திப்பு சுல்தான் தாக்கிய ராமர்  கோவில் — Part 10 (Post No.12,745)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,745

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 10

கோவில் எண் 9 – திருப்பரையார் அல்லது த்ருபிரயார்   ராமர்  கோவில்

இந்தக் கோவில்  குருவாயூர் அல்லது திருச்சூரிலிருந்து 25  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவில் தோன்றிய வரலாறு , சிலைகள் நிறுவிய வரலாறு எல்லாம் சுவையான அடிப்படையில் அமைந்துள்ளன; அது மட்டுமல்லாமல் 6 அடி உயர் ராமர் (விஷ்ணு) சிலையின் கையில் அட்சமாலை இருப்பது இன்னும் ஒரு வியப்பான விஷயம்.

கடற்கரையில் ஒதுங்கிய 4 சிலைகளை, வக்கையில் கைமால் என்ற உள்ளூர் பிரபுவிடம் மீனவர்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அவை ராம லட்சுமணபரத , சத்ருக்கனன் என்ற நால்வரின் சிலைகள் ஆகும். அவைகளை அவர் 4 இடங்களில் பிரதிஷ்டை செய்து கோவில் உருவாக்க உதவினார். இப்படி நான்கு/ நாலு

இடங்களில் கோவில்கள் உண்டானதால் அவை நாலம்பலம் FOUR TEMPLES  என்று அழைக்கப்பட்டன.

அவை அமைந்த இடங்கள் :

ராம பிரான் – திருப்பரையார் கோவில்

பரதன் – இரிஞ்சல குடா  கூடல் மாணிக்கம் கோவில்

திருமூழிக்களம் – லட்சுமணன் கோவில்

பையம்மல் – சத்ருக்னன் கோவில்

மலையாள பக்தர்கள் ஆனி / கற்கடக மாதத்தில் இந்த 4 கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

த்ருப்ரையாரில் எங்கே கோவிலை அமைப்பது என்று ஜோதிடர்களுடன் ஆராய்ந்தபோது ஒரு அசரீரி கேட்டது (ஆளற்ற குரல் =  அ +  சரீரம் = BODYLESS  VOICE ) . மயில் எங்கே பறக்கிறதோ அதன் கீழ் கோவிலைக் கட்டவும் என்றது அக்குரல். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் மயில் வரவில்லை. ஒருவர் அங்கே மயில் தோகையுடன் வந்து நின்றார் ஓஹோ! இறைவன் ஓ கே O K சொல்லிவிட்டான் என்று சிலையைப் பிரதிஷ்டை செய்த்தனர். ஆனால் அதன் பிறகு உண்மையிலேயே ஒரு மயில் சற்று தள்ளிப் பறந்து சென்றது. உடனே அங்கே பலிக் (BALI STONE) கல்லை நிறுவினார்கள். அது ஆடிக்கொண்டே இருந்தது. அதாவது நிலையாக நிற்கவில்லை. கேரளத்தில் அபூர்வம் நிகழ்த்தும் சித்தர்கள் , சாமியார்கள் உண்டு. வில்வ மங்கலம் சாமியார் நாரணத்து ப்ராந்தன் (நாராயண பைத்தியக்காரன் ) ஆகியோர் மிகவும் பிரபலம் ஆனவர்கள். பைத்திய (ப்ராந்தன்) சித்தர்,  கோவில் தந்திரியை அழைத்து மந்திரங்களை சொல்லி ஒரு ஆணியை அடிக்கச் சொன்னார். கல்லும் ஆடாது , அசங்காது நின்றது. இன்றும் ஆணியைக் காணலாம் .

ஒரு முறை வில்வமங்கல சாமியார் வந்த போது ஸ்ரீ தேவியும் பூதேவியும் கோவிலின் கிழக்கு நுழைவாயிலைத் தவிர்த்து மேற்கு வாசல் வழியாக வந்ததைக் கண்டார். பின்னர் அவர் அந்தகக் கதவுகளை மூடச் சொல்லிலிவிட்டு ஸ்ரீதேவி ,பூதேவீ  விக்கிரகங்களை நிறுவினார்.

எல்லா வகையிலும் விநோதங்கள் நிறைந்த கோவில் இது; மூலஸ்தானம் ஒரு பக்கம்; பலி-க்கல் இன்னொரு பக்கம். கோதண்ட ராமர் என்றால் வில் மட்டும் இருக்க வேண்டும்; ஆயினும் இங்கு இருப்பதோ நாலு கைகளை உடைய விஷ்ணு; அதிலும் ஒரு கையில் பிரம்மா போல அட்ச மாலை. சங்கு சக்கரம், வில்/கோதண்டம் மற்றும் மாலை!! .அருகில் பெருமாள் போல ஸ்ரீ , பூ தேவிகள்.

ஆயினும் கோவிலில் ராமாயண மரச் சிற்பங்கள் நிறைந்திருப்பதால் இதை ராமர் கோவில் என்று சொல்லுவதும் பொருத்தமே; அது மட்டுமல்லாமல் பழங்கால ஓவியங்கள் அப்படியே இருக்கினறன .

இன்னொரு வினோதம் என்ன வென்றால் தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் , கணபதி சந்நிதிகள்  இருப்பதாகும்.

இவ் வாறு பல அம் சங்கள் கொண்ட இறைவனைப் பலரும் மும்மூர்த்திகளின் வடிவமாகவே காண்பதுண்டு.

வெடி வழிபாடு

ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒரு வினோத வழிபாடு, ஒரு விசித்திர பிரசாதம் இருப்பது  இந்து மதத்தின் சிறப்பு லோகோ பின்ன ருசிஹி = உலகம் பலவிதம் என்பது காளிதாசனின் வாக்கு. இங்கு வெடிகளை வெடித்து காணிக்கை/ நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்; ஆதிகாலத்தில் வன விலங்குகள், பக்தர்களின் பாதைகளில் குறுக்கிடக்கூடாது என்பதற்காக இந்துக்கள் செய்த வேலை இது. இப்போது மனித விலங்குகள் அதிகம் ஆகிவிட்டதால் வன விலங்குகள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன.

தலை திரும்பிய ராம பிரான்

பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையின் தலை பக்கவாட்டில் திரும்பியவாறு இருந்தது. கணிப்பாயூர் நம்பூதிரி வந்து தலையைத் திருப்பிவைத்தார் மேலே பட்டுத்துணிகளைப் போட்டுவிட்டு வெளியே வந்தார்; ராமர் மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டார் காலப்போக்கில் ஒரிஜினல் ராமர் விக்கிரகம் தேய் மானம் அடைந்தது . ஜோதிடர்களை அழைத்து ப்ரச்னம் போட்டுப்பார்த்தார்கள்; சிலையை மாற்றாதே என்ற உத்தரவே ப்ரச்னத்துக்கு (ப்ரஸ்னம் என்றால் கேள்வி) விடையாக வந்தது உடனே அர்ச்சகர்கள் புது வழி கண்டு பிடித்தனர் பஞ்ச லோகத்தில் (ஐம்பொன்) ஒரு ஆடை போல செய்து மேலே வைத்துவிட்டனர். அதிலுள்ள முகம் மிகவும் அழகாக அமைந்துவிட்டதால், பக்தர்கள் வைத்த கண்ணை எடுக்க மாட்டார்கள். அவ்வளவு அழகு ! கொள்ளை அழகு !!

திப்பு சுல்தான் தாக்குதல்

கர்நாடகத்தை ஆண்ட ஹைதர் அலி, அவனது மகன் திப்பு சுல்தான் ஆகிய இருவரும் தாக்காத கோவில்கள் மிகச் சிலவே. இந்தக் கோவிலும் மதவெறியன் திப்புவின் வாளுக்குத் தப்பவில்லை. ராமரின் 4 கைகளில் ஒன்றை வெட்டினான்; ரத்தம் கொட்டியது. உடனே பயந்து போய் என்ன செய்வதென்று திகைத்தான். அறிஞர்களின் கூற்றுப்படி வணங்கிவிட்டு கோவிலுக்கு காணிக்கையும் கொடுத்துவிட்டுச் சென்றான் (see page 131 of Temples and Legends of Kerala, K R Vaidyanathan, B V Bhavan, Bombay, 1982).

நமஸ்கார மண்டபமும் நவக்கிரக சிற்பங்களும்

கோவிலின் நடுப்பகுதி வட்டவடிவில் அமைந்தது. கூம்பு வடிவ கோபுரம். நமஸ்கார மண்டபம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது 24 பிரிவுகள் உள்ளன. அங்கே நவக்  கிரக  மரச் சிற்பங்களும் புராதன ஓவியங்களும் உள .

ஸ்ரீ கோவிலில் ராமாயண சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன .

கூத்து ஆட்டம்

அபிநயங்கள் மூலம் , வாக்கியங்கள் வசனங்கள் இல்லாத கூத்து ஆட்டம் இங்கே நடப்பது கோவிலின் மற்றொரு சிறப்பாகும் ; விருச்சிக மாதத்தில் (நவம்பர் மத்தி ) 12 நாட்களுக்கு கூத்து நடக்கும்; அனுமான் – சீதை சந்திப்பு , மோதிரம் (அங்குலீயம்) கொணர்தல் முதியன கருப்பொருள் ஆக இருக்கும் .

வருடத்தில் இரண்டு  பெரிய விழாக்கள் நடைபெறும்; விருச்சிக (நவம்பர்) மாத ஏகாதசி விழா , மீன மாத (மார்ச்- ஏப்ரல்) பூரம் விழா. ஏகாதசி அன்று ஐயப்பன் பவனி, பெருமாள் பவனிகள்  ஏராளமான யானைகளுடன் நடக்கும்

இந்தக்கோவில் ஜாமோரின் ZAMORIN என்ற இந்து மன்னர்களின் கீழ் இருந்து 1719- ம் ஆண்டு ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது  . பின்னர் திப்பு சுல்தான்,  டச்சுக்காரர்களை  விரட்டி அடித்ததான் . பின்னர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், சுல்தானைத் தோற்கடித்தனர்  கொச்சி மன்னர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து  கோவிலைப் பெற்றனர். இப்போது கொச்சி தேவஸ்வம் போர்டின் கீழ் வந்துவிட்டது .

–subham—

Tags- ராமர் கோவில், கேரளம் , திருப்பறையார் , நாலம்பலம் ராமாயண சிற்பங்கள் ,திருப்ரையார், திப்பு சுல்தான்

Leave a comment

Leave a comment