New Tamil Lesson 10 Verb Pesu= பேசு Speak, Talk (Post No.12,639)

London sswaminathan speaking in South Indian Society meeting 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,639

Date uploaded in London – –  –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பேசு =PESU= SPEAK= TALK

1.            எப்போதும் உண்மையே பேசு

Eppthum Unmaiye Pesu

Always, Truth Only, Speak

Imperative sentence; Unmai +ee= Emphasis; Speak

xxxx

2.            அதிகமாகப் பேசாதே.

Adhikam + aaka or AAGA= , அதிகமாக

Adhikamaaka Pesaathe = Too much, Don’t Talk = Don’t talk

Imperative Negative Sententce

All adverbs will have this AAGA or AAKA ending

Vegamaaka= speedily, quickly== வேகமாக

Methuvaaga = slowly, = மெதுவாக

Unmaiyaaka = Truly, Honestly =, உண்மையாக

Sabdhamaaka = Loudly , = சப்தமாக etc

xxxxx

3.            அங்கே போய் சத்தமாகப் பேசக்கூடாது.

Ange , Poy, Saththamaaka, Pesak koodaathu

Prohibitive sentence= பேசக்கூடாது. = Pesak koodaathu

Poy = having gone there, after going there= converbial of verb GO= PO

How do you form Prohibitive?

You add k KOODAATHU with the infinitive of a particular verb

சத்தமாக= சப்தமாக

Examples

Pesa = To speak = k koodaathu

Vara = To come = Varakkoodaathu

Poga = To go= Poga k koodaathu

Ezutha = To write = Ezutha k koodaathu

xxxx

London swaminathan speaking in British Parliament committee room.

4.            கூட்டத்தில் கடைசியில் யார் யார் பேசினார்கள்?

Koottaththil , Kadaisiyil , YAAR YAAR, Pesinaarkal?

In the meeting, at the end, WHO WHO, did speak?

In Indian languges it is common to repeat the words WHAT WHAT, WHEN WHEN,  WHERE WHERE, WHO WHO.

In English you wont use this repetition

பேசினார்கள் = Pesinaarkal = Third person , Plural, Past tense

xxx

5.            நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Naan , ORU, VAARTHTHAI KOODA, Pesavillai

I , single word, even, did not speak

I did not say even a single word .

xxxx

6.            மந்திரி பேசியதும் கூட்டம் கலைந்தது

Manthiri Pesiyathum Koottam, Kalainthathu

As soon as the minister spoke, the crowd/meeting dispersed

கூட்டம்= koottam = used for CROWD OR MEETING

xxxx

7.            அவர் பேசினார் பேசினார் பேசிக்கொண்டேயிருந்தார்.

      Avar Pesinaar Pesinaar Pesikkonde irunthaar.

He spoke, spoke and did continuously speaking .

When sone one does an action continuously, then this repletion comes

Never stopping action.

xxxx

8.            யார் பேசுவது உண்மை என்று எனக்குப் புரியவில்லை.

Yaar Pesuvathu Unmai Endru Enakku , Theriyavillai

Who Speaking Truth that  To me (I) don’t know

I don’t know who is peaking the truth (moral dilemma)

xxx

9.            நீங்கள் மெதுவாகத் தமிழ் பேசினால் எனக்குப் புரியும்.

Neengal Methuvaaka, THamiz, Pesinaal, Enakku, Puriyum

If you speak Tamil slowy I can understand.

மெதுவாக = methuvaaka = adverbial form,

பேசினால் = conditional form,

Puriyum = Impersonal verb, understand

xxxx

10.          எங்கள் சங்கத்தில் அவர் ஒருமுறை பேசியிருக்கிறார்.

Engal, Sangaththil, Avar, Our murai, Pesiyirukkiraar

He has spoken  in our association once.

சங்கத்தில்= sangaththil= in the association;

ஒருமுறை Oru murai  =  one time, once;

பேசியிருக்கிறார்.= Pesiyirukkiraar = has spoken  = compound verb

To be continued………………………..

Tags, New Tamil, Lesson 10, Verb Speak, Talk, Tamil

தமிழ் மொழியை வளர்ப்போம் 26102023 -Part 6 (Post No.12,638)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,638

Date uploaded in London – –  –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is Part 6

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ்

அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “ பரு ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

பரு + + + +   = இறுமாப்பு, எக்களிப்பு, படைக்கலம், மகிழ்ச்சி

பரு  + +    = முரடான வேஷ்டி வகை, பரும் புடவை

பரு  + + +   = பெருவாரி, கறி பதார்த்தங்களோடு அமைந்த அன்னம்

பரு  + + +  = முழந்தாள்

பரு + + + = ஒரு கண்நோய்

பரு  + + +  = கரும்பு

பரு  + +  = வண்டு

பரு  + + + +    = இரும்பு முதலியவற்றைப் பற்றும் கருவி

பரு   + + +  = ஜடாமஞ்சில்

பரு  + + + +   = விவாகம்

பரு   + + +   = புலவர்

பரு   + + + +    = மாகாளிக் கிழங்கு

பரு  + + + = வரிக்கூத்து வகை

பரு  + +  = கப்பற் பாய், கட்டுமரம்

பரு  + + + +  = பருப்புஞ் சாதம்

பரு  + + + +  = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு

பரு + + + +  = குதிரை

பரு + + +  = பார்வதி

பரு  + + + = ஆணிவகை

பரு  + + + = லேசாகக் கடித்தல் , மேற்கடித்தல்.

xxxx

விடைகள்

பரு மிதம்  = இறுமாப்பு, எக்களிப்பு, படைக்கலம், மகிழ்ச்சி

பரு  முறி = முரடான வேஷ்டி வகை, பரும் புடவை

பரு  ம்படி  = பெருவாரி, கறி பதார்த்தங்களோடு அமைந்த அன்னம்

பரு  வேகம் = முழந்தாள்

பரு  வணிகை = ஒரு கண்நோய்

பரு  வயோனி = கரும்பு

பரு  ங்கி = வண்டு

பரு  ங்குறடு = இரும்பு முதலியவற்றைப் பற்றும் கருவி

பரு  ஞ்சாய் = ஜடாமஞ்சில்

பரு   ணயனம் = விவாகம்

பரு   ணிதர்  = புலவர்

பரு   நன்னாரி = மாகாளிக் கிழங்கு

பரு  மணல் = வரிக்கூத்து வகை

பரு  மல் = கப்பற் பாய், கட்டுமரம்

பரு  ப்போரை = பருப்புஞ் சாதம்

பரு  த்திவீடு = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு

பரு த்தாரம் = குதிரை

பரு ப்பதி  == பார்வதி

பரு  ப்பாணி  == ஆணிவகை

பரு  ங்கடி == லேசாகக் கடித்தல் , மேற்கடித்தல்

–subham—

TAGS- தமிழ் மொழி, வளர்ப்போம், part 6, ஆனந்த விகடன், அகராதி, 1935

மீனாட்சி அம்மன் கோவில்கள்:  இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ………39 (Post 12, 637)

Uduvil Meenakshi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,637

Date uploaded in London – –  –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 39

79.உடுவில்  மீனாட்சி அம்மன் கோவில்

யாழ்ப்பாண நகருக்கு வடக்கில் ஆறு மைல்  தொலைவில் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வயல்வெளியில் ஒரு புனிதக் கல் கண்டுபிடிக்கப்பட்டது  அது கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் ஊர்வலமாகச் சென்ற வழியில் இருந்ததால் கண்ணகை அம்மன் என்று மக்கள் வழி படத் துவங்கினர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரங்கநாத அய்யர் என்பவர் இந்தியாவிலிருந்து மீனாட்சி விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்து முறையான வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். இப்போது பக்தர் கூட்டம் பெருகி,  பெரிய அளவில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலின் புகழ் பரவவே, இலங்கை யிலும் கடந்த 300 ஆண்டுகளில் பல இடங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்கள் தோன்றியுள்ளன. தனியாகக் கோவில் இல்லாத இடங்களிலும் மீனாட்சி பக்தர்கள் சந்நிதிகளை அமைத்துள்ளனர். சுமார் 300 ஆண்டு வரலாறு உடையது உடுவில் மீனாட்சி அம்மன் கோவில்..

XXXX

இலங்கையில் மேலும் பல மீனாட்சி அம்மன் கோவில்கள்

80.மடத்தடி மீனாட்சி அம்மன் கோவில்

காரைதீவு, மாட்டுப்பளை, மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் மதுரையைப் போலவே சித்திரா பெளர்ணமி காலத்தில் விழா நடத்தப்பட்டுகிறது .

வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா 2022 ஏப்ரல் மாதம் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

xxxx

81.ஊரெழு மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழு எனும் இடத்தில் அமைந்துள்ளது.

xxxx

82. கந்தரோடைக்கு அணித்தே மாகியப்பட்டி கண்ணகை அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனும் கண்ணகியும் வழிபடப்படுகின்றனர்

இலங்கை வேந்தன் கஜபாகு 1900 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டில் கண்ணகி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட செய்தி சிலப்பதிகார காவியத்தில் கிடைக்கிறது;  கஜபாகு மன்னன் கொண்டுவந்த கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் கண்டி கதிர்காமம் வரை ஊர்வலமாகச் சென்றது.

அது முதற்கொண்டு கண்ணகி சிலை சென்ற வழியெல்லாம் கண்ணகை அம்மன் கோவில்கள் தோன்றின. மதுரை நகரினை ஒரு முலையால் கண்ணகி எரித்த செய்தி உலகறிந்தது. ஆகையால் அவளை மதுரை மீனாட்சி அம்மன் போலவே மக்கள் கருதினர். இதனால் பல இடங்களில் மீனாட்சியுடன் சேர்த்தே கண்ணகி வழிபடப்பட்டாள் ; காலப் போக்கில் கண்ணகையை ராஜ ராஜேஸ்வரி முதலிய தேவிகளாகவும் வழிபட்டு அந்த விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்ததை  இலங்கைக் கோவில்களின் வரலாற்றை ஊன்றிப் படிப்போர் அறிவர்.

Xxxxx

Pungudu Tivu Raja Rajeswari Temple

இலங்கையில் துர்க்கை அம்மன் வழிபாடு

தெல்லிப்பளை துர்கா கோவில் பற்றி கோவில் எண் 63-ல் எழுதியுள்ளேன்

யாழ்ப்பாண நகரிலிருந்து காங் கேசன் துறை நோக்கிச் செல்லும் சாலையில் எட்டாவது மைலில் தெல்லிப்பளை துர்கா கோவில்  அமைந்துள்ளது. ஏனைய சில துர்க்கை அம்மன் கோவில்களையும் தரிசிப்போம்

83. மிருசுவில் துர்க்கை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்திலமைந்த மிருசுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.

84.திருகோணமலை துர்க்கை அம்மன்

திருகோணமலை, உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய த்திலும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உற்சவம் நடக்கிறது ஆலய நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பூஜைகள் 2022 மார்ச் மாதம் நடந்தது.

மேலே குறிப்பிட்ட கோவில்களுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள் யூ ட்யூப் YOU TUBE வாயிலாக உற்சவ நிகழ்ச்சிகளைக் காணலாம்.

–SUBHAM–

Tags – துர்க்கை அம்மன், கோவில், கண்ணகை அம்மன், மீனாட்சி அம்மன்

துர்காதாஸின் விஸ்வாசம்! (Post No.12,636)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,636

Date uploaded in London –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ராஜஸ்தான் ஃபைல்ஸ்!

துர்காதாஸின் விஸ்வாசம்!

ச.நாகராஜன்

ஏராளமான அற்புத வரலாறுகளைக் கொண்டது ராஜஸ்தான்.

வீரத்துடன் முகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களின் சரிதத்தை நாம் தேடிப் பிடித்தாவது படிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட மகத்தான சரிதங்களில் ஒன்று மன்னன் அஜித் சிம்மனுடையது.

அஜித் சிம்மனுடைய தந்தையான மன்னன் ஜஸ்வந்த் சிம்மன் காலமானார். மார்வாட் அரசு அரசனை இழந்தது. ஜோத்பூரில் முடிசூட்டக் கொள்ள முடியாதபடி அஜித் சிம்மனுக்கு அப்போது இளம் வயது.

பார்த்தான் டெல்லி சுல்தான் அவுரங்கசீப்!

எப்படியாவது இந்தத் தருணத்தில் மார்வாடை அபகரிக்க அவன் பேராசை கொண்டான்.

ஜஸ்வந்த் சிம்மனுடைய திவானான ஆசகரணனுடைய புதல்வரான துர்காதாஸைத் தன் பக்கம் இழுக்கத் திட்டம் தீட்டினான் அவுரங்கசீப்.

எட்டாயிரம் பொற்காசுகளைத் தருவதாகவும் இளவரசன் அஜித் சிம்மனைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து துர்காதாஸ் விலக வேண்டும் என்றும் அவன் ஆசை காட்டினான்.

துர்காதாஸ் இதற்கு இணங்கவில்லை.

அவுரங்கசீப்பின் சதியிலிருந்து அஜித்சிம்மனைக் காப்பாற்ற அந்த இளவரசனை வெவ்வேறு இடத்திற்கு மாற்றித் தங்க வைத்து அவனது பாதுகாப்பை உறுதி செய்தவண்ணம் இருந்தார் துர்காதாஸ்.

இளவரசன் தனியாக அரசுப் பொறுப்பை ஏற்கும் வரை இப்படி துர்காதாஸ் பாதுகாப்பைத் தொடர்ந்தார்.

உரிய காலத்தில் அஜித்சிம்மன் அரியணை ஏறினார்.

ஒரு நாள் அரசவை கூடியது.

அப்போது அஜித்சிம்மன் துர்காதாஸைப் பார்த்து, “நீங்கள் இளம் வயதில் எனக்குச் செய்த கொடுமையை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என்னால் பொறுக்க முடியவில்லை. இடம் விட்டு இடம் ஓட வைத்தீர்கள்! தாங்க முடியாத துன்பத்தைத் தந்தீர்கள். ஒரு நாள் இந்த அரியணையில் நான் ஏறி அமர்வேன் என்பதைத் தெரிந்தும் இப்படி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு தக்க தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.

துர்காதாஸோ மென்மையாக, “நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்கத் தயார்” என்றார்.

“கையில் மண்கலயத்தை ஏந்தி ஜோத்பூர் நகரத் தெருக்களில் நீங்கள் பிச்சை எடுத்து உயிர் வாழுங்கள். இங்கே உங்களுக்கு இனி இடம் கிடையாது” என்றார் அஜித்சிம்மன்.

துர்காதாஸ் அங்கிருந்து சென்றார்.

சில நாட்கள கழிந்தன.

ஒரு நாள் ஜோத்பூர் வீதியில் அஜித்சிம்மன் குதிரை மீது அமர்ந்தவாறு சென்று கொண்டிருந்தார். அவரது படை வீரர்கள் அவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர் ஒரு செல்வந்தர் வீட்டின் வாயிலில் மண் கலயத்துடன்  நின்றவாறு துர்காதாஸ் பிச்சை கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

குதிரையை விட்டு இறங்கினார் அவர்.

துர்காதாஸிடம் சென்ற அஜித் சிம்மன், “என்ன சௌக்கியமா?” என்றார்.

உடனே துர்காதாஸ், “அரசே! எனது சௌக்கியத்திற்கு என்ன குறைச்சல்? உங்களது ஆட்சியில் அனைவரும் தங்கத் தட்டிலும் வெள்ளித் தட்டிலும் அல்லவா உணவு உட்கொள்கின்றனர்! எனக்கோ இந்த மண் கலயம் ஒன்றே சொத்து. சில சமயம் பிச்சை கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. உங்களை அங்குமிங்குமாக அலைக்கழித்துக் கூட்டிச் சென்று காப்பாற்றி இருக்காவிடில் நானும் இவர்களைப் போல தங்கத் தட்டிலோ அல்லது வெள்ளித் தட்டிலோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் – ஒரு கொடுங்கோலன் மார்வாடை அரசாண்டு கொண்டிருப்பான்” என்றார் துர்காதாஸ்.

துர்காதாஸை அணைத்துக் கொண்ட அஜித் சிம்மன், “நீங்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு விஸ்வாசமாய் இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் உணர்வதற்காகவே தான் இப்படிச் செய்தேன். நீங்கள் எனக்குத் தந்தை போன்றவர் அல்லவா” என்றார்.

இருவர் கண்களும் பனித்தன.

மக்கள் இந்த அதிசயக் காட்சியைக் கண்டு வியப்புற்று மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் துர்காதாஸின் மகிமை தெரிந்தது.

அவரைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்து சென்ற அஜித் சிம்மன் அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கினார்.

ராஜஸ்தான் ஃபைல்ஸில் இப்படி ஒரு உண்மை காட்சி உண்டு!

***

ஆதாரம், நன்றி : கல்யாண கல்பதரு ஆங்கில மாத இதழ் 2016 ஆண்டு மலர்.

இப்போது இந்த ஆங்கில இதழ் நின்று விட்டது.

QUIZ சரஸ்வதி பத்து QUIZ (Post No.12.635)

Sarasvati in Japan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,635

Date uploaded in London – –  –  25 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx


 QUIZ சரஸ்வதி பத்து QUIZ (Post No.12.635)

Quiz Serial No.79

1.ஜப்பானில் சரஸ்வதி தேவிக்கு 40-க்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. அவளை ஜப்பானியர் என்ன பெயரில் அழைக்கின்றனர் ?

Xxxx

2.ஸரஸ்வதி தேவி பற்றி 5000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதம் என்ன சொல்கிறது ?

xxxx

3.சரஸ்வதிக்கான தனிக்கோவில் தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது?

xxxx

4.சரஸ்வதி மீது குமரகுருபரர் பாடிய துதியின் பெயர் என்ன?

Xxxx

5.சரஸ்வதி அந்தாதி பாடிய புலவர் பெயர் என்ன ?

xxxx

6.சரஸ்வதி தேவிக்கு எத்தனை  பெயர்கள் இருக்கின்றன ?

xxxx

7.சரஸ்வதியை வணங்க மாணவர்கள் சொல்லும் ஸ்லோகம் என்ன ?

xxxx

8. சரஸ்வதிக்கு எத்தனை கைகள்அவைகளில்  என்ன இருக்கின்றன ?

xxx

9.சரஸ்வதியின் நிறம் என்னவாகனம் என்ன ?

xxx

10. சரஸ்வதியை  வணங்குவோருக்கு என்ன கிடைக்கும் ?

xxx

 ANSWERS விடைகள்

1.பென்சைதன் Benzaiten (shinjitai: 弁才天 or 弁財天; kyūjitai: 辯才天, 辨才天, or 辨財天, lit. “goddess of eloquence”), என்றும் பெ ன்தன் Benten என்றும் அழைக்கின்றனர். இது வந்தனம் , வந்தனா என்ற சமக்கிருதப் பெயரின் திரிபு

xxxx

2.अम्बितमे नदीतमे देवितमे सरस्वति

— Rigveda 2.41.16

அம்பிதமே  நதீ தமே தேவிதமே ஸரஸ்வதி  என்று ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டல மந்திரம் புகழ்கிறது

Best of mothers, the best of rivers, best of goddesses, Sarasvatī.

இதன் பொருள்: தாயே சரஸ்வதி! நீயே தாய்களில் சிறந்தவள் (உலகில், உன்னை விட அன்பு செலுத்தும் தாயைக் காண்பது  அரிது ); நதிகளில் சிறந்தவள் (ஹரப்பா நாகரீகம் துவங்கிய முதல் இடம்); கடவுளரில்  நீயே  சிறந்தவள்.

xxxx

3.திருவாரூருக்கு அருகிலுள்ள கூத்தனூரில் இருக்கிறது. ஒட்டக்கூத்தர் பூஜித்த சரஸ்வதி. கோவில் இது.

இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில்.

ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது. (Facebook )

xxx

4.சகல கலா வல்லிமாலை

xxxx

 5. சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர்.

xxx

தமிழ் மொழியில் கலைமகள் என்போம்.; ஸம்ஸ்க்ருத அஷ்டோத்திரத்தில் 108 பெயர்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்தியா முழுதும் பெண்கள் வைத்துக்கொள்ளும் சரஸ்வதி பெயர்கள்- வித்யா, பாரதி , சரஸ்வதி , சாரதா, வாணி, சியாமளா, சாவித்ரி, பார்கவி ஆகும் .

xxx

7.தினமும் காலையில் படிப்பைத் துவங்கும் முன்னால் சொல்ல வேண்டியது :-

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।

विद्यारंभं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

பொருள் :- ஸரஸ்வதி தாயே , உன்னை வணங்குகிறேன்; எண்ணியதை எல்லாம் நல்கும் , வரம் அருளும் தாயே, இதோ படிப்பைத் துவங்குகிறேன் ; இதில் வெற்றி பெற எனக்கு எப்போதும் அருள் புரிவாயாகுக.

சம்ஸ்க்ருதம் தெரியாதோர், சகல கலா வல்லி மாலை செய்யுட்களில் சில செய்யுட்களையோ  அல்லது சரஸ்வதி அந்தாதியின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டையுமோ (Given at the end) சொல்லலாம்

Xxxx

8.சரஸ்வதி தேவிக்கு 4 கைகள் ; அவைகளில் புஸ்தகம், ஜபமாலை , வீணை, தரமரை மலர் அல்லது அபய ஹஸ்தம் இருக்கும்

xxx

9.அவள் வெள்ளைப்புடவை அணிந்து கையில் வீணையுடன் பளிங்கு நிறத்தில் காட்சி தருவாள் ; அன்ன வாகனத்தில் அமர்ந்து இருப்பாள். வடக்கிலுள்ள சில இந்திய மாநிலங்களில் மயில் வாகனமும் உண்டு

xxx

10. இந்து சமய நூல்களில் பட்டியலிடப்பட்டுள்ள 64 கலைகளும் கைகூடி உலகப் புகழ் அடை வார்கள் .

(64 கலைகளின் பட்டியல் இந்த பிளாக்- கில் உள்ளது )

கம்பர் அருளிய சரசுவதி அந்தாதியில் சொல்கிறார் :–

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய

உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள் இங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி. (சரஸ்வதி அந்தாதியின் கடவுள் வாழ்த்து)

xxxxxxxxxx

–சுபம் —

Tags – சரஸ்வதி, க்விஸ் , கேள்வி பதில், நிறம், வாகனம்

பள்ளி மாணவர்க்கான  குறுக்கெழுத்துப் போட்டி25102023 (Post No.12,634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,634

Date uploaded in London – –  –  25 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

(பழைய தமிழ்நாடு பாட நூல் புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

விடைகள்- லண்டன் சுவாமிநாதன் எழுதியது)

விடைகள்

இடமிருந்து வலமாக

1.அறுவடை ;  5.மார்கழி ; 6. சடை; 7. மஞ்சள் ; 9.எலி; 10.புற்று; 13.கரும்பு; 15.சூரியன் ; 16.கைதி

மேலிருந்து கீழாக

1.அரசமரம் ; 2.வலை; 3.ஏர் ; 4.கோழி; 5.மாடு ; 8.சங்கு; 9.எறும்பு ; 11.பேகன் ; 12.நரி; 14.புகை

—-subham—-

அற்புதம் நடத்திய சிவகாமி அம்மன்: இலங்கை 108 ……Part 38 (Post.12,633)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,633

Date uploaded in London – –  –  25 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 38

77. இணுவில் சிவகாமி அம்மன் கோவில்

புலவர் ஒருவர் வாழ்வில் அற்புதம் நடத்தியதால் புகழ் பரவிய  கோவில் சிவகாமி அம்பாள்  கோவில் ஆகும். இலங்கையில் இரண்டு சின்னத்தம்பி புலவர்கள் தமிழ் மணம் பரப்பிப் புகழ்க்கொடி நாட்டினார்கள் அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்து சின்னத்தம்பிப் புலவர் ; இன்னும் ஒருவர் இணுவை சின்னத்தம்பிப் புலவர். அவருடைய தந்தை பெயர் சிதம்பர நாதர் அவர் டச்சுக்காரர் / ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் . அதாவது இற்றைக்கு 350  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.  அவரை தவறான குற்றச்சாட்டின் பேரில் ஆட்சியாளர்கள் சிறையில் தள்ளினார்கள் . மனம் நொந்து போன அவர் சிவகாமி அம்மையின் அருள் வேண்டி, ஒரு பாமாலை புனைந்தார் . . அவர் பாடிய பதிகத்தில் எட்டாவது செய்யுள் பாடுகையில் சிறைக்கதவுகள் தானாகாத் திற க்கவே அவர் கம்பீரமாக வெளியே நடந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அதுமுதல் அவர் புகழும் அம்மன் புகழும் திக்கெட்டும் பரவியது . இது நடந்தது 1760 ஆம் ஆண்டில் .

அவர் பல துதிகளை அம்மன் மீது பாடினார் . அவைகளின் பெயர்கள் —

சிவகாமியம்மை பதிகம்

சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை

சிவகாமியம்மை துதி.

கோவிலுக்குள்  உள்ளூர் மக்கள் புலவர் பெயரில், ஒரு மண்டபத்தைக் கட்டி , அவர் புகழ் நீடித்து நிற்கச் செய்துள்ளனர்

பஞ்சவன்ன  தூது , நொண்டி நாடகம், கோவலன் நாடகம்  முதலிய  பல நாடகங்களையும் இயற்றினார். இவருக்கு சான்றோர்கள் ஒன்று கூடி, கதிர்காம சேகர மநு முதலியார் என்ற பட்டத்தினையும் நல்கி னர் .. புலவர் வாழ்ந்த காலத்தில் பிரபல கணேச ஐயர் 1709- 1784, மயில்வாகனப் புலவர் 1770-1867, நல்லூர்க் கவிஞர் 1716-1780 ஆகியோரும் வாழ்ந்தனர்

xxxxx

கோவில் வரலாறு

யாழ்ப்பாண நகரிலிருந்து 4 மைல் தொலைவில் இணுவில்  இருக்கிறது . தமிழ் அரசர்கள் ஆண்ட காலத்தில்  இந்தியாவிலிருந்து  பல தளபதிகளை மன்னர்கள் வரவழைத்தார்கள் ; அவர்களில் ஒருவர் திருக்கோவிலூரிலிருந்து வந்த பேராயிரவன் ஆவார். மக்களுக்கும் தெய்வத்துக்கும் அருந்தொண்டாற்றியதால் அவர் மக்களின் பேராதரவினைப் பெற்றார்.  அவர் சிதம்பரத்திலிருந்து சிவகாமி அம்மனின் விக்கிரகத்தைக் கொண் டுவரச் செய்து இந்தக் கோவிலைக் கட்டினார் அந்தப் பகுதியில் ஏற்கனவே பல ஆலயங்கள் இருந்தன  பேராயிரவன் இறந்த பின்னர் காலிங்கராயன்கைலாயநாதன் ஆகியோர் அப்பகுதியை நிர்வகித்தனர் . அவர்களும் அம்பாள் மீது தூய அன்புகொண்டு ஆலயத்தைப் பராமரித்தனர் .  போர்சுகீசிய- ஹாலந்து நாட்டு மதவெறியர்கள் ஆட்சி அழிந்த பின்னர், கோவில் புத்துயிர் பெற்றது..

காலப்போக்கில் கோவிலை விரிவுபடுத்தினார்

இந்தக் கோவில் பல சிறப்புகள் உடைத்து. அவையாவன :

.சாத்திரம்மா என்பவர்  ஊர் மக்களிடம் பிடி அரிசி வாங்கி கோவிலின் கோபுரத்தைக் கட்டினார் .

9 நாட்களுக்கு நவராத்திரி உற்சவம் நடத்தப்பட்டு விஜயதசமி அன்று மானம்புத் திருவிழா நடத்துகின்றனர்

பங்குனி மாதத்தில் வருடாந்திர உத்சவமும் , ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழாவும் டிசம்பரில் திருவெம்பாவை விழாவும் நடத்ததப்படுகின்றன . ஆண்டு விழா பங்குனி உத்தரத்தன்று முடிவடையும் .

திருவிழாவின்போது ராஜ ராஜேஸ்வரி விக்கிரகம் பவனி வரும்.

மூலஸ்தானத்தில் அம்பாளும், பிற சந்நிதிகளில் நடராஜர் , விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்களும் உள்ளனர்.

மகிழ மரம் கோவிலின் தல விருட்சம் .ஆகும்.

Xxxxxx

78. வண்ணார் பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் (நாச்சிமார் கோவில்)

விஸ்வ குல பொற்கொல்லர்களின் குலாதெய்வம் காமாட்சி அம்மன்.  யாழ்ப்பாணத்தின் வண்ணார் புண்ணை பகுதியில் காமாட்சி கோவில் இருக்கிறது . இந்தக் கோவில் கல் வழிபாட்டிலிருந்து காமாட்சி அம்மன் வழிபாட்டுக்கு  உரு மாறியது சுவையான வரலாறு ஆகும்.

பெண்ணொருத்தி காலைக்கடன் கழி க்கச் சென்றபோது அவள் நின்ற மருத மரத்துக்கு அடியில் ஆளே இல்லாத இடத்தில் தன்னுடைய  முலைகளை யாரோ திருகுவது போல உணர்ந்து பீதி அடை ந்தாள்  ; ஊர் மக்களிடையே செய்தி பரவியது. நாவல் மரங்களும், மருத மரங்களும் பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளும் சூழ்ந்த இயற்கை வனப்பும் செழிப்பும் உடைய இடம் அது.

ஊரிலுள்ள ஒரு வயதான பெண்மணி, மக்களின் அச்சத்தை அகற்ற, அந்த குறிப்பிட்ட மருத மரத்தடியை சுத்தம் செய்து  ஒரு கல்லினை நட்டார் . அதை நாச்சிமார் அம்மன் என்று சொல்லி வழிபடவைத்தார். மக்களின் பக்தி பெருகவே, முறையான மாரி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அக்காலத்தில்  வைத்திலிங்க பத்தர் என்பவர் தென்னிந்தியாவில் தல யாத்திரை மேற்கொண்டார் . அவரிடம் கண்ணையா ஆச்சாரியார் என்ற பிரபல சிற்பி , ஒரு காமாட்சி விக்கிரகத்தை வழங்கவே, அதை நாச்சிமார் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்  பின்னர் அது காமாட்சி அம்பாள் ஆலயம்  என்றும் நாச்சிமார் கோவில் என்றும் அழைக்கப்படலாயிற்று .

ஓரிடத்தில் வசிக்கும் மக்களுக்கு இறைவன் அருள்புரிய எண்ணுகையில், அவ்விடத்தில் வசிக்கும் ஒருவரிடம் அற்புதங்களை நிகழ்த்துவதை பெரும்பாலான கோவில் வரலாறுகளில் காண்கிறோம் .

இப்போது கோவிலில் முறையான பூஜைகளும், பல விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மார்ச்- ஏப்ரலில் 15 நாள் உற்சவம் ; ராஜ கோபுரத்துடன் திகழும் இக்கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ள தேரும் உளது .

இலங்கையில் நீர்வேலி முதலிய இடங்களிலும்  காமாட்சி அம்மனுக்கு ஆலயங்கள் உள ..

—subham—

Tags – வண்ணார் பண்ணை, காமாட்சி ஆலயம், நாச்சிமார் கோவில், சிவகாமி அம்மன் , கோவில்

திருவெம்பாவை – கவின் மிகு சொற்கள்! (Post No.12,632)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,632

Date uploaded in London –  25 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

திருவெம்பாவை – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன்

மாணிக்கவாசகர் அருளியது.

மொத்தம் 20 பாடல்கள்.

பாடல் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி (பாடல் 1)

2. விம்மி விம்மி மெய்ம்மறந்து (பாடல் 1)

3. சீசீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ?! (பாடல் 2)

4. முத்தன்ன வெண்ணகையாய் (பாடல் 3)

5. எத்தோ? நின் அன்புடைமை எல்லாம் அறியோமோ? (பாடல் 3)

6. சித்தம் அழகியார் (பாடல் 3)

7. ஒண்ணித் தில நகையாய்  (பாடல் 4)

8. வண்ணக் கிளி மொழியார் (பாடல் 4)

9.  அவமே காலத்தைப் போக்காமல் (பாடல் 4)

10. பாலூறு தேன் வாய்ப் படிறீ (பாடல் 5)

11. தென்னா என்னாமுன் தீ சேர் மெழுகொப்பாய் (பாடல் 7)

12. ஏழை பங்காளனையே பாடு (பாடல் 8)

13. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே (பாடல் 9)

14. பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (பாடல் 9)

15. எல்லாப் பொருள் முடிவே (பாடல் 10)

16. ஐயா! வழி அடியோம் வந்தோம் காண்! (பாடல் 11)

17. ஆர்த்த பிறவித் துயர் (பாடல் 12)

18. சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப (பாடல் 13)

19. காதார் குழையாடப் பைம்பூண் கலனாட (பாடல் 14)

20. கோதை குழலாட வண்டின் குழாமாட (பாடல் 14)

21.  வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி (பாடல் 14)

22. எங்கும் இலாததோர் இன்பம் (பாடல் 17)

23. நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி (பாடல் 17)

24. பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு (பாடல் 17)

25. தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல (பாடல் 17)

26. என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க (பாடல் 19)

27. போற்றி! அருளுக நின் ஆதியாம் பாதமலர் (பாடல் 20)

28. போற்றி! அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் (பாடல் 20)

29. போற்றி!  எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் (பாடல் 20)

30. போற்றி! எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் (பாடல் 20)

31. போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் (பாடல் 20)

THIRUVATHAVUR- BIRTH PLACE OF MANNIKKAVASAGAR

திருப்பள்ளியெழுச்சி – கவின் மிகு சொற்கள்!

மாணிக்கவாசகர் அருளியது.

மொத்தம் 10 பாடல்கள்.

பாடல் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

1. போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே! (பாடல் 1)

2. சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் (பாடல் 1)

3. அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே (பாடல் 2)

4. ஓவின தாரகை ஒளி (பாடல் 3)

5. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் (பாடல் 4)

6. இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால் (பாடல் 4)

7. சிந்தனைக்கும் அரியாய் (பாடல் 5)

8. செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் (பாடல் 6)

9. எது எமைப் பணி கொளும் ஆறு? (பாடல் 7)

10. கண்ணகத்தே நின்று களிதரு தேனே! (பாடல் 9)

11. ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! (பாடல் 8 & 10)

***

New Tamil Lesson 9- Use of Verb Say= SOL (Post No.12,631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,631

Date uploaded in London – –  –  24 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Yesterday we looked at the verb GO= PO in Tamil

Today we will look at SOL= Say or Tell in English

Both GO and SAY are irregular verbs in Tamil. They don’t follow the rules followed by other 7 Classes of Verbs. That is why we call them irregular verbs.

xxxx

சொல் SOL

1.அவனிடம் சொல்லிவிட்டுப் போ =

Avandidam, Sollivittup Po

At him, say and go.

Avanidam= to him or on him (Locative)

Sollivittu = it is a compound verb with more meaning than SAY and GO.

VIITU is added to mean COMPLETE THE ACTION AND THEN GO TO THE NEXT ACTION.

Suppose I receive a telephone call while I am eating, then I will tell the person on the phone:

I am having dinner now SAPPITTU VITTU PHONE SEYKIREN= AFTER FINISHING EATING I WILL PHONE YOU. So the VITTU has more meaning.

xxxx

2.நான் காலை 10 மணிக்கு விருந்து என்று சொல்லியிருக்கிறேன் =

Naan, Kaalai 10 Manikku, Vurundhu, Endru, Solliirukkiren = I have said the feast is at 10 O’Clock in the morning.

விருந்து= VIRUNDHU= Feast;

என்று = That

காலை = KAALAI = Morning.

xxxx

Two things must be noted here:

10 Manikku = it is equivalent to AT  TEN O’clock in English; Like we add AT and O’Clock, Tamils add MANI + KKU with the specific hour , 1 to 12.

12 Mani+kku= At 12 O’clock

Second point is SOLLI+ IRUkkiren; this also a compound verb like SOLLI+ VITTU.

Here the meaning is HAVE or HAS.

xxxx

3.நீ சொன்னால் அவன் வருவானா? =

Nee sonnaal, Avan , Varuvaanaa = If you say will he come?

Sonnaal சொன்னால்= If say= conditional

SONN=AAL = Sonnaal

PON+AAL = PONAAL = If go

VANTH +AAL = Vanthaal = IF come

PESIN+ AAL = PESINAAL = IF TALK or IF SPEAK

You add AAL with the PAST STEM SONN, PON, VANTH,PESIN.

First person Past tense for these verbs are SONNEN, PONEN,VANTHEN, PESINEN

Please use my Conjugation chart posted previously.

Xxxxxx

4.அவன் உண்மையைச் சொல்லவில்லை. அதுதான்  பிரச்சினை.=

Avan Unmaiyaich, Sollavillai. Adhuthaan Prachchinai =

He did not or does not tell ( the) Truth. That is the problem.

சொல்லவில்லை.= does not say or did not say

உண்மை UNMAI= TRUTH. (with Accusative AI= Unmai+y+ai= Unmaiyai)

ADHUTHAAN = that only, only that, that indeed.

பிரச்சினை = Sanskrit word ( In Sanskrit the  meaning is different)

xxxx

5.நீ கவலைப் படாதே. நான்  உன் அம்மாவிடம் சொல்கிறேன்NEE , KAVALAIPPADAATHE. NAAN,  UN,  AMMAAVIDAM, SOLKIREN

கவலைப் படாதே.= don’t worry, need not worry.

கவலை = kavalai = worry.

Kavalaippadu = verb = keep worrying

xxxx

6.நீ  இதை யாரிடமும்  சொல்லக்கூடாது. =

Nee idhai yaaridamum sollakkoodaathu =

You should not tell anyone.

யாரிடமும்= no one, anyone, whoever it is

IDAM is added to mean TO a person, At a person, ON any person

xxx

7.            நீ அதை யாரிடமும் சொல்லலாம்.=

Nee , Adhai, Yaaridamum, Sollallaam = You may tell that to anyone

சொல்லக்கூடாது= prohibitive; சொல்லலாம்= potential = can, may

xxxx

8.அவன் ஏன் நேற்றே சொல்லவில்லை? ==

Avan, En, Netre, Sollavillai = Why didn’t he tell yesterday itself?

நேற்றே = Emphatic; NETRU = yesterday; NETRU+EE= Netre = Emphasis; yesterday itself

xxxxx

9.ஒரே ஒருமுறைதான் சொல்வேன். நன்றாகக் கேள்.= Ore Our Murai Thaan, Solven, Nandraagak KEL == Ony once I tell ; Carefully , Listen.

சொல்வேன்= though it is future WILL TELL, Tamils use it as PRESENT TENSE when it is habitual.

THAANதான் is also emphatic ஒருமுறை one time, once; ORE= ONE time with emphatic EE

Xxxx

10.உமாவிடம் போ. அவள்  சொல்லுவாள்.= Ummavidam Po, Aval, Solluvaal=

Go to Umaa; She will tell.

When you add IDam it may mean To or on the person, At that person, in that person

11.அவன் என்ன சொன்னான்? Avan. Enna Soonnaan? He What said? = What did he say?

We saw IDAM used with He She, AMMAA, UMAA etc.

—to be continued

Tags- New lesson 9, Tamil, Sol, Say

தமிழ் மொழியை வளர்ப்போம் 24102023 (Post No.12,630)

,

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,630

Date uploaded in London – –  –  24 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is Part 5ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் 

அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “ சும” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

 சும + + = மிகவும், ஏராளம்

சும + + + + = நன்மங்கலம்

சும + + +  = கணவன் உயிருடனிருப்பதால் மாங்கல்யம் அணிந்தவள்

சும + +  = ஆடுதின்னாப்பாலை , சமங்கை , வறட்சுண்டி

சுமடம்+ +   = அறிவீனம்

சுமடை+   = சும்மாடு (தலையில் சுமை வைக்கையில் சுத்தி வைக்கும் துணி 

சும + + = பொறுப்பு, விலை ஏற்றம்

சும+ +   = விச்வாமித்ரன் புதல்வன்

சும+  = நற்குண முள்ள பெண் , பாரம், அறிஞன்

சும+ + +   = பாண்டுவின் மனைவி

சும+ + + +   =  ஏற்றல், பொறுக்கவைத்தல் , குற்றம் ஏற்றுதல் 

சும+ +  =  மிகுதி, கெட்டி

சும+ + +  = பூ, மலர்,

சும+ = கள்

சும+ =  சிவப்புப் பசு

சு+ +  = ஏறக்குறைய

சும+ + + = சாம வேத ரிஷி ஜைமினியின் புதல்வன்

சும+ + + +  = தசரதன் மந்திரி, புரூர வம்சத்து ஜன்னுவின் மகன்

xxxxxxxxxxxxxxxxxx

விடைகள்

சுமக்க = மிகவும், ஏராளம்

சுமங்கலம் = நன்மங்கலம்

சுமங்கலி  = கணவன் உயிருடனிருப்பதால் மாங்கல்யம் அணிந்தவள்

சுமங்கை  = ஆடுதின்னாப்பாலை , சமங்கை , வறட்சுண்டி

சுமடம்  = அறிவீனம்

சுமடை  = சும்மாடு (தலையில் சுமை வைக்கையில் சுத்தி வைக்கும் துணி 

சுமதலை  = பொறுப்பு, விலை ஏற்றம்

சுமதன்  = விச்வாமித்ரன் புதல்வன்

சுமதி = நற்குண முள்ள பெண் , பாரம், அறிஞன்

சுமத்திரை  = பாண்டுவின் மனைவி

சுமத்துதல்  =  ஏற்றால், பொறுக்கவைத்தல் , குற் றம் ஏற்றுதல் 

சுமத்தி  =  மிகுதி, கெட்டி

சுமநசம் = பூ, மலர்,

சுமலி = கள்

சுமனை =  சிவப்புப் பசு

சுமார் = ஏறக்குறைய

சுமந்தன் = சாம வேத ரிஷி ஜைமினியின் புதல்வன்

சுமந்திரன் = தசரதன் மந்திரி, புரூர வம்சத்து ஜன்னுவின் மகன்

–subham—

  தமிழ் மொழி ,வளர்ப்போம், Part 5