.jpg)
Post No. 12,775
Date uploaded in London – – – 28 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
சரகர் , சுஸ்ருதர் (Charaka and Susruta) என்ற இரண்டு பெயர்களில் உள்ள ஆயுர்வேத நூல்கள் உலகம் முழுதும் பிரசித்தமானவை; இப்போது இவர்களுடைய சிலைகளை வெளிநாடுகளிலும் காணலாம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் மருத்துவக் கல்லூரியில் சுஸ்ருதர் சிலை இருக்கிறது. இந்தியாவில் ஹரித்வார் நகருக்கு அருகில் கங்கை நதிக்கரையில் சரகர் சிலை இருக்கிறது
நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் சரக சம்ஹிதை என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத நூலை அவர் இயற்றவில்லை ; அதன் ஆசிரியர் அக்னிவேஷ் என்பவர் ஆவார்.சரகர் அதை முறையாக தொகுத்தும் வகுத்தும் கொடுத்தார் (Edited).
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை ஆண்ட குஷான வம்சத்தது கனிஷ்கர் காலத்திலேயே இவர் பெயர் பிரபலம் ஆகிவிட்டது இவரை கி.மு 600 ல் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர் இது ஒரு மிகப்பழைய மருத்துவ நூல் என்பது அவர்களுடைய கருத்து .
இதற்கு அறிஞர்கள் 3 காரணங்களை முன்வைக்கின்றார்கள் :
1.புத்தரைப் பற்றியோ அவரது மதத்தினர் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை.
2. நூலின் உரைநடை புத்தருக்கு முந்திய பிராமண நூல்கள், உபநிஷத நூல்கள் நடையில் உள்ளன .
3. வேத கால கடவுளரை மட்டும் குறிப்பிடும் இந்த நூலில் புராணக் கதைகளைக் காண முடியாது.
சரக சம்ஹிதையின் மூல நூலில் 120 அத்தியாயங்கள் இருந்தன; அவற்றை எட்டு பிரிவுகளாகப் பிரித்துவைத்தார். துரதிருஷ்டவசமாக அவற்றின் பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். ஆறாவது பிரிவின் 17 அத் தியாயங்களும் ஏழாவது, எட்டாவது அத்தியாயங்களும் கிடைக்கின்றன . த்ருதபலா என்பவர் பல விஷயங்களை பிற்சேர்க்கையாக சேர்த்துள்ளார்.
ஆயுர்வேத நூல்களில் காணப்படும் எட்டு பிரிவுகளில் 6 பிரிவுகளை இவருடைய நூல்களில் காண முடிகிறது ; அவை உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகள், விஷ முறிவு மருத்துவம், மனநோய்கள், குழந்தை மருத்துவம், புத்திளமை பெறுதல் (Rejuvenation) , பாலியல் (Sexology) ஆகியன உள்ளன. அறுவைச் சிகிச்சையும் , கண்- காது மூக்கு நோய்ப்பிரிவும் கிடைக்கவில்லை.
நமக்குக் கிடைத்த பகுதிகளில் உடற்கூறு (Anatomy), நோய்கள் தோன்றும் முறை , அவைகளுக்கான சிகிச்சை , மருந்துகள், உபகரணங்கள் , மருத்துவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் முதலியன விவாதிக்கப்படுகின்றன. சாப்பிட வேண்டிய உணவுகள் பத்தியத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் (Diets) ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. கரு, குழந்தை (Embryology) உருவாதல், மருத்துவர்களுக்குப் பயிற்சி ,முதிலியவற்றையும் நூல் விவரிக்கிறது
இந்த நூலிலிருந்து இந்துக்களின் பழங்கால நம்பிக்கைகளையும் அறிகிறோம்.
xxxxxx

சுஸ்ருத சம்ஹிதை
சுஸ்ருதர் என்ற மருத்துவர் சுஸ்ருத சம்ஹிதை என்னும் நூலின் ஆசிரியர். இவருடைய தந்தை விசுவாமித்திரர்; அவர் திவோதாச தன் வந்திரி என்பவரின் மாணவர் ; திவோதாஸர் காசி ராஜ்யத்தின் அரசர்..இவருடைய காலம் கி.மு 1000 என்பது அறிஞர்களின் கருத்து. இவர்களுடன் சம்பந்தப்பட்ட பெயர்கள் எல்லாம் வேத காலப் பெயர்கள் .
முன் காலத்தில் யுத்தம் செய்யும் அரசர்கள், படைகளுடன் டாக்டர்களையும் அழைத்துச் செல்லுவார்கள். காயமடைந்தவர்களை குணப்படுத்துவதும் மருந்து கொடுப்பதும் அவர்களுடைய பணி . சுஸ்ருதர் மிகப்பெரிய சர்ஜன் (Surgeon) ; அதாவது அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் கூறும் ஆபரேஷன் அறை உபகரணங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். லண்டன் முதலிய நகரங்களில் அதன் அச்சுக்களை (Replicas) காட்சியில் வைத்துள்ளனர். செயற்கை மூக்கு பொருத்தும் ஆபரேஷனில் அவர் வல்லவர்; அவர்தான் இதை முதலில் உலகிற்குக் கற்பித்தவர் ஆவார்.
நூலின் அமைப்பு
சுஸ்ருத சம்ஹிதை நூலில் 186 அத்தியாயங்கள் உள்ளன. அவைகளை கீழ்கண்ட ஆறு பிரிவிவுகளாக பிரித்துள்ளனர்.
1.சூத்ர என்னும் முதல் 46 அத்தியாயங்களில் சர்ஜரி Surgery என்னும் அறுவைச் சிகிச்சை , உணவு, பான வகைகள் ஆகியவற்றை அறியலாம்.
2.நிதான என்னும் தலைப்பின் கீழ் 16 அத்தியாயங்கள் எந்தெந்த நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும் என்பதை விவரிக்கின்றன
3. சாரீர என்னும் பிரிவில் 10 அத்தியாயங்களில் பிரபஞ்ச உற்பத்தி, , கர்ப்பத்தில் கரு வளருதல், பெண் கர்ப்ப வளர்ச்சி, உடற்கூறு இயல் முதலியன உள்ளன.
4.சிகிச்சை என்னும் பிரிவில் 40 அத்தியாயங்கள் அறுவைச் சிகிச்சை பற்றிப் பேசுகின்றன.
5.கல்ப பிரிவில் எட்டு அத்தியாயங்கள் விஷத்தின் Toxicology தாக்கத்தை விவரிக்கின்றன.
6. உத்தர என்னும் கடைசி பிரிவில் 66 அத்தியாயங்களில் கண், காத்து, மூக்கு, தொண்டை நோய்களை கண்டறிதல், குழந்தை நோய் சிகிச்சை, கெட்ட ஆவிகளால் ஏற்படும் பிரச்சினைகள், பொதுவாக உடலுக்குள் ஏற்படும் நோய்கள் முதலியன பற்றி விளக்குகின்றன.
யார் ஒருவர் சர்ஜன் ஆக விரும்புகிறாரோ அவர் மனித உடலின் உட்பகுதியை அறிந்திருக்க வேண்டும் இதற்காக இறந்தவரின் உடலை அறுத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.ஏராளமான ஆபரேஷன் கருவிகளை வருணிக்கிறார் . ஆபரேஷன் செய்யும்போதும், பின்னரும் செய்யவேண்டிய அறுபது வகையான உத்திகளையும் சொல்கிறார்.. சிறுநீரக கற்களை அகற்றும் முறையையும் விளக்குகிறார். ஒரு மனிதனின் உடல் நோவினைப் போக்குவதைவிட உலகில் வேறு எதுவும் புண்ணியம் ஆகாது என்றும் வலியுறுத்துகிறார்.
உலகிலுள்ள ஏனைய மருத்துவ நூல்களில் இவ்வளவு முற்போக்கான சிந்தனை இல்லை என்பதை பார்க்கையில் பாரத நாட்டின் மருத்துவத்துறை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மிக முன்னேறிய நிலையில் இருந்தது தெரிகிறது.
–சுபம்—
Tags- சரகர், சுஸ்ருதர், சம்ஹிதை, சிலைகள், சர்ஜரி,