Post No. 12,597
Date uploaded in London – – – 17 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 30
ஜூன் 19ம் தேதி விழா துவங்கும் முன் அம்மன் வீதியில் 3 பாம்புகள் வந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்
61.நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்
உலகில் பாம்பை வழிபடாத பழைய கலாசாரம் ஏதுமில்லை. வேதத்தில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் சிந்து சமவெளியில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். . கிரேக்க நாட்டில் மைசீனிய மினோவன் (Mycenean, Minoan Civilizations) நாகரீகத்தில் காண்கிறோம். எகிப்து நாட்டிலோ மன்னர்களே சிவ பெருமான் தலையில் நாகம் இருப்பதுபோல மகுடம் வைத்திருப்பதையும் பார்க்கலாம். ஆயினும் இந்தியாவில் உள்ளது போல பாம்பு வழிபாட்டை, நாகர் வழிப்பாட்டினை வேறு எங்கும் காணமுடியாது. இன்றும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் நாக பஞ்சமி விழாக்களில் உயிருள்ள பாம்புகளையே பெண்கள் பூஜிப்பதைக் காணலாம். இந்தியாவில் நாகர்கோவில் முதல் இமயமலை வரை நாகர் பெயரில் தலங்களும் கோவில்களும் இருப்பிடத்தை எல்லோரும் அறிவார்கள்.
SNAKE, SERPENT
ஆங்கிலத்தில் பாம்புக்கு உள்ள இரண்டு பெயர்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்பதை மொழி இயல் வல்லுநர்கள் அறிவார்கள் . ஸ்னேக் SNAKE என்பது நாகத்திலிருந்து வந்த சொல் ஸ் +நாக = ஸ் நேக ; மற்றும் ஒரு சொல் SERPENT சர்பென்ட்; இது ஸர்ப்ப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே .
SNAKES NEAR THE TEMPLE
இலங்கைக்கு தனிச் சிறப்பு என்னெவென்றால் நாட்டின் பெயரே நாகத் தீவு; நாக நாடு. ஆதி குடிகள் நாகர்கள் என்று மஹாவம்சமும் மணி மேகலை என்னும் தமிழ் மொழிக் காப்பியமும் காட்டுகின்றன ; அதிலும் சிறப்புடைய இடம் நயினாத்தீவு என்னும் தீவாகும். இதுவே மணிமேகலை குறிப்பிடும் நாகத்தீவு, நாக நாடு, மணி பல்லவம் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்து.
சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் 20 புலவர்களின் பெயர்கள் நாக என்று முடிவடைகிறது இவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருதன் இளநாகன் . இது போன்ற பெயர்கள் மகா வம்சத்திலும் உள்ளது. குப்தர் கால கல்வெட்டுகளும் நாகர் பெயர்களைக் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் தினசரி சந்தியா வந்தனத்திலும் பாம்பினை வழிபடுகிறார்கள் (நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில்)..
இந்து தெய்வங்களில் பாம்பினைப் பயன்படுத்தாத தெய்வங்களே இல்லை. இதைப் பார்த்து பெளத்தர்களும் சமணர்களும் கூட தங்கள் தலைவர்களுக்கு பாம்பினைச் சூட்டியுள்ளனர். இந்துக்கள் பாம்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை மேலை நாட்டு வெள்ளைக்காரர்கள் புஸ்தகத்தில் எழுதிய பின்னர் தான் நம்மவர்களுக்கே தெரிந்தது. நாக பஞ்சமி விழாக்களை படம் எடுத்தது வெளிநாட்டில் காட்டியோர் இதைச் சொல்லி எல்லோரும் பாம்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். பாம்புதான் நம்முடைய வயல்வெளிகளின் காவலர்கள். பாம்பின் எண்ணிக்கை குறைந்தால் அறுவடை குறைந்து விடும்; வயல் வெளிகளில் தானியங்களை அழி க்கும் எலிகளின், பூச்சிகளின் எண்ணிக்கை பல கோடி ஆகும்; எலிகளின் முதல் எதிரி பாம்பு; மனிதனின் முதல் நண்பன் பாம்பு. இதனால், பெண்கள் பாம்பு இருக்கும் புற்றுகளை வணங்கி பால் வார்க்கிறார்கள் ( (மதுரையில் பேச்சி அம்மன் கோவிலில் புற்றுக்குப் பால் விடுவதை நான் பள்ளிக்கூட நாட்களில் வேடிக்கை பார்ப்பேன்)
சில அரைவேக்காட்டுப் பேர்வழிகள் நாகர்கள் வழிபாடு தமிழ் நாட்டில் மட்டும் இருப்பதாகக் கதைப்பார்கள். அதுகளுக்கு மஹாபாரதத்தில் ரிக்வேதத்திலும் குப்தர் கல்வெட்டிலும் நாகர்கள் பெயர்கள் வருவது தெரியாது. பரமபத சோபான படத்தில் நவ நாகர்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். இந்துக்கள் கண்டுபிடித்த இந்த BOARD GAME போர்ட் கேம் ஐ இன்று உலகம் முழுதும் SNAKES AND LADDER ஸ்னேக்ஸ் அண்ட் லேடர் என்று விளையாடுகிறார்கள். தென் அமெரிக்க முழுதும் பரவிய மாயா நாகரீகமே Mayan Civilization அர்ஜுனன் காலத்தில் அங்கு சென்ற நாகர்களின் நாகரீகமே! இமய மலையில் நிறைய நாகர் தலங்கள் உள்ளன ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஷிர்க்கான் நாகா கோவில் உள்ளது (Temple of Shirgan Naaga., Himachal Pradesh ). காஷ்மீரில் அனந்த நாக , வெரி நாக (Anant nag, Veri nag) தலங்கள் இருப்பதும் இந்த அசடுகளுக்குத் தெரியாது
எவ்வளவுதான் சொன்னாலும் சிவனுக்கும் அம்பாளுக்கும் மிக நெருக்கமானது பாம்பு. இதை நாகநாதன், நாகேஸ்வரன், நாகாம்பாள், நாகேஸ்வரி ,நாக பூஷணி என்ற பெயர்களிலிருந்து அறியலாம்.
xxx
இப்பொழுது இலங்கையின் வடபகுதியில் நயினாத் தீவில் இடம்பெற்றுள்ள நாகபூஷணி அம்பாள் கோவிலின் சிறப்புகளைக் காணலாம் .
நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள்; பூஷண BHUSHANA என்ற ஸம்ஸ்ருதச் சொல்லுக்கு ஆபரணம், அலங்காரம் என்று பொருள் ஐந்து நாகத்தை குடையாக அணிந்தவள் நாகபூஷணி Bhūṣaṇa (भूषण) refers to “ornament (for the body)” BHUSHANI
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுகிறது நயினா தீவு.
சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலனின் பெற்றோர்களான மாநாய்க்கன் , மாசாத்தன் பெயர்களை இந்தக் கோவிலின் வரலாற்றில் காணலாம். அவர்கள் கண்ட ஒரு அற்புதக் காட்சியே கோவில் உருவாகக் காரணம் ஆனது . ஒரு பாம்பு, பூவினை வாயில் ஏந்தி இந்தத் தீவினை நோக்கி நீந்தி வந்தது. அதைத் துரத்திக் கொண்டு ஒரு கருடன் வந்தது. உடனே நாகம், கடல் நடுவில் இருக்கும் இரண்டு கம்பம் போன்ற பாறைகளுக்கு இடையே தஞ்சம் புகுந்தது . அப்போது மாநாயக்கன் என்னும் வணிகன் அதை விரட்டவே பாம்பு தனது பயணத்தைக் தொடர்ந்து நாகபூஷணிக்கு பூவை சமர்ப்பித்தது. இதைக் கண்ட வணிகர் இங்கு கோவிலை எழுப்பினார்.
இந்திரன் சாபம் தீரவும் அர்ஜுனன் சாபம் தீரவும் இங்கு வந்து அம்பாளை வழிபட்டதாகவும் கர்ணன் பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன.
இந்தியா முழுதும் சக்தி பீடங்கள் இருப்பதையும் அவை எல்லாம் தக்ஷ யாகத்தினை சிவன் அழித்த பின்னர், இறந்த பார்வதியின் உடலை சிவன் கொண்டுவந்தபோது ஒவ்வொரு உறுப்பும் விழுந்த இடமெல்லாம் அருள் மழை பொழியும் தலங்களாக ,மாறின என்றும் அறிவோம். அவ்வாறு சக்தி தேவியின் உடல் உறுப்புகளில் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்றும் பிற்கால சம்ஸ்க்ருத நூல்கள் பகரும்.
எது எப்படியாகிலும் நாக பூஷணியின் அருளுக்காக இங்கு பக்தி சிரத்தையோடு வரும் இந்துக்கள், சிங்கள பெளத்தர்கள் எண்ணிக்கைக்கு குறைவில்லை..
பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர் .
1935 ஆம் ஆண்டில் ராஜ கோபுரம் உயர்ந்தது . 1949ம் ஆண்டில் கோவில் நிர்வாகம், தர்மகர்த்தா போர்டின்/ சபையின் கீழ் வந்தது.
அம்பாளுக்காக அழகிய தேர் 1957ல் கட்டப்பட்டது
கிழக்கு நோக்கிய இந்தக்கோவில், ஆர்ப்பரிக்கும் அலை கடலினை நோக்கி அமைத்திருக்கிறது இதனால் படகிலோ, கப்பலிலோ வரும்பக்தர்கள் தொலைலிருந்தே இரு கரங்களையும் உயர்த்தி வணங்குகிறார்கள் .
கோபுர தரிசனம் கோடி புண்யம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது தமிழ்ச் சான்றோர் செப்பிய நன் மொழிகள் அல்லவா!!
கோவிலின் கருவறையில் 5 தலை நாகத்தின் கீழ் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். பிரகாத்தில் நமக்கு அருள்புரிய சப்த மாதர்களும் துர்கா தேவியும் காத்திருக்கின்றனர்.
உள் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரிய சந்திரர், நவ கிரக சந்நிதிகள் இருக்கின்றன.
தினசரி பூஜைகளோடு ஆண்டுதோறும் நடக்கும் விழாவுக்கும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். விழாக்களுக்கு வருவோர் தங்குவதற்கு வசதிகளையும் அன்னதானத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
நைனாத் தீவின் பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது நைனாத் தீவு சாமியார் ஆவார் . முத்துக் குமார சாமி என்ற பெயரில் பிறந்த அவர், பெரிய ஞானியாகி, 1949 ஆம் ஆண்டில் சமாதி ஆனார். தீவுக்கு வருவோர் அந்த சமாதியையும் கும்பிட்டுச் செல்லுவது வழக்கம் .
xxx
இந்த அம்மன் மீது பல புலவர்கள் பாமாலை சூடியுள்ளனர் .
கோவில் பற்றிய நூல்கள்
நயினை நாகேஸ்வரி , குல சபாநாதன், 1962
நயினை நாகபூசணி , என்.கே. சண்முக நாத பிள்ளை, 1981
To be continued………………………………………………
Tags- நயினை , நாகபூசணி , அம்பாள், நைனா தீவு, நாகத் தீவு, நாக நாடு, நாகர்கள் , மணி மேகலை