
Post No. 12,708
Date uploaded in London – – – 12 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxxx
I am skipping 50,51,52,53,54, 55 to coincide with at least one book. I will cover them later.
शशी दिवसधूसरो गलितयौवना कामिनी
सरो विगतवारिजं मुखमनक्षरं स्वाकृतेः ।
प्रभुर्धनपरायणः सततदुर्गतः सज्जनो
नृपाङ्गणगतः खलो मनसि सप्त शल्यानि मे ॥ 56॥
ஶஶீ திவஸதூஸரோ கலிதயௌவனா காமினீ
ஸரோ விகதவாரிஜம் முகம் அனக்ஷரம் ஸ்வாக்ருதேஹே |
ப்ரபுர்தனபராயணஹ ஸதததுர்கதஹ ஸஜ்ஜனோ
ந்ருபாங்கணகதஹ கலோ மனஸி ஸப்த ஶல்யானி மே || 1.56 ||
56. The moon pale by day, a lovely woman past her youth, a lake bereft of lotuses, the unlettered mouth (speech) of a handsome man, a powerful man devoted to wealth, a good man ever in misfortune, a wicked man in a king’s court – these are seven barbs in my heart.–56
பகலில் காணப்படும் ஒளியிழந்த சந்திரனும், இளமையைத் தாண்டிய பெண்ணும், தாமரையில்லா குளமும் , பேசத்தெரியாத அழகனும், செல்வச் செருக்குடைய பலவானும் , கஷ்டப்படும் நல்லவனும் , அரசவையிலுள்ள தீயோனும் என் இதயத்தைத் துளைக்கும் ஏழு முள்கள் ஆகும் .
xxxxxx
न कश्चिच्चण्डकोपानामात्मीयो नाम भूभुजाम् ।
होतारमपि जुह्वानं स्पृष्टो दहति पावकः ॥ 57॥
ந கஶ்சிச்சண்டகோபானாம்
ஆத்மீயோ நாம பூபுஜாம் |
ஹோதாரம் அபி ஜுஹ்வானம்
ஸ்ப்ரு ஷ்டோ வஹதி பாவகஹ || 1.57 ||
57. There is no one dear as one’s own, to a king with a fierce temper. The fire, burns even the sacrificer offering oblations, if touched (by him).
கடுங் கோபமுடைய அரசனுக்கு எவனும் நெருங்கிய நண்பன் இல்லை; யாகத் தீயானது வேள்வி வேட்பவன் தொட்டாலும் சுட்டுப் பொசுக்கத்தான் செய்யும்.
அதிகோபங்கொள்ளும் அரசரிடத்தில்
மதியோன் எவனும் மருவான் — விதிசேர்
மகஞ்செய்வோன் தன்னையங்கி வாட்டத் தொடங்கின்
முகங் கால் தெரியாது முன்பு –57
Xxxxx
मौनान्मूकः प्रवचनपटुर्वातुलो जल्पको वा
धृष्टः पार्श्वे वसति च सदा दूरतश्चाप्रगल्भः ।
क्षान्त्या भीरुर्यदि न सहते प्रायशो नाभिजातः
सेवाधर्मः परमगहनो योगिनामप्यगम्यः ॥ 58॥
Xxxx
The norms of serving are complex, incomprehensible even to sages. If silent the servant is labelled dumb, if quick to reply, flippant and loquacious. If he stays close he is called audacious, and if not, diffident. If patient (with rebukes etc.) then he is timid, if not tolerating them, he is discourteous.
Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?–58
வேலையாளின் நிலைமை கஷ்டம்தான்.முனிவர்களுக்கும் புரியாது. வேலைக்காரன் பேசாதிருந்தால் ஊமை என்று இகழ்வார்கள் உடனே பேசினால் வாயாடி பட்டம் சூட்டுவார்கள் ; பக்கத்தில் நின்றால் மரியாதை தெரியாதவன்; தள்ளி நின்றால் தன்னம்பிக்கை இல்லாதவன்; பொறுமையாக இருந்தால் பயந்தவன்; பொறுமை இல்லாவிட்டால் அவமதிப்பவன் என்பார்கள்- 58
மௌனோன் மூகஹ ப்ரவசனபடுர்வாதுலோ ஜல்பகோ வா
த்ரு ஷ்ஹ பார்ஶ்வே வஸதி ச ஸதா தூரதஶ்சாப்ரகல்ஹ |
க்ஷான்த்யா பீருர்யதி ந ஸஹதே ப்ராயஶோ நாபிஜாத ஹ
ஸேவாதர்மஹ பரமகஹனோ யோகினாம் அப்யகம்யஹ || 1.58 ||
பேசாதிருந்தால் பெருமூமையென்று நன்றாய்ப்
பேசினால் வாயாடிப் பேதை என்றும் — ஆசையுடன்
ஒட்டியிருந்தாலச்சம் உட்பயமில்லானென்றும்
எட்டியிருந்தால் எதற்கும் இல்லாத – மட்டியென்றும்
நெஞ்சம் பொறுத்தால் நிலைத்த முரடனென்றும்
கொஞ்சம் பொறானேல் — குலவீனன் வஞ்சநென்றும்
பேரார் துறைகளென்றும் பேசுவர் தஞ்ச சேவகனை
ஆராயுங்காலவர்பால் யாராலும் –சீராகச்
சேவித்தலாகா சிறந்ததவ மாதவ ர்க்கும்
பாவிக்கலாகாதாம் பண்பு –58
—subham—
Tags- Nitisataka part 17, Bhartruhari 17, Slokas 56,57,58