போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில் – Part 35 (Post No.12,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,620

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 35

69.போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில்

சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள நாலாவது  முருகன் கோவில் போர  தீவில் இருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து 15 மைல் தொலைவில்  போர தீவு இருக்கிறது. அருகிலுள்ள எருவில்  மூன்றாம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்றிருந்தது அப்போது இங்குள்ள இந்தக் கோவில் இடிக்கப்பட்டதை மஹாவம்சம் குறிப்பிடுகிறது (மஹாவம்சம்- 37- 40, 41)

புராதன  சப்த ஸ்தலங்கள் என்ற நூலில் எஸ். கணபதி பிள்ளை சில தகவல்களைத் தந்துள்ளார்.

மண்டு நாகன் என்பவன் , நாகன் சோலையிலிருந்து இந்த இடத்தை ஆண்டு வந்தான் அவனிடம் நாகர் தளபதிகளும் யக்ஷர் அமைச்சர்களும் இருந்தனர் . காலசேனன் என்பவன் அயோத்தியிலிருந்து இங்கு வந்து பல கோவில்களை இடித்துவிட்டு கோட்டைக் கல்லாற்றில் மாளிகை  கட்டி காளி தேசம் என்று பெயர் சூட்டி ஆண்டுவந்தான்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் மதி சுதன் என்பவன் காளி தேசத்தில் வாழ்ந்து வந்தான்.அவன் செய்த முக்கியப்பணிகளில் ஒன்று அங்கு முருகன் கோவிலை  மீண்டும் கட்டியதாகும் . போர  தீவில்  அவன் சித்திர வேலாயுத சுவாமி கோவிலை புனர் நிர்மாணித்தான் தொண்டைநாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து சித்திர மயூர சங்கார வேல் ஸ்தாபித்து 5 நிலைக் கோபுரத்தைக் கட்டினான். அவன் மண்டூரில் கந்தசாமி ஆலயத்தையும் கட்டினான்

காலம் செல்லச் செல்ல கோவில் சிதிலம் அடைந்தது அண்மைக் காலத்தில் , களுவாஞ்சிக்குடியிலிருந்து 2 மைல் தொலைவில்

போரத் தீவில் நாகப்ப செட்டியார், சித்திர வேலாயுத சுவாமி கோவிலை மீண்டும் கட்டினார் வேலாயுத சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு. கோவிலில் பூஜைகள் நடத்தப்படுகின்றன  ஆகட்ஸ்ட் மாதம், வருடாந்திர விழாக்கள் நடைபெறுகிறது மாக மன்னன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலங்களை கோவிலுக்கு விட்டுள்ளான்.

திருப்படைக் கோவில்கள்

வெருகல் சித்திரவேலாயுதர் கோவில் , போரதீவு ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோவில் , சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோவில்,  மண்டூர் ஸ்ரீ முருகன் கோவில்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்  கோவில் என்பன மட்டக்களப்பு தேசத்திற்குரிய திருப்படைக் கோவில்களாகும்.

கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் ‘திருப்படைக் கோவில்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும்.

XXXX

70. சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம்

 சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம் , மட்டக்களப்பு திருப்படைக் கோவில்களில்  ஒன்றாகும்

மட்டக்களப்பிலிருந்து 12 மைல் தொலைவில்  இந்தக் கோவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் போல பெருமை உடையது

கிழக்கு இலங்கையில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் வெட்டா VEDDA என்னும் வேடர் பழங்குடி மக்கள் வழிபட்ட இடங்களாலும். சிறு குடி ல்களில் வேடர்கள் வழிபட்ட வேல், பிற்காலத்தில் பெரும் கோவில்களாக மாறின

ஒரு காலத்தில்,எல்லோரும் கதிர்காம பாதயாத்திரை செய்வது போல ஆண்டி என்னும் பக்தர் செய்தார். காடுகளைக் கடந்து சென்றால்தான் கதிர்காம முருகனைத் தரிசிக்க முடியும் என்று இருந்த  காலம் அது. காட்டில் ஒரு கொம்பன் யானை திடீரென்று தோன்றி ஆண்டியை துரத்தியது. ஏது செய்வதென்று அறியாது திகைத்த ஆண்டிக்கு முருகனே துணை என்று தோன்றியது திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது ஆன்றோர் வாக்கு ; அது பொய்க்காது. ஒரு வெற்றிலையை எடுத்து அதை வேல் என்று மனதில் தியானித்து சடாக்ஷர (ஓம் சரவணபவ ) மந்திரத்தைச் சொன்னார் . வெற்றிலையை வேல் என்று கருதி மிரண்ட யானை பின்னோக்கி ஓடியது. ஆண்டியும் கதிர்காமம் சென்று திரும்பி ததார் .

யானை மிரண்டோடிய இடத்தில் குடிலை அமைத்து வேலினை வலபிடேட்டர். வேடர் குடிகளும் அங்கே தோன்றின. அப்போது முதல் அங்கு முருகனின் அற்புதங்கள் நிகழத்துவங்கின . இவை எல்லாம் ஆண்டியின் சித்து வேலைகள் என்று மக்கள் போற்றினர். அவர் பெயர் சித்தாண்டி ஆனது ஊர்ப்பெயரும் அதுவே ஆனது.

XXXXXX

மேலும் தகவல் பெற ,

சித்தாண்டி திருஸ்தல புராணம் – ஏ என் அழகேச முதலியார்,

ஊஞ்சல் பாட்டுக்கள், எஸ். கதிரை,மலை, 1954

200 பாடல்கள் கொண்ட  கோவில் புராணம்

மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், நடராசா, 1980

—subham—

TAGS- ‘திருப்படைக் கோவில்கள்’, போர தீவு , கோவில், சித்தாண்டி, சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம், இலங்கை ,Part 35

Leave a comment

Leave a comment