அறநெறிச்சாரம் – கவின் மிகு சொற்கள்! (Post.12,640)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,640

Date uploaded in London –  27 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அறநெறிச்சாரம் – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன்

பெரும் புலவர் முனைப்பாடியாரால் இயற்றப்பட்டது.

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

இந்த நூல் 226 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. மற உரையும்காமத்து உரையும்மயங்கிப் பிற உரையும் மல்கிய

  ஞாலத்து (பாடல் 2)

2. உரைப்பவன்கேட்பான்உரைக்கப்படுவதுஉரைத்ததனால் ஆய 

  பயனும் (பாடல் 3)

3. தண்டிதடி பிணக்கன்புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான்

   (பாடல் 6)

4. ஆவட்டை போன்று அறியாதாரை (பாடல் 8)

5. காட்சி ஒழுக்கொடு ஞானம் தலை நின்று மாட்சி மனை வாழ்தல்

  (பாடல் 12)

6. மீட்சி இல் வீட்டுலகம் எய்தல் (பாடல் 12)

7. நிறுத்து அறுத்துச் சுட்டு உரைத்துப் பொன் கொள்வான் போல

  (பாடல் 22)

8. காய்தல் உவத்தல் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார்

   கண்ணதே (பாடல் 23)

9. ஆராய்ந்து நம்புக நல்ல அறம்! (பாடல் 24)

10. குருட்டுச் செவிடர்கள் கோல் விட்டுதம்முள் தெருட்டி வழி

   சொல்லிச் சேறல் (பாடல் 32)

11. நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும்நொய்ய ஆம்

   சால்பின்மை காட்டும் (பாடல் 35)

12. கனை இருட்கண் பல் எலி தின்னப் பறைந்திருந்த பூனையை இல்

   எலி காக்கும் என்றற்று (பாடல் 36)

13. பல கற்றோம் யாம் என்று தற் புகழ வேண்டா (பாடல் 44)

14. அலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் (பாடல் 44)

15. காலொடு கை அமுக்கி பிள்ளையை வாய் நெறித்து பாலொடு நெய்

   பெய்யும் தாய் அனையர் (பாடல் 48)

16. பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சு ஆம்பசு உண்ட தேம் படு தெண்

   நீர் அமுதம் ஆம் (பாடல் 53)

17. அடங்கி கொடுத்து உண்மின்கொண்டு ஒழுக்கம் காணுமின் (பாடல் 

    55)

18. ஆழி சூழ் வையத்து அறம் (பாடல் 85)

19.  பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை (பாடல் 96)

20. கற் பிளப்பில் தீயே போல்பொட்டப் பொடிக்கும் குரோதத்தை

   (பாடல் 101)

21. உயிர் வித்திஊன் விளைத்துகூற்று உண்ணும் வாழ்க்கைசெயிர்

   வித்திச் சீலம் தின்று என்னை(பாடல் 111)

22. காணலாம் கூற்றம் குறுகா இடம் (பாடல் 111)

23. பெண் விழைவார்க்கு இல்லைபெருந் தூய்மை (பாடல் 116)

24. உண் விழைவார்க்கு இல்லைஉயிர் ஓம்பல் (பாடல் 116)

25. மண் விழைவார்க்கு இல்லை. மறம் இன்மை (பாடல் 116)

26. மாறாது தண் விழைவார்க்கு இல்லை தவம் (பாடல் 116)

27. பெருவாழ்க்கை முத்தாஅடை கொண்ட திருவாளா! (பாடல் 117)

28. என்றும் அரங்கு ஆடு கூத்தனே போலும் – உயிர் தான் சுழன்று

   ஆடு தோற்றப் பிறப்பு (பாடல் 119)

29. சோறு யாரும் உண்ணாரோசொல் யாரும் சொல்லாரோ(பாடல்

    126)

30.  உறுதிக்கு உறுதி உயிர் ஓம்பி வாழ்தல் (பாடல் 127)

31. ஆதன் பெருங் களியாளன் அவனுக்குத் தோழன்மார் ஐவராம்

    (பாடல் 130)

32. பிறப்புஇறப்புமூப்புபிணி என்று இந்நான்கும் மறப்பர் மதி இலா

    மாந்தர் (பாடல் 133)

33. வாழ்நாளில் பாகம் துயில் நீக்கிமற்றவற்றுள் வீழ் நாள்இடர்

    மூப்பு மெய் கொள்ளும் (பாடல் 136)

34. அருளால் அறம் வளரும்ஆள்வினையால் ஆக்கம்பொருளால்

    பொருள் வளரும்நாளும்! (பாடல் 142)

35. எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பின் பிறிது

   இல்லை (பாடல் 143)

36. கூலிக்கு அழுத குறை (பாடல் 144)

37. இருளே உலகத்து இயற்கைஇருள் அகற்றும்  கை விளக்கே கற்ற

   அறிவுடைமை (பாடல் 147)

38. நல் அறம் எந்தைநிறை எம்மைநன்கு உணரும் கல்வி என்

   தோழன்துணிவு எம்பி. (பாடல் 161)

39. பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம் வயிற்றுப் பெருமாள்

   பொருட்டு (பாடல் 164)

40. ஈதல்அறிதல்இயற்றுதல்இன்சொல்கற்று ஆய்தல்அறிவார்

   தொழில் (பாடல் 165)

41. பேறுஇழவுசாவுபிறப்புஇன்பம்துன்பம் என்று ஆறு உள

   அந்நாள் அமைந்தன (பாடல் 171)

42. தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை (பாடல் 172)

43. தன்னில் பிறிது இல்லை தெய்வம்நெறி நிற்பில் (பாடல் 173)

44. தானேதனக்குப் பகைவனும் நட்டானும் (பாடல் 174)

45. தானே தனக்கு மறுமையும் இம்மையும் (பாடல் 174)

46. தானே தனக்குக் கரி (பாடல் 174)

47. மெய் வினவில்தாய் ஆர்மனைவி ஆர்தந்தை ஆர்மக்கள்

   ஆர்நீ யார்நினைவாழி நெஞ்சு (பாடல் 181)

48. அற்ற பொழுதே அறம் நினைத்தில் யாது ஒன்றும் பெற்ற பொழுதே

   பிற நினைத்தி (பாடல் 185)

49. சாவாய்நீ நெஞ்சே (பாடல் 188)

50. பண் அமை யாழ்குழல் கீதம் என்று இன்னவை நண்ணி நயப்ப

   செவி அல்ல (பாடல் 196)

51. தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின்பின்னைத்

   தான் எய்தா நலன் இல்லை (பாடல் 208)

52. மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு குப்பைத்தே குண்டு நீர்

   வையகம் (பாடல் 212)

53. அலை புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற இலையின் கண் நீர்

    நிலாதாகும் (பாடல் 215)

54. எந் நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும்பொய்ந் நூல்

     அவற்றின் பொருள் தெரிந்து (பாடல் 224)

55.  அவன் கொல்இவன் கொல்என்று ஐயப்படாதேசிவன் கண்ணே

     செய்ம்மின்கள் சிந்தை! (பாடல் 225)

***

Leave a comment

Leave a comment