதலில் துவக்கியது, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதகக்கதைகளை எழுகிய புத்த பிட்சுக்கள்தான்.560 ஜாதகக்கதைகள் நமக்கு பாலி மொழியில் கிடைத்துள்ளன.. இப்படிக் கதை எழுதியவர்கள், ஒரு பகுதியில் மதம் மாறியவர்கள் அதிகமானவுடன் பழைய இந்துக்கோவில்களில் புத்தர் சிலையை வைத்தனர். பெரும்பாலும் பக்தர்கள் இல்லாததால் தாமாகவே பாழடைந்து போயின. இதற்குப் பின்னர் போர்ச்சுகல் , ஹாலந்து நாட்டிலிருந்து வந்த மத வெறியர்கள் கோவில்களைத் தரைமட்டமாக்கி சர்ச் CHURCH கட்டியதை அவர்களே எழுதி வைத்த நூல்களிலிருந்து அறிகிறோம்.
இது தவிர தமிழர்களே கோவில்களை அழித்த வரலாறும் உண்டு . உலக சரித்திரத்தைப் படிப்போருக்கு ஒரு அதிசய உண்மை கிடைக்கும். தமிழினம்தான் உலகில் நீண்ட காலத்துக்கு ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு செத்த இனம். அதாவது 1500 ஆண்டுகளுக்கு சேர சோழ பாண்டியர்கள் ஒருவனை ஒருவன் அடித்து, அழித்த செய்திகளை சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் காண்கிறோம். அந்தக் காலத்தில் கோவில்கள் என்பது இன்று காணப்படும் பிரம்மாண்ட கோபுரங்கள் உடையவை அல்ல. அப்பர் தேவாரத்தில் 7 வகைகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார்.. ஒரு தலை நகரை வென்று, அந்த ஊரை தீக்கிரையாக்கி கழுதையைக் கொண்டு உழுதனர் என்பதை புறநானூற்றுப் பாடலிலும் ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா குகைக் கல்வெட்டுகளிலும் படிக்கிறோம். அது கி.மு 130ல் ஆண்ட காரவேலனின் கல்வெட்டு. அவன் பாண்டிய நாடு வரை படையெடுத்து வந்து பாண்டியனிடம் முத்துக்களைக் கப்பமாகப் பெற்றான் . இவை எல்லாம் போக, பெரிய மழை , வெள்ளத்திலும் பல கோவில்கள் அழிந்தன.
இதற்கும் மேலாக வறட்சி ஏற்பட்டால் ஊரே காலியாகி மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். தமிழ் , சம்ஸ்க்ருத இலக்கியம் முழுவதிலும் அடிக்கடி வரும் வாசகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி ஆகும். இதை 12 ஆண்டு நீண்ட வறட்சி என்றும் சொல்லலாம். அப்படி ஏற்படும்போது மக்கள் வெளியேறியதால் கோவில்கள் பாழடைந்து போயின.
இன்ன பல காரண ங்களால் இலங்கைத் தீவில் அழிந்த கோவில்களின் பட்டியல் நமக்கு கிடைக்கிறது .
மறைந்துபோன சிவன் கோவில்களில் மிக முக்கிய மானது பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் ஆகும்
தொண்டீஸ்வரம்
இலங்கைத் தீவில் வந்து குடியேறிய விஜயன் தீவிர சைவன். அவனுக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னரே புத்த மதம் இலங்கையில் காலெடுத்துவைத்தது. விஜயன் இலங்கைத் தீவின் நால் திசைகளையும் காக்க 4 சிவ கோவில்களை கட்டினான் ஆயினும் தொண்டீஸ்வரம் என்ற ஐந்தாவது இடத்தை யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் இலங்கை வரலாற்றறை எழுதிய பால் பியரிஸ் குறிப்பிடுகின்றனர் . இன்று வரை தொண்டீஸ்வரம் பற்றி ஊகங்களே உள்ளன . புகழ்பெற்ற அந்த சிவாலயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்துக்களில் ஒரு இன்டியானா ஜோன்ஸ் INDIANA JONES தோன்றினாதான் அதைக் கண்டு பிடிக்க முடியும்!
ஜம்புகோளம், சம்புத்துறை,சம்பேஸ்வரம்
தமிழில் கோவளம் , கோவலம் என்று ஒரு சொல் உண்டு .இதற்கு 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி தரும் பொருள் கடலுக்குள் நீண்ட தரைப் பகுதி; கடலில் முனையில் இருக்கும் பட்டினம் என்பதாகும். தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலும், கேரளத்தில் திருவந்தபுரத்துக்கு அருகிலும் யாழ்ப்பாணத்தில் குறைந்தது மூன்று இடங்களிலும் கடற்கரைப் பகுதிகளில் கோவளம் இருப்பதை நாம் அறிவோம். பருத்தித்துறை அருகில் கல் கோவளம், கீரிமலைக்கு மேற்கே சம்பு கோவளம் , காரை நகரில் ஒரு கோவளம் என்று பட்டியல் நீளும்.
இலங்கையில் இப்போது ஜம்புகோளம் என்ற் இடம் உள்ளது; இதுவும் கோவளம் என்பதன் திரிபே. இந்தியாவுக்கு நாவலந்தீவு / ஜம்புத் வீபம் என்றும் பெயர். இதன் அருகில் இருந்ததால் ஜம்புகோளம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் அல்லது நாவல் மரம் நிறைந்த கடலில் நீண்டிருக்கும் முனை என்றும் பொருள் இருந்திருக்கலாம். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில்தான் அசோக மாமன்னனின் மகள் சங்க மித்ரா, பெரிய, புனித அரச மரத்தின் கிளையுடன் வந்து இறங்கினாள்.
இந்த இடத்துக்கு சிலர், வேறு விளக்கமும் தருவார்கள். சம்பு என்பது சிவனின் பெயர். சிவன் சிலை வந்து இறங்கிய பட்டினம் இது என்பது அந்த விளக்கம் .
இங்கு சம்புவுக்கு / சிவ பெருமானுக்கு ஒரு கோவில் இருந்தது . இந்த சம்பந் துறையைத்தான் சிங்கள . பாலி நூல்கள் ஜம்புகோளம், என்று குறிப்பிடுவதாக சி. எஸ். நவரத்தினம் 1964ல் எழுதிய நூலில் குறிப்பிட்டிடுகிறார் ஆயினும் இவை ஒரே இடமா அல்லது வேறு இடங்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே .
டச்சுக்காரர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய பறாளை விநாயகர் பள்ளு நூலில் சம்பேஸ்வரத்தில் இருந்த சிவன் கோவில் பற்றி பாடியுள்ளார் ஷம்பு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வரங்களை அருளுவோன், வரம்தருவார் என்று பொருள்.
Ref . A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON , C.S.NAVARATNAM, 1964
XXX
சிவன் கோவில் இடிபாடுகள், துணுக்காய்
இலங்கையின் வடபகுதியில் முல்லைத்தீவில் வவுனிக்குளத்துக்கு அருகில் உடைந்த சிவலிங்கத்தையும் கோவில் இடிபாடுகளையும் கண்டதாக முல்லைத்தீவு துணை ஏஜென்ட் ஹுஜ் நெவில் HUGH NEVILLE 1889ம் ஆண்டு டைரி குறிப்பில் எழுதி வைத்துள்ளார் .
அங்குள்ள பாளி ஆற்றின் குறுக்கேயுள்ள அணை, துத்த காமினி காலத்துக்கும் முந்தியது என்று மஹாவம்சக குறிப்பை மேற்கோள் காட்டி ஹென்றி பார்க்கர் HENRY PARKER எழுதிவைத்துள்ளார் இவை எல்லாம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சிக்குட்பட்ட இடம் என்பதால், சிவன் கோவில் இருந்ததை ஊகிக்க முடிகிறது .
கோவில் காடு என்னும் இடத்தில் உடைந்த ஆவுடையாரும் கண்டு பிடிக்கப்பட்டது.
செட்டிகுளம் சந்திர சேகரன் கோவில்
மதவாச்சி – மன்னார் சாலையில் மதவாச்சியிலிருந்து 15 மைல் தூரத்தில் விநாயகர் சிலை வழிபாட்டில் உள்ளது . சாலைக்கு அப்பால் குளமும், வவ்வாலை என்னும் இடமும் உள்ளன
மதுரை நகரைச் சேர்ந்த ஒரு செட்டியார் கப்பல் உடைந்துபோய், முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இவ்வூரில் கரை சேர்ந்தனர். இது நடந்தது. கி .பி. 247ம் ஆண்டில்.வீர நாராயண செட்டியார் என்ற பெயர் உடைய அவர் வவ்வாலையில் சந்திரசேகரனுக்கு கோவில் கட்டினார். என்று VANNI MANUAL, J P LEWIS வன்னி மானுவல் எழுதிய ஜெ.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்
தொடரும்…………………………………………….
Tags சம்புத்துறை, சம்பேஸ்வரம் அழிந்த , மறைந்த , சிவன் கோவில்கள், கோவளம் , கோவலம்