
Post No. 12,649
Date uploaded in London – – – 29 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 42
90.கோப்பாய் முத்துமாரி அம்மன் கோவில்
யாழ்ப்பாண நகரிலிருந்து 6 மைல் தொலைவில் கோப்பாய் முத்துமாரி அம்மன் கோவில் இருக்கிறது. நாச்சிமார் கோவிலாகத் துவங்கிய இந்த ஆலயம் பிற்காலத்தில் முத்துமாரி அம்மன் கோவிலாக உருமாறியது . கர்ப்பக்கிரகத்திலுள்ள அம்மன் உட்கார்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இது தவிர உற்சவ மூர்த்தியும் இருக்கிறது. விநாயகர், சுப்ரமண்யர், பைரவர் சந்நிதிகளும் இருக்கின்றன.எல்லா இந்துப் பண்டிகைகளும் இங்கே அனுசரிக்கப்படுகின்றன .பெரிய மரங்களும் வயல் வெளிகளும் உள்ள இடம் என்பதால் இயற்கை அழகும் சேர்ந்து அமைதியைக் கொடுக்கிறது பெளர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மார்ச் மாதம் வருட உற்சவம் நடக்கிறது . கோவில் தற்காலக் கட்டிடம் என்றாலும் யாழ்ப்பாண மன்னர்கள் இங்கே கோட்டை கட்டி அவ்வப்போது தாங்கினார்கள் என்பதால் இது வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்களும் வழிபட்ட கோவில் என்பதை ஊகித்து அறியலாம்.
xxxx
91.வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில்
இந்த ஆலயம் சிவன் கோவிலுக்கு அருகில் சாலையின் குறுக்கே அமைந்துள்ளது. பொதுவாக இந்த வட்டாரம் குலோத்துங்க சோழனின் அமைச்சர், தளபதி கருணாகரத் தொண்டைமானுடன் தொடர்புடையது.1070-1118. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமை உடைத்து. 1795-ம் ஆண்டில் கோவில் கட்டப்பட்டது . இந்தியாவிலுந்து வந்த சிற்பிகள் கட்டிய கோவில் இது. புண்ணிய மணியகாரனால் கற்கோவில் எழுப்பப்பட்ட செய்தியையம் , 15 நாள் சித்திரைத் திருவிழா நடந்த செய்தியையும் 1864ம் ஆண்டு அரசினர் அறிக்கையிலிருந்து அறிகிறோம்.
கோவிலின் தோற்றத்தின் பின்னால் ஒரு சுவையான கதையும் உண்டு.
ஒரு முதிய மாது , இந்தியாவிலிருந்து புறப்பட்ட படகில் ஏறிக்கொண்டு தன்னை வல்வெட்டித்துறையில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொணடாளாம் அவர்களும் அவ்வாறே செய்தனர்., கரை இறங்கிய மாது, திடீரென்று மறைந்துவிட்டாளாம். ஆக முத்துமாரியே இப்படி வந்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மனிதர்களாகிய நாம், பிரமுகர் ஆகிவிட்டால், நம்மை அறிமுகப்படுத்த விசிட்டிங் கார்ட் அல்லது பிசினஸ் கார்ட் VISITING CARD OR BUSINESS CARD ஒன்றை எடுத்துச் சென்று கொடுக்கிறோம். இறைவனும் இப்படி ஒரு பிஸினஸ் கார்ட் வைத்துள்ளார். அதுதான் அவர் செய்யம் அற்புதச் செயல்கள் MIRACLES. அதைப்பார்த்தவுடன் நாம் அவருடைய மகிமையை அறிகிறோம்.
சத்யா சாய் பாபாவிடம் SATHYA SAI BABA அவர் செய்த அற்புதஹங்கள் பற்றிக் கேட்ட பொழுது அவரும் ‘இவை என் விசிட்டிங் கார்ட்’ என்று சொன்னார்.
ஆக , விசிட்டிங் கார்டுக்குப் பின்னாலுள்ள மனிதரிடத்தில் நம் என்ன காண்கிறோமோ அந்த நிலையை அடைய வேண்டும். வெறும் விசிட்டிங் கார்ட்/ அற்புதங்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டே இருக்கக்கூடாது என்பதுதான் இதன் தாத்பர்யம்/ உட் கருத்து .
XXXXXX
92.மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில்

இலங்கையில் மத்திய மலைநாட்டில் மாத்தளை நகரம் இருக்கிறது. கண்டி நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவு . இலங்கையில் நடைபெறும் தேர்த் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தமானது மாசி மாதம் நடக்கும் மாத்தளை பஞ்ச ரத பவனி ஆகும். 5 தேர்களில் 5 மூர்த்திகள் பவனி வருவதால் பஞ்ச ரதம் எனப்படுகிறது . மலையகத் தமிழர்களின் காவல் தெய்வமாக முத்து மாரி அம்மன் அருள் புரிகிறார். இந்தியாவிலியர்ந்து 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களின் முயற்சியில் எழுந்தது இந்த ஆலயம் .
கண்டி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கருப்பண்ணர் என்பவர் ஆசியில் தோன்றிய கோவில் பின்னர் சுப்பையா பிள்ளை என்பவரால் போற்றி வளர்க்கப்பட்டது . பெயர்தான் முத்துமாரி கோவிலே தவிர இங்கு இல்லாத தெய்வங்கள் இல்லை. இந்துக்களில் உள்ள எல்லா சமூகத்தினர் மட்டுமின்றி இலங்கையிலுள்ள எல்லா சமூகத்தினர் பங்கேற்கும் தேர்த் திருவிழாவை நாடே அறியும் .
பஞ்ச முக விநாயகர், பழனி ஆண்டவர் முதல் ஸ்ரீரெங்கநாதர் வரை எல்லா தெய்வங்களையும் ஒரு சேர வணங்க வழி செய்யும் ஆலயம் இது. மதுரைவீரன், காத்தவராயன், கருப்பண்ண சாமி என்ற தெய்வங்களை இங்கு மட்டுமே காண முடியும் . கோவில் பூஜைகளையும் விழாக்ளையும் அறங்காவலர் சபை அற்புதமாக நடத்திவருகிறது .
கட்டிடக் கலையிலும் கோவில் முன்னணியில் நிற்கிறது. 108 அடி ராஜ கோபுரம். வண்ண வண்ண சுதைகள் நிறைந்த கோபுரம்.
XXXXX
தென் இந்திய வணிகர்கள் இந்தக் கோவில் கட்டடங்களுக்குப் பேருதவி செய்தனர் .பின் 1852 ஆம் ஆண்டு தியாகராஜ செட்டியாரால் கட்டப்பட்டது.
பிள்ளையார், மீனாட்சியுடன் சோமசுந்தரேஸ்வரர், முருகன், முத்து மாரியம்மன் மற்றும் சண்டேசுவரி ஆகிய தெய்வங்கள் ஐந்து தேர்களில் நகரினை வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மாசிமக திருவிழா ஆரம்பமானதுடன் மாத்தளை நகர் விழாக்கோலம் பூண்டு மிக அழகாக காட்சியளிக்கும். . மக்கள் வீடுகள் மற்றும் கடைகளை வாழைமரம்,தோரணம் கொண்டு அலங்கரித்து தேர் திருவிழாவிற்கு ஆயத்தமாவர்.
கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா, தைமாத பிரம்மோற்சவம், மாசிமகம், நவராத்திரி, பௌர்ணமி செவ்வாய் என்பன மிக விசேடமாகவும் மகாசிவராத்திரி, குடமுழுக்கு பூஜைகள், விளக்கு பூஜைகள், ஐயப்ப பூஜைகள் என்பனவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன. அத்தோடு, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற விசேட தினங்களில், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுகின்றன.
1955 ஆம் ஆண்டளவில் அமரர் குமாரசுவாமி தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயம் முன்னேற்றம் கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. மற்றும் ஆலய சுற்றுப் பிரகாரத்தில் பிள்ளையார் வள்ளி தெய்வானை, சமேத முத்துக்குமார சுவாமி ஆலயம் என்பன 1960 ஆம் அமைக்கப்பட்டதோடு 1963 ஆம் ஆண்டு ஈசான மூலையில் ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோம சுந்தரேச்வரர் ஆலயம் நிர்மாணிக்கப் பட்டது. மேலும் நடராஜர் சபை, முப்பெரும் தேவியர், ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ ரங்கா நாதர் எனப் பல பரிவார மூர்த்திகளும் அமைக்கப் பட்டு 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடந்தது. நேரம் தவறாது காண்டாமணி ஓசையுடன் கூடிய ஐந்து கால பூஜை இன்றும் நடைபெறுகிறது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மாத்தளை மா நகரில் பஞ்சரத பவனியை எழுப்பி சரித்திரம் படைத்தது 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய ஐந்து தேர்களும் விஷமிகளால் எரி யூட்டப் பட்டன.. மீண்டும் அம்பிகையின் அனுக்கிரகத்தால் 1992 ஆம் ஆண்டு ஐந்து சித்திரத் தேர்களை கட்டினார்கள் 1993ல் மீண்டும் தேர் விழா துவங்கியது.
—SUBHAM—–
Tags. அற்புதங்கள் நடைபெறுவது ஏன் ? முத்துமாரி அம்மன் கோவில் , மாத்தளை, கோப்பாய், Part 42, வல்வெட்டித்துறை










