
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,718
Date uploaded in London – – 15 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சுபாஷித செல்வம்
ச.நாகராஜன்
ப்ரஹ்மத்யானம் பரம் தீர்த்தம் தீர்தமிந்திரியனிக்ரஹ: |
தமஸ்தீர்த்தம் து பரம் பாவசுத்தி: பராத் பரம் ||
ப்ரம்மனை தியானம் செய்வது ஒரு பெரிய தீர்த்த யாத்திரை. இந்திரியங்களை அடக்குவதும் ஒரு தீர்த்த யாத்திரை தான். தன்னை வெல்லுதல் இன்னும் பெரிய தீர்த்த யாத்திரை. என்றபோதிலும் ஒருவனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் தூய்மையாக இருக்குமானால் அதுவே தீர்த்தயாத்திரைகளில் மிகவும் பெரிய யாத்திரையாகும்.
சம்சாரவிஷவிருக்ஷஸ்ய த்வே பலே அம்ருதோபமே |
சுபாஷிதரஸாஸ்வாத: சங்கம: சுஜனை: சஹ ||
உலக அறியாமை என்னும் விஷ விருக்ஷத்தில் அம்ருதத்திற்கு ஒப்பான இரு நல்ல பழங்கள் உள்ளன. ஒன்று சுபாஷிதமாக ஒலிக்கும் பாடல்கள், மற்றொன்று நல்லவர்களுடைய சேர்க்கை.
சரஸ்வதி மஹாபாகே வித்யே கமலலோசனே |
வித்யாரூபே விசாலாக்ஷி வித்யாம் தேஹி நமோஸ்து தே ||
ஓ! சரஸ்வதி!! கமல நயனங்களை உடைய அறிவுத் தெய்வமே!! வித்தையின் வடிவமே! உன்னை வணங்குகிறேன். சிறந்த அறிவை எனக்கு வழங்கு.
– சரஸ்வதி ஸ்தோத்ரம்
காசீஷம் கலிகல்மஷௌகசமனம் கல்யாணகல்பத்ருமம் |
நௌமீட்யம் கிரிஜாபதிம் குணாசிதீம் கந்தர்பஹம் சங்கரம் ||
காசியில் உறையும் சங்கரருக்கு, பார்வதியின் ஈசருக்கு, நற்குணங்களின் உறைவிடத்திற்கு, காமத்தை அழிப்பவருக்கு, கலியுகத்தின் பாவங்களைப் போக்குபவருக்கு கல்யாண தருவிற்கு எனது நமஸ்காரம். அவரை வணங்குகிறேன்.
– மானஸ VI 2
ஆஞ்சனேயமதிபாடலானனம் காஞ்சனாத்ரிகமனீய விக்ரஹம் |
பாரிஜாததருமூலவாஸினம் பாவயாமி பாவமானநந்தனம் ||
அஞ்சனா-வாயுவின் குமாரருக்கு நமஸ்காரம். தாமரை போன்ற சிவந்த முகமும், தங்க மலை போன்ற ஒளி விடும் உடலும் கொண்ட பாரிஜாத மரத்தில் வாசம் புரிபவரை வணங்குகிறேன்.
அநுகந்தும் ஸதாம் வர்த்ம க்ருதஸ்னம் யதி ந ஷக்யதே |
ஸ்வல்பமப்யநுகந்தவ்யம் மார்கஸ்தௌ நாவஸீததி ||
மகான்கள் காட்டிய புண்ணிய வழியில் முழுவதுமாகப் போக முடியாவிட்டாலும் கூட, அந்த வழியில் முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவன் துக்கத்தை ஒருபோதும் அடையமாட்டான்.
மித்ர த்ரோஹி க்ருதக்னச்ச யஷ்ச விஸ்வாஸதாதக: |
த்ரயஸ்தே நரகம் யாந்தி யாவஸ்சந்த்ரதிவாகரௌ ||
நண்பன் ஒருவனுக்கு த்ரோஹம் செய்யும் மித்ர த்ரோஹி – நண்பனுக்கு எதிரியாக மாறுதல், அவனுக்கு நன்றியில்லாமல் இருத்தல் அவனது நம்பிக்கைக்கு துரோகம் செய்தல் ஆகிய இந்த மூன்றும் – அவனை சந்திர சூரியர் உள்ளவரை நரகத்தில் இருக்கச் செய்யும்.
க்ராசாதர்தமபி க்ராசமதிர்ப்ய: கிம் ந யச்சஸி |
இச்சானுரூபோ விபவ: கதா கஸ்ய பவிஷ்யதி ||
– தான ப்ரஸம்ஸ 6
உன்னிடம் ஒரு கவளம் தான் உணவு இருந்தது என்றாலும் கூட அதில் பாதியை ஏன் நீ கொடுக்கக் கூடாது? எவன் தனது விருப்பத்திற்குத் தக்கபடி செல்வத்தை அடைகிறான்?
***