
Post No. 12,654
Date uploaded in London – – – 30 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 4
நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதிசதகம் – 4
பர்த்ருஹரி ஸ்லோகம் 10
Slokam 10
शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधोஉधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥
சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்
மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்
அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்
விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10
கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில் கீழே விழுவார்.(1-10)
அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.
வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-
சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ
நன்றின் பால் உய்ப்பதறிவு – 422
பொருள்
மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில் ஈடுபடுவதே அறிவு/ விவேகம்.
ஆகாயகங்கை அரண் முடியில் வந்ததன்பின்
வாகா யிமயமலையிடத்தில் — ஓகோவித்
தொல்லுலகில் பாதலத்தில் தோய்ந்தது தம் வாய்ப்பிழந்தோர்
பல்விதமாம் பாடுபடுவர் -10
xxxxx
Slokam 11
மூர்க்கர்கள் முட்டாள்கள்; முட்டாள்கள் மூர்க்கர்கள்.
பர்த்ருஹரி சொல்கிறார்—
शक्यो वारयितुं जलेन हुतभुक्च्छत्रेण सूर्यातपो
नागेन्द्रो निशिताग्कुशेन समदो दण्डेन गोगर्दभौ ।
व्याधिर्भेषजसङ्ग्रहैश्च विविधैर्मन्त्रप्रयोगैर्विषं
सर्वस्यौषधम् अस्ति शास्त्रविहितं मूर्खस्य नस्त्यौषधिम् ॥ 1.11 ॥
சக்யோ வாரயிதும் ஜலேன ஹுதபுக் ச்சத்ரேண சூர்யாதபோ
நாகேந்த்ரோ நிசிதாங்குசேனஸம்தா தண்டேன கோ கர்தபௌ
வ்யாதிர் பேஷஜ ஸங்க்ரஹைர்ஸ்ச விவிதைர் மந்த்ரப் ப்ரயோகைர் விஷம்
ஸர்வஸ்யௌஷதம் அஸ்தி சாஸ்த்ரவிஹிதம் மூர்க்கஸ்ய
நஸ்த்யௌஷதிம் 1-11
shakyo vaarayitum jalena hutabhuk chchhatrena sooryaatapo
Naagendro nishitaankushena samado dandena gourgardabhah
Vyaadhirbheshajasangrahaishcha vividhaih mantraprayogairvisham
Sarvasyaushadhamasti shaastravihitam moorkhasya naastyaushadham 1.11
Fire can be put out by water. An umbrella can be used as protection from the sun. The rutty elephant can be controlled with an ankush (a weapon with a sharp hook at one end used by a mahout). A cow or donkey can be herded with a stick. A disease can be treated with medicines. Poison can be counteracted by chanting mantras. There is a remedy for everything prescribed in the shaastras. But there is no remedy for the fool.-11
பொருள்
நெருப்பை நீரால் அணைக்கலாம்;
சூரிய ஒளியை குடையால் மறைக்கலாம்;
அங்குசத்தால் யானையை அடக்கலாம்;
மாடு, கழுதையை குச்சியால் அடக்கலாம்;
நோய்களை மருந்தால் தீர்க்கலாம்;
விஷக்கடிகளை மந்திரம் மூலம் நீக்கலாம்;
இவை எல்லாவற்ரையும் நூல்கள் செப்புகின்றன.
ஆனால் முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை.

அங்கிக்குத் தண்ணீர் அருக்கற்குக் கைக்குடையாம்
பொங்குகரிக் கங்குசமாம் போரேற்றுக் – கிங்கொருகோல்
நோயரவுக் கோடதியாம் நொய்யமன மூர்க்கரை நாம்
தூய்மை செயற்கில்லை மருந்து –11
Xxxx
Slokam 12
साहित्यसङ्गीतकलाविहीनः
साक्षात्पशुः पुच्छविषाणहीनः ।
तृणं न खादन्नपि जीवमानस्
तद्भागधेयं परमं पशूनाम् ॥ 1.12 ॥
ஸாஹித்ய சங்கீத கலா விஹீனஹ
ஸாக்ஷஆ த் பசூ ஹு புச்சவிஷாண ஹீனஹ
த்ருணம் ந காதன்னபி ஜீவமானம்
தத் பாகதேயம் பரமம் பசூ னாம் –12
இலக்கியத்தையும் இசையையும் விரும்பாதவன் மிருகம்தான்;
அவனுக்கு கொம்பும் வாலும் இல்லை;
புல்லைத் தின்னாவிட்டாலும் அவனுக்கும் மாட்டுக்கும்
வித்தியாசம் இல்லை.
மணியருமை யோரான் மதிப்பைக் குறைத்தால்
மணிக்குக்குறைவு வருமோ- அணி பொருள் யாப்
பாசிரியன் தான் வருந்த யார் மதியா னேனுமந்த
ஆசிரியற் கேது குறையாம் – 12
(தமிழ்ப் பாடல் இங்குள்ள சம்ஸ்க்ருத ஸ்லோக த்தின் மொழி பெயர்ப்பு அல்ல.)
-FOR SLOKA TEN GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM
–subham—
Bhartruhari’s ,Nitisataka, in Tamil, Hindi, English and Sanskrit , part- 4,