வரதராஜ பெருமாள் கோவில்கள்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……. Part 27 (Post No.12,586)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,586

Date uploaded in London – –  –  14 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 27

யாழ்ப்பாணத்தில் இரண்டு புகழ்பெற்ற விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. அவைகளை இன்று தரிசிப்போம் ; அதற்கு முன்பாக, நேற்று   — அழிந்து போன சிவாலயங்கள்– பற்றிக் கண்டோம் ; மேலும் சில செய்திகளைக் காண்போம் .

இலங்கையில் சோழர் ஆட்சி 1017 முதல் 1070 வரை நடந்தது. அதாவது இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பொலன்னறுவை , திருகோணமலை, யாழ்ப்பாண பகுதிகளை தீவிர சைவர்களான பிற்காலச்  சோழர்கள் ஆண்டார்கள்.அப்போது அவர்களுக்கு மாதோட்டம் (மாந்தை) என்னும் துறைமுகம் மிகவும் பயன்பட்டது. இது பற்றிய தகவல்களை திருக்கேதீஸ்வரக் கல்வெட்டுகள் நமக்கு அளிக்கின்றன. தென்னிந்திய சாசனங்கள்  தொகுதியில் 1412, 1414 கஅந்தக் கல்வெட்டுகள் ராரராஜேஸ்வரம், திருவீரமீஸ்வரம் ஆகிய இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றன. மாதோட்டத்தில் இருந்த இந்தக் கோவில்கள் திருக்கேதீஸ்வரம் என்று இன்று அழைக்கப்படும் கோவில்களாக இருக்கலாம். சோழநாட்டிலிருந்து வந்த தளிக்குமரன்  என்பான்  கோவில்களுக்கு  செய்த தானம் பற்றி இந்தக் கல்வெட்டு கூறுகிறது . இரண்டாவது கல்வெட்டு திரு வீ ராமீஸ்வரம் கோவிலுக்கு 4 தங்கக் காசுகள் தானம் செய்யப்பட்டதை அறிவிக்கிறது. கோவிலில் விளக்கு எரி ப்பதற்கான  செலவுக்கு இரண்டு தனித்தனி ஆட்களிடமிந்த 4 நாணயங்களும் ஒப்படைக்கப்பட்டன. ராமீஸ்வரம் என்ற பெயர் இந்தியாவின் கரையிலுள்ள ராமேஸ்வரம்  கோவிலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் முழுதும் காணப்படும் ராம  பிரான் பெயர் இதில் இருக்கிறது.

நுவரெலியா சீதை கோவிலிலிருந்து , திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று வரைக்கும், மாதோட்டம் / மாந்தை  ராமீஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாண வில்லூன்றித் தீர்த்தம் வரைக்கும் (இந்தியாவில் ராமேஸ்வரம் அருகிலும் இதே பேரில் தீர்த்தம் இருக்கிறது) , அதற்கப்பால் சிலாவம் (முன்னேஸ்வரம்) சிவலிங்கம் வரைக்கும் எங்கும் ராம நாமமே கேட்கிறது

கல்வெட்டுகளில் கூறப்படும் இரண்டு கோவில்களில் ஒன்று இன்றைய திருக்கேதீஸ்வரம் என்று கொண்டாலும் ராமீ ஸ்வரம் கோவில் எது என்ற கேள்வி எழுகிறது . இது மறைந்து போன, அழிந்த போன கோவில் என்றே ஊகிக்கப்படுகிறது . இதற்கு ஆதாரம் அரசாங்க ஏஜண்ட் வில்லியம் ட்வீனம் William Twynam 1887 மே 22ம் தேதி எழுதிய டைரி குறிப்பில் உள்ளது . அவர் பழைய மாந்தை ரெஸ்ட் ஹவுஸ் பகுதியில் கோவில் இருந்திருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார் .

இது தவிர முல்லைத்த தீவிலிருந்து  15 மைல் தொலைவில் பழங்கால சிவன் கோவில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன கற்சிலை மடுவில் தேசீய வீரன் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் அருகில், இந்த இடிபாடுகள் இருக்கின்றன வெளிநாட்டிலுந்து வந்த பறங்கியர் எல்லோரையும் பண்டார வன்னியன் எதிர்த்ததால் இலங்கை அரசும் அவனை  தேசீய வீரனாக அங்கீகரித்தது.  கோவில் பற்றிய மேல்விவரங்கள் கிடைக்கவில்லை

xxx

55. வரதராஜ வேங்கடேச பெருமாள் கோவில் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண நகரில் ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருவது வண்ணை ஸ்ரீ வரதராஜ வெங்கடேச பெருமாள் கோவில் ஆகும்.

13ம் நூற்றாண்டிலிருந்து 16 ம் நூற்றாண்டு வரை 300 ஆண்டுகளுக்கு யாழ்ப்பாணத்தை தீவிர இந்துக்களான ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டார்கள். . இவர்களில் குண பூஷண சிங்கை ஆரியன் , ஜகராஜ சேகரம் என்ற பெயரில் ஆண்டான்.

தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்கள் மாறன்சடையன் என்ற பெயரில் அடுத்தடுத்து ஆள்வார்கள் மாறன் மகன் சடையன், சடையன் மகன் மாறன் என்று மாறி மாறி வரும். அது போலவே ஆரிய சக்ரவர்த்திகளும் செக / ஜக ராஜ சேகரம்பரராஜ சேகரம் என்ற பெயரில் அடுத்தடுத்து ஆட்சிபுரிந்து வந்தனர். குண பூஷணன் என்னும் மன்னன் தீவிர பக்தன்; வெற்றி வாகை சூடியவன்; அது மட்டுமல்ல ; நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவன்.; அவன் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்திலிருந்து பட்டு நூல் நெசவாளர்களை குடியமர்த்தி இலங்கையில் நெசவுத் தொழிலை வளர்த்தான். அவ்வாறு குடியேறியவர்களில் ஒருவன் பரம பாகவதன் ; அதாவது விஷ்ணு பக்தன். அவன் விஷ்ணு பக்தியைப் பரப்பி ஒரு மரத்துக்கு அடியில் வழிபாட்டினை நடத்திவந்தான் ; நிறைய பக்தர்களும் குழுமினர். வெறும் மரத்தடி வழிபாடு என்பதால் போர்ச்சுக்கீசிய , டச்சுக்கார மத வெறியர்களும் அதை அழி.க்க முடியவில்லை.காலப்போக்கிகல் அது கோவிலாக  மாறி கட்டிடங்கள் படிப்படியாக வளர்ந்தன . கோவிலுக்குள் ஸ்ரீ ராமர், லெட்சுமி, ஆண்டாள் கோபாலன் என்று சந்நிதிகள் தோன்றின.

கோபுரம் உயரவே அதில் புராண இதிஹாஸக் காட்சிகள் பொம்மைகளாக இடம்பெற்றன தற்காலத்தில் முறையான பூஜைகளும் செப்டம்பர்- அக்டோ பரில்  திருவிழாவும் நடக்கின்றன .

XXXX

56.பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில், தொல்புரம் , யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் பொன்னாலைக் கிராமத்தில் கோவில் இருக்கிறது. .இந்தக் கோவில் பற்றிய விவரங்கள் தட்சிண கைலாச மான்மியத்தில் கிடைக்கிறது முன்னொரு காலத்தில் அருகிலுள்ள கடலில் மீன் பிடிக்கச் சென்றபொழுது , வலையில் பெரிய ஆமை ஒன்று சிக்கியது. அது மிகவும் கனத்ததால் பல மீனவர் உதவியுடன் அதைக் கரைக்கு கொண்டுவந்தார். ஆனால் அது கல்லாகி மாறிவிட்டது ; அப்போது  வானில் அதிசய ஒளி தோன்றியது. அது மஹாலெட்சுமியின் அருள் என்று எண்ணி பெருமாளுக்கு ஒரு கோவிலை எழுப்பினர். இன்றும் கல் ஆமை கோவிலுக்குள் இருக்கிறது

விஷ்ணுவின் கூர்ம / ஆமை அவதாரத்தில் இது போல ஒரு கதை  உண்டு. துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரன், மீனவனாகப் பிறந்தான். எப்போது தனக்கு சாப விமோசனம் என்று முனிவரிடம் கெஞ்சியபோது, இறைவனே ஆமை உருவத்தில் வருவான். அவனை நீ பிடிக்கும்போது உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார் துர்வாச முனிவர் . சாப விமோசனத்தின் போது விஷ்ணு காலடி வைத்த இடம் திரு அடி நிலையம் ஆயிற்று. இந்திரனின் தங்கத் தேர் வந்து இறங்கிய இடம் பொன் / ஸ்வர்ணம்/ தங்கம் ஆகியது. அதை நினைவு கூறும் வகையில் இங்கு எழுந்த ஆலயமும் பொன் +ஆலயம் = பொன்னாலை  ஆயிற்று .

இதில் அதிசயம் என்னவென்றால் இங்கும் சிவன் ஒளி பாத மலையிலும் பாதங்கள் (Foot prints) இருந்ததை இலங்கைக்கு யாத்திரை வந்த வட ஆப்பிரிக்க அராபிய யாத்ரீகர் இபின் படூடாவும் (Ibn Batuta Abu Abdullah Muhammad ibn Battutah commonly known as Ibn Battuta,  1304-1369) எழுதிவைத்துள்ளான்.

ஆனால் இப்போது விஷ்ணு பாதம் தொல்புரத்தில் இல்லை; கடலுக்குள் சென்றுவிட்டது ; ஊரின் பெயரே இந்த இடத்தின் பழமையை  விளக்கும்

போர்ச்சு கீசிய மதவெறியர்கள் இந்தக் கோவிலை தரை மட்டம் ஆக்குவதற்கு முன்னர், இந்த ஆலயத்தின் பெயர்க்கு ஏற்றவாறு, பல பிரகார கல் கட்டிட கோபுரத்துடப்பின் தங்க விமானமமும் இருந்ததை சிங்கள மொழி கவிதை சந்தேசய குறிப்பிடுகிறது . போர்ச்சிகீசிய அரக்கர்கள், கோவில் கற்களை மானிப்பாய்க்கும் , காரைத் தீவுக்கும்  எடுத்துச் சென்று கட்டிடங்களை எழுப்பினார்கள்..

பிற்காலத்தில் இந்துமத பேரழுச்சி ஏற்பட்ட காலத்தில் கோவில் கட்டப்பட்டது 1971ம் ஆண்டில் அ னந்த சயனப் பெருமாள் பிரதிஷ்டை நடந்தது ; அத்தகு முன்னரும் கோவில் இருந்தது. தற்போது நித்திய பூஜைகளுடன் உற்சவமும்  நடத்தப்படுகின்றன.

Xxx

நூலகம் இணையதளம் கூறும் தகவல் இதோ

ஆலய கருவறையில் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். இவ் ஆலயத்தில் அமையப்பெற்ற 108 அடி உயரமான இராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதி உயர் கோபுரமாக விளங்குகின்றது. வருடம் தோறும் ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 21  நாட்களும், மார்கழியில் பரமபதவாயில் ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் இரண்டு மஹோற்சவங்கள் இடம்பெறுகின்றது.

To be continued………………………

இலங்கை, 108 புகழ் பெற்ற,  இந்து ஆலயங்கள் ,  Part 27, வரதராஜ , பெருமாள், கோவில்,         பொன்னாலை , வண்ணை

Leave a comment

Leave a comment