

Post No. 12,734
Date uploaded in London – – – 18 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PART 23-Slokas 74, 75, 76
SLOKA 74
पद्माकरं दिनकरो विकचीकरोति
चन्द्रो विकासयति कैरवचक्रवालम् ।
नाभ्यर्थितो जलधरोऽपि जलं ददाति
सन्तः स्वयं परहिते विहिताभियोगाः ॥ 74॥
பத்மாகரம் தினகரோ விகசீ கரோதி
சந்த்ரோ விகாஸயதி கைரவசக்ரவாலம் |
நாப்யர்திதோ ஜலதரோஅ பி ஜலம் ததாதி
ஸந் தஹ ஸ்வயம் பரஹிதே விஹிதாபியோகாஹா —74|
குளத்தில் உள்ள தாமரை மலர்களை சூரியன் தானாகவே மலரச் செய்கிறான் ;
சந்திரனும் தன் ஒளியால் அல்லி மலர்களை தானாகவே மலரச் செய்கிறான் ;
மேகங்களும் யாரும் கேட்காமலே மழையைக் கொட்டுகிறது. அதே போல நல்லவர்கள், மற்றவர்களின் நலனுக்குத் தாமாகவே உதவுகின்றனர்
74. The sun causes the pool of lotuses to bloom. The moon makes the host of lilies blossom. Even though unasked, the cloud gives water. Good people take efforts towards others’ welfare voluntarily.

ஆரும் வேண்டாமலே ஆதித்தன் தாமரையை
நீருள் மலர்த்து நிலாவுந்தன் –ஆரொளியால்
அல்லி மலரை அலர்த்தும் விண் நீர் வழங்கும்
நல்லோர்க்குவமை இவை நன்கு – 74
xxxx
SLOKA 75
एते सत्पुरुषाः परार्थघटकाः स्वार्थं परित्यज्य ये
सामान्यास्तु परार्थमुद्यमभृतः स्वार्थाविरोधेन ये ।
तेऽमी मानवराक्षसाः परहितं स्वार्थाय विघ्नन्ति ये
ये विघ्नन्ति निरर्थकं परहितं ते के न जानीमहे ॥ 75॥
ஏகே ஸத்புருஷாஹா பரார்தகடகாஹா ஸ்வார்தம் பரித்யஜ்ய யே
ஸாமான்யாஸ்து பரார்தம் உத்யமப்ருதஹ ஸ்வார்தாவிரோதேன யே |
தேஅ மீ மானவ ஷராக்ஷஸாஹா பரஹிதம் ஸ்வார்தாய விக்னந்தி யே
யே விக்னந்தி நிரர்தகம் பரஹிதம் தே கே ந ஜானீமஹே —.75
தன்னுடைய சொந்த நலன்களையும் தியாகம் செய்து பிறர்க்கு உதவுவோர் உயர்ந்தோர்;
தன்னுடைய சொந்த நலன்கள் பாதிக்காதபடி பிறர்க்கு உதவுவோர்சாதாரண மக்கள் ;
தன்னுடைய சொந்த நலன்களுக்காக பிறர் நலன்களைக் கெடுப்போர் கீழ்த்தர மக்கள் ;
எந்தவிதக் காரணமும் இல்லாமல் மற்றவர்களைக் கெடுப்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்றே தெரியவில்லை
75. Those who enable the welfare of others, giving up their own good, are noble people. Common people are those who take up enterprises that help others without conflicting with their own good. Human ogres are those who ruin public good for their own benefit. We know not what to call those who ruin others’ welfare for no purpose.
தங் குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறுவும்
வெங்குறை தீர்விப்பார் மேன் மக்கள் – தங்குறை தீர்
வுள்ளிப் பிறர்க்குஉ று வும் வெங் குறை உள்ளுவார்
எள்ளும் இடை மக்கள் எஞ்ஞான்றும் – கள்ளமுடன்
தங் குறை தீர்வுள்ளித் தவிரார் பிறர் குறையைப்
பொங்கும் கீழ்மக்கள் பொருந்து குறை – தங்களுக்
கில்லை என்றாலும் பிறர்க் கதை யெய்து விப்பார்க்
கில்லை யொரு பெயரும் இங்கு — 75
Xxxxxx
क्षीरेणात्मगतोदकाय हि गुणा दत्ताः पुरा तेऽखिलाः
क्षीरोत्तापमवेक्ष्य तेन पयसा स्वात्मा कृशाणौ हुतः ।
गन्तुं पावकमुन्मनस्तदभवद् दृष्ट्वा तु मित्रापदं
युक्तं तेन जलेन शाम्यति सतां मैत्री पुनस्त्वीदृशी ॥ 76॥
க்ஷீரேணாத்மகதோதகாய ஹி குணா தத்தாஹா புரா தேஅ கிலாஹா
க்ஷீரோத்தாபம் அவேக்ஷ்ய தேன பயஸா ஸ்வாத்மா க்ருஶானௌ ஹுதஹ |
கந் தும் பாவகம் உன்மனஸ்ததபவத்த்ரு ஷ்ட்வா து மித்ராபதம்
யுக்தம் தேன ஜலேன ஶாம்யதி ஸதாம் மைத்ரீ புனஸ்த்வீத்ரு ஶீ –76
(பால் பொங்குதலைக் கண்ட பர்த்ருஹரி நல்ல நண்பர்களுக்கு அந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டுக் காட்டுகிறார்
முதலில் பால் , தன் நல்ல குணங்கள் அனைத்தையும் தண்ணீருக்குக் கொடுத்துவிட்டது
பால் பொங்குவதை பார்த்தவுடன் தன்னுடைய தண்ணீரை எல்லாம் கொடுத்து ஆவியாகிப் போகிறது; இதற்கு இந்த தீ தான் காரணம் என்ற கோபத்தால் பொங்கி நெருப்பை அணைக்கிறது உடனே பொங்கும் பாலில் நீரை விட்டால் கோபம் அடங்கி விடுகிறது; இப்படித்தான் நல்ல நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவுவார்கள்
76. At first, all its qualities were given by milk to the water in itself. Seeing the boiling (suffering) of milk, water sacrificed itself to fire (evaporated). Seeing its friend’s difficulty, the milk rose to immolate itself in fire, but when united with water it cooled down. Such (always helping each other in distress) is the friendship of good people.
தன்னிடத்திலே கலந்த தண்ணீர்க்குத் தீம் பால் தன்
இன் குணங்களெல்லாம் ஈந்ததனால் — அந்நீரும்
வெப்பத்தால் பால்படும் மா வேதனையைக் கண்டழ லில்
ஒப்பி விழுந்தே ஒடுங்குமால் – இப்புதுமை கண்ட
பால் தானுந்தன் காதலுறு நண்பனுடன்
மண்டழ லில் வீழுங்கால் மற்று நீர் அண்டிவந்து
சேருவதால் வெங்கோபம் தீரும் இதுபோலாம்
சீரியர் செய் நட்பின் திறம் – 76

—subham —
Tags- Nitisataka, Bhartruhari, part 23, slokas 74, 75, 76