திருவண் வண்டூர் வைணவ கோவில் (Post No.12,778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,778

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 18

கோவில் எண் 15 –  திருவண் வண்டூர்  கோவில்

வைணவ ஆழ்வார்கள் பாடி, மங்களாசாசனம் செய்த 13 மலைநாட்டுத் திருப்பதிகள் கேரளத்தில் இருக்கின்றன. இவைகளில் சில இப்பொழுது கேரளத்தில் இல்லை; தமிழ் நாட்டு எல்லைக்குள் வந்துவிட்டன

கேரளத்தில் உள்ள மேலும் ஒரு வைணவ ஸ்தலத்தைத் தரிசிப்போம். இதன் பெயர் வண்டூர்.

நம்மாழ்வார் பாடியதால் குறைந்தது 1200 ஆண்டு பழமையானது

செங்கன்னூரைச் சுற்றியுள்ள 5 வைணவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்தான்

மூலவர் பெயர் — பாம்பணையப்பன் ; அருமையான தமிழ்ப் பெயர். இன்னும் ஒரு பெயர் – கமலநாதன் ; மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், பெருமாள் அருள் மழை பொழிகிறார் .

தாயார் பெயர் – கமலா வல்லி நாச்சியார்

தீர்த்தம்- பம்பா நதி, பாபநாச தீர்த்தம்

விமானம் – வேதாலய விமானம்

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயருக்கும் நாரத மகரிஷிக்கும்

சிறப்பு அம்சங்கள்

கேரளத்தில் உள்ள கோவில்கள்  பெரும்பாலும் பரசுராமர், தசரத புத்திரர்கள் நால்வர் அல்லது பஞ்ச பாண்டவர் ஐவருடன் தொடர்பு கொண்டிருக்கும். இந்த திருவண் வண்டூர் கோவில் விக்கிரகத்தை பாண்டவ சகோதரர் நகுலன் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் .

பெருமாளுக்கு நைவேத்தியம் – பால் பாயசம் (தமிழ் நாட்டில் பெரும்பாலும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் )

தசாவதாரக் காட்சிகளை கோவில் சித்திரங்களில் காணலாம்

காளிங்கன் என்னும் பாம்பின் தலையில் கண்ணன் ஆடுவதைப் பார்த்தவுடன் நம்மை அறியாமலே பாரதியாரின் ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பாடல்வரிகள் நினைவுக்கு வரும் :

.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும் 

பாதத்தினைப் புகழ்வோம்

மாம்பழ வாயினிலே -குழலிசை

வண்ணம் புகழ்ந்திடுவோம்(  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

ஸ்தல புராணம் சொல்லும் அதிசய விஷயம் : நாரதர் இங்கே நாரதீய புராணத்தை இயற்றினார். அதில் 25, 000 ஸ்லோகங்கள் இருக்கின்றன

கோவிலின் தோற்றம்

பாண்டவ சகோதரர்கள் ஐவரும் வனவாசம் செய்த 13 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சென்று திருத்தலங்களை தரிசித்தனர். அந்தக் காலங்களில் ஒவ்வொரு சகோதரரும் ஏதேனும் ஒரு கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்வது வழக்கம். இதனால் பாரத நாடு முழுவதும் அவர்க சம்பந்தப்பட்ட கோவில் இருக்கும். ராமர் இலங்கை வரை சென்ற பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய்  போல யாரும் நேஷனல் ஹைவே போடவில்லை; பாலங்களும் கிடையாது ; ராமர் போன்றோர் பெரும்பாலும் கடற்கையை ஒட்டி பயணம் செய்தனர். பின்னர் ஒவ்வொரு நகர் வரும்போதும் உள்நாட்டில் நுழைவார்கள்; பின்னர் 18 ஜாதி மக்களுடன் அகஸ்தியர் என்னும் சிவில் என்ஜினீயர் தென்னாட்டுக்கு வந்தார்; அவரை சிவ பெருமானே அனுப்பியதால் விந்திய மலையை கர்வ பங்கம் செய்து– அதாவது உயரத்தை மட்டம் தட்டி –ரோடு போட்டார்; இதனால் மகாபாரத கால பலராமனும்  தம்பி கிருஷ்ணுட்ன் சண்டை போட்டு விட்டு தென்னகம் வரை வந்தார் அதே பாதையில் பாண்டவர்களும் வந்தனர் . நகுலன் இந்த இடத்திலுள்ள கோவில் சேதம் அடைந்திருப்பதைப்  பார்த்து திருப்பணிகளை செய்தார் .

ஆனால் காலத்தின் கோலம், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் செய்த விக்கிரகங்கள் அங்கு இல்லை. பூமியைத் தோண்டுகையில் புதிய பெருமாள் விக்கிரகங்களைக் கண்டுபிடித்தனர். அவைகளைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர்.; பின்னர் புதிய மண் டபங்கள் கட்டப்பட்டன.

ஒரு முறை பிரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ; நாரதர் பிரம்மாவை சாபித்த்தார் ; இதனால் அவருக்கு படைப்புத் தொழில்  சிலபஸ் Syllabus மறந்து போனது. வண்டூருக்கு வந்து இறைவனை வேண்டவே மறந்து போன பாட திட்டம்/Syllabus நினைவுக்கு வரவே மீண்டும் தனது பணிகளை செவ்வனே செய்தார்.

வடக்கில் கங்கை நதி ஒடும் இடமெல்லாம் தலங்கள் இருப்பது போல கேரளத்தில் பம்பை நதி ஓடும் இடம் எல்லாம் தலங்கள் இருக்கும். இந்த ஊர்ப் பெருமாள் பம்பை நதியின் வட கரையில் இருக்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன், இங்குவந்த நம்மாழ்வார், பெருமாளைப் பார்த்து ஆனந்தித்து ,

தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் என்று துதித்தார்.

ஏனைய கோவில்களைப் போலவே இங்கும் கணபதி சாஸ்தா , தட்சிணாமூர்த்தி, நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர் .

ஊர்ப்பெயர் விளக்கம்

திருவண் வண்டூர் பாசுரம் நாயகி- நாயகன் பாவத்தில் பாடிய பாசுரம். அதில் அன்னம், குயில் போன்ற பறவைகளைத் தூது விடுவதாக நாயகி பாடினாலும் வண்டு விடு தூதுதான் இந்த ஊரில் ஓடும் பம்பை நதி வருகிறது . ஆகையால் நம்மாழ்வார் காலத்திலேயே வண்டுகள் ரீங்காரம் மிக்க இடமாகத் திகழ்ந்தது போலும். இதோ நம்மாழ்வார் வரிகள் :–

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்*

தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்*

மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த*

ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே* 

திருவிழா

மாசி மாதம் பத்து நாட்களுக்கு விழா நடக்கும் .

குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்,  கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத் தொட்டில்கள் வாங்கி வைத்து  பிராத்தனை செய்கிறார்கள்.

–SUBHAM-

TAGS – பம்பா நதி, திருவண் வண்டூர், நம்மாழ்வார், நகுலன்

Leave a comment

Leave a comment