ஸ்டோன் பொய் பேசாது (‘Stones will never lie’) Post N0.12,748)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,748

Date uploaded in London –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 11 

ச.நாகராஜன் 

டிக்கட் ப்ளீஸ்?

பிரபல எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டன் (G.K.Chesterton) (பிறப்பு 29-5-1874 மறைவு 14-6-1936) ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு பத்திரிகையை அவர் படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் வந்த டிக்கட் பரிசோதகர், ‘டிக்கட் ப்ளீஸ்?’ என்று கேட்டார்.

உடனே செஸ்டர்டன் தனது பையில் தேட ஆரம்பித்தார்.

 டிக்கட் பரிசோதகரோ, “பரவாயில்லை, உங்களிடம் டிக்கட் இருக்கும் என்று எனக்குத் தெரியும். திரும்பி வரும்போது டிக்கட்டை பஞ்ச் செய்கிறேன்” என்றார்.

செஸ்டர்டன், “அதில்லை, நான் எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரிய வேண்டுமல்லவா, அதற்கு டிக்கட் வேண்டுமே” என்றார்.

ஸ்டோன் பொய் பேசாது (‘Stones will never lie’)

ஏ.எஸ்.பி. ஐயர் (A.S.P. Iyer) புகழ் பெற்ற எழுத்தாளர், பிரபல நீதிபதியாகவும் திகழ்ந்தவர். (பிறப்பு 26-1-1899 மறைவு 1963)

அவர் கேரளாவில் பிறந்தவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

அவர் ஆக்ஸ்போர்டில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சரித்திரப் பேராசிரியாக இருந்தவர் திரு ஸ்டோன் என்பவர்.  அசோக மன்னரின் ஸ்தூபங்களைப் பற்றி அவர் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.

அசோக மன்னன் அந்த ஸ்தூபங்களை நிறுவவே இல்லை என்றும் அவர் புகழைப் பரப்ப விரும்பிய ஒருவர் அந்த ஸ்தூபங்களில் அவர் பெயரைப் பொறித்து விட்டார் என்றும் ஸ்டோன் கூறினார். இதைப் பொறுக்கமாட்டாத ஏ.எஸ்.பி. ஐயர் தனது இருக்கையிலிருந்து எழுந்தார்.

பேராசிரியர் ஸ்டோனை நோக்கிச் சுட்டிக் காட்டிய வண்ணம் “கற்கள் எப்போதுமே பொய் சொல்லாது, இந்த ஸ்டோன் ஒருவேளை சொல்லலாம்” (Stones will never lie although this Stone may)

என்று கூறி விட்டு அவர் அமர்ந்தார்.

ஆதாரம் : 16-8-2000 அன்று திரு கே.வெங்கடராமன் என்பவர் ஆங்கில நாளிதழான தி ஹிந்துவில் எழுதிய கடிதம்.11-8-2000 அன்று ‘Ashoka’s edict’ என்று பிரசுரமான கடிதத்திற்கு அவர் இப்படி பதில் எழுதியிருந்தார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை!

காலம் சென்ற பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒரு சமயம் பாரிஸ் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைப்பொருள் கண்காட்சிக்குச் சென்றிந்தார். அங்கு கலையம்சம் பொருந்திய ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். அப்போது அவரிடம், “ஓவியங்களைப் பார்க்கிறீர்களே, அவற்றைப் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்ட போது அவர் பெருமூச்சு விட்டபடி கூறினார் இப்படி: “எனது வாழ்க்கை முழுவதும் கழிந்த பின்னர் நான் புரிந்து கொண்டது எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை என்பதைத் தான்!” (With a sigh he said, “It has taken me all my life to understand that it is not necessary to understand everything.”)

ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega என்ற நூல்.

***

Leave a comment

Leave a comment