
THE PICTURE IS FROM SHETPAL VILLAGE OF MAHARASHTRA
Post No. 12,732
Date uploaded in London – – – 18 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 7
கோவில் எண் 6 – மன்னார்சாலா பாம்புக் கோவில்
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 7

வலிய அம்மா

மன்னார்சாலா பாம்புக் கோவில் , நாகராஜனை வழிபடும் ஒரு ஒப்பற்ற கோவில்.
மன்னார்சாலா பாம்புக் கோவில் எங்கே இருக்கிறது?
மன்னார் சாலா என்னும் இடம் ஹரிபாட் HARIPAD என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரத்திலும் அம்பலப்புழா ,காயன்குளம், மாவெலிக்கரா ரயில் நிலையங்களிலிருந்து 15 கி.மீ தொலைவு.
By Rail:
The nearest railway station to Mannarasala Nagaraja Temple is Haripad Railway Station which is situated at a distance of 3.4 Km.
உலகில் பாம்பு வழிபாட்டில் முதன்மையாக இருப்பது பாரதம்; அது மட்டுமல்ல மற்ற இடங்களில் பாம்பு வழிபாடு மியூசியங்களில் உள்ளது. பாரத நாட்டில் மட்டும் வீடுகளிலும் பாம்பு வழிபாடு இருக்கிறது.
அதுமட்டுமல்ல; சனாதனாமாம் இந்துமதம் என்று பாரதியார் பாடும் வரியில் உள்ள சனாதன தர்மத்தின் ஆணி வேறான வேதத்தில் பாம்பு ராணி வருகிறாள். அதையடுத்து வந்த ஸரஸ்வதி – சிந்துவெளி நாகரீகத்திலும் பா ம்பு முத்திரை கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்ல; மேலைக் கடற்கரை முழுதும் உள்ள மாநிலங்களில் நாக பஞ்சமி NAG PANCHAMI விழாக்கொண்டாடி உலகியே வியக்க வைக்கின்றனர் இந்துக்கள். புறச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க இந்துக்கள் கண்டுபிடித்த இந்த விழாவினை வெளிநாட்டினர் புகழ்ந்து புஸ்தகம் எழுதுகின்றனர்; வீடியோக்கள் வெளியிடுகின்றனர். எலிகளை பாம்புகள் சாப்பிடுவதால் வயல் வளம் பெருகுகிறது .
அது மட்டுமல்ல பழைய TELUGU FILMS தெலுங்கு திரைப்படங்களில் பாம்பு வராத திரைப்படமே இராது.
அது மட்டும்மல்ல சங்கதத்தமிழ் நூல்களில் உள்ள மருதன் இளநக நாகன் போன்ற 20 புலவர் முதல் வடக்கேயுள்ள நாகாலாந்து மாநிலம் வரை நாகர் இனத்தைக் காணலாம்.
குப்தர் கல்வெட்டுகளில் GUPTA INSCRIPTIONS நாகர்கள் உள்ளனர். இலங்கையில் ஸ்ரீ நாகன் என்ற பெயரில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமண மன்னன் ஆட்சி புரிந்துளான்.
அது மட்டுமல்ல தமிழ்நாட்டின் நாகர் கோவில், கேரளா மன்னர் சாலை, யாழ்ப்பாண நாகத் தீவு முதல் காஷ்மீரில் உள்ள அனந்த நாகம் ANANTNAG வரை ஊர்ப்பெயர்கள் முழுதும் பாம்பின் பெயர்கள்தான் .
கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தென் மேற்கு மூலையில் நாகர் காவு என்ற இடம் இருக்கும்.
அதுமட்டுமல்ல பாம்பின் பெயரில் பாம்பாட்டி சித்தர்கள் முதலிய பல சித்தர்கள் உடைய நாடு பாரத நாடு.
பாம்பு சக்தியை குண்டலினி என்று பெயர் வைத்த நாடு பாரத நாடு
ஸ்னேக்ஸ் அண்ட் லாடர் SNAKES AND LADDER BOARD GAME என்னும் போர்ட் விளையட்டைக் கன்டுபிடித்தது இந்துக்கள் என்று உலக மியூசியங்களில் பலகை வைத்திருப்பதையும் காணலாம். நம் நாட்டில்
இதைப் பரமபத சோபான படம் என்று எல்லார் வீட்டில் விளையாடுவதையும் காண்கிறோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நம் வீடுகளிலேயே நாகராஜன், நாகேஸ்வரன், நாகேஸ்வரி, வாசுகி, என்ற பெயர்களில் உறவினர் இருப்பதையும் காணலாம். இந்தப் பாம்பு வழிபாட்டை நாம் எகிப்துக்கும் கிரேக்க நாட்டுக்கும் பரப்பினோம். எகிப்திய மன்னர்கள் சிவபெருமான் தலையில் நாகர் முடி இருப்பது போல முடி/ கிரீடம் வைத்துக் கொண்டனர். கிரேக்க நாட்டில் ஒரு தேவியானவள் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகளுடன் காட்சி தரும் சிலைகளை பல மியூசியங்களில் காணலாம். எல்லாவற்றுக்கும் மூலம் ரிக் வேதம் .
பாம்பு இனம், கருட இனம் என்ற இரண்டு இனங்களை நமது நூல்கள் குறிப்பிடுகின்றன. இதை மாயன் MAYAN நாகரீகம் வரையும் பல நாடுகளின் கொடிகளிலும் சின்னங்களிலும் இன்றும் காண்கிறோம்.
SERPENT சர்ப்பன்ட் , SNAKE ஸ்நேக் என்ற ஆங்கிலச் சொற்கள் எல்லாமே சர்ப்பம், ஸ்/நாகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து வந்தனவே; நாம்தான் உலகினுக்கு பாம்பு பற்றி சொல்லிக்கொடுத்தோம் என்பதற்கு இதைவிட சான்று தேவை இல்லை. பாம்பு இல்லாத இந்துக் கடவுள் படங்களைக் காணவும் முடியாது!!!
இவ்வளவு சிறப்புமிக்க பாம்பு வழிபாட்டினை கேரளா மாநில மன்னார் சாலைக்கு கோவிலில் காண்பது போல வேறு எங்கும் காண முடியாது
குழந்தைகளை இல்லாத தம்பதிகள் நிறுவிய ஏராளமான நாகர் சிலைகளைத் தமிழ் நாட்டின் பல கோவில்களில் காணலாம்; கர்நாடக குக்கே KUKKE சுப்பிரமானிய சுவாமி கோவில் ஆனாலும் சரி, மன்னார்சாலை நாகராஜர் கோவில் ஆனாலும் சரி குழந்தை வேண்டுமானால் நாகர் வழிபாடு அவசியம் என்ற எண்ணம் மலிந்து கிடப்பதைப் காணலாம். இந்த எண்ணம் காரணமாக நாம் பாம்புகளைக் கொல் வதில்லை. அவை வயல்களில் எலிகள் பெருகாமல் காத்து, நம் அறுவைடையைப் பெருக்குகின்றன. இந்துக்கள் புறச் சூழல் பாதுகாவலர்கள் . நிற்க
xxxx

மன்னார்சாலை கோவில் தரிசனத்துக்கு வருவோம்
கேரளத்தில் பெரும்பாலான வீடுகளில் தென் மேற்கு மூலையில் சர்ப்ப காவு என்று நாகர் வழிப்பாட்டுக்கு இடம் ஒதுக்கப்படும்
இங்கே நாகராஜாவும் நாக ராணியும் வழிபடப்படுகின்றனர்
16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தோப்பு இது. ஆயிரக் கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம். பெரிய சந்நிதியில் நாகராஜா, நாக யக்ஷி உருவங்களை வைத்து வழிபடுகின்றனர்.வடக்கில் இல்லம்/ வீடு இருக்கிறது . அதன் கீழ் நிலவறையில் நாகராஜா சமாதி உள்ளது. குல முதல்வரான அவரை மூத்தாசான் என்பர் அங்குதான் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்ய உரிமை பெற்ற பெண்மணி வசிக்கிறாள் . அவளை நம்பியதி என்பார்கள் வலிய அம்மா, மன்னார்சாலா அம்மா என்றும் அழைப்பார்கள். இவர்தான் சிலைகளுக்கு பூஜை செய்வார்.
XXXX
15,000 சர்ப்பக் காவுகள் ! SERPENT GROVES
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கொச்சி திருவாங்கூர் சமஸ்தானங்களில் உள்ள பாம்புக் கோவில்களைக் கணக்கெடுத்ததில் 15,000–க்கும் மேலான சர்ப்பக் காவுகள் SERPENT GROVES இருப்பது தெரியவந்தது.
இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தை பாம்பு என்று சொல்லுவார்கள்; ஆகையால் இங்கு ஆயில்யம் நட்சத்திர நாட்களில் குறிப்பாக துலாம், கன்னி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
சர்ப்ப யக்ஷி, நாக யக்ஷி என்ற நாக தேவதைகளுடன் நாக சாமுண்டி என்பவரின் சந்நிதியும் உளது ; அவர். நாகராஜாவின் சகோதரி.
இங்கு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாக பலி, நீரும் பாலும் அஷ்ட நாக பூஜைகள் என்று பல பூஜைகள் இருக்கின்றன. நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு,கேது தோஷங்கள் இருப்பவர்களும் குழந்தைப் பேறு வேண்டுவோரும் இங்கு சிலைகள் செய்து வைத்து கோவில் விதிகளின்படி வழிபடுகின்றனர். இதே போல கர்நாடக KUKKE SUBRAHMANYA SWAMI குக்கே சுப்பிரமணியர் கோவிலிலும் நடைபெறுகிறது .
30, 000 சிலைகள்
மன்னார்சாலை கோவில் அல்லது காவு (காடு) காடு போலப் பரந்து விரிந்து கிடக்கிறது அங்கு பக்தர்கள் வைத்த 30, 000 நாகர் சிலைகள் இருக்கின்றன
இங்கு குருவாயூயூர் போல துலாபாரம் கொடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது எடைக்கு எடை அரிசி, பருப்பு முதல் தங்கக்கட்டிகள் வரை துலாபாரம் கொடுக்கலாம். துலா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தராசு என்று பொருள்.
இந்தக் கோவிலில் துலா மதம் ஆயில்யம் வருட உற்சவம் ஆகும்.
வலிய அம்மா என்பவர் அந்தக் குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் ஆவார். இவர் வலிய அம்மாவாக பொறுப்பேற்ற நாள் முதல்,
பிரம்மச்சசாரிணியாக வாழ வேண்டும். இவர் பிராமணர் குலத்தில் பிறந்தவர்.. வெளியே செல்ல மாட்டார் அப்படி உறவினர் வைபவங்களுக்குச் சென்றாலும் மாலை சூரிய அ ஸ்தமனத்துக்கு முன்னால் கோவிலுக்கு வரவேண்டும் என்பது நடைமுறை..
நீரும் பாலும், உருளி அளித்தல்
ஆண்டுதோறும் நடக்கும் உற்சவத்தில் நாகராஜா, நாக யக்ஷி ஊர்வலம் நடக்கும்; பக்தர்கள் நிறைய காணிக்கைகளை கொண்டு வருவார்கள். இந்தக் கோவிலுக்கு உருளி என்னும் சட்டியை அளிப்பதும் ஒரு காணிக்கைச் சடங்கு .

2 கதைகள்
இந்தக் கோவில் உருவான வரலாறு பற்றிய கதை என்னவென்றால் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் பாம்பினை வழிபட்டனர் என்றும் அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் கோவில் கட்டியதாகவும் அப்போது அருள்புரிந்த அந்த இறைவனே அவர்கள் மட்டும் இல்லாது அவர்கள் பரம்பரையே வழிபடவேண்டும் என்று சொன்னதாகவும், அதனால் அந்தக் குடும்பம் இந்தக் கோவிலைக் கட்டியதாவதும் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் மன்னர்களும் இந்தக் கோவிலுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
உருளி கதை
ஒரு குழந்தையற்ற பெண்மணி ஒரு உருளியில் / சட்டியில் உணவு கொண்டு வந்ததாகவும் அது அழகாக இருக்கவே வலிய அம்மா அதைப் போற்றிப் பாதுகாத்ததாவுடன் எல்லோரும் உருளையும் கொண்டுவந்து அவரைத் திருப்திப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிலிருந்து நூற்றுக் கணக்கானோர் இப்படிச் செய்யத் துவங்கினர்.
உருளிச் சட்டி கொண்டு வருவோர் அதை நாகராஜா வின் முன்னர் கவிழ்த்து வைப்பது உருளி கமழ்த்தல் வழிபாடு ஆகும்
நூறும் பாலும் சடங்கில் பால், இளநீர், மஞ்சள் நீர் கலந்த நீரினை பாம்புக் கோலம் அல்லது சிலை மீது விடுவார்கள். சர்ப்ப பலி என்பது இதே போல சிலைகளுக்குச் செய்யும் அபிஷேகம்

XXXX
என் கண் முன் கண்ட காட்சி
யாரோ ஒருவர் அன்பினால் செய்த விஷயத்தை எல்லோரும் சட்டங்காகப் பின்பற்றத் துவங்கி விடுகிறார்கள்.பல சம்பிரதாயங்கள் இப்படித்தான் உருவாகின்றன. மதுரை மீனாட்சி கோவிலில் நான் பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில் சென்ற போதெல்லாம் துர்க்கை அம்மனுக்கு முன்னர் எலுமிச்சம்பழ விளக்கினை யாரும் ஏற்றி வைத்ததில்லை. பின்னர் செவ்வாய்க் கிழமைதோறும் நூற்றுக் கணக்கானோர் இப்படிச் செய்யத் துவங்கினர். உடனே கோவில் நிர்வாகம் கட்டுப்பாடுகளையும் கட்டணங்களையும் கொண்டுவருகின்றன.
திருவண்ணாமலை கோவில் சந்நிதியில் வரிசையில் நின்று சாமியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்; கைக்கு எட்டாத உயரத்தில் அலங்கார வளைவில் இறைவன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் உயரமானவர் ஒருவர் அதை கஷ்டப்பட்டு எட்டிக் கைகளினால் தொட்டுக் கும்பிட்டாரா ர்; உடனே அவர் பின்னால் இருந்த ஒவ்வொருவரும் குரங்கு போல எம்பிக் குதிக்கத் தொடங்கினர். அது பஸ்ஸில் வந்த கிராமத்துக்கு கும்பல் இப்படி ஆயிரம்பேர் , அனுதினமும் தொ ட்டால் அந்த உலோக உருவம் தேய்ந்துபோகும் அல்லது கீழே விழுந்துவிடும். ஆகவே பக்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும், பாமரன் செய்வதை குரங்கு தொப்பிக்காரன் கதை போல இமிடேட்/ IMITATE செய்யக்கூடாது (குரங்கு- தொப்பி வியாபாரி கதை முன்னரே எழுதியுள்ளேன் )..
XXXX

MANNARSAALA IN KERALA
நம்பூதிரி வீடு முழுதும் பாம்பு
PAMBUMEKKAT NAMBUDIRI RESIDENCE NEAR IRINJALAKUDA
கே ஆர் வைத்திய நாதன் எழுதி பாரதீய வித்யா பவன் வெளியிட்ட 1982-ம் ஆண்டு ஆங்கில நூலில் ஒரு தகவல் தந்துள்ளார். இரிஞ்சலக்குடா அருகில் பாம்பு மேக்காடு நம்பூதிரி வீடு இருக்கிறது .அவர் வீடு முழுதும் நல்ல பாம்புகள் நெளித்து ஓடும் . உள்ளெ வருவோர் அவைகளைத் தப்பித் தவறி மிதித்தாலும் அவைகள் கடிக்காது. நம்ப்பூதிரி குடும்பத்தினர் சொற்களுக்கு அவை கட்டுப்படும். அந்தக் குடும்பத்தினரை அவை காப்பாற்றுகின்றன.
(நான் கூகுள் செய்து பார்த்ததில் தற்போது அந்த இடத்தில் பாம்புகள் ஆடி ஓடும் தகவல் ஏதும் இல்லை; இப்போது அங்கு பெரிய பாம்புக்காவு, நாகர் சிலைகள் , வழிபாடுகள் உண்டு ஆயினும் குறிப்பிட்ட நாட்கள் மட்டு மே பக்தர்கள் செல்ல முடியும் ஆனால் மகாராஷ்டிர சேத்பல் கிராமம், ஆந்திரத்தில் தேளி னை தைரியமாக வழிபடும் கிராமம் ஆகியவற்றைப் படிக்கையில் இதிலும் உண்மை இருக்க வேண்டும். அந்த அர்ச்சகர் பாம்பு கடித்தோரையும் குணப்படுத்துகிறார் /.
Sree Pambummekkattu Mana, Mukundapuram, Thrissur
Blogger
https://devaayanamblog.blogspot.com › 2016/08 › sre…
9 Aug 2016 — The Pambu Mekkattu is spread over six acres of land with five “Serpant Kavus” (Kavu is sacred garden). The Pambummekkattu land is kept in its …
Pambummekkattu Mana situates at Vadama near Mala Town, Mukundapuram Taluk in Thrissur District, Kerala. It is believed that the divine presence of “Vasuki” and “Nagayakshi” are there in the “Kizhakkini” of Pambummekkattu Mana. Daily poojas are offered to Nagaraja and Naga Yakshi residing in the eastern portion of Mekkattu Mana. The Pambu Mekkattu is spread over six acres of land with five sarpakavu. The Mekkattu Namboodiri’s also treated the outsiders but now due to the advance in medical science people rarely comes for it.
XXXXX
மஹாராஷ்டிரா பாம்பு அதிசயம் SHETPAL SNAKE WONDER
புனே நகரியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் சேட்பால் என்ற கிராமம் இருக்கிறது. சுமார் 2600 குடிகள் . எல்லார் வீடுகளிலும் நல்ல பாம்புகள் ஆடி, ஓடித் திரிகின்றன. . குழந்தைகள் வீட்டில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவது போல செல்லும். யார்க்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை; பாம்பு கடித்து இறந்த சம்பவமும் இல்லை
A place called Shetpal is located around 200 kilometres from Pune, Maharashtra, in the Solapur district. Cobra snakes have a permanent residence in every house in this community; they are venerated every day in every heart and home!
Shetpal, also known as Shetphal, is a hamlet in the Mohol taluka of the Solapur district of Maharashtra. The nearest town to Shetpal is Kurduvadi, which is around 22 kilometres away. It is the town for all its main commercial activity..
— SUBHAM—–
TAGS– மன்னார் சாலை, பாம்பு வழிபாடு, சர்ப்ப காவு, நாகராஜா, நாக யக்ஷி, உருளி, குழந்தைப் பேறு , நாகா தோஷம், நாகர் கோவில் , மகாராஷ்டிரம் , பாம்பு வீடு, வலிய அம்மா