சிவ சுப்பிரமணியசாமி கோவில்: இலங்கைத் தீவின்108…..-Part 37 (Post.12,629)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,629

Date uploaded in London – –  –  24 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 37

74.சிவ சுப்பிரமணியசாமி கோவில் , கொழும்பு

இலங்கைத் தலை நகரான கொழும்பு நகரில் இருக்கும் பழைய ஆலயங்களில் ஒன்று சிவ சுப்பிரமணியசாமி கோவில். 1902-ம் ஆண்டில் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் என்பவரால் துவக்கப்பட்டது. ஸ்லேவ் ஐலண்ட் , கியூ ரோட்டில் (Kew Road, Slave Island) இருக்கும் இந்த ஆலயம் 1962-ம் ஆண்டுவரை மிகவும் சிறிதாக இருந்தது. மூலஸ்தானத்தில் 6 அங்குல உயரமுள்ள சுப்பிரமணியர் விக்கிரகம்தான் வழிபாட்டில் இருந்தது அப்போது கதிரேசன் கோவில் என்ற பெயரில் இருந்தது

கொழும்பு Dam Street டேம் ஸ்ட்ரீட்டில் 1822-ம் ஆண்டிலேயே முருகன் கோவில் இருந்தது; பெரியதம்பி என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் சிறிய கட்டினார் கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும்– போயர் யுத்தத்தில் Boer War கலந்து கொள்ள ஆப்பிரிக்காவுக்குச் சென்ற — தமிழர்களுக்கு கோவிலாக விளங்கியது. Dam Street  டேம் ஸ்ட்ரீட் அரசாங்க பணிகளுக்குத் தேவை என்று சொல்லி, வேறு புதிய இடத்தில் கோவில் கட்டுங்கள் என்று அரசாங்கமே 1867-ல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியாரிடம் £.500 அளித்தது. அவர் 1870ல் தற்போதுள்ள இடத்தில் கதிரேசன் கோவிலைக் கட்டினார். அதை அவருடைய மகன் ஸர் பொன்னம்பலம் ராமநாதன் 1902 ஆம் ஆண்டில் புதுப்பித்தார் .அப்போது ஸ்ரீ  சிவ சுப்பிரமணியசாமி கோவில் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது

கோவிலுக்கு முன் பெரிய மண்டபமும், வசந்த மண்டபமும் கட்டப்பட்டன கட்டிடம் பழுதடைந்து வந்ததால் திருப்பணி வேலைகள் துவங்கின. 1975-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது விநாயகர், நடராஜர், மஹாவிஷ்ணு , சனைச் சரன் / சனீஸ்வரன் சந்நிதிகள் கட்டப்பட்டன  சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடத்தப்பட்டு கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது  விழாவின் கடைசி நாள் நடக்கும் தேர் விழா கொழும்பு நகரில் மிகவும் பெயர்பெற்ற விழா ஆகும் தேரில் வேல் பவனி வருவதைத் தரிசிக்கப் பெரும் பக்தர் கூட்டம் சேருகிறது.

Xxxx

75. மண்டூர் கந்தசாமி கோவில்

மட்டக்களப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் மட்டக்களப்பு வாவிக் கரையில்

அமைந்த இந்த ஆலயத்தை தில்லை மண்டூர் திருத்தலம் என்றும் அழைப்பார்கள். சூர சம்ஹாரம் நடந்த பொழுது , முருகப்பெருமானின் வேல் கடலில் விழுந்து மூன்று ஒளிக்கற்றைகளாகப் புறப்பட்டு மூன்று இடங்களில் விழுந்தன . மண்டூர் தில்லை மரம் அதில் ஒன்று. இதைக்கண்ட வேடர்கள் அங்கு சிறிய குடிலை அமைத்து வழிபட்டனர். காலப்போக்கில் மீன்பிடித்து தொழில் ,பயிர்த் தொழிலில் ஈடுபட்டோர் வீடுகட்டி வசிக்கத்  துவங்கியவுடன்  கிராமம் தோன்றியது

மாக மன்னன் ஆட்சிக்காலத்தில் 1215-1255, அவனுடைய தளபதி மண்டூர் நாகன் முறையான கோவிலாக கட்டுவித்தான். அத்தோடு போரத் தீவு  சித்திர வேலாயுத சுவாமி கோவிலையும் கட்டினான். கதிர் காமம் போலவே திரைக்குப் பின்னால்      பூஜைகள்  நடத்தப்படுவதால் இதை சின்னக் கதிர்காமம் என்றும் அழைப்பார்கள்.

நிழல்தரு மரங்களும் அலை வீசும் ஏரியும் சூழ கோவில் இருப்பது மன அமைதியையும் தெய்வ பக்தியையும் அதிகரிக்கிறது. இயற்கை வனப்பானது பலரையும் கவி மழை பொழியவைத்ததால்  மண்டூர் வேலனுக்கு பாமாலைகள் அதிகம்.

ஆகஸ்ட் மாத பெளர்ணமியில் 20 நாள் உற்சவம் நிறைவு அடையும். கதிர்காமம்  போலவே தெய்வத்தை வள்ளி கோவிலுக்குக் கொண்டு சென்று வருவார்கள். கந்த சஷ்டி உற்சவத்தின்போது , வள்ளி திருமணமும் நடக்கும்.

திருச்செந்தூர் புராணம் பாராயணம் செய்யப்படும். பல வகைக் காவடிகளை சுமந்து கொண்டு பக்தர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஆடிக்கொண்டு வருவது பார்ப்போரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் .

இங்கு நடந்த அற்புதங்களில் ஒன்று போர்ச்சுகீசியப்ப படைகளை குளவி வண்டுகள் விரட்டியதாகும். ஆலயத்தை இடித்துத்தள்ள மத வெறி யர்கள் வந்தபோது, அவர்களைக் குளவிகள் கொட்டவே அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓட நேரிட்டது

இந்த ஆலயத்தின் மஹிமை  பற்றி மட்டக்களப்பு மான்மியத்தில் தாவல் உள்ளது.

மண்டூர் முருகன் மீது எழுதப்பட்ட பாமாலைகள் —

மண்டூர் பதிகம் , மண்டூர் இரட்டை மாலை, மண்டூர் காவடி விருத்தம், மண்டூர் முருகமாலை

Xxxx

76 .உகந்தமலை (Okanda) வேலாயுத சுவாமி கோவில்

Sea at Okanda (Ukantha malai)

பெளத்தர்களும் இந்துக்களும் வழிபடும் தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும் . அம்பாறை மாவட்டத்தில் நீலக்கடலின் கரையில் குன்றின் மீதமர்ந்து முருகப்பெருமான் அருள் புரிகிறார். முருகப் பெருமானின் வேல், கடலில் விழுந்த போது எழுந்த கதிர்களில் ஒன்று இங்கே விழுந்ததாகவும் பின்னர் வேடர்கள் கோவிலை எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது . கதிர்காம யாத்திரை செல்லுவோரின் வழியில் இருப்பதால் எல்லோரும் தங்கி வழிபட்டுச் செல்லுவார்கள். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதை மெய்ப்பிக்கும் மலை இது. இங்கு 7, 8 கிணறுகள் இருக்கின்றன. வன்னியர் ஆட்சிக்காலத்தில் சிங்க குமரன் வெட்டியவை இவை என்பர் .

இந்தக் கோவில் அம்பாறை மாவட்டத்தில் இருக்கிறது.

ஆலயத்தின் அருகில் 2 குன்றுகளில் வள்ளி அம்மன் , வேல்சாமி கோவில்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மார்க்கண்டு என்பவரசுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால் கோவிலைக் காட்டினார். அதற்கு முன்னர், வெறும் குடில் மட்டுமே இருந்தது.

ஜுலை மாத அமாவாசையில்  15 நாள் உற்சவம் முடிவடையும்; முருகப்பெருமான் வள்ளியை ரகசியமாக சந்திக்கும் மலை த் திருவிழா ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

முருகப்பெருமான் தங்கக் கப்பலில் வந்ததாகவும் பின்னர் அது மலைப் பாறை ஆகிவிட்டதாகவும் கடலிலுள்ள பாறையைக் காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டைப்போல முருகனுக்கு இலங்கையிலும் அறுபடை வீடுகள் உண்டு என்று சொல்லுவோர், இதையும் ஆறில் ஒன்றாககக் கணக்கிடுவர்.

–subham—

Tags–உகந்தமலை ,வேலாயுத சுவாமி கோவில்,  . மண்டூர், கந்தசாமி கோவில்,  சிவ சுப்பிரமணியசாமி கோவில் , கொழும்பு, Okanda

பசுவைப் போற்றி வணங்கிய துகாராம் (Post No.12,628)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,628

Date uploaded in London –  24 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மகான்கள் வாழ்வில் ..

பசுவைப் போற்றி வணங்கிய துகாராம்!

ச.நாகராஜன் 

பஹினாபாய் ஒரு பெரும் பக்தை. அவரது கணவர் கங்காதர ராவும் அப்படியே ஒரு சிறந்த பக்தர்.

இருவரும் மிகுந்த ஆசையுடன் ஒரு பசுவை வளர்த்து வந்தனர்.

ஒரு நாள் துகாராம் யாத்திரையாக வரும் போது தங்கள் ஊருக்கு வந்திருப்பதைக் கேட்ட அவர்கள் அவரது தரிசனத்திற்காக அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

மாம்பாஜி என்ற பணக்காரர் வழியிலே கங்காதரரைப் பார்த்தார். 

‘எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்க கங்காதரர் துகாராமின் புகழ் பாடி அவரை தரிசிக்கச் செல்வதாக கூறினார். 

துகாராம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த மாம்பாஜிக்கு அவரைச் சற்றும் பிடிக்கவில்லை.

அவரை இகழ்ந்து ஏளனமாகப் பேசத் தொடங்கினார்.

இதைப் பொறுக்க மாட்டாத கங்காதரர், “ஒரு பெரும் மகானைப் பற்றி இப்படி இழிவாகப் பேசாதீர்கள். இதனால் மாபெரும் பாவத்தைச் செய்தவராவீர்கள்” என்றார்.

மாம்பாஜிக்கு கோபம் இன்னும் அதிகரித்தது.

நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் கங்காதரர் பஹினாபாயுடன் துகாராமின் வழிபாட்டில் முழுமனதுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

சமயம் பார்த்துக் கொண்டிருந்த மாம்பாஜி அவரது பசுவைக் கவர்ந்து கொண்டு சென்று தனது இல்லத்தில் பாதாள அறை ஒன்றில் அடைத்தார்.

அத்தோடு மட்டுமல்லாமல் அதை அடி அடி என்று அடிக்க பசுவோ அலறியது.

வழிபாடு முடிந்தவுடன் தன் பசுவைக் காணாத கங்காதரர், அதைத் தேட ஆரம்பித்தார். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

தனது கிராமம் மட்டுமல்லாமல் அயல் கிராமங்களிலும் பசுவைத் தேடலானார் கங்காதரர். பயனில்லை.

பின்னர் துகாராம் மஹராஜிடம் தனது இழப்பைக் கூறி வருந்தினார்.

துகாராம் மஹராஜும் வருந்தினார். இதைப் பற்றியே அவர் சிந்திக்கலானார்.

அன்று இரவு அவர் கனவில் வந்த பசு, தான் அடிபட்டு அலறுவதைக் காட்சியாகக் காட்டியது.

துகாராம் மஹராஜும் அலறியவாறே எழுந்தார்.

இறைவனை நோக்கி ஆழ்ந்து துதிக்க ஆரம்பித்த துகாராம், “பசுவைக் காக்குமாறு” வேண்டினார்.

இறைவனும் மனமிரங்கினார்.

திடீரென்று மாம்பாஜியின் பெரிய வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

மாளிகை இடிந்து தரைமட்டமாகியது. அப்போது பசு ஒன்றின் ஓலம் பெரிதாகக் கேட்க அனைவரும் அது எங்கிருந்து வந்தது என்பதை ஆராய ஆரம்பித்தனர். பாதாள அறையைக் கண்டு, பசுவை உடனடியாக விடுவித்தனர்.

துகாராம் இதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து பசுவின் முன் வந்து வணங்கினார்.

பஹினாபாயும், கங்காதரரும் துகாராம் மஹராஜின் தவ வலிமையைக் கண்டு போற்றிப் புகழ்ந்தனர்.

மக்கள் அனைவரும் இந்த அதிசய சம்பவத்தால் பசுவின் மீது துகாராம் மஹராஜ் வைத்திருந்த பக்தியைக் கண்டு வியந்து போற்றினர்.

பசு ஹிந்துக்களின் தெய்வம்! அதை எந்நாளும் எங்கும் போற்ற வேண்டும் என்பது ஹிந்துக்களின் ஒரு அடிப்படை நம்பிக்கை!

***

New Tamil Lesson 8; புதிய தமிழ் பாடம் எட்டு (Post No.12,627)


படத்தில் in the picture  ஸரஸ்வதி  Sarasvati;கல்விக்கான தெய்வம்  (Goddess for Education

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,627

Date uploaded in London – –  –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

New Tamil Lesson 8 புதிய தமிழ் பாடம் 8

Let us remember the old lessons through some verb conjugations.

What is conjugation?

conjugation/ˌkɒndʒʊˈɡeɪʃn/

noun

1.     GRAMMAR

the variation of the form of a verb in an inflected language such as Latin, by which the voice, mood, tense, number, and person are identified.

“it was the conjugation of verbs he found most difficult”

o the class in which a verb is put according to the manner of this variation.

plural noun: conjugations

“a past participle of the first conjugation”

போ  PO = Go= Irregular Verb

1..நான் அடிக்கடி கோவிலுக்குப் போவேன்.

Naan Adikkadi Kovilukku Poven = I, often, to temple, go(will go)

போவேன் = will go; but Tamils use future tense for all the things they do habitually. That is why I have translated as GO instead of WILL GO.

xxxxx

2.நீ அடிக்கடி லைப்ரரிக்கு போகிறாயா?

Nee Adikkadi Librarykku Pogiraayaa? = You, Often, Library to, Do go? = Do  you go to Library often?

In Tamil I have written போ கி KI றாயா?

But Tamils pronounce it GI and not KI

But if it follows IK then they pronounce it as KI.

Example : Pokkiri போக்கிரி = rogue, knave, hooligan

xxx

3.அவன் இங்கே வருவதும் போவதும் எனக்குப் பிடிக்கவில்லை.= Avan Inge Varuvathum Povathum Enakkup Pidikkavillai = he/his,  here, coming and going, to me, don’t like .

I don’t like his visits (coming and going) here.

வருவது போவது = verbal nouns

xxxx

4.அவன் போனால் போகட்டும்.= Avan Ponaal, Pogattum = He,  if goes, let  go = If he wants, let him go ( We don’t need to bother/ worry)

Ponaal போனால் = if go or if he goes= conditional

Permissive போகட்டும் = let him go

xxxx

5.நான் அவனோடு போகமாட்டேன்.=  naan, avanodu, poga maatten= I, with him, wont go = I wont go with him,

அவனோடு = social case suffix added with He (Avan+ Odu= Avanodu)

Alternate form = Avanudan = Avan+ Udan = with him

போகமாட்டேன்= pogamaatten = wont go= future negative = first person= ட்டேன் tten

xxxx

6..நீ  ஏன்  நேற்று பள்ளிக்குப்  போகவில்லை? = nee, en, netru, pallikku, pogavillai ? You Why Yesterday school to , did not go?

Why didn’t you go to school yesterday ?

Word order in English sentence is completely different.

போகவில்லை = Pogavillai = common for both present tense and past tense

xxx

7.அவள் போனால் நீயும் போ.ஆனால் தனியாகப் போகக்கூடாது.= Aval Ponaal Neeyum Po. Aanaal Thaniyaagap Pogakkoodaathu =  She, if goes, you too, Go. But, Alone, Should not go = If she goes, you too go. But you should not go alone.

போனால்= ponaal = conditional.

போகக்கூடாது. = pogak koodaathu = prohibitive

xxxx

8. சரி அப்பா. நான் தனியாகப் போகமாட்டேன்.= Sari Appaa. Naan THaniyaagap, Pogamaatten = Ok, Dad. I wont go alone.

போகமாட்டேன். pogamaatten = wont go= future negative = first person= ட்டேன் tten

xxxx

9. அப்பாவும் அம்மாவும் அடுத்த வருசம் அமெரிக்காவுக்குப் போவார்கள்.= Appaavum, Ammaavum, Aduththa, Varusham, Amerikkavukkup Povaargal = Appaa and Ammaa, Next Year, America to, will go = Dad and Mum will go to America next year .

போவார்கள் = Povaarkal = Future Plural,  Third Person

xxxx

10. வீட்டுக்குப் போனவுடனே சாப்பிடு.= Veettukkup Ponavudane Saappidu =

To the house, as soon as (you)  go, Eat.

Eat as soon as you go home.

When you add UDANE with the infinitive of a verb, you get the sense AS SOON AS.

Vanthavudane = as soon as come

Kettavudane = as soon as ask or as soon as hear/listen

xxxxx

11.நீ இப்போது போனாலும் உனக்கு பஸ் கிடைக்கும்.= Nee Ippothu Ponaalum Unakku Bus Kidaikkum = You Now Even go, To you, Bus Available = even if you go now, you will get the bus (Bus will be available)

Ponaalum = even go

Vanthaalum = even come

Toonginaalum= even sleep

LEARN TAMIL- VERBS ‘SPEAK/TALK’ AND ‘GO’ (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › learn-ta…

8 Oct 2022 — Go, Come, Say are irregular verbs; that means they wont follow the rules in some places. Let us look at verb Vaa= Come. Present Tense. Varukiren …



LEARN TAMIL VERBS கொடு- GIVE, பார்- SEE (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › learn-ta…

9 Oct 2022 — But the stem changes if they are irregular verbs like Come, Go, Say etc. Xxx. Future tense also is simple/ there are only two forms; either …

— subham—

Tags- Verb Go, Conjugation, sentences

தமிழ் மொழியை வளர்ப்போம் 23102023 (Post.12,626)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,626

Date uploaded in London – –  –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 This is Part 4

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “குட” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

குட + = பூக்கூடை, ஓலைக் கூடை

குட ++ = உடல், பறவைக்கூடு

குட+++ = கருஞ்சீரகம்

குட+++  = ஒரு வகைப் பூரான்

குட++++ =  உறையூரில் ஓடும் நதி

குட++  = ஒரு முழவு வாத்தியம்

குட+++    = கும்பகோணம்

குட +++++  = ஒருவகை உறை கிணறு

குட++   = மணத்தக்காளி

குட++++   = மதிற் பொறி வகை

குட ++ = மேற்கு

குட ++ = அகஸ்தியர்

குட ++++ = பசு, பசுப்பொது

குட++++++ = இடையர்

குட +++   = பாதச் சிலம்புவகை

குட ++ = மலை மல்லிகை , வெட் பாலை

குட ++ = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்

குட++ = சேரன்,

குட++++ = கறி ப்பாலை , கொடிப்பாலை

குட +++ = கும்பராசி, குடில், குடம் , குடிசை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

++++

விடைகள்

குடலை = பூக்கூடை, ஓலைக் கூடை

குடம்பை = உடல், பறவைக்கூடு

குடமணம் = கருஞ்சீரகம்

குடராஜம் = ஒரு வகைப் பூரான்

குடமுருட்டி =  உறையூரில் ஓடும் நதி

குடமுழா  = ஒரு முழவு வாத்தியம்

குடமூக்கு  = கும்பகோணம்

குடலைக் கிணறு = ஒருவகை உறை கிணறு

குடபலை  = மணத்தக்காளி

குடப்பாம்பு = மதிற் பொறி வகை

குட திசை = மேற்கு

குட முனி = அகஸ்தியர்

குட ஞ்சுட்டு = பசு, பசுப்பொது

குட ஞ்சுட்டவர்  = இடையர்

குட ச் சூழ்  = பாதச் சிலம்புவகை

குட சம் = மலை மல்லிகை , வெட் பாலை

குட த்தி = கழுதைப்புலி , இடைச்சி, முல்லைநிலப் பெண்

குடக்கோ = சேரன்,

குடசப்பாலை = கறி ப்பாலை , கொடிப்பாலை

குட ங்கர் = கும்பராசி, குடில், குடம் , குடிசை

–SUBHAM—

TAGS- தமிழ் மொழி, வளர்ப்போம் , PART 4

அழிந்து போன முருகன் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36 (Post.12,625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,625

Date uploaded in London – –  –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 36

71.பொலிகண்டி கந்தவன கடவை கந்தசாமி கோவில்

இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறை நகருக்கு அருகில் பொலிகண்டி என்னும் இடத்தில் இந்த முருகன் கோவில் இருக்கிறது .

வல்வெட்டித்துறை கடற்கரையில் ஒரு முருகன் சிலை கரை ஒதுங்கியது  அதை வழிபடத் துவங்கியவுடன் கோவில் எழும்பியது என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். ஆகையால் இந்த இடம் கந்த வனம் என்றும் இதைக் கடந்து செல்லவேண்டும் என்பதால் கடவை என்றும் பெயர்கள் தோன்றின. ஆயினும் இவை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தது . கோவில் வரலாறு மிகப் பழையது அந்தக் கோவிலை போர்ச்சுகீசியர்கள் இடித்திருக்கக் கூடும்.

இப்போதுள்ளஆறுமுக சுவாமி பற்றிய கதை வேறு; யாழ்ப்பாண கடற்கரை வட்டாரத்திலிருந்து வியாபாரம் செய்ய ஒரு வணிகர் குழு உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்றது அப்போது வன்னி பகுதியில் ஒரு சண்முகர் சிலை கேட்பாரற்றுக்  கிடந்தது . நாம்  செய்யப்போகும் வியாபாரம் வெற்றி அடைந்தால் , லாபம் கிடைத்தால், இந்தச் சிலையை எடுத்துச் செல்லுவோம் என்று தீர்மானித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வியாபாரம் நடந்தவுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் முருகனையும் எடுத்துச் சென்று கோவில் கட்டினார்கள். பின்னர் உற்சவ மூர்த்தி, விநாயகர் விக்கிரகங்கள் செய்யப்பட்டன. வடக்குப் பிரகாரத்தில் ஆறுமுகசாமி வள்ளி, தெய்வானை சமேதராக, மயில் மீதமர்ந்து, காட்சி தருகிறார். எல்லாம் ஒரே  கல்லில் ஆனது.

Xxxx

72.காட்டுமலை கந்தசாமி கோயில்

காலப்போக்கில் புதிய முருகன் கோவில்களும் தோன்றின .

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் நாவலம்பதி என்னும் ஊரில் காட்டுமலை கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. 1928ம் ஆண்டில் கதிர்காம யாத்திரைக்குச் சென்றவர், அங்கிருந்து  கொண்டுவந்த

வேலினை 1929ல் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். கோவிலை உருவாக்கிய

அருளாளர் சீனியர் 1939 ஆம் வருடம் இறந்த  பின், அவருடைய  குமாரர்களாகிய சிவகுரு, குமரகுரு என்போர் கோவில் பராமரிப்பினை ஏற்றனர். தற்காலத்தில் 29 நாள் விழா நடத்தப்படுகிறது .

இந்தியாவிலுள்ள கோவில்களில் பொதுவாக 10 அல்லது 12 தினங்களுக்கு விழாக்கள் நடைபெறும் . இலங்கையில் 15 நாள் முதல் 30 நாட்கள் வரை விழாக்களை நடத்துகின்றனர்.

Xxxx

73. அழிந்து போன முருகன் கோவில்கள்

குன்றுதோராடும் குமரன், என்பதும் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதும் ஆன்றோர் வாக்கு .கந்தசாமி மலை என்ற பெயரில் பல குன்றுகளில் முருகன் வழிபாடு நடந்து வருகிறது

1905ம் ஆண்டு தொல்பொருட் துறை அறிக்கையில் கந்தசாமி மலை, தென்ன மரவாடி, கொக்கிலை வாவி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன்கோவில் இடிபாடுகள் பற்றிய தகவல் உள்ளது. கந்தசாமி மலை என்ற பெயருள்ளதால் முருகன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

யாழ்ப்பாண நல்லூரில் ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டபோது ஆறு கோவில்கள் இருந்தன அவற்றில் தையல் நாயகி அம்மன் கோவில் , சாலை விநாயகர் கோவில்களை கண்டுபிடிக்க முடியவில்லை போர்ச்சுகீசிய வெறியர்களின் குண்டுகளில் தரை மட்டம் ஆகியிருக்கலாம்.

நல்லூர் கந்தசாமி கோவிலில் கட்டியம்’ கூறுகையில் ஸ்ரீ மத் சங்கபோதி புவனேக பாஹு போற்றப்படுகிறார். . அவர் மந்திரி பதவி வகித்தார். அவர் நல்லூருக்கு மதில் சுவர்களை எழுப்பி கந்தசாமி கோவிலையும் கட்டினார்  என்று யாழ்ப்பாண வரலாறு கூறுகிறது . அந்த இடத்தில்தான் இப்போதைய கிறிஸ்தவ CHURCH சர்ச் இருக்கிறது . இதை பறங்கியர்களே எழுதிவைத்துள்ளனர் .

போர்ச்சுகீசிய மதவெறியர்கள் படை எடுத்து வந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அவர்களுடன் கிறிஸ்தவ பாதிரியார் குரோஸ் FATHER QUEROZ என்பவரும் வந்தார் . அவருக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டு. குமார கம்பண்ணன் மதுரை மீது படையெடுத்து முஸ்லீம் சுல்தான்களை கொன்று குவித்து, இந்து சமயத்தை மீண்டும் உயிர்ப்பித்தபோது அவனுடைய மனைவி கங்கா தேவியும் கூடவே வந்து தனது கணவனின் வீரதீரச் செயல்களை மதுரா விஜயம் என்ற அற்பு தமான சம்ஸ்க்ருத கவிதை நூலில் எழுதிவைத்தார். அவர்தான் உலகின் முதல் பெண் WORLD’S FIRST WAR FRONT CORRESPONDENT போர்முனை பத்திரிக்கையாளர். இது நடந்தது 700 ஆண்டுகளுக்கு முன்.

அதே போல .கிறிஸ்தவ பாதிரியார் குரோஸும் உள்ளதை உள்ளபடி எழுதிவைத்தார்  நல்லூரில்  இருந்த மிகப்பெரிய பகோடாவை / கோவிலை போர்ச்சுகீசிய வெறியர்கள் Catholics தரை மட்டமாக்கி அங்கே சர்ச் CHURCH கட்டியதைக் குறிப்பிடுகிறார்  இது நடந்தது 1621ல் . அதற்குப்பின்னர் ஹாலந்து எனப்படும் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒல்லாந்த வெறியர்கள் Protestant வந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவ மத்தில் வேறு ஜாதி (Protestant)

கிறிஸ்தவ மதத்தில் 200 ஜாதிகள் உண்டு . இதுபற்றி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதுரை ஆதீன கர்த்தர் 50, 60  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி இருக்கிறார். அவரை அடிக்கடி மதுரை ஆதீனத்தில் சந்தித்து அவர் வெளியிட்ட புஸ்தகங்களை  நாங்கள் வாங்குவோம். மூக்குப்பொடி அளவுக்கு ஒரு சிட்டிகை விபூதி கொடுப்பார்  அதன் வாசனை,  மண்டபம் முழுதும் பரவும் .

அயர்லாந்தில் Catholic கத்தோலிக்க  கிறித்தவர்கள் அதிகம் ; அதன் ஒரு பகுதியான வட அயர்லாந்தை இப்போதைய பிரிட்டிஷ் அரசு பிடித்துவைத்துள்ளது ; பிரிட்டிஷ் அரசர்கள் Protestant ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் . இரண்டு கிறிஸ்தவ ஜாதிகளும் எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல விரோதிகள். இரு கோஷ்டிகளும் சண்டை போட்டு குண்டு வைத்ததில் 5000 பேர் வரை கொல்லப்பட்டனர் லண்டனில் என் வீட்டுக்கு அருகில் Staples Corner Bob Explosion ஸ்டேபிள்ஸ் கார்னர் பகுதியில் குண்டு வெடித்தவுடன் நாங்கள் அந்தப் பக்கமே போகவில்லை. ஒரு முறை லனடன் பஜார் வீதியான ஆக்ஸ்போர்ட் வீதி Oxford Street in Londonக்குச் சென்ற பொழுது  பாண்ட் ஸ்ட்ரீட்Bond Street ஸ்டேஷனில்  குண்டு வெடிப்பு அறிவிப்பு ஸ்டேஷன் ஒலிபெருக்கிகளில் அலறியது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன் .

யாழ்ப்பாண கிறிஸ்தவ வெறியர்களின் செயல்களை இப்போது எழுத்தில் வடிக்கையில் அவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

நல்லூர் கந்தசாமி கோவில்

மீண்டும் நல்லூருக்குப் போவோம். அங்கு பெரிய கோவிலை இடித்து போர்ச்சுக்கீசியர் கட்டிய Catholic சர்ச்சினை ஹாலந்து Protestant கிறிஸ்தவ ஜாதி இடித்துத் தள்ளி தங்கள் ஜாதி சர்ச்சினைக் கட்டியது . அதுதான் பழைய கந்தசாமிக் கோவில் என்பது ஆராய்சசியாளரின் துணிபு . இது யமுனேரி தீர்த்தம் அருகில் இப்போதுள்ளது

தற்போது நல்லூரில் உள்ள புகழ்மிகு  கந்தசாமிக் கோவில் 1749ம் ஆண்டில் ரகுநாத மாப்பாண முதலியார் ஆதரவில் எழுந்தது. டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) இடம் செல்வாக்கு பெற்றிருந்த அவர், ஓர் மடத்தில் கந்த புராணம் வாசிக்க அனுமதி பெற்றார். 1807-ம் ஆண்டில் அது கோவிலாக மலர்ந்தது . பின்னர் வந்த ஆறுமுக நாவலர் அதில் 1870 முதல் முறையான பூஜைகள் நடைபெற வழிவகுத்தார்.

–subham–

Tags- அழிந்து போன முருகன் கோவில்கள் அழிந்து போன முருகன் கோவில்கள் , காட்டுமலை, பொலிகண்டி, கந்தசாமி, ஆலயம்

அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்! (Post.12,624)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,624

Date uploaded in London –  23 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன்

ஜைன சமயச் சான்றோரால் இயற்றப்பட்டது.

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

பாடல்கள் 181.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. நற்காட்சிநன் ஞானம்நல் ஒழுக்கம் -இம்மூன்றும் தொக்க

  அறச்சொல் பொருள் (பாடல் 2)

2. மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்று உரைப்பர் – எப்பொருளும்

   கண்டுணர்ந்தார். (பாடல் 3)

3. தலைமகனும்நூலும்முனியும் – இம்மூன்று நிலைமையவாகும்  

  பொருள். (பாடல் 4)

4. பசிவேர்ப்புநீர் வேட்கைபற்றுஆர்வம்செற்றம்கசிவினோடு

   இல்லான் இறை (பாடல் 7)

5. கடை இல் அறிவுஇன்பம்வீரியம்காட்சி உடையான் – உலகுக்கு

   இறை (பாடல் 7)

6. மெய்ப்பொருள் காட்டிஉயிர்கட்கு அரண் ஆகிதுக்கம் கெடுப்பது

   நூல் (பாடல் 10)

7. இந்தியத்தை வென்றான்தொடர்ப்பாட்டோடு ஆரம்பம் முந்து

   துறந்தான் முனி (பாடல் 11)

8. பிறப்புகுலம்வலிசெல்வம்வனப்புசிறப்புதவம்உணர்வோடு

   எட்டு (பாடல் 34)

9. குறளைமறைவிரிஇல்லடை வௌவல்புறவுரைபொய் ஓலை,

   கேடு (பாடல் 70)

10. மயக்கம் கொலை அஞ்சிகள்ளும் மதுவும் துயக்கில் துய்க்கப்படும் 

   (பாடல் 100)

11. தீயவை எல்லாம் இனிச் செய்யேன் (பாடல் 114)

12. பிறர் கண் வருத்தமும் சாக்காடும் கேடும் மறந்தும் நினையாமை

    நன்று (பாடல் 117)

13. பிறப்புபிணிமூப்புசாக்காடு – நான்கும் அறுத்தல் அறத்தின் பயன்

   (பாடல் 155)

14. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார் ஒருங்கு அடையும்

   மாண்பு திரு (பாடல் 175)

15. காமம்வெகுளிமயக்கம் – இவை மூன்றன் நாமம் கெடக் கெடும்

   நோய் (பாடல் 178)

16. தீரா வினை தீர்க்கும்சித்தி பதம் உண்டாக்கும்பாராய் –

   அருங்கலச் செப்பு (பாடல் 180)

17. நச்சரவுஅணிநிழல் பச்சை மாமலை தனை நிச்சலும்

   நினைப்பவர்க்கு அச்சம் இல்லையே! (பாடல் 181)

***

New Tamil Lesson 7 புதிய தமிழ் பாடம் ஏழு (Post No.12,623)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,623

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Learn some Interrogative sentences to remember the old rules you have already learnt.

புதிய puthiya தமிழ் thamiz பாடம் paaadam ஏழு ezu

Paadam is a Sanskrit word used by all Tamils

Sanskrit pronunciation Paatam

xxxxx

When will you come back?

எப்பொழுது Eppozuthu நீ Nee திரும்பி வருவாய் Thirumbi varuvaay?

You in English may be translated as singular  Nee நீ or plural or singular with நீங்கள் respect.

எப்பொழுது Eppozuthu நீங்கள் Neengal திரும்பி வருவீர்கள் Thirumbi varuveerkal ?

Use my COME verb  conjugation sheet

xxxx

Where will you go?

எங்கே Enge நீ Nee போவாய் POvaay?

எங்கேEnge  நீங்கள் Neengal  போவீர்கள் Poveerkal ?

Use  GO verb conjugation sheet posted already.

xxxx

Who will you see?

யாரை yaarai  நீnee பார்ப்பாய் paarppaay?

யாரை yaarai நீங்கள் neengal பார்ப்பீர்கள் paarppeerkal ?

I use KAL in some places and Gal in some places.

If it follows ங்NG, then the pronunciation is NGAL

xxx

What will you ask?

என்ன enna  நீ nee கேட்பாய் ketpaay?

என்ன enna நீங்கள் neengal கேட்பீர்கள் ketpeerkal?

xxxx

How will you write it?

எப்படிeppadi நீnee எழுது வாய் ezuthuvaay?

எப்படி eppadi நீங்கள் neengal எழுதுவீர்கள் ezuthuveerkal?

xxx

add AA with words to form questions; remember to insert YY or VV

Interrogative AA ஆ (Ramanaa? Johnaa?Maryaa/?Lathaava? )

ராமன் + ஆ = ராமனா N+AA

ஜான் + ஆ = ஜானா ? N+AA

மேரி + ஆ  = மேரியா? Y+ YAA

லதா +ஆ  = லதாவா ?V+AA

xxxx

follow the above rules for this as well

Emphatic EE ஏ (Ramanee/Johnee/Maryee/)Lathaavஏ)

ராமன்+ஏ = ராமனே

ஜான் + ஏ  = ஜானே

மேரி + ஏ  = மேரியே

லதா+ ஏ  = லதாவே

Xxx

Doubtful OO ஓ (Ramano/Maryo//Krishnano/ Lathaavo )

ராமன்+ஓ  = ராமனோ 

ஜான் + ஓ   = ஜானோ

மேரி + ஓ  = மேரியோ

லதா+ ஓ   = லதாவோ

 –subham–

tags- New Tamil Lesson 7, Interrogative, sentences 

VISHNU= MAAL Q& A மால், திருமால்; Vyaala= Yaali=Leo= Lion (Post No.12,622)

Picture of Vishnu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,622

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

A J 

To:Santhanam Swaminathan

Sat, Oct 21 at 7:35 PM

Namaskāram Santanam Swāmināthan ji,

I have been searching for the etymological derivation of the Tamizh word (maal) for Bhagvaan Vishnu since 2021. Yesterday while studying Śrī Vishnu Sahasranāma, I came across the name (vyaalah in Samskritam) for Vishnu. Hence the root word is (vyaala) for Vishnu.

Now we know that regional Prākrits cannot write joint letters in 90 to 95% cases. The same rule applies for Tamizh too. So this (vyaala) of Samskritam will become (vaal) in Prākrits. We also know that (pa,pha,ba,bha,ma,va) interchangeability rule holds in case of all languages but not always.

Taking this into account, this (vaal) of Prākrits can easily become (maal) of Tamizh. Hence we have the Tamizh name for Bhagvaan Vishnu as (maal). This word (maal) is a pure Tamizh word for Bhagvaan Vishnu. But it is derived from (vyaala) of Veda Bhāshā (Samskritam) which also is a name of Bhagvaan Vishnu. There is no verbal root in Tamizh from which this word (maal) can be derived. I may be thoroughly wrong but I will stick my neck out on this derivation. Please tell if this derivation is correct or false. 

Xxxx

Picture of Yali (from Wikipedia)

My Reply

I don’t agree with you for the following reasons.

Wisdom library website gave 25 definitions for Vyaala.

Of these Adi Shankara has taken the meaning SNAKE in his Vishnu  Sahasranama commentary

sureshah sharanam sharma vishvaretaah prajabhavaha |

ahah samvatsaro vyalah pratyayah sarvadarshanaha || 10 ||

Shankara says Vishnu is Vyalah; being unseparable like a serpent.

Sanskrit dictionary  describes Shiva as VYAALA HAARA= one who wears SNAKE as garland.

In SHILPA SHASTRA it refers to YAALI seen in all the NAYAK temples all over Tamil Nadu.

Wisdom Library definitions are given at the end. The summary is a fierce animal. We also see Elephant+Lion Combination in all Nayak architecture.

Earlier I reported in this blog that the English word Lion, Leo etc came from Yali. If you reverse YALI you get LIYA (leo,lion); It is called mirror image in linguistics

Tamil word THER (Ratha) is not Tamil. If you reverse RATHA , you get THER. All the South Indian and Sri Lankan temples do Ratha Utsava like Puri Jagannath.

Back to Vyala now

You are right in saying V=M

I have given the following in my research articles earlier:

koManam= koVanam (Kaubeenam in Skt)

Vandodari (Tam) = Mandodari Skt

Virugam (Tam) = Mirugam Skt

sVapna= soMna(mbulism) in Latin

puVi in Tamil= bhuMi in Skt.

So we see this change not only in Sanskrit and Tamil but also in Latin

Xxxx

But in Vyala, we see only Fierce animal, a composite animal like YAALI or just a snake as we see in Vishnu Sahasranama and Adi Shankara’s commentary on it.

Xxxx

THEN WHO IS MAAL, TIRU MAAL மால், திருமால்?

Following is the Tamil Dictionary for MAAL

University of Madras Lexicon

மால்

māl   n. மால்¹-. 1. Illusion, delusion, aberration of mind; dullness; stupor;confusion; மயக்கம். பரேரம் புழகுடன் மாலங்குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 2. Desire;ஆசை. (பிங்.) என் பேய்மன மால் கொண்டதே(திருநூற். 1). 3. Love; lust; காமம். மடப்பிடிகண்டு வயக்கரி மாலுற்று (பரிபா. 10, 42). 4. Blackness; கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). (பிங்.)

மால்

māl   n. cf. mahat. 1. Greatness;பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திருவாச. 34, 3). 2. Great man; பெருமையுடையவன்.மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால் (சீவக. 286). 3. cf.māla. Viṣṇu; திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல்போல (முல்லைப். 3). 4. Arhat; அருகன். இன்பக்கடலாக்கித் தரு மாலை (சீவக. 961). (சூடா.) 5.Indra; இந்திரன். தன்றிரு மகனெனப் பெற்ற மால்(குமர. பிர. முத்து. காப். 6). (பிங்.) 6. Wind;காற்று. (பிங்.) 7. Mercury; புதன். (பிங்.) 8. Cōḻaking; சோழன். (பிங்.) 9. Mountain; மலை. (அக.நி.) 10. Plenty; fertility; வளமை. (அக. நி.) 11.Antiquity; பழைமை. (அக. நி.) 12. Cloud;மேகம். (பிங்.) சிலைமா லுருமு (தஞ்சைவா. 164).13. See மால்பு. (பிங்.) 14. A plant that growsonly in hot and dry places; விஷ்ணுகரந்தை.(மூ. அ.)

மால்

māl   n. Arab. māl. 1. Woodenmould for forming the mouldings of a pillar orcornice of wall; எழுதகக்கருவி. (W.) 2. Mouldfor making bricks; செங்கற்கட்டளை. Loc. 3.Brick-kiln; காளவாய். Loc. 4. Form, plan,fashion; மாதிரி. (W.) 5. Demarcation, limit;எல்லை. (W.) 6. A kind of net; வலைவகை. (W.)7. Stable, stall; இலாயம். (W.) 8. Quit-rent;அரசிறைவகை. (W.) 9. Property; சொத்து.

Xxxxx

MY COMMENTS

Of these I take the meaning கருமை. மால்கடல் (பெரும்பாண். 487) from Sangam Literature.

Sangam Corpus which is 2000 year old has already Tamilized VISHNU DAASAN as Vinnan Thaayan and KANNA DAASAN as Thaayan Kannan.

Maal is not a Tamil word. It is Sanskrit word used all over the world as Mal(appropriation)

Melanesia (Islands with Blac People)

English has a lot of words with Mal as prefix. The implied meaning is a black deal, a shady deal. Meaning is Black Market, Black deal

But the same word can be used in good context as well; whenever you want to say BLACK, DARK you may use MAAL.

Vishnu is Black; Krishna was Black; Draupadi was Black; Vyasa was black; Yama is Black and yet we worship them every day.

In short Black is worshipped in Hinduism.

Black is praised in Hinduism Crow is black, Sani is black, Yama is black.

I, as a Brahmin worship YAMA three times a day saying Oh Ye Blacky! (Neelaaya, Anthakaaya = black, dark, blind)

Xxx

Picture of Vishnu and Apsaras on French stamps

Conclusion

Maal in Tamil for Vishnu comes from his blackness.

Wisdom library

Vyāla (व्याल) refers to “snakes”, according to the Śivapurāṇa 2.3.31

Sanskrit dictionary

[«previous (V) next»] — Vyala in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Vyāla (व्याल).—a.

1) Wicked, vicious; व्यालद्विपा यन्तृभिरुन्मदिष्णवः (vyāladvipā yantbhirunmadiṣṇava) Śiśupālavadha 12.28; यन्ता गजं व्यालमिवापराद्धः (yantā gaja vyālamivāparāddha) Kirātārjunīya 17.25.

2) Bad, villainous.

3) Cruel, fierce, savage; जहति व्यालमृगाः परेषु वृत्तिम् (jahati vyālamgā pareu vttim) Kirātārjunīya 13.4.

-laḥ 1 A vicious elephant; व्यालं बाल- मृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते (vyāla bāla- mṛṇālatantubhirasau roddhu samujjmbhate) Bhartṛhari 2.6.

2) A beast of prey; वसन्त्यस्मिन् महारण्ये व्यालाश्च रुधिराशनाः (vasantyasmin mahāraye vyālāśca rudhirāśanā) Rām.2.119. 19; वनं व्यालनिषेवितम् (vana vyālanievitam) Rām.

3) A snake; H.3.29.

4) A tiger; Mālatīmādhava (Bombay) 3.

5) A leopard.

6) A king.

7) A cheat, rogue.

8) Name of Viṣṇu.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Vyāla (व्याल).—mfn.

(-la-lā-la) 1. Wicked, villainous, bad. 2. Cruel, fierce. m.

(-la) 1. A snake. 2. A beast of prey. 3. A rogue, a cheat. 4. A vicious elephant. 5. A king. 6. A species of the Dandaka metre. E. vi and ā before al to adorn, aff. ac; or a to make effort, aff. ghañ and a changed to la; hence also vyāa .

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Benfey Sanskrit-English Dictionary

Vyāla (व्याल).—I. adj. 1. Wicked, [Kirātārjunīya] 17, 25. 2. Cruel. Ii. m. 1. A snake, [Hitopadeśa] iii. [distich] 30. 2. A beast of prey, [Pañcatantra] i. [distich] 420. 3. A vicious elephant, [Bhartṛhari, (ed. Bohlen.)] 2, 6. 4. A rogue. 5. A king. Iii. f. , A female snake, Chr. 22, 22.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Vyāla (व्याल).—[adjective] mischievous, malicious. [masculine] a malicious elephant, beast of prey, snake ([feminine] vyālī).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Vyāla (व्याल):—mfn. ([probably] connected with vyāa q.v.) mischievous, wicked, vicious, [Atharva-veda; Kāvya literature; Kathāsaritsāgara]

2) prodigal, extravagant, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) m. (ifc. f(ā). ) a vicious elephant, [Kāvya literature]

4) m. a beast of prey, [Gautama-dharma-śāstra; Mahābhārata] etc.

5) a snake, [Mahābhārata; Kāvya literature] etc.

6) a lion, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

7) a tiger, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

8) a hunting leopard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

9) a prince, king, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

10) Plumbago Ceylanica, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

11) the second dkāa (q.v.) in Cancer, the first in Scorpio, and the third in Pisces, [Varāha-mihira’s Bṛhat-saṃhitā]

12) a kind of metre, [Colebrooke]

13) Name of the number ‘eight’ [Gaṇitādhyāya]

14) Name of a man (cf. vyāa), [Catalogue(s)]

15) n. Name of one of the three retrograde stages in the motion of the planet Mars, [Varāha-mihira’s Bṛhat-saṃhitā]

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Vyāla (व्याल):—[vyā+la(la-lā-la) m. A snake; beast of prey; vicious elephant; cheat; king. a. Vicious; cruel.

Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)

Vyāla (व्याल) in the Sanskrit language is related to the Prakrit words: VālaViāla.

Wisdom Library has more definitions; it is free.

–subham—

Tags, Tamil Vishnu, Vyala, Yali, Mal, Tirumal, Melanesia,Black

தமிழ் மொழியை வளர்ப்போம் 22102023 (Post No.12,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,621

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

தமிழ் மொழியை வளர்ப்போம் 22102023

This is Part 23

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட தா” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்

தா +++ – கருடன்

தா  ++++  பார்வதி, துர்க்கை, ரோகிணி , தக்கன் மகள் , அதிதி

தா+++++++ – பாணினியின் பெயர்

தா+++  – கடுவன் குரங்கு , பெருமைக்காரன், போக்கிரி

தா+++ – கணவன், தலைவன்

தா++++   – மறுத்தல், காலந்தாழ்த்தல் , கடத்தல்

தா+++ –  கதைவடைக்கும் தாள்

தா+ – குதிரைக்கு கொடுக்கும் அவித்த கொள்ளு

தா+– தான்றி மரம், பூண்டுவகை ,  அழுத்து , உறுதிப்படுத்து

தா+++ – கோட்டைக்குள் இருக்கும் சேனை,  பந்தயம், பாளையம், மந்தை

 தா+++ – பிரபந்தம் ஒரு கவி , அப்பர் இதில் புகழ்பெற்றவர்

தா++ – மகளிர் தலையில் பின்னலில் அணியும் மாலை

தா++++  — கண்டபடி திரிபவன் / திரிபவள்

 தா++ – ஆத்தி மரம்,, , பேய்க்கொம்மட்டி

தா+++ – கரிக்குருவி

தா+++ – ஆடுதின்னாப்பாளை

தா++– அடிமைக்காரர், தொண்டர், வைணவர்களில் ஒரு வகை, கொடையாளர் 

தா+ – ஈகையாளன், பிரம்மா, தந்தை, தாத்தா,

தா++ – செங்கல்

தா+++ – தவ முனிவர், , சட்டை முடியார், சமண முனிவர்

XXXXXX

ANSWERS

தாட்சன் – கருடன்

தாட்சாயணி – பார்வதி, துர்க்கை, ரோகிணி , தக்கன் மகள் , அதிதி

தாட்சீ புத்திரன் – பா ணினி யின் பெயர்

தாட்டன்  – கடுவன் குரங்கு , பெருமைக்காரன், போக்கிரி

தாட்டான் – கணவன், தலைவன்

தாட்டுதல் – மறுத்தல், காலந்தாழ்த்தல் , கடத்தல்

தாட்பாள் , தாழ்ப்பாள் –  கதைவடைக்கும் தாள்

தாணா – குதிரைக்கு கொடுக்கும் அவித்த கொள்ளு

தாணி – தான்றி மரம், பூண்டுவகை ,  அழுத்து , உறுதிப்படுத்து

தாணையம் – கோட்டைக்குள் இருக்கும் சேனை,  பந்தயம், பாளையம், மந்தை

 தாண்டகம் – பிரபந்தம் ஒரு கவி , அப்பர் இதில் புகழ்பெற்றவர்

தாண்டா – மகளிர் தலையில் பின்னலில் அணியும் மாலை

தாண்டு காலி — கண்டபடி திரிபவன் / திரிபவள்

 தாதகி – ஆத்தி மரம்,, ஒரு நாடி=உ, பேய்க்கொம்மட்டி

தாதநம் – கரிக்குருவி

தாத்தாரி – ஆடுதின்னாப்பாளை

தாதர்- அடிமைக்காரர், தொண்டர், வைணவர்களில் ஒரு வகை, கொடையாளர் 

தாதா – ஈகையாளன், பிரம்மா, தந்தை, தாத்தா,

தாதுகி – செங்கல்

தாபதர் – தவ முனிவர், , சட்டை முடியார், சமண முனிவர்

 —-SUBHAM—

போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில் – Part 35 (Post No.12,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,620

Date uploaded in London – –  –  22 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 35

69.போர தீவு சித்திர வேலாயுத சுவாமி கோவில்

சித்திர வேலாயுத என்ற அடைமொழியுடன் உள்ள நாலாவது  முருகன் கோவில் போர  தீவில் இருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து 15 மைல் தொலைவில்  போர தீவு இருக்கிறது. அருகிலுள்ள எருவில்  மூன்றாம் நூற்றாண்டிலேயே புகழ்பெற்றிருந்தது அப்போது இங்குள்ள இந்தக் கோவில் இடிக்கப்பட்டதை மஹாவம்சம் குறிப்பிடுகிறது (மஹாவம்சம்- 37- 40, 41)

புராதன  சப்த ஸ்தலங்கள் என்ற நூலில் எஸ். கணபதி பிள்ளை சில தகவல்களைத் தந்துள்ளார்.

மண்டு நாகன் என்பவன் , நாகன் சோலையிலிருந்து இந்த இடத்தை ஆண்டு வந்தான் அவனிடம் நாகர் தளபதிகளும் யக்ஷர் அமைச்சர்களும் இருந்தனர் . காலசேனன் என்பவன் அயோத்தியிலிருந்து இங்கு வந்து பல கோவில்களை இடித்துவிட்டு கோட்டைக் கல்லாற்றில் மாளிகை  கட்டி காளி தேசம் என்று பெயர் சூட்டி ஆண்டுவந்தான்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் மதி சுதன் என்பவன் காளி தேசத்தில் வாழ்ந்து வந்தான்.அவன் செய்த முக்கியப்பணிகளில் ஒன்று அங்கு முருகன் கோவிலை  மீண்டும் கட்டியதாகும் . போர  தீவில்  அவன் சித்திர வேலாயுத சுவாமி கோவிலை புனர் நிர்மாணித்தான் தொண்டைநாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து சித்திர மயூர சங்கார வேல் ஸ்தாபித்து 5 நிலைக் கோபுரத்தைக் கட்டினான். அவன் மண்டூரில் கந்தசாமி ஆலயத்தையும் கட்டினான்

காலம் செல்லச் செல்ல கோவில் சிதிலம் அடைந்தது அண்மைக் காலத்தில் , களுவாஞ்சிக்குடியிலிருந்து 2 மைல் தொலைவில்

போரத் தீவில் நாகப்ப செட்டியார், சித்திர வேலாயுத சுவாமி கோவிலை மீண்டும் கட்டினார் வேலாயுத சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு. கோவிலில் பூஜைகள் நடத்தப்படுகின்றன  ஆகட்ஸ்ட் மாதம், வருடாந்திர விழாக்கள் நடைபெறுகிறது மாக மன்னன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலங்களை கோவிலுக்கு விட்டுள்ளான்.

திருப்படைக் கோவில்கள்

வெருகல் சித்திரவேலாயுதர் கோவில் , போரதீவு ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோவில் , சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோவில்,  மண்டூர் ஸ்ரீ முருகன் கோவில்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்  கோவில் என்பன மட்டக்களப்பு தேசத்திற்குரிய திருப்படைக் கோவில்களாகும்.

கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் ‘திருப்படைக் கோவில்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும்.

XXXX

70. சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம்

 சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம் , மட்டக்களப்பு திருப்படைக் கோவில்களில்  ஒன்றாகும்

மட்டக்களப்பிலிருந்து 12 மைல் தொலைவில்  இந்தக் கோவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் போல பெருமை உடையது

கிழக்கு இலங்கையில் உள்ள பெரும்பாலான ஆலயங்கள் வெட்டா VEDDA என்னும் வேடர் பழங்குடி மக்கள் வழிபட்ட இடங்களாலும். சிறு குடி ல்களில் வேடர்கள் வழிபட்ட வேல், பிற்காலத்தில் பெரும் கோவில்களாக மாறின

ஒரு காலத்தில்,எல்லோரும் கதிர்காம பாதயாத்திரை செய்வது போல ஆண்டி என்னும் பக்தர் செய்தார். காடுகளைக் கடந்து சென்றால்தான் கதிர்காம முருகனைத் தரிசிக்க முடியும் என்று இருந்த  காலம் அது. காட்டில் ஒரு கொம்பன் யானை திடீரென்று தோன்றி ஆண்டியை துரத்தியது. ஏது செய்வதென்று அறியாது திகைத்த ஆண்டிக்கு முருகனே துணை என்று தோன்றியது திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது ஆன்றோர் வாக்கு ; அது பொய்க்காது. ஒரு வெற்றிலையை எடுத்து அதை வேல் என்று மனதில் தியானித்து சடாக்ஷர (ஓம் சரவணபவ ) மந்திரத்தைச் சொன்னார் . வெற்றிலையை வேல் என்று கருதி மிரண்ட யானை பின்னோக்கி ஓடியது. ஆண்டியும் கதிர்காமம் சென்று திரும்பி ததார் .

யானை மிரண்டோடிய இடத்தில் குடிலை அமைத்து வேலினை வலபிடேட்டர். வேடர் குடிகளும் அங்கே தோன்றின. அப்போது முதல் அங்கு முருகனின் அற்புதங்கள் நிகழத்துவங்கின . இவை எல்லாம் ஆண்டியின் சித்து வேலைகள் என்று மக்கள் போற்றினர். அவர் பெயர் சித்தாண்டி ஆனது ஊர்ப்பெயரும் அதுவே ஆனது.

XXXXXX

மேலும் தகவல் பெற ,

சித்தாண்டி திருஸ்தல புராணம் – ஏ என் அழகேச முதலியார்,

ஊஞ்சல் பாட்டுக்கள், எஸ். கதிரை,மலை, 1954

200 பாடல்கள் கொண்ட  கோவில் புராணம்

மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், நடராசா, 1980

—subham—

TAGS- ‘திருப்படைக் கோவில்கள்’, போர தீவு , கோவில், சித்தாண்டி, சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம், இலங்கை ,Part 35