எல்லா ஜாதியினரும் சந்தியாவந்தனம்   செய்யலாம் ! – Part 1 (Post No.12,687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,687

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிராமணர்கள் எல்லோரும் பூணுல் போட்ட நாளிலிருந்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்பது தற்போதுள்ள நடை முறை. இதை மூன்று வேளைகளில் செய்ய வேண்டும். அதுவும்  5 அல்லது 7 வயது முதல் சாகும் வரை செய்ய வேண்டும். அதுவும் காணாமல்கோணாமல் கண்டு கொடுக்க வேண்டும் . அதாவது சூரியனைக் காணாதபோது , உதய காலத்தில் செய்; நிழல் கோணாத நேரம், அதாவது பகல் 12 மணிக்கு செய்; சூரியன் மறையும் முன், அதாவது கண்டு , சூரியனைக் கண்டு, செய். இப்போது பிராமணர்கள் கல்யாணத்துக்கு முதல் நாள் கூட பூணுல் போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு முன்னர் 7 வயதில் போட்டுக்கொண்டாலும் சந்தியா வந்தனம் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் 3 வேளை காணாமல், கோணாமல், கண்டு சூரியனுக்கு நீர் (அர்க்யம்) கொடுப்பதில்லை. ஆனால் ராமாயண காலத்தில் பிராமணர் முதல் சூத்திரர் வரை சந்தியாவந்தனம் செய்ததாக வால்மீகி சொல்கிறார். சீதா தேவியும் சந்தியாவந்தனம் செய்தாராம். இந்த வியப்பான விஷயங்களைக் காண்போம்.

‘சந்தியா’ ‘வந்தனம்’ என்ற இரண்டு சொற்களும் தமிழிலும் உள்ளன. சந்திப்பு என்றால் இரண்டு,  ஒன்றை ஒன்று பார்ப்பது;  உதய காலத்தில் ஒரு சந்தி ; பின்னர் காலைப்  பொழுது மதியத்தை சந்ததிக்கும் போதும்,  மதியப்  பொழுது, மாலை நேரத்தைச்  சந்ததிக்கும் போதும் மூன்று சந்திகள் ஏற்படும். தமிழிலும் கூட ,  அந்திப் பொழுது என்று சொல்வோம். வந்தனம் என்பது வணக்கம் என்பதுடன் தொடர்புடைய சொல். ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து வந்தவைதான். இதை பாரதியாரும் பாணினியும் பாடி வைத்துள்ளனர் .

பாரதி பாடல்  தமிழ்த்தாய்

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — பாரதி பாடல்

உடுக்கையின் இரு புறத்திலிருந்து வரும் ஒலியை இரு தரப்பினரும் சிறிது மாற்றிக் கேட்பதும் இயல்பே.  நாய் லொள் லொள் என்று  குரைத்ததாக அல்லது வள் வள் என்று  குரைத்ததாக  நாம் தமிழில் சொல்லுவோம். ஆயினும் ஐரோப்பிய மொழி ஒவ்வொன்றும் வெவ்வேறு சப்தத்தை நாய் குரைப்பதாக எழுதுகிறது. இதை கூகுள் google செய்து பாருங்கள்; வியந்து போவீர்கள் ஆகவே வணக்கம் என்பதும் வந்தனம் என்பதும் ஒன்றே .

சந்தியா வந்தனத்தில் மூன்று வேளைகளிலும் மூன்று தேவியரையும் வணங்குவோம் ; காயத்திரி,சாவித்திரி சரஸ்வதி என்ற 3 தேவியரையும் இருதயத்தில் ஆவஹித்து (மனதுக்குள் வரவழைத்து) காயத்ரி ஜபத்தை சொல்லுவார்கள். முன்னும் பின்னும்  நீரையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

உலகிலேயே மிகப்பெரிய செல்வம் தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்று இந்து மதப் புலவன் வள்ளுவன் இயம்புவான். இந்துக்கள் இந்த பூமியில் பிறந்ததால் தண்ணீரை வைத்தே நல்ல ,  கெ ட்ட சடங்குகளை செய்வார்கள். தனது வாழ்நாளில் இந்தியாவுக்கே வராத, ஒரு இந்துவின் தினசரி சடங்கினையும் பார்த்திராத, மாக்ஸ்முல்லர் கும்பல், இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லுவது அபத்தம் என்பது தண்ணீர் சடங்குகளை பார்த்தாலே புரியும். வெள்ளைக்காரன் தண்ணீரைத் தொடக்கூட மாட்டான. அவன் வசிப்பது குளிர்ந்த பூமியில்..

1.சூத்திரன் செய்த சந்தியாவந்தனம்

தசரதன் வேட்டைக்குப் போனான்.  அந்தக் காட்டில் ஒரு நதி ஓடியது. சிரவணன் என்ற சூத்திரப் பையன் அவனுடைய அப்பாவுக்காக அந்த ஆற்றில், குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்தான். அந்த சப்தத்தை யானை என்று எண்ணி தசரதன் அம்பினை எய்ய, அது சிரவணன் உடலில் பாய்ந்த்து. கதறி விட்டான் ; ஆ என்று அலறினான். மனிதன் குரலைக் கேட்டு வியப்பும் அச்சமும் மேலிட்ட தசரதன் வந்து பார்த்தபோது தான் செய்த தவறு புரிந்தது;  அவன் தந்தை தாய் இருக்குமிடத்திற்கு தசரதனே தூக்கிச் சென்றான்.

பயந்து ஓடவில்லை. மேலை நாடுகளில் யார்மீதாவது கார் மோதினால் அவர்கள் ஒடி ஒளிந்து கொள்வார்கள். சாகும் தருவாயில் உள்ளவனுக்கு உதவ மாட்டார்கள்; ; அப்படி இல்லாமல் தசரதன் அங்கே சென்று வைசிய குலத்தில் பிறந்த தந்தையையும் சூத்திர குலத்தில் பிறந்த தயையும்ம் (ஆதாரம் வால்மீகி , அயோத்யா காண்டம், அத்தியாயம் 63)  புத்திர சோகத்தை தணிவிக்கிறான். ஆயினும் அவர் தசரதனுக்கும் புத்திர சோகம் ஏற்படக்கடவது என்று சபிக்கின்றார் . அதற்கு முன்னர், சிரவவணன் நாள்தோறும்  சந்தியா வந்தனம்  தவறாமல் செய்தான் என்று  குறிப்பிடுகிறார் ( இந்தக் கதை மஹாபாரதத்திலும் , புராணங்களிலும்  வெவ்வேறு விவரங்களுடன் வருகிறது ). சிரவணனை,  இந்திரனே நேரில் வந்து தேரில் அழைத்துச் செல்கிறான். அவனது தந்தையும் காட்டில் துறவி போல வாழ்ந்து வந்தார்  என்பதும் குறிப்பிட்டது தக்கது .

2. பிராமண / க்ஷத்ரிய விச்வாமித்திரன்

ராமனையும் லெட்சுமணனையும் காட்டிற்கு  அழைத்துச் சென்றவர் விச்வாமித்திர மகரிஷி; அவர் பிராமணர்  அல்ல; பிறப்பில் க்ஷத்ரியர் ; மூவரும் காட்டில் இருந்த போது சந்தியா வந்தனம் செய்ததை வால்மீகி பாடி வைத்துள்ளார். ராமர், தாடகையைக் கொன்ற பின்னர், சீதையை மணந் ததை நாம் அறிவோம். விசுவாமித்திர மகரிஷி கடும் தவம் இயற்றி பிராமண ரிஷியாகி மாறி, வசிட்டர் வாயால் பிரம் ம ரிஷி ஆனதையும் நாம் படிக்கிறோம். அவர்தான் பிராம ணர் சொல்லும் காயத்ரீ மந்திரத்தையும் தந்தவர் .

3.தேரோட்டி சுமந்திரன்

தேரோட்டி ஜாதி என்றால் க்ஷத்ரியர்களுக்கும் தாழ்வான ஜாதி என்று மஹாபாரதத்தில் படிக்கிறோம். இதனால் கர்ணனை பாண்டவர்  இகழ்ந்தவுடன். அங்கிருந்த துரியோதனன், உடனே அவனை அங்க தேச மன்னனாக அறிவிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு தேரோட்டிதான் ராமாயணத்தில் வரும் சுமந்திரன். கைகேயியின் சொற்படி ராம லட்சுமண, சீதை ஆகியோரை தேரில் ஏற் றிச் சென்ற சுமந்திரன் காட்டிற்குச் சென்று குதிரைகளைத் தேரிலிருந்து அவிழ்த்துவிட்டு சந்தியா வந்தனம் செய்கிறான்.; மறுநாள் கங்கைக் கரையில் சிருங்கி வேரபுரத்தில் இறக்கி விடுகிறான்

தொடரும்……………..

Tags -சந்தியாவந்தனம், பிராமணர், சூத்திரர்,க்ஷத்ரியர்

Leave a comment

Leave a comment