
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,690
Date uploaded in London – – 9 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
சுபாஷித செல்வம்
விதி குறி வைத்து விட்டால் விடாது!
ச.நாகராஜன்
விதி குறி வைத்து விட்டால் விடாது!
கைவர்தக கர்ஷகரக்ரஹணச்யுதோபி
ஜாலே புனர்நிபதித: ஷபரோ வராக: |
ஜாலாத் புனர்விகலிதோ கிலிதோ பகேன
வாமே விதௌ பத் க்ருதோ வ்யஸநாக்னிவ்ருத்தி: ||
மீனவன் ஒருவன் கையிலிருந்து ஒரு மீன் தப்பியது. அது விழுந்த இடம் அவனது வலை தான்! அந்த வலையிலிருந்து அந்த அப்பாவி மீன் மீண்டும் தப்பியது – ஆனால் இந்த முறை அது ஒரு நாரையின் வாயில் விழ அது மீனை முழுங்கியது. விதி ஒரு மனிதனைக் குறி வைத்து விட்டது எனில் அவனது துன்பத்திற்கு முடிவே இல்லை.

கூரிய புத்தி வெற்றி தரும்!
கேசித் தைவாத் ஸ்வபாவாத் வா காலாத் புருஷகாரத: |
சம்யோகே கேசிதிச்சந்தி பலம் குஷலபுத்தய: ||
சிலர் தனக்குத் தேவையானதை,
விதியால் பெறுகின்றனர்.
சிலரோ இயற்கையாகவே தற்செயலாகப் பெறுகின்றனர்.
சிலரோ காலத்தினால் பெறுகின்றனர்.
சிலரோ மனித முயற்சியினால் பெறுகின்றனர்.
சிலரோ இவை அனைத்தும் சேர்ந்ததினால் பெறுகின்றனர்.
சிலர் தமக்கான வெற்றியை கூரிய புத்தியால் பெறுகின்றனர்.
பலாசமரத்தில் பாம்பு!
கேதாரகாஹசமயே க்ருஷ்ணசர்போ விலோக்யதே |
சேத் பலாசத்ருமாரூட: சுபிக்ஷம் ச வதேன ததா ||
வயல்வெளிக்கு ஒருவன் சென்று அதில் நுழையும் போது, பலாச மரத்தின் மீது அவன் ஒரு கருநாகத்தைக் கண்டால் அது காட்டும் சகுனம் என்னவெனில் அந்த வருடம் அவனுக்குச் செழிப்பான அறுவடை கிடைக்கும் என்பதைத் தான்.
சோகம் போக்கும் இரண்டு எழுத்துக்கள்! (மி, த்ர)
கேனாம்ருதமிதம் ச்ருஷ்டம் மித்ரமித்யக்ஷரத்வயம் |
ஆபதாம் ச பரித்ராணம் சோகசந்தாபபேஷஜம் ||
யார் இந்த அம்ருதம் போன்ற இரண்டு எழுத்துடைய மித்ர என்பதை உருவாக்கியது?! (மி-த்ர – நண்பன் என்று பொருள்) துன்பங்களுக்கு எதிராக பாதுகாக்கும், சோகம், துக்கம் ஆகியவற்றைப் போக்கும் இதை உருவாக்கியது யார்?
செய்ய வேண்டியது என்ன?
கே யூயம் நோ வயமபி ச வ: கே பவாமோ பவாப்தௌ
கர்மோர்மோணாம் விஷமவலநை: பேனவத் புஞ்ஜிதா: ஸ்ம: |
தத் க்ஷேபோய: க்ஷயிணி நிசயே சித்தமாதாய புத்ரா:
சர்வாரம்பைர்லகத ஜகதாமந்தராத்மன்யநந்தே ||
நீ யார் எங்களுக்கு?
நாங்கள் உனக்கு யார்?
இந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையில் நாம் யார்?
நமது செயல்கள் வடிவில் அலைகளில் அடித்துச் செல்லப்படும் நுரைகள் போன்றவர்களே நாம்!
ஆகவே அழியக்கூடிய பொருள்களிலிருந்து மனதை இழுத்து விடுவித்து அதை முடிவற்ற பிரபஞ்ச ஆன்மாவின் மீது நிலை நிறுத்தி,
ஓ, குழந்தைகளே! அனைத்து முயற்சியையும் செய்து அதன் மேலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
WHO AM I -நான் யார் என்ற விசாரத்தைச் செய்து பிரம்மத்தையே நினைத்து அதை அடை என்பது திரண்ட பொருள்.
***