நீதிநெறி விளக்கம் : கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,643)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,643

Date uploaded in London –  28 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நீதிநெறி விளக்கம்

(குமரகுருபர சுவாமிகள் இயற்றியது)

கவின் மிகு சொற்றொடர்கள்

ச.நாகராஜன்

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் கடவுள் வாழ்த்து + 101.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. நீரில் குமிழி இளமை; நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்

  திரைகள் (பாடல் – கடவுள் வாழ்த்து)

2. கல்வியின் ஊங்கு இல்லை, சிற்றுயிர்க்கு  உற்ற துணை

3. கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால், மற்று ஓர் அணிகலம்

  வேண்டாவாம் (பாடல் 12)

4. யாரே அழகுக்கு அழகு செய்வார்? (பாடல் 12)

5. முற்றும் உணர்ந்தவர் இல்லை (பாடல் 13)

6. தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது (பாடல் 18)

7. உலையா முயற்சி களைகணா, ஊழின் வலி சிந்தும் வன்மையும்

  உண்டே (பாடல் 50)

8. மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர்

  தீமையும் மேற்கொள்ளார் (பாடல்52)

9. செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்; கருமமே

  கண்ணாயினார் (பாடல் 52)

10. நிறை கயத் தாழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்

   காண்பு அரிது (பாடல் 53)

11. தெய்வம் உளது என்பார் தீய செயப் புகின் தெய்வமே கண் இன்று

   நின்று ஒறுக்கும் (பாடல் 73)

12. தெய்வம் இலது என்பார்க்கு இல்லை (பாடல் 73)

13. தீயன தீயனவே; வேறு அல்ல (பாடல் 74)

14. மெய்ந் நடுங்க உள் நடுங்கும் நோய் (பாடல் 76)

15. பெரும் பாவம், கற்பு இல் மகளிர் பிறப்பு (பாடல் 83)

16. பரபரப்பினோடே பல பல செய்து ஆங்கு, இரவு பகல் பாழுக்கு

   இறைப்ப (பாடல் 89)

17. வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! ‘யாவரையும் வஞ்சித்தேம்’ என்று

   மகிழன்மின் (பாடல் 93)

18. அஞ்சி அங்கம் குலைவது அறிவு (பாடல் 93)

19. தெய்வம் பறை அறைத்தாங்கு ஓடிப் பரக்கும் (பாடல் 94)

20. மெய் உணர்ந்தார் பொய்ம் மேல் புலம் போக்கார் (பாடல் 98)

21. முற்றத் துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்

   (பாடல் 99)

***

Leave a comment

Leave a comment