இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை! (Post No.12,585)

Hindu Protest in Chennimalai against renaming the place.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,585

Date uploaded in London –  14 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை!

ச.நாகராஜன்

என்ன, தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம்.

இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையினர். ஆனால் அவர்களுக்கு உரிமைகளோ சிறுபான்மையினர் அனுபவிப்பதை விட குறைவு.

ஆகவே அவர்கள், ‘இந்தியாவில் இந்துக்களான எங்களுக்கு சம உரிமைகள் தேவை’ என்று போர்க்கொடி உயர்த்த வேண்டிய அவசியத்திற்கு – கட்டாயத்திற்கு  -உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அப்படி என்ன சம உரிமை இல்லை என்று கேட்டால்… இதோ பார்க்கலாம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25வது பிரிவை எடுத்துப் பார்ப்போம்.

அதில் மத சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மதத்தை பரப்பும் உரிமை அதில் உள்ளது.

Right to propagate one’s religion – இது கிறிஸ்தவ, இஸ்லாமிய மத மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

ஹிந்துக்களுக்கோ மதம் மாற்றுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.

இதனால் ஹிந்து கோவில்களிந்ன் உள்ளேயும் அருகிலேயும் இஸ்லாமியர்கள் பூஜைப் பொருள்களை விற்பதைப் பார்க்கலாம்.

மைனாரிடியினர் என்ற அடிப்படையில் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தங்கள் தங்கள் நிலங்களை நிதிகளைத் தாமே நிர்வகிக்கலாம். அரசு அதில் தலையிட முடியாது.

ஆனால் ஹிந்துக் கோவில்களோ அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

இதனால் பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக நாத்திகர்களும் ஹிந்து விரோதிகளும் ஆக்கிரமித்து அதில் தங்கள் தங்கள் கட்டிடங்களைக் கட்டிக் கொள்கின்றனர்.

இதில் சர்ச், மசூதியும் அடங்கும்.

சற்று யோசித்துப் பார்ப்போம். வாடிகனில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய முடியுமா? போப் ஆண்டவர் முன்னிலை வகிப்பாரா?

மெக்காவில் விஷ்ணு கோவிலை உருவாக்க முடியுமா?

ஆனால் இங்கேயோ கோவில் நிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் சர்ச்சுகளைக் கட்ட முடியும். குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோவில் நிலத்தை லயோலா கல்லூரி திருப்பித் தராமல் தகிடுதத்த வேலையில் ஈடுபட்டு கல்வி நிலையத்தை மூடப் பார்க்கிறார்கள் என்று பசப்பு ஓலம் இட முடியும். நமது நீதிமன்றங்களில் காலத்திற்கும் அப்பாற்பட்ட ‘வாய்தாக்களை’ வாங்கி காலத்தையே ஏமாற்ற முடியும்!!

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கல்வி நிலையங்களை அரசு எடுக்க முடியாது. ஆனால் ஹிந்து கல்வி நிலையங்களை அரசு எடுத்துக் கொண்டு நடத்த முடியும். எடுத்து நடத்துகிறது.

அடுத்து அரசியல் பிரிவு ARTICLE 30ஐ எடுத்துக் கொள்வோம்.

இது ஹிந்துக்களிடையே பிரிவை உருவாக்க வகை செய்யும் ஒன்று.

இதன் படி ராமகிருஷ்ண மடத்தை வங்காளத்தில் அரசு செய்த கம்யூனிஸ்ட் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைந்தது.

அலறிப் போன ராமகிருஷ்ண மடம் தாங்கள் ஹிந்து பிரிவு அல்ல தனிப் பிரிவு என்று கூறியது.

ஹிந்துக்களே ஒன்றிணைந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அது சொல்லவில்லை. ஹிந்துக்கள் ஓரணியில் திரளுவது என்பது கஷ்டம் என்பதனால் தான் இப்படி அது நடந்ததா?

கடைசியில் கோர்ட் விவேகானந்தர் ஒரு ஹிந்து; அவர் தனி மதம் எதையும் ஸ்தாபிக்கவில்லை என்று தனது முடிவை அறிவித்தது.

ஆனால் கர்நாடகத்திலோ லிங்காயத் தாங்கள் தனி பிரிவு என்று அறிவிக்க முடிந்தது.

இப்படி ஆங்காங்கே பலரும் ஹிந்து மதம் அல்ல; தனிப் பிரிவு என்று சொல்லிக் கொள்ள வகை செய்வது இந்த 30ஆம் பிரிவு.

ஆனால் இஸ்லாத்திலோ அல்லது கிறிஸ்தவத்திலோ இப்படி எதையும் அரசியல் சட்டம் செய்ய முடியாது.

ஹிந்துக்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் ஒரு நீதி.

வாழ்வில் முக்கியமான இரு அம்சங்கள் கல்வியும், ஆன்மீகமும்.

கல்விக் கூடங்களிலும் கைவைப்பு, கோவிலிலும் ஆக்கிரமிப்பு – இது தான் ஹிந்துக்களின் இன்றைய பரிதாபகரமான நிலை.

சொந்த நாட்டில், ஹிந்து நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமை குறைவு; பாதுகாப்பில்லை.

ஆனால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு அதிக உரிமைகள்; அதிக பாதுகாப்பு.

ஒருவரின் வீடு பல நூறு தலைமுறைகளாக அவருக்குச் சொந்தம்; சிலர் அங்கு தங்க வருகின்றனர். திடீரென்று அரசு வந்து தங்கியவருக்கு அந்த வீட்டைச் சொந்தம் என்று சொல்லலாம் என்றால் அது நியாயமா?

யோசனை செய்ய வேண்டும். ஆகவே தான் சொந்த நாட்டில் எங்களுக்கு அதிக உரிமை இல்லாவிட்டாலும் சம உரிமையாவது வேண்டும் என்று ஹிந்துக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

வரவேற்க வேண்டிய பேச்சு இது.

இந்த வகையில் 2020இல் செப்டம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஹிந்துக்களில் பலர் ஒன்று கூடி இதைப் பற்றிப் பேசினர்.

இது இயக்கமாக மாறி வலுத்து வருகிறது.

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைந்து சம உரிமை கோரி சட்டத்தைத் திருத்த வேண்டும்.

கோவில்கள் ஹிந்துக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் ஹிந்துக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அரசுக்கு அங்கு என்ன வேலை?

சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறும் விஷமிகளையும் நாத்திகர்களையும் இனம் கண்டு ஒதுக்கி என்றுமுள்ள சனாதனமான ஹிந்து மதத்தை வாழ வைக்க கச்சை கட்டிக் கொண்டு ஹிந்துக்கள் முன்வர வேண்டும்.

புல்லட் வேண்டாம்; பாலட் பாக்ஸ் இருக்கிறது. அது போதும் நல்ல பாதையில் தேசத்தைத் திருப்ப!

***

Leave a comment

Leave a comment