.jpg)
Post No. 12,783
Date uploaded in London – – – 30 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
.jpg)
வைக்கம் என்ற ஊரின் பெயரைச் சொன்னவுடன் அங்கேயுள்ள மஹாதேவர் கோவில் எல்லோருக்கும் நினைவில் வந்து வைக்கதாப்பா காப்பாத்தப்பா என்பார்கள்; தேச பக்தர்களும் மலையாளிகளும் மஹாத்தமா காந்தியையும் திருவாங்கூர் மஹாராஜாவையும் கேள ப்பனையும், மாதவன் பிள்ளையையும் கிருஷ்ண சுவாமி ஐயரையும் வாழ்த்துவார்கள்; விஷயம் தெரியாத அரை வேக்காடுகள் நம்ம ஊரு நாயக்கர் போய் புரட்சி செய்துவிட்டார் என்று நினைப்பார்கள்; திராவிட பித்தலாட்டக்காரர் பிரசாரம் மூலம் நானும் நம்ம ஊரு கன்னட தாய் மொழி ராமசாமி நாயக்கருக்கும் வைக்கத்துக்கும் சம்மபந்தம் உண்டுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். காந்திஜியின் சொற்பொழிவுகளைப் படித்த பின்னர், அவ்ருடன் வந்த மஹாதேவ் தேசாய் 1937ல் எழுதிய அருமையான புஸ்தகத்தைப் பிடித்த பின்னர், அயோக்கியர்களின் மூகத்திரை கிழிந்தது என்று சந்தோஷப்பட்டேன்
BOOK DETAILS
THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVAJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937
251 பக்கங்ககளை உடைய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தக த்தைப் படித்தபின்னர் நாயக்கர் பெயரை எங்குமே காணாதது கண்டு வியந்தேன். அந்தப் புத்தகத்தை மறு பதிப்பு செய்ய வேண்டும். புத்தகத்துக்குப் பெயர் வைத்தவர் புகழ் பெற்ற கவிஞர் சரோஜினி நாயுடு. எழுதியவரோ தேசம் முழுதும் அறிந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மஹாதேவ தேசாய்.
திராவிட விஷமிகளும் அவர்களோடு கூட்டுச் சேரும்போது மட்டும் கம்யூனிஸ்டுகளும் விஷம பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளனர். அங்கு நாயக்கருக்கு சிலை வைத்ததும் நம்ம ஊரு திராவிட விஷம்தான் ; ஆனால் மலையாளி களைக் கண்டு அந்தக் கோழைகளுக்கு பயம்; ஆகையால் கடவுள் காட்டுமிராண்டி அவனைக் கும்பிடறவன் அயோக்கியன் என்ற வாசகங்களை திராவிட வா(ந்)திகள் எழுத முடியவில்லை ;அப்படி எழுதினால் மலையாளி இந்துக்கள் சிலையை நீடிக்க விடமாட்டார்கள் என்பது நம்ம திராவிட மோசடிகளுக்குத் தெரியும்
நம்ம கன்னட நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்ததால் போயிருப்பாரு; ஆனால் நூத்தோட ஒன்னு நூத்தி ஒன்னு கணக்குதான். . ராஜாஜி பெயர் கூட புஸ்தகத்தில் இருக்கு !
xxxxxx
வைக்கம் சத்தியாகிரகம் என்றால் என்ன?
வைக்கத்தில் புகழ்பெற்ற மஹாதேவர் கோவிலிச் சுற்றியுள்ள தெருக்களில் கீழ் ஜாதி மக்கள் நடமாடவோ கோவிலுக்குள் வரவோ திருவாங்கூர் மகாராஜா தடை வித்தித்திருந்தார்; தீண்டாமை நீடித்தால் கிறிஸ்தவ முதலைகள் இந்துக்களை விழுங்கிவிடும் என்று அஞ்சிய காந்திஜியும் ஈழவா ஜாதி தலைவர் நாராயண குருவும் இந்து ஹரிஜனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கோரி சத்தியாகிரகம் செய்தனர்; நாட்டின் வடபகுதியில் இதே ஹரிஜனங்களுக்கு உரிமை கோரிய காந்திஜி வந்தவுடன் மகாராஜா மனம் மாறியது .
இதற்கெல்லாம் மூல காரணம் மஹாகவி பாரதியார் ; வைக்கம் கிராம போராட்டம் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பறையர் தீயர் (ஈழவா) புலையர் ஆகியோருக்கு விடுதலை ஈன்று பாடினார் ( எனது தந்தைக்குப் பிடித்த பாட்டும் அதுதான் ; காமராஜுடன் சிறையில் இருந்த என் தந்தை, சென்னை மவுண்ட் ரோடில் விடுதலை, விடுதலை என்ற பாரதி பாட்டினைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்; இதை அவர் என்றும் சொன்னதில்லை; என் அம்மா, என் தந்தை கைதான விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லுவார் )
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)
ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே — பாரதியார்
நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.
ஆங்கில நாளேடுகளில் வைக்கம்பற்றிய கட்டுரைகளைப் படித்தேன் ; விக்கிப்பீடியாவிலும் படித்தேன் எல்லாம் அரை வேக்காடுகள் எழுதிய அரைகுறைக் கட்டுரைகள் ; போராட்டத்தைப் பற்றிய முழுச் சித்திரம் இல்லாதபடி எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்களை எழுதியுள்ளனர். இதனால் மஹாதேவ தேசாய் எழுதிய புஸ்தகம் தமிழில் வந்தே ஆக வேண்டும்.
எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று சில விஷமிகள் காத்திருந்தனர். காந்திஜிக்கு அவர்களின் விஷமம் புரிந்தது ; டேய் பசங்களா; இது இந்துக்களின் சொந்தப பிரச்சினை; நீங்கள் போராட்டத்தில் பங்கேற்கத் தேவை இல்லை என்று சொல்லி சீக்கியர்களையும் கிறிஸ்தவர்களையும் விரட்டி விட்டார்; அமிர்தசரஸிலிருந்து இலவச உணவு கொடுக்க வந்த சீக்கியர்கள் மூட்டி முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஓ ட்டம் பிடித்தனர் இது நான் சொல்லும் புஸ்தகத்திலும் உளது; விக்கிப்பீடியாவிலும் உளது
The local Christian leadership was alienated by a statement by Gandhi asking them to keep clear from ‘a Hindu affair’ (April, 1924).[4][17] Sikh Akali activists from Amritsar had also arrived at Vaikom to establish free food kitchens to the satyagrahis (April, 1924).[17] Gandhi called for the closure of the Sikh kitchens (from Wikipedia).
எல்லோரும் கோவிலுக்குள் சம உரிமையுடன் சென்று வழிபடலாம் என்ற பிரகடனத்தை திருவாங்கூர் மகா ராஜா 1936ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிட்டார்; காந்திஜிக்கும் நாயர் சங்கத்துக்கும், நாராயண குரு சங்கத்துக்கும் நம்பூதிரிகளின் யோகஷேம டிரஸ்டுக்கும் ஏக மகிழ்ச்சி
காந்திஜிக்கும் மஹாராஜாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. நாயர் சங்கத்தலைவர் மற்றும் கிருஷ்ணசாமி ஐயர் போன்றோர் தங்கள் பெயர்களின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்க்கவே இல்லை ( எனது தந்தை வெ .சந்தானமும் தன் பெயரின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்ததே இல்லை.)
XXXXX

வைக்கத்தில் காந்திஜி சொற்பொழிவு
இப்போது உண்மையான வைக்கம் வீரர்கள் யார் என்பதை காந்திஜி வாய்மொழி மூலமாகவே கேட்போம்:-
வைக்கத்தில் சத்தியாகி கிரக மைதானத்தில் 18-1-1937ல் சொற்பொழிவு ஆற்றினார்; 25000 பேர் அவரது உரையை க்கேட்டனர்
” உங்கள் நடுவில் நான் இரண்டாவது முறையாக நிற்கிறேன் .என்னுடைய அளவற்ற மகிழ்ச்சியை நான் சொல்லுவதை வீட நீங்களே உணர முடியும் என்ன அருமையான சுப வேளை !
சில ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை நோக்கிச் செல்லும் சாலைகளை அவர்ண ஹிந்துக்களுக்கும் (ஜாதியில் தாழ்ந்த) திறந்துவிட வேண்டும் என்பதற்காக போராடுவதே கஷ்டமாக இருந்தது நல்ல மனிதன் மாதவன் (பிள்ளை), கிருஷ்ணசாமி (அய்யர்) உதவியுடன் போராடினார்கள் கேளப்பன் (நாயர்) இந்தப் போராட்ட த்துக்கான வித்துக்களை ஊன்றினார் ;மிகவும் சோகமான விஷயம் மாதவனோ கிருஸ்ணசாமியோ இன்று நம்மிடையே இல்லை ; நம்முடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு இல்லை.
பந்தளம்,எட்டுமானூர், முதலிய ஊர்களில் அவர் என்னே சொன்னார் என்பதையும் காண்போம் .
.jpg)
old spelling VAIKAM; new spelling VAIKOM (just above Kottayam)
தொடரும்………………………………………..
Tags- வைக்கம் சத்தியாக்கிரகம், ஈ வே ரா , ராமசாமி நாயக்கர், திராவிட, பித்தலாட்டம், வீரர்கள்