

Post No. 12,755
Date uploaded in London – – – 23 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Sloka 91
रविनिशाकरयोर्ग्रहपीडनं गजभुजङ्गमयोरपि बन्धनम् ।
मतिमतां च विलोक्य दरिद्रतां विधिरहो बलवानिति मे मतिः ॥ 91॥
சூரியனையம் சந்திரனையும் (கிரகணத்தின்போது) ராகு பீடிப்பதிலிருந்தும் , யானைகளையும் பாம்புகளையும் ( மனிதர்கள்) பிடித்து அடைப்பதிலிருந்தும் அறிஞர்களை வறுமை பீடிப்பதிலிருந்தும் விதிதான் வலிமையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.—91
91. Seeing the eclipse of the sun and the moon by the planet Rahu, the captivity of the elephant and the snake and the poverty of intelligent people, my conclusion is: Oh, Fate is mighty!
ரவினிஶாகரயோர்க்ரஹபீடனம்
கஜபுஜங்கமயோரபி பந்தனம் |
மதிமதாம் ச விலோக்ய தரித்ரதாம்
விதிரஹோ பலவானிதி மே மதிஹி || 1.91 ||
XXXXX
Sloka 92
सृजति तावदशेषगुणाकरं पुरुषरत्नमलङ्करणं भुवः ।
तदपि तत्क्षणभङ्गि करोति चेदहह कष्टमपण्डितता विधेः ॥ 92॥
மனிதர்களுள் மாணிக்கத்தைப் படைத்துவிட்டு பூமிக்கே ஆபரணத்தை அணிவித்துவிட்டு , அவனை அல்பாயுசு ள் சாக வைத்தால் அந்த பிரம்மாவின் விவேகத்தை என்னவென்று சொல்லுவது? –92
92. Having created a gem of a man, an adornment to the earth and a repository of all virtues, yet if the Creator makes him short-lived, alas, woe to His indiscretion.
ஸ்ருஜதி தாவதஶேஷகுணகரம்
புருஷரத்னம் அலங்கரணம் புவஹ |
ததபி தத்க்ஷணபங்கி கரோதி
சேதஹஹ கஷ்டம் அபண்டிததா விதே ஹே || 1.92 ||
புவிக்க லங்காரப் புருஷனை உண்டாக்கித்
தவிக்கச் செய் தெய்வம் சால்பு தவிக்கும் அவனை
அழிக்கின்ற தந்தோ அதற்குக்
கவனம் குறைவோ கழறு— 92
XXXXX
Sloka 93
पत्रं नैव यदा करीरविटपे दोषो वसन्तस्य किं
नोलूकोऽप्यवलोकते यदि दिवा सूर्यस्य किं दूषणम् ।
धारा नैव पतन्ति चातकमुखे मेघस्य किं दूषणं
यत्पूर्वं विधिना ललाटलिखितं तन्मार्जितुं कः क्षमः ॥ 93॥
பத்ரம் நை யதா கரீரவிடபே தோஷோ வஸந் தஸ்ய கிம்
நோ லூகோஅ ப்யவலோ கதே யதி திவா ஸூர்யஸ்ய கிம் தூஷணம் |
தாரா நை வ பதந்தி சாதகமுகே மேகஸ்ய கிம் தூஷணம்
யத்பூர்வம் விதினா லலாடலிகிதம் தன்மார்ஜிதும் கஹ க்ஷமஹ || 1.93 ||
93. When the Karira tree’s branch has no leaf, what is the fault of the spring? If the owl does not see by day, what guilt is there on the Sun’s part? If the shower does not fall into the mouth of the Chataka, what is the cloud’s fault? Who can erase what is written on one’s forehead by Fate beforehand.
கரீர மரத்தின் கிளைகளில் ஒரு இலையும் இல்லாவிட்டால் வசந்த காலத்தின் பயன் தான் யாது? ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது;அதற்கு சூரியன் மீது பழி சுமத்த முடியுமா? மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது ; ஆயினும் சாதகப் பறவையின் வாயில் ஒரு சில துளிகள்தான் விழுகின்றன . இது மேகத்தின் குற்றமா? ஒருவரின் நெற்றியில் (பிரம்மா) எழுதியதை யார்தான் மாற்ற முடியும் ?
சாதகத்தின் வாயில் சாரும் சில துளி போல்
பாதகமின்றி விதி பாலிக்கும் — ஆதலினால்
இன்னாருக்கின்னபடி என்ற தெய்வ வல்லமையின்
பின்னாருக் காராலென் பேசு
XXXXX
Sloka 94
नमस्यामो देवान्ननु हतविधेस्तेऽपि वशगा
विधिर्वन्द्यः सोऽपि प्रतिनियतकर्मैकफलदः ।
फलं कर्मायत्तं यदि किममरैः किञ्च विधिना
नमस्तत्कर्मभ्यो विधिरपि न येभ्यः प्रभवति ॥ 94॥
தேவர்க்கு வந்தனம் செய்கின்றேன் அன்னாரும்
ஓவுதலில் தெய்வத்திற் குட்பட்டு — மேவுதலால்
தெய்வம் வணங்கு கின்றேன் தெய்வமூழி ன்படியே
செய்வதால் ஊழ் வணக்கம் செய்கின்றேன் – எய்துபலன்
ஊழின் படியதனால் உம்பரால் தெய்வத்தால்
சூழும் பயனில்லை தொல்வினையில்– ஆழும்
அமரரும் தாண்டற் கரிதா மூழ் தன்னை
அமர்ந்து தொழுதிடுவேன் யான்–94
நமஸ்யாமோ தேவான்னனு ஹதவிதேஸ்தேஅ பி வஶகா
விதிர்வந் த்யஹ ஃ ஸோஅபி ப்ரதிநி யதகர்மைகபலதஹ |
பலம் கர்மாயத்தம் யதி கிம் அமரைஹி கிம் ச விதினா
ந மஸ்தத்கர்மப்யோ விதிரபி ந யேப்யஹ ப்ரபவதி || 1.94 ||
94. We would salute the gods, but they too are under the control of accursed Fate. Brahma is venerable, yet, He too, gives only the results assigned to each action. Results depend on action. So what is the use of gods and Brahma? Salutations to that action, Karma, which even Brahma cannot overpower.
நாம் கடவுளுக்கு வணக்கம் செலுத்துகிறோம்;ஆனால் அவர்களும் விதிக்குக் கட்டுப்பட்டவர்களே ; பிரம்மா வணக்கத்திற்கு உரியவரே ; ஆயினும் அவரும் அவரவர் செயலுக்கு ஏற்ற பலனைத் தரும் கணக்குப்பிள்ளை தான் செயலுக்கு ஏற்ற பலனே கிடைக்கும்; பிரம்மா , கடவுள் ஆகியோரால் என்ன உபயோகம்? கர்மா பலனுக்கு வணக்கம் போடுவோம்; பிரம்மாவும் அதை மீற முடியாது ( நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்பதை வலியுறுத்த இவ்வளவையும் சொல்கிறார்—94


—subham—
Tags- விதியே வலியது , விதி, வலிமை, பர்த்ருஹரி 91, 92, 93, 94, ஸ்லோககங்கள் , Nitisataka, Part 27சாதகப் பறவை