WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,709
Date uploaded in London – – 13 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 1
பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த லை வெளியிட்டுள்ளார்.
நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:
1. இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணுதல்
2. இராமன் கோசலை சந்திப்பு
3. மந்தரையின் சூழ்ச்சி
4. கைகேயியின் சூழ்ச்சி
5. இராமன் அயோத்தி நீங்குதல் குஹனைச் சந்தித்தல்
6. பரத்வாஜ முனிவருடன் சந்திப்பு
பிற்சேர்க்கை
1. அயோத்யா காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்
2. உதவிய இராமாயண நூல்களின் பட்டியல்
இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் ஐந்தாவது நூலாக அமைகிறது.
நூலுக்கு முன்னுரை அளித்துள்ள திரு ஆர். சேஷாத்ரிநாதன், தான் வால்மீகி ராமாயணம், கம்பனின் கவிதைகள், துளஸிதாஸரின் தோஹாக்களில் பொதிந்துள்ள ஒராயிரம் விஷயங்களை எப்படி உபந்யாசகர்கள், உரையாசிரியர்கள் போன்றோரின் கட்டுரைகள் மற்றும் காணொளிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது என்பதையும் அதைத் தொகுப்பு நூலாக தந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ராம நாமம் மிருதசஞ்சீவினி நாமம். மரிக்கப் போன சீதா பிராட்டியாருக்கு தஞ்சமாகவும், கடலைத் தாண்டும் ஆஞ்சநேயருக்கு பாஹு பலமாகவும், விபீஷணன் போன்ற சரணாகதர்களுக்கு ஆத்ம பலமாகவும், சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்து புதிய ஜீவனைத் தந்த சஞ்சீவினியாகவும் விளங்கியது ஷடாக்ஷரியான மஹா மந்திரம் ஶ்ரீ ராம மந்திரம்.
வால்மீகி ராமாயணத்தில் உள்ள 24000 ஸ்லோகங்களில் உள்ள ஒரு அக்ஷரத்தைச் சொன்னால் கூட மஹாபாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்த நூலை முழுவதும் படிப்போர் அடையும் நன்மையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளுக்கும் நாம் நாட வேண்டிய நூல் இராமாயணமே.
இந்த நூலில் பால காண்டத்தைத் தொடர்ந்து அயோத்யா காண்டத்தில் வரும் சம்பவங்களை சுவாரஸ்யமாகப் பல நூல்களின் உதவியோடு அற்புதமாகத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர்.
இராமனின் கல்யாண குணங்கள் 24.
இராமன் மிகுந்த அழகு நிறைந்தவன், பராக்கிரமம் உடையவன், பொறாமை இல்லாதவன், கடுமையான வார்த்தைகளைப் பேசாதவன் என்பது உள்ளிட்ட 24 குணங்களையும் அறிகிறோம்.
இராமனை அழைத்த தசரதர் இராமனுக்கு மகுடம் சூட்டுவதற்கான காரணங்களை வரிசையாகக் கூறுகிறார்.
1.இக்ஷ்வாகு வம்சத்திற்குத் தகுதியானவன்.
2. சிறந்த குணங்களை உடையவன்
3. தசரதனின் முதல் மனைவியின் புதல்வன்
4. இராமனது நல்ல குணங்களால் மக்கள் அவனை விரும்புகின்றனர்.
5. பெரியோர்களிடத்தில் பணிவுள்ளவன்.
6. எல்லா விதத்திலும் தசரதனை விடச் சிறப்புடையவன்
பல சுவையான கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்குரிய பதிலும் தரப்பட்டிருப்பதை நூலில் காணலாம்.
தேவர்களின் வேண்டுகோளின்படி இராவணனை சம்ஹாரம் செய்வதற்காக மகாவிஷ்ணு மனிதனாக பூமியில் அவதாரம் எடுத்தார்.
ஆனால் அவர் தசரத சக்ரவர்த்திக்கு மகனாக ஏன் பிறக்க வேண்டும்?
இக்ஷ்வாகு மன்னன் மகாவிஷ்ணு மூர்த்தியை அயோத்திக்கு எடுத்து வந்து சரயு நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க ஆரம்பித்தான்.
இந்த பூஜை 35 தலைமுறைகளாகத் தொடர நாளடைவில் பூஜையில் சற்று சிரத்தை குறைந்தது. இதை நிவர்த்தி செய்ய மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து தானே மகாவிஷ்ணுவுக்கு பூஜை செய்ய வந்தார். தேவர்கள் இராவணனை சம்ஹாரம் செய்ய விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அதையும் நிறைவேற்ற ராமனாக அவதரித்தார்.
இப்படி பல சுவையான விவரங்களை நூலில் காணலாம்.
ஆங்காங்கே மூல ஸ்லோகங்கள் சம்ஸ்கிருதத்திலேயே தரப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது..அயோத்யா காண்டத்தில் உள்ள 119 ஸர்க்கங்களும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.
பல நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் தந்திருப்பது நூலின் சுவையைக் கூட்டுகிறது.
–subham—
rithvikseshadri
/ November 14, 2023தங்களின் அறிமுகம் மிக அருமை.படிக்கத் தூண்டுகிறது மிக்க நன்றி