
Post No. 12,691
Date uploaded in London – – – 9 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PART ONE WAS POSTED YESTERDAY
4. பிராமண ராவணன் சந்தியா வந்தனம்
ராவணன் பிறப்பால் 50 % பிராமணன். குணத்தால் 100 % ராக்ஷஸன்; பிராமணனைக் கொன்றதால் ராமனை பிரம்மஹத்தி பாபம் பீடித்ததால் ராமபிரான் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதை எல்லோரும் அறிவார்கள் . ராவணனின் தாயார் ராக்ஷஸி; தந்தை பிராமணன்; இதனால் ராவணன் சிவ பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவற்றில் குறை வைக்கவில்லை. அவன் சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற்றும் அதை நினைத்த இடத்துக்குக் கொண்டுபோக இயலவில்லை; காலைக் கடன்களுக்காக வு ம் , சந்தியா வந்தனத்துக்காகவும் அவன் சிவலிங்ககத்தைக் கீழே வைத்தவுடன் அது அங்கேயே நிறுவப்பட்டது . ராவணன் , இவ்வாறு சந்தியா வந்தனம் செய்த பல குறிப்புகள் ராமாயணத்தில் உள்ளன.
ஆத்மலிங்கத்தை அவன் கொண்டுபோகக்கூடாது என்பதற்காக விஷ்ணு பகவானும் தந்திரம் செய்தார். திடீரென்று மேகங்களை உண்டாக்கி மாலைப்பொழுது போல ஆகாயத்தை மாற்றினார். மாலை சந்தியாவந்தன நேரம் வந்துவிட்டதென்று மயங்கிய ராவணன் , அங்கிருந்த இடைச் சிறுவன் ஒருவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்து , டேய் பையா ! கீழே வைத்துவிடாதே ! இதோ சந்தியா வந்தனம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போன ராவணன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இடையனும் லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டுக் காத்திருந்தான் ; லிங்கத்தைக் கொடுத்த சிவ பிரான் ஒரு கண்டிஷன்/ CONDITION நிபந்தனை விதித்தித்திருந்தார் ; எங்கேயாவது கீழே வைத்தால் அதை எடுக்க முடியாதென்றார். இதை நினைத்த ராவணனுக்கு கோபம் வந்து இடைச் சிறுவனை அடித்தார்; அவன் விநாயகர் ரூபத்தில் தோன்றி, மகனே நீ இங்கேயே பூஜை செய் என்னு சொல்லிவிட்டுப் போனார். ராவணனுக்கு சிவ பெருமானின் லீலைகள் புரிந்தன.
5. குரங்கு அரசன் வாலி சந்தியா வந்தனம்
வாலி, சுக்ரீவன், அனுமன் ஆகியோர் குரங்கு அடையாளம் அணியும் பழங்குடி மக்கள்; நாம் தற்காலத்தில் உடலில் பச்சை குத்திக்கொள்வது போலவும், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடி மக்கள் உடலில் ஒரு அங்கத்தினை சிதைத்து க்கொள்வது போலவும் குரங்கினை அடையாளமாகக் கொண்ட மனிதர்கள் அவர்கள். குணமும் குரங்கு போல சட்ட திட்டம் இல்லாத வாழ்க்கையினை உடையவர்கள். இதே காலத்தில் கரடி அடையாளம் உடைய ஜாம்பவான், கழுகு அடையாளம் உடைய ஜடாயூ ஆகியோரும் வாழ்ந்தனர். ரிக் வேத ரிஷிகளின் பெயர்களும் பாரத்வாஜ (காகம்), கெளசிக (ஆந்தை) பிராணிகளின் பெயராகவே இருக்கும். இவை அவர்கள் ஒவ்வொருவரும் வைத்துக்கொண்ட அடையாளப் பெயர்கள்; ஆங்கிலத்தில் TOTEM SYMBOLS டோ ட்டம் சிம்பல் என்பர்; இதே போல மஹாபாரதத்தில் வரும் பாம்பு யக்ஞம் (பரீட்சித் சம்பவம்) , தவளை படுகொலை ஆகியன உண்மையில் பாம்போ தவளையோ அல்ல; அந்த இன மக்களுடன் நடந்த போர்கள் அவை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண, மஹாபாரதம் நடந்ததால் உபன்யாசகர்கள் அவற்றின் சுவையைக் கூட்டுவதற்காக குரங்கு, பாம்பு என்று சொல்லிவிட்டனர் ராமாயண, மஹாபாரத நூல்களை விஞ்ஞான அணுகு முறையில் படித்துப் பார்த்ததால் அவர்கள் மனிதர்கள்தான், பிராணிகள் அல்ல என்பது நன்கு விளங்கும். அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்று வால்மீகி , கம்பன் ஆகியோர் போற்றுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.. இந்தப் பின்னணியில் வாலி என்ற மன்னனின் சந்தியா வந்தனத்தைப் படிக்க வேண்டும் .
வாலி , கிஷ்கிந்தா என்னும் நாட்டின் மன்னன்; தற்காலத்தில் கர்நாடகத்தில் இருக்கும் ஹம்பி HAMPI என்னும் இடம் கிஷ்கிந்தை என்று பலரும், திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று சிலரும் சொல்கிறார்கள் . அதை ஆண்டு வந்த வாலி, மூன்று சமுத்திரக் கரையில் சந்தியா வந்தனம் செய்தான் என்றும் அப்போது இராவணன் அவனைத் தாக்கவே அபார சக்தி படைத்த வாலி, அவனைப் பந்தாடினான் என்றும் படிக்கிறோம்; அது முதல் வாலியுடன் ராவணன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவனிடம் வம்பு செய்யாமல் இருந்தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது வாலியின் சந்தியா வந்தனம். நமக்கு புராண இதிகாசங்களை விட்டுச் சென்ற முன்னோர்கள் ஆங்காங்கே இப்படி சந்தியா வந்தனம் பற்றியும் குறிப்பாகச் சொல்லுவது அதன் முக்கியத்தைக் கோடிட்டுக்காட்டவே (Underline) என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
(என்னுடைய யாதவ ஜாதி நண்பர் ஒருவர் பூணூல் அணிந்து காயத்ரீ சொல்லி வருகிறார்; சத்ய சாய் பாபாவின் பல லட்சம் பக்தர்கள், காயத்ரீ மந்திரத்தை தினமும் ஜபிக்கின்றனர் ; கீழ் ஜாதி பக்தர் ஒருவருக்கு பாரதியார் பூணூல் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும் சந்தியா வந்தனம் என்பதே காயத்ரீ மந்திரத்தை தினமும் சொல்லுவதற்காக உண்டாக்கப்பட்டதுதான் ; குறித்த நேரத்தில் அதை அனுஷ்டிக்க வேண்டுமென்பதற்காக சூரியனையும் அத்துடன் இணைத்துவிட்டனர்.)
7. சீதா தேவி சந்தியா வந்தனம்
இலங்கையில் சீதா தேவியைக் கண்டுபிடிக்க மூலை, முடுக்கெல்லாம் அனுமன் தேடிக்கொண்டிருந்தான் ; அசோக வனத்தை அடைந்த பொழுது சூரியோதய நேரம் வந்துவிட்டது. அசோக வனத்தின் அருகில் இன்றும் ஆறு RIVER ஓடுகிறது . ஒருவேளை சீதாதேவி இங்கிருந்தால் சந்தியா வந்தனம் செய்ய இங்கே வருவாள் என்று மரத்தின் மீது அமர்ந்து காத்திருந்தார் ஆஞ்சனேயர் (அனுமன்). அங்கு வந்தவள் சீதைதான் என்று அவரால் அடையாளம் காண முடிந்தது . ஏனெனில் சீதை கடத்தப்பட்டதை ஏற்கனவே பல வானரங்கள் பார்த்து இருந்தன ; சீதையைத் தேடப்போன அனுமனுக்கு எல்லா தகவல்களும் தெரியும் (சீதை தூக்கி எறிந்த நகைகளை குரங்குகள் எப்படிப் போட்டுக்கொண்டன என்ற நகைச்சுவை செய்தி 2000 ஆண்டு புறநானூற்றுப் பாடலில் (378) மட்டுமே உளது )!!!
8.ஆஞ்சநேய சந்தியாவந்தனம்
கிஷ்கந்தா என்னும் நாட்டின் முதலமைச்சர் பதவியில் இருந்தவர் ஆஞ்சநேயர்.. இலங்கையில் போர்க்களத்தில் லெட்சுமணன் மயக்கம் போட்டு விழுந்தான். அவனை எழுந்திருக்கச் செய்ய விசேஷ மூலிகை தேவைப்பட்டது. ஸஞ்சீவினி என்ற ஆயுர்வேத மூலிகை தேவை என்று கரடி இன அடையாளம் அணியும் ஆயுவேர்வேத ஸ்பெஷலிஸ்ட் AYURVEDA SPECIALIST ஜாம்பவான் சொல்கிறார். உடனே ஆஞ்சநேயர் சிட்டாகப் பறந்து சென்று மூலிகையை IDENTIFY /அடையாளம் பண்ண முடியாததால் ஒரு மலைத்துண்டையே (ROCK) கையில் ஏந்தி வறுகிறார். அப்போதும் சந்தியா வந்தனம் செய்ய மறக்காமல் தங்கிச் செல்கிறார். அவர் குரங்கு அல்ல . ரிக் வேத காலம் முதல் ஒவ்வொரு ரிஷியும் எப்படி தங்களை பறவை அல்லது பிராணியின் பெயரில் அழைத்துக் கொண்டார்களோ அப்படி அவர் குரங்கு இதைச் சேர்ந்தவர் . அந்த வகையில் எல்லா மனிதர்களைப் போல அவரும் சந்தியா வந்தனம் செய்ததை நமது மத நூல்களில் காண முடிகிறது .
9. ராம ராஜ்ய சந்தியா வந்தனம்
ராமாயணத்தின் முடிவிலும் சந்தியா வந்தனத்தைக் காண்கிறோம் . ராமர் மீண்டும் அரசனாக பதவி ஏற்று ராம ராஜ்யம் நடைபெற்றது அப்போதும் தினசரி ராஜ்ய பரிபாலனத்தில் நாள்தோறும் நடந்த நிகழ்ச்சிகளில்/ சடங்குகளில் சந்தியா வந்தனமும் ஒன்று.
ஆகவே கடிகாரமே இல்லாவிட்டாலும் எளிதில் காணக்கூடியது அந்திப் பொழுதுகள்; அப்படி மூன்று சந்திப்பு / சந்திப் பொழுதுகள் வருகையில் இறைவனை நினைவு கூற வேண்டும் என்பதே சந்தியா வந்தனம் ; முஸ்லீம்களில் சிலர் 5 வேளைகளில் தொழுவதைக் காண்கிறோம். அவர்கள் விமானம், ரயில், பஸ் நிலையம் என்று பாராமல் ஒரு துணியை விரித்து மண்டியிட்டுத் தொழுதைக் காண்கிறோம். இது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா இந்துக்களும் மூன்று பொழுதுகளில் தொழுதனர் . இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
(இலங்கையில் எனக்கு திருகோண மலை செல்லக் கார் ஒட்டிய முஸ் லீம் கிடைத்த இடைவேளையில் ஸார் தொழுகையை முடித்துவிட்டு ஓடி வந்து விடுகிறேன்; நீங்கள் லஞ்ச் LUNCH சாப்பிட்டுக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார் ; கதிர்மகத்துக்குக் கார் ஓட்டி வந்த வேறு ஒரு முஸ்லீம் இளைஞர் தொழுகை பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவுக்கும் அவர் GULF COUNTRIES கல்ப் கண்ட்ரீக்களில் பல்லாண்டுகள் வசித்தவர்.
ஆயினும் மூன்று வேளையும் தவறாமல் சந்தியா வந்தனம் செய்த ஒரே மனிதனையும் நான் கண்டுள்ளேன். மதுரையில் தினமணி பத்திரிகையில் என்னுடன் சீனியர் சப் எடிட்டர் ஆக வேலை பார்த்தவர் தானப்பமுதலித்தெரு எஸ். வெங்கடராமன். பாதி நியூஸ் NEWS எழுதிக்கொண்டிருந்தாலும் உச்சி வேளையிலும் மாலை வேளையிலும் குழாயடிக்குச் சென்று அதிலுள்ள தண்ணீரை சிறிதாகத் திறந்துவிட்டு சந்தியா வந்தனம் செய்துவிட்டு ஓடி வந்துவிடுவார். அங்கே சாப்பாட்டுத் தூக்குச் சட்டிகளுடன் வரும் தொழிலாளர்களும் அமைதியாக விலகி நின்று அவர் சந்தியா வந்தனத்தை முடிக்கும் வரை காத்திருப்பர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு .
(மேலே கண்ட கட்டுரையில் உள்ள விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதியவர் Shri Gaurang Damani ஸ்ரீ கெளரங் தாமனி . அவர் எழுதிய புஸ்தகத்தில் பெயர் “Untold Stories of Ramayana”. நமக்குத் தெரியாத ராமாயணக் கதைகள்/ விஷயங்கள். அனைவரும் வாங்கிப் படிக்கவும்)
XXXX
E MAIL RECEIVED ON 9-11-2023
திரு.சுவாமிநாதன் அவர்கட்கு,
வணக்கம்.
காரைக்குடி, நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த, சுப.அண்ணாமலை என்ற நான் (தற்போது ஜாம்பியா நாட்டில்-லுசாகா நகரில் வசிக்கும்) உங்களுக்கு தெரிவிக்க விரும்பும் ஒரு தகவல் – எங்களது சமூகத்தில் பெண்களும் சந்தியா வந்தனம் உபதேசம் கேட்டு, தினமும் செய்து வரும் பழக்கம் தொன்று தொட்டு இன்று வரை உள்ளது. எங்களில், ஆண்-பெண்களுக்கு தனித் தனியான குருவினால், பஞ்சாட்சர மந்திர உபதேசம் (காயத்திரி அல்ல) செய்யப்பட்டு, சந்தியா வந்தனம் செய்து வருகிறோம்.
இந்த தகவல் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி.
SP Annamalai
—சுபம்—
Tags– ராமாயணம், சந்தியாவந்தனம், இராவணன், வாலி , அனுமன் , சீதை