
DEVI IN CHENGANNUR
Post No. 12,774
Date uploaded in London – – – 28 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
செங்கன்னூர் பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி –17
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 17
PART 3 OF CHENGANNUR TEMPLE STORIES
கதை 8
ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம் சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார்.அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே , அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா ! திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம் சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின; இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது; எப்படியாவது சூரிய நாராயணனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி, கடைசியில், பகவதி கோவிலில் அவரைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மன்னர் படிப்படியாக பெரிய பெரிய பதவிகளை வழங்கி கெளரவித்தார் . சூரிய நாராயணன் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது 3 முறையாவது செங்கன்னூருக்கு பகவதியைத் தரிசிக்க வந்துவிடுவார்.
கும்பகோணத்தில் ஒரு பணக்கார ராயர் இருந்தார். அவருடைய மனைவிக்கு பேய் பிடித்தது. மலையாள
மக்கள், மன நோய் வந்துவிட்டால் பேய் பிடித்து விட்டது என்றே சொல்லுவார்கள்; நம்புகிறார்கள். (ALL MENTAL DISEASES ARE ATTRIBUTED TO EVIL SPIRITS; MALAYALI APPROACH).
கும்பகோணம் ராயரும் பேயோட்டும் மந்திரவதிகளை அழைத்து ஓம் சூம் மந்திரக்காளி, மலையாள பகவதி என்றெல்லாம் மந்திரம் போட்டுப் பார்த்தார். மனைவி குணம் அடையவில்லை; அவரை ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு மதுரையில் தங்கினார். அப்போது யக்ஞவேத சாஸ்திரி என்பவரைச் சந்தித்தார்; அவர் அந்த தம்பதிகளை செங்கன்னூருக்குச் சென்று பிரார்த்தியுங்கள், குணம் ஆகிவிடும் என்றார். ராயரும் அவ்வாறே செய்தார் . கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலியும் பஜனையும் செய்தார்; அவருடைய மனைவி குணம் அடைந்தவுடன் அவர் அணிந்த நகைகளை எல்லாம் கோவிலுக்கே காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்.
கதை 10
பெருந் தச்சன் என்பவர் கேரளத்தில் உள்ள பல பெரிய கோவில்களைக் கட்டியவர் ஆவார் ; ஒரு நாள் அவர் பம்பா நதியில் படகில் செங்கன்னூருக்கு வந்தார். பிராமணர்கள் பூஜை செய்து மிஞ்சிய பூக்களும் பழங்களும் இலைகளும் நதியில் மிதந்து வந்தன . பிராமணர்களின் பக்தியைப் பார்த்த அவர், இப்படியே போனால் பிராமணர் அல்லாதோர் இறைவனை வணங்க வாய்ப்புகள் குறையும் என்று எண்ணி கோவில் கட்டுவதில் மாறுதல்களை செய்தார். பிராமணர்கள் உட்கார்ந்து வேதம் சொல்லும் முக மண்டபத்தை வழக்கத்துக்கு மாறாக தாழ்வாக கட்டினார் . இதற்குப் பின்னர் நடந்த விபத்தில் அவர் சொந்த மகனையே இழந்தார். கீழைக் கோபுரத்தின் மேல் பகுதியில் பெரும் தச்சன் வேலை செய்து கொண்டிருந்தார் ; அப்போது அவர் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதங்கள் கைதவறி விழுந்து, கீழே பணியாற்றிக்கொண்டிருந்த மகன் மீது விழுந்தன.மகன் உயிரும் பறி போனது.
பெரும் தச்சன் கட்டிய நம்பூதிரி இல்லங்களும் அழிந்து நம்பூதிரிகளின் எண்ணிக்கையும் விறல் விட்டு என்னும் அளவுக்கு குறைந்தன. தவறான முறையில் வடிவமைத்ததே இதற்குக் காரணம் என்ற பழிச்சொல்லும் அவர் மீது விழுந்தது

கோவிலின் தோற்றம்
இவ்வளவு கதைகள் பின்னனியில் இருந்தாலும் பகவதியின் கருணை எல்லையற்றது.வேண்டுவோருக்கு வரம் தரும் வரத முத்திரையுடனும் அஞ்சியோருக்கு அபயம் அளிக்கும் அபய முத்திரையுடனும் தேவி காட்சி தருகிறாள்
கோவிலில் கணேசர், நீலக்ரீவன், சண்டீசன், கிருஷ்ணர் மூர்த்திகளும் உள்ளனர். வடக்குப் பக்கத்தில் ஊட்டுப் புரா என்னும் DINING HALL டைனிங் ஹால் இருக்கிறது; கோவில் மதிலுக்கு வெளியே சக்தி குண்டம் தீர்த்தம் இருக்கிறது.
கோவில் வளாகத்தில் நிறைய அரச மரங்கள் இருக்கின்றன. மேல நடா அரச மரம் பேயோட்டுமிடமாக இருக்கிறது; சோட்டாணிக்கரா போலவே அந்த அரச மரத்தில் ஆணி அடித்தால் மன நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலி செய்வதும் குறிப்பிட்ட நாட் கள் பஜனை செய்வதும் நினைத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது..
மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ?
தேவியின் விக்கிரகம் பஞ்ச லோகம் என்னும் ஐம்பொன்னால் FIVE METAL ALLOY ஆனது. இதில் மாத விலக்கு ஏற்படுவது அதிசயமே. தேவியின் பழைய சிலை கல்லால் ஆனது; தீவிபத்தில் அது சேதம் ஆனதால் பஞ்ச லோக சிலை வைக்கப்பட்டது ;இரண்டரை அடி உயரமுள்ள விக்கிரகம் மிகவும் அழகானது !
சிவ பெருமானின் சிலையும் உருவமற்ற ஸ்வயம்பு லிங்கம்தான். ஆயினும் அந்த லிங்கத்தின் மீது அர்த்த நாரீ — பாதி ஆண்/சிவன், பாதி பெண்/பார்வதி உருவம் சார்த்தப்பட்டுள்ளது ; மூன்று அடியுள்ள அந்தக் கவசம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.
முன்னரெல்லாம் அம்மனுக்கு மாத விடாய் MENSES மாதம் தோறும் ஏற்பட்டதாகவும் இப்போது ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே ஏற்படுவதாகவும் மேல் சாந்தி தெரிவித்தார் அதி காலையில் கர்ப்பக் கிரகத்தைத் திறக்கும் அர்ச்சகர், தேவியின் உடைகளை வாரியரிடம் தருவார். அவர் அந்த உடைகளை பரிசோதித்து ஏதேனும் ரத்தக்கரைகளைப் பார்த்தால் உடனே தாழமன் மடத்துக்கு அனுப்புவார். அதுதான் கோவில் தந்திரியின் வசிப்பிடம்.; அங்குள்ள பெண்மணி அதைப் பரிசோதித்து அது மாத விடாய் என்பதை உறுதி செய்வார்.
பின்னர் அந்த உடையை கோவில் நிர்வாகம் விற்றுவிடும். அதை வாங்க போட்டா போட்டி! கடந்த காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வி வி கிரி, திருவாங்க்கூர் சமஸ்தான திவான் சி பி ராமசுவாமி ஐயர் ஆகியோர் அதை விலைக்கு வாங்கினார்கள் .
மாத விலக்கிற்குப் பின்னர் கோவிலின் மூலஸ்தானம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் . அப்போது நாலம்பலத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் சிறிய விக்கிரகத்தை வைத்து பூஜைகள் செய்வார்கள். நாலாவது நாளன்று பெண் யானையின் மீது விக்கிரகத்தை வைத்து பம்பா நதிக்கு பவனி செல்வர். இரு புறமும் விளக்குகளை ஏந்தி பெண்கள் துணையாக வருவார்கள். அங்கே நீராட்டு நடைபெறும்; தேவியின் வருகைக்காக சிவ பெருமான் யானையின் மீது அமர்ந்து காத்திருப்பார் பின்னர் சிவன், தேவி பகவதியின் உருவங்கள் கோவிலில் அவரவர் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டு வழக்கமான பூஜைகளைச் செய்வார்கள்; இதைக் காண்பது குடும்பத்தில் கல்யாண விஷயங்களை உண்டாகும் என்பதால் பெருந் திரளான பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்திருப்பார்கள் .
—SUBHAM—-
TAGS- செங்கன்னூர், கதைகள், மாதவிலக்கு, மாதவிடாய், தேவி, பகவதி, புஷ்பாஞ்சலி