
Post No. 12,615
Date uploaded in London – 21 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காஷ்மீர் ஃபைல்ஸ்!
ச.நாகராஜன்
காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது.
கொடுங்கோலன் சிக்கந்தர் செய்த மஹா பாதகச் செயலைப் பார்ப்போம்.
ஆண்டு கி.பி. 1394.
சுல்தான் சிக்கந்தர் அரியணை ஏறினான்.
இந்து மதம் என்றாலே அவனுக்கு வெறுப்பு; உடல் எல்லாம் எரியும்.
எல்லா இந்துக்களையும் ஒழிக்க வேண்டும் என்பது அவனது எண்ணம்.
சனாதன ஒழிப்பு – திராவிட மாடல் போல!
ஹிந்துக் கோவில்களை அழித்தொழிக்க தனி ஒரு பிரிவையே அவன் ஏற்படுத்தினான். ஒரு ஆண்டு முழுவதும் அது தீவிரமாகச் செயல்பட்டது.
பிரம்மாண்டமான ‘மார்த்தாண்ட’ கோவில்களை அழிக்க அவன் திட்டமிட்டான்.
ஆனால் அந்த அற்புதமான வலிமையான கோவில்களோ அவனை எள்ளி நகையாடியது தனது திறத்தால்.
சில கோவில்களில் கல்வெட்டாக ஒரு செய்தி பொறிக்கப்பட்டிருந்தது.
அதில் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிக்க முயல்வான் என்று பொறிக்கப்பட்டிருந்தது.
அவனுக்கு மட்டும் இந்தக் கல்வெட்டுச் செய்தி தெரிந்திருந்தால் இந்தக் கோவிலை அவன் அழிக்காமல் விட்டிருப்பான். ஹிந்துக்கள் பொய் சொல்பவர்கள் என்று நிரூபிக்க எதையும் செய்யத் தயங்காதவன் அவன். ஆனால் கோவிலை அழித்தான். ஹிந்துக்களின் அறிவார்ந்த முன்னோரின் கணிப்பை நிஜமாக்கினான்.
கோவிலில் அவன் பெயர்த்தெடுத்த வலிமையான பெரிய பாறைகள் ஜும்மா மஜ்ஜித் கட்ட உதவின. பல கற்களை ஆங்காங்கே வைத்து நகரை அழகு படுத்தினான்.
கோவிலை இப்படி சிதிலப்படுத்திய அவன் ஹிந்துக்களின் மீது பார்வையைச் செலுத்தினான்.
அனைத்து ஹிந்துக்களுக்கும் அவன் மூன்றே மூன்று வழிகளைச் சொன்னான்.
1) உடனடியாக இஸ்லாமுக்கு மாறுவது
2) இல்லையேல் காஷ்மீரை விட்டு ஓடிப்போவது
3) அவன் கைகளால் கொல்லப்பட்டு சாவது
ஏராளமானோர் இரண்டாம் வழியைத் தேர்ந்தெடுத்தனர். இந்தக் கயவன் வாழும் ஊரில் இருப்பதே பாவம் என்று குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.
வேறு வழியே இல்லாதவர்கள் மதம் மாறினர்.
அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்களோ காஷ்மீரை விட்டுப் போகமாட்டோம்; வழிபாடுகளையும் நிறுத்த மாட்டோம் என்று உறுதியாக நின்றனர். அவர்கள் கொல்லப்பட்டனர்.
ஏழு மணங்கு பூணூல் குவியலை குவியலாகச் செய்து அவன் எரித்தானாம்.
அவ்வளவு பிராமணர்களை அவன் கொலை செய்திருக்கிறான்.
ஹிந்து சாஸ்திரங்களையும் அறநெறி கூறும் புத்தகங்களையும் திரட்டி டால் ஏரியில் அவன் எறிந்தான்.
இந்து மதத்தை ஒழித்து விட்டேன் என்று அகம்பாவத்துடன் அவன் சிரித்தான்.
ஆனால் அந்தப் பாவியால் சனாதனத்தை ஒழிக்க முடிந்ததா?
வரலாறு உண்மையைச் சொல்கிறது. அவன் தான் ஒழிந்து போனான்.
ஆனால் என்றுமுள்ள ஹிந்துமதம் – சனாதனம் – இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலகெங்கும் பரவி வருகிறது.
காஷ்மீர் ஃபைல்ஸின் ஒரு துளி இது!
ஃபைல்ஸின் பல பக்கங்களைப் புரட்டினால் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் அறியலாம்!
***