
Post No. 12,710
Date uploaded in London – – – 13 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 2
கோவில் எண் 1- கொட்டாரக்கரை கணபதி
.jpg)
வினைகள் ஒழிக்கும் கொட்டாரக்கரை கணபதி பகவானே ……… என்ற பாடலை K J ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்ட பின்னர் எல்லோருக்கும் கொட்டாரக்கரை கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பே.
இது ஒரு சிவன் கோவில்; ஆனால் கணபதியால் பிரசித்தம் அடைந்துவிட்டது.
கோவில் இருப்பிடம்
கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் துறைமுகத்துக்கு அருகில் கொட்டாரக்கரை இருக்கிறது கொல்லம் நகரிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் இருக்கிறது கதகளி என்னும் புகழ்பெற்ற நடனம் இங்குதான் ராமன் ஆட்டம் என்ற பெயரில் துவங்கியது .
கோவிலின் சிறப்பு
கோவிலின் சரியான பெயர் Kizhakkekara Siva Kshethram. கிழக்கேக்கர சிவ க்ஷேத்ரம் . இங்கு சிவபெருமான்தான் மூலஸ்தானத்தில் உள்ளார் ; பரசுராமர் ஸ்தாபித்த லிங்கம். கேரள மாநிலமே பரசுராமரால் கடலிலிருந்து மீட்கப்பட்ட பூமி என்பது ஐதீகம் (வாய் மொழி வரலாறு)
கருவறைக்குப் பின்பக்கம் படிஞ்ஞாறு பகவதி சந்நிதி உள்ளது
பலா மரத்தில் செய்யப்பட கணபதி கையில் மோதகத்துக்குப் பதிலாக அப்பம் இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அருணகிரிநாதர் பாடிய
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
(கனி, அப்பம், அவல் , பொரி)
கப்பிய கரிமுகனடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்……
என்ற திருப்புகழைப் பாடத் துவங்கி விடுவோம்
பலா மரத்தில் கணபதி உண்டானது எப்படி? என்பது பற்றி இரண்டு வரலாறுகள் உண்டு; பெருந்தச்சன் என்ற சிற்பி பலா மரத்தைக் கண்டவுடன் அதில் கணபதி செய்து கோவில் நிர்வாகத்தின் அனு மதியுடன் கணபதியைப் பிரதிஷ்டை செய்தார் என்பது முதல் வரலாறு. அப்படி அவர் ஏன் செய்தார்? என்பதற்குப் பின்னணியில் வேறு ஒரு வரலாறும் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிராமணர் தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது.
அசரீரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு சரீரம் இல்லாத என்று பொருள்; ஆளே இல்லாமல் வானிலிருந்து ஒலிக்கும் குரல் இது .
என்னையும் வணங்கிவிட்டுச் செல் என்ற குரலைக் கேட்ட அந்தப் பிராமணன் உற்று நோக்கும்போது பலா மரத்தின் அடிப்பகுதி கணபதி உருவத்தில் இருந்தது; அதை பிள்ளையாராக நினைத்து வழிபடத் துவங்கினார். பின்னர் கணபத்திக்கு புதிய சந்நிதி கிடைத்தது.
இதைப்படிக்கும்போது நாமே நடந் ததை ஊகிக்க முடிகிறது. மரத்துக்கு அடியில் இயற்கையாக அமைந்த யானை உருவத்தை, சிற்பி கண்டு, முறையான வடிவில் செதுக்கி அருளினார் என்பதே வரலாறு.
நான் எழுதிய இலங்கைத் தீவின் 108 புகப்பெற்ற ஆலயங்கள் என்ற புஸ்தகத்தைப் படித்தோருக்கு அங்கும் இப்படி நடந்தது நினைவுக்கு வரும். மரத்தின் அடிப்பகுதி கணபதி உருவத்தில் இருந்தவுடன் போகும் வரும் பயணிகள் அதை வணங்கவே அங்கு முறையான கோவில் கட்டப்பட்டது .
. அது சரி, சிவனை விட்டுவிட்டு, கணபதியை எல்லோரும் மெச்சுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறதல்லவா! அதற்கும் பதில் உண்டு; இந்த இடத்திலுள்ள கணபதிக்கு நெய்யப்பம் நைவேத்தியம் செய்வதாக வேண்டிக்கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேறுகிறது அதனால்தான் ஜேசுதாசும் வினைகள் ஒழிக்கும் கணபதி பகவானே………………. என்று நீட்டி முழக்குகிறார் போலும். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் அது; அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் இது.
கோவில் வெப்சைட்டில் கோவில் நேரம், வழிபாடு, விழாக்கள் முதலியன எல்லாம் விவரமாகக் கிடைக்கிறது. சதுர்த்தி தினங்களும் விநாயகர் சதுர்த்தியும் பொதுவாக எல்லா இந்துப் பண்ணாடிகை தினங்களும் கூட்டம் அதிகம் கூடும் கோவில் இது.
இந்த ஊரில் பல கோவில்கள் இருக்கின்றன. மஹாதேவ கோவில், மணிகண்டேஸ்வர கோவில், குலசேகர நல்லூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், திருக்கண்ண மங்கல மஹாவிஷ்ணு கோவில், நெடுவத்தூர் பகவதி கோவில் ஆகிய பெயர்களிலும் கோவில்களை தரிசிக்கலாம்; பல கோவில்கள் ராமாயணத்துடன் தொடர்புடையவை.
XXXX

Kottarakara Sree Maha Ganapathi Temple | Kottarakara …
kottarakaramahaganapathi.org
https://kottarakaramahaganapathi.org
Kottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage center in Kerala, lord Ganapathy is only a minor deity here. But the temple today is famous as a …
| VazhipadukalKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage … |
| Temple TimingsKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage … |
| About TempleThere are many legends about Kottarakara Ganapathy. Actually … |
| Temple Event CalendarKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage … |
கொட்டாரக்கரை கதகளி ராமன் ஆட்டம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரைகளில் கதகளி நடனம் பற்றிய சுவையான விஷயங்களை படித்தறிக
Kathakali Facts!- Part 1 (Post No.11812)
Tamil and Vedas
https://tamilandvedas.com › 2023/03/16 › kathakali-fa…
16 Mar 2023 — 1. Kathakali is a dance drama form peculiar to Kerala. · 2. Kathakali is an improvement on Krishnattam, kind of dance drama based on Jayadeva’s …
Kathakali Facts- Part 2 (Role of Colours; Play of Colours)
Tamil and Vedas
https://tamilandvedas.com › 2023/03/17 › kathakali-fa…
17 Mar 2023 — Bali, Sugriva and Kalakeya wear have red beards, while Kali, Kattalan/ hunter have black beards. Hanuman is depicted wearing white beard. All …
—SUBHAM—
TAGS — கொட்டாரக்கரை கணபதி , ஜேசுதாஸ் பாடல், கேரளம் புகழ்பெற்ற 108 கோவில்கள், Part 2