
Post No. 12,723
Date uploaded in London – – – 16 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 5
கோவில் எண் 4 – அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்
அம்பலப்புழா கிருஷ்ணன்கோவில் பற்றி 5 சுவையான கதைகள் இருக்கின்றன.
கோவில் எங்கே இருக்கிறது?
கேரள மாநிலத்தின் ஆலப்புழை அருகில் இருக்கிறது. ஆலப்புழை யிலிருந்து 14 கி.மீ தொலைவு..
எதனால் புகழ் ?
வேறு எங்கும் இல்லாத பார்த்தசாரதி கிருஷ்ணனின் அழகிய திரு உருவம், பால் பாயசம் பிரசாதம் ஆகியவற்றால் புகழ்.
யார் கட்டினார்கள்?
400 ஆண்டுகளுக்கு முன்னர் சிற்றரசர் பூராடம் திருநாள் தம்புரான் கட்டினார் . இறைவனுக்கே கோவிலைக் கொடுத்துவிட்டு தன்னுடைய பெயரை தேவ நாராயணன் என்று மாற்றிக்கொண்டார். அவருடைய குரு வில்வ மங்கள சாமியார்.
xxxx
இனி சில சுவையான கதைகளைக் காண்போம்
முதல் கதை
வில்வ மங்கள சாமியாருடன் சம்பகசேரியை ஆண்டுவந்த பிராமண மன்னர் பூராடம் திருநாள் தம்புரான், நதியில் போய்க்கொண்டு இருந்தார். எங்கிருந்தோ இனிய புல்லாங் குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. இருவரும் ஆராயப் புகுந்தனர். ஒரு அரச மரத்த்திலிருந்து வந்தது. உடனே இருவரும் அதை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர் ஏனெனில் அங்கு கிருஷ்ண பகவான் இருப்பதை உணர்ந்தனர்; உடனே ஒரு கோவில் கட்ட மன்னர் முடிவு செய்தார்; அழகிய கண்ணன் வடிவத்தை கருங்கல்லில் சமைத்தார் . நல்ல நாளும் நிச்சயிக்கப்பட்டது.
கிருஷ்ணன் சிலைப் பிரதிஷ்டையைக் காண மக்களும் ஊர்ப் பிரமுகர்களும் கூடினர். அங்கு வந்த தலைமை நம்பூதிரி STOP, STOP ஸ்டாப் ஸ்டாப் என்று சொல்லி கிரியைகளை நிறுத்தினார். இது குற்றமுள்ள சிலை என்றார் .
என்ன குற்றம் கண்டீர்? அழகில் குற்றமா? வடிவத்தில் குற்றமா? என்று ஒருவர் வினவினார்.
அங்கத்தில் குற்றம் என்றார் நம்பூதிரி ; இது பின்னமான சிலை என்றார் .
எங்கே நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார் ஒரு அறிஞர்.
ஒரு கல்லினை வைத்து சிலையின் ஒரு குறிப்பிரட்ட இடத்தில் தட்டவே அது உடைந்து ஒரு தேரை (தவளை வகை) தாவிக் குதித்தது ; கொஞ்சம் அழுக்குத் தண்ணீரும் வந்தது; சிலைத் திறப்பு விழா CANCEL கான்சல் (ரத்து) ஆனது. எல்லோரும் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்கள்.
இரண்டாம் கதை
இனி புதிய சிலை செய்வதை விட அருகில் குறிச்சி என்னும் இடத்திலுள்ள சிலையைக் கொண்டுவந்து விடலாம் என்று மன்னர் முடிவு செய்தார். ஆனால் குறிச்சி பகுதியை ஆளும் மன்னரும் இவரும் எலியும் பூனையும் போலப் பகைவர்கள்; கோவிலில் திருடுவது குற்றம்; ஆகையால் இரவு நேரத்தில் மன்னர் படை சென்று சிலையை எடுத்துக்கொண்டு, நாங்கள் சிலையை எடுத்துச் செல்கிறோம்; துணிவி ருந்தால் எங்களைத் தடுங்கள் என்று படை வீரர்கள் சவால் விட்டனர்; எவரும் தடுக்கவில்லை. அந்தச் சிலை பார்த்தசாரதி வடிவில் சாட்டையுடன் காணப்படும் (பகவத் கீதை பார்த்த சாரதி) சிலை.
கோவிலில் சிலையும் பிரதிஷ்டை ஆனது. அவர்கள் படகில் சென்று சிலை மீட்ட நாள் இன்றும் படகுப்போட்டியாக நினைவு கூறப்படுகிறது .
மூன்றாவது கதை
புதிய பார்த்த சாரதி சிலையை நிறுவும் நாளும் வந்தது . சிலை கொஞ்சம் சாய்ந்து நின்றது; மன்னருக்குக் கவலை மேலிட்டது; அங்கு அற்புதங்களை நிகழ்த்த வல்ல வில்வ மங்கள சாமியாரும் இருந்தார்; ஒரு வெற்றிலையை எடுத்து மந்திரம் சொல்லி சிலையின் அடியில் வைத்தார்; சிலை நேராக நின்றது. வெற்றிலை என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் தாம்பூலம் என்று அர்த்தம்; ஆகையால் இந்தக் கோவில் தாம்பூலப் புழா என்றும் பெயர் பெற்றது .
நாலாவது கதை
கிருஷ்ண பரமாத்மாவை தனக்கு நேரில் காட்டும்படி வில்வ மங்கள சாமியாரிடம் மன்னர் இறைஞ்சினார். அவர் பக்தியை மெச்சிய சாமியாரும் அவருக்காக காட்சி கொடுக்கச் செய்ய தயார் ஆனார். ஆமாம் இறைவன் காட்சி கொடுத்தால் என்ன தருவாய் ? என்று வினவினார் சாமியார். இந்த நாட்டையே தந்து விடுவேன் என்கிறார். கிருஷ்ணனும் சிலையிலிருந்து கை நீட்டி மன்னரை ஆசீர்வதித்தார் . அன்று முதல் தன்னுடைய பெயரை தேவ நாராயணன் என்று மாற்றிக்கொண்டார் பின்னொரு காலத்தில் மார்த்தாண்ட வர்மா படையெடுத்துவந்து, தேவ நாராயணனைத் தோற்கடித்து கைது செய்த்தார். அப்போதும் கூட நாட்டின் கஜானா சாவியை பார்த்த சாரதியின் பாத கமலங்களில் வைத்துவிட்டுச் சரண் அடைந்தார்.
Xxxx

ஐந்தாவது கதை
பால் பாயஸக் கதை
கோவிலை நிர்வகிப்பதாற்காக மன்னர் பக்கத்து ஊர் பிராமணனிடம் நெல் கடன் வாங்கியிருந்தார்; அதை மன்னர் நீண்ட காலத்துக்குத் திருப்பித் தரவில்லை; கோவிலுக்கு வந்த மன்னரை இறைவன் முன்னிலையில் நிறுத்தி எங்கே என் நெல்? என்கிறார் பிராமணர். பக்கத்தில் மந்திரி நின்று கொண்டிருந்தார். இந்தப் பிராமணனுக்கு இன்றே படி அளக்கவும் என்று கட்டளையிட்டுவிட்டு மன்னர் போய்விட்டார். மந்திரியும் வீடு வீடாகச் சென்று நெல்லினைப் பெற்று கோவிலில் உள்ள ஆனைக் கொட்டிலில் மலை போல குவித்ததார் ; மந்திரி என்றால் தந்திரம் மிக்கவர் அல்லவா? மதியம் ஆகிவிட்டது கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது; மாலையில் சந்நிதி திறப்பதற்குள் இவற்றை அகற்றாவிடில் எல்லாம் கோவிலுக்கே சொந்தமாகிவிடும் என்று எச்சரித்த்தார் ; நெல்லினைச் சுமந்து செல்ல கூலி ஆட்கள் கிடைக்காமல் பிராமணர் திகைத்தார்; மாலையும் வந்தது; நடையும் திறந்தது. இந்த நெல் அனைத்தும் கோவிலுக்கே போகட்டும். ஆனால் தினமும் உச்சி வேளையில் பால் பாயசம் செய்து பக்கதர்களுக்கு விநியோகிக்க வேட்மண்டும் என்று கேட்டுக்கொண்டார்; எல்லோரும் YES YES யெஸ் யெஸ் என்று சொன்னார்கள்; இன்றும் சுவையான பால் பாயசம், பிராமணன் தயவில் கிடைக்கிறது. ஆயினும் ஒரு காலத்தில் பல நூறு படி அரி சியில் பாயஸம் ஆக்கப்பட்டது . இப்போதைய ஆட்சியாளர்கள் சாமிக்கே ரேஷன் கார்டு கொடுத்துவிட்டனர். ஒரு பெயருக்கு NAMESAKE பாயசம் ஆக்கி விநியோகிக்கின்றனர் .
பார்த்த சாரதியே தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கலி யுகம் இது!!
xxxxx
திப்பு சுல்தான் (1750-1799) என்ற இந்து விரோதி கர்நாடகத்திலிருந்து கேரளத்தைத் தாக்கினான் . அப்போது புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோவிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று அர்ச்சகர்கள் பயந்தார்கள். உடனே கிருஷ்ணன் சிலையை அங்கிருந்து அம்பலப் புழா கிருஷ்ணன் கோவிலுக்கு எடுத்து வந்து ஒளித்து வைத்தனர்; அந்த இடம் இன்றும் குருவாயூர் அம்பலம் என்ற பெயருடன் இருக்கிறது. அப்போது அவருக்கும் கோவிலின் பால் பாயசம் நைவேத்தியம் செய்யப்பட்டது (படைக்கப்பட்டது ). பின்னர் குருவாயூரப்பன் அவருடைய ஒரிஜினல் வீட்டுக்குச் சென்றார் . ஆயினும் இன்றும் பால் பாயசம் சாப்பிட குருவாயூரப்பன் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
xxxx
திருவிழாக்கள்
அம்பலப் புழா கிருஷ்ணன் கோவில் இறைவன் பார்த்த சாரதியின் ஒரு கையில் சாட்டையும் இன்னுமொரு கையில் சங்கும் இருக்கின்றன.
கேரளத்தில் மூன்று கிருஷ்ணன் கோவில்கள் பிரசித்த மானவை — குருவாயூர், திருப்புனிதத்துறா , அம்பலப்புழா .
பெரிய விழா ஆண்டு தோறும் மீனம் மாதத்தில் 10 நாட்களுக்கு நடக்கும் ; ஆராட்டு உற்சவம் பத்தாம் நாள் நடக்கும். ஆயினும் மேளம் முதலிய வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்கள் சாப்பிடும் ஒன்பதாம் நாளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாடகசாலா சாத்ய / விருந்து என்று அதற்குப் பெயர். ஒருமுறை கர்ப்பக் கிரகத்தில் இறைவனைக் காணாது திகைத்த வில்வ மங்கள சாமியார் இறைவனே இசைக்கலைஞர்களுக்கு உணவு படைப்பதைக் கண்டு அசந்து போனாராம்; அவர் முகத்தில் தோன்றிய கேள்விக்கு றிக்கு பார்த்தசாரதியே பதில் தந்தார் ; இந்த வாத்ய கோஷ்டியினர் இல்லாவிட்டால் விழாக்கள் நடக்குமா, சிறக்குமா ? அதனால் நானே பரிமாறுகிறேன் என்றார் பார்த்த சாரதி.
இது தவிர சிலை எடுத்து வந்த நாள் திருவிழா முதலியனவும் நடைபெறுகிறது . ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
—சுபம் —
Tags- கதைகள் , பார்த்தசாரதி, தேரை , பால் பாயசம், கோவில் எண் 4 – அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்