Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 5 (Post No.12,660)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,660

Date uploaded in London – –  –  31 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 PICTURES ARE FROM COLOMBO MUSEUM; TAKEN BY LONDON SWAMINATHAN

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 5

SLOKA 13

येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणो न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूता
मनुष्यरूपेण मृगाश्चरन्ति ॥ 1.13 ॥

 13. Those without learning, penance, charity, awareness, good conduct and righteousness, are animals roaming in human garb, and are a burden to this earth.

யேஷாம் ந வித்யா ந தபோ ந தானம்

ஞானம் ந சீலம் ந குணோ ந தர்மஹ

தே மர்த்யலோகே புவிபார பூதா

மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ் சரந்தி

தவமோ தானமோ இல்லாமல்

கல்வியோ ஞானமோ இல்லாமல்

குணமும் ஒழுக்கமும் இல்லாமல்

வாழ்பவர்களின் உருவம் வேண்டுமானால்

மனிதன் போல இருக்கலாம்;

ஆனால் அவர்கள் மனித ரூபத்தில் உலவும் மாடுகளே.

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர் – குறள் 410 

நல்ல நூல்களைக் கற்று விவேகம் அடைந்தோர் மக்கள்;

அவைகளைக் கல்லாதவர் விலங்குகள்.

அணிபொருள் சொல் கற்றானை ஆதரியான் தானே

திணி பேதை என்னத் தெரிக்கும் == கணிகொள்

மணிக்கு மதியில்லான்  மதிப்பைக்குறைத்தால்

மணிக்குத் தாழ்வுண்டோ —13

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

Xxxx

SLOKA 14

वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

14. Roaming in unapproachable mountains in the company of forest-dwellers, is superior to the company of fools even if in the palaces of Indra’s heaven.

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி

 பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்.

 கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற்

கடும்புலி வாழும் காடு நன்றே- வெற்றி வேற்கை

கள்ளன் கொடுபோகான் கல்விச் செல்வத்தையது

கொள்ளை கொள்ள இன்பங் கொடுக்குமே –அள்ளக்

குறையாதழியாது  கூர்ந்தது பெற்றோரைத்

தறை யாளு வோனு மொவ்வான் சால்பு —14

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

Xxxx

SLOKA 15

शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयागमा
विख्याताः कवयो वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।

तज्जाड्यं वसुधादिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका हि मणयो यैरर्घतः पातिताः ॥ 1.15 ॥

 15. The king, in whose territory well-known, learned people, whose words are embellished by the Shastras and hence pleasing, whose knowledge of sacred works is worthy of imparting to disciples, live in poverty – it speaks of the ruler’s ignorance indeed. Learned ones are masters even without wealth. The gem appraisers are to blame, and not the gems, if the latter are valued less than their real worth.

சாஸ்த்ரோபஸ்க்ருத சப்த ஸுந்தர கிரஹ சிஷ்யப்ரதேயாகமா

விக்யாதா ஹா கவயோ வசந்தி விஷயே யஸ்யப்ரபோநிர்தனாஹா

தஜ்ஜாட்யம் வஸுதாதிபஸ்ய கவயஸ்வர்தம் விநாபீஸ்வராஹா

குத்ஸ்யாஹா ஸ்யுஹு குபரீக்ஷகா ஹி மணயோ யைரர்கதஹ பதிதாஹா

 பொருள்

சீடர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும், புகழ்மிகு கற்றோரும் கவிஞர்களும் ஒரு நாட்டில் வறுமையில் வாடினால், ஏழ்மையில் உழன்றால், அந்த நாட்டு மன்னனே முட்டாள், உணர்ச்சியற்ற ஜடம்தான்;

பணமே இல்லாத போதும் கற்றோரும் அறிவாளிகளும் பெரியோரே, புகழுடையோரே. திறமையற்ற ஒருவன் ரத்தினக் கல்லுக்கு மட்டமாக விலையை மதிப்பிட்டால் அது ரத்தினத்தின்   பிழையன்று; பொற்கொல்லனின் பிழையே!

xxxx

குறள் 834835 

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834 

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை. 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835 

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன். 

உண்மை வித்துவான்களை  நீ உல்லிங்கனஞ் செய்யேல்

எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்

கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற் 

கொண்டே கட்டலாகுமோ கூறு –15

சம்ஸ்க்ருத ஸ்லோகத்துக்கும் இந்தப்பாடலுக்கும் பொருத்தமில்லை

–சுபம்–

Tags- நான்கு மொழிகளில், பர்த்ருஹரி, நீதிசதகம் , Nitisataka, Part 5, Bhartruhari

Leave a comment

Leave a comment