மூதுரை,  நல்வழி கவின் மிகு சொற்றொடர்கள் (Post.12,582)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,582

Date uploaded in London –  13 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மூதுரை

(ஔவையார் இயற்றியது)

ச.நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 2

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் 30,

 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

    நோக்குண்டாம் (பாடல் எண் 1)

 2. நின்றி தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே

     தான் தருதலால் (2)

 3.  நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல் மேல் எழுத்துப் போல்  

   காணுமே (2)

 4. நீர் மேல் எழுத்துக்கு நேர் (3)

 5. அட்டாலும் பால் சுவையில் குன்றாது (4)

 6. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே (4)

 7. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் (4)

 8. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த

    கருமங்கள் ஆகா (5)

 9. நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் 

   நுண்ணறிவு (7)

10. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல்

   கேட்பதுவம் நன்றே (9)

11. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும்

   தீதே (9)

12. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும்

   ஆங்கே பொசியுமாம் (10)

13. நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்

  மழை (10)

14. கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானுமதுவாகப்

   பாவித்து (14)

15. புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம் (15)

16. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு (16)

17. சீரியர் கெட்டாலும் சீரியரே (18)

18. உடன்பிறந்தே கொல்லும் வியாதி (20)

19. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை (21)

20. கருதியவாறாமே கருமம் (22)

21. முற்பவத்தில் செய்த வினை (22)

22. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் (24)

23. மூர்க்கரை மூர்க்கரே  முகப்பர்

24. முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம் (24)

25. மன்னனில் கற்றோன் சிறப்புடையன் (26)

26. கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு (26)

27. கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் (27)

28. சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம்

   குறைபடாது (28)

 **

நல்வழி

(ஔவையார் இயற்றியது)

ச.நாகராஜன் 

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 2

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் கடவுள் வாழ்த்து 1 பாடல்கள் 40 – மொத்தம் 41,

 1. நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா (கடவுள் வாழ்த்து)

 2. போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த

    பொருள் (பாடல் எண் 1)

 3. சாதி இரண்டொழிய வேறில்லை (2)

 4. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில்

    உள்ளபடி (2)

 5. இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே (3)

 6. கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் (4)

 7. ஆம் கமல நீர் போல் பிறிந்திருப்பார் (7)

 8. ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் (8)

 9. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்

   வருவாரோ மாநிலத்தீர் (11)

10. இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அறிது (11)

11. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் (12)

12. சீச்சீ! வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை  

    சால உறும் (14)

13. சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும்

    இல்லை (15)

14. உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே

    மதியாய் விடும் (15)

15. கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி (16)

16. வெறும் பானை பொங்குமோ மேல்? (17)

17. வஞ்சமில்லார்க்கென்றும் தரும் சிவந்த தாமரையாள் தான் (21)

18. கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் (220

19. நீறில்லா நெற்றி பாழ் (24)

20. பாழே மடக்கொடி இல்லா மனை (24)

21. பத்தும் பசிவந்திடப் பறந்து போம் (26)

22. ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்

23. எண்பது கோடி நினைந்து எண்ணுவன (28)

24. சாந்துணையும் சஞ்சலமே தான் (28)

25. தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார் (30)

26. வெறுத்தாலும் போமோ விதி (30)

27. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று (31)

28. இல்லானை இல்லாளும் வேண்டாள் (34)

29. பூவாதே காய்க்கும் மரமுள (35)

30. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய

    நூலகத்தும் இல்லை (37)

31. தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி

    மொழியும் திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம்

    என்று உணர் (40)

***

Leave a comment

Leave a comment