हे साधो व्यसनैर्गुणेषु विपुलेष्वास्थां वृथा मा कृथाः ॥ 98॥
98. O Good man! To enjoy desired results, worship virtuous conduct, the all-powerful goddess who converts wicked people to good, fools to wise men, enemies to well-wishers, the imperceptible to perceptible and deadly poison into nectar, in a trice. Do not, with vain efforts, place your hope on numerous other virtues.
விரும்பிய எல்லாவற்றையும் அடைய ,நல்லொழுக்கத்தை வழிபடுங்கள்/ போற்றுங்கள். அதுதான் ,மகத்தான தேவதை; ஒரு நொடிப்பொழுதில், தீயோரை நல்லோராக மாற்றும்; முட்டாள்களை புத்திசாலிகளாக் கும் ;எதிரிகளை, உங்கள் வசமாக் கும்; விஷத்தை அமிர்தமாக்கும் தேவை இல்லாமல் மற்ற குணங்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.
99. Whether a deed is good or bad, its consequences must be analysed assiduously by a wise man. The result of actions done with great haste, becomes a dart that stings the heart until death.
குணவதகுணவத்வா குர்வதா கார்யஜாதம்
பரிணதிரவதார்யா யத்னதஹ பண்டிதேன |
அதிரபஸக்ரு தானாம் கர்மணாம் ஆவிபத்தேர்
பவதி ஹ்ரு தயதாஹீ ஶல்யதுல்யோ விபாகஹ || 1.99 ||
ஒரு செயல் நல்லதோ கெட்டதோ அதன் விளைவுகளை ஆராய்பவன் புத்திசாலி; அவசரப்பட்டு செய்யும் செயல்கள் இறுதி வரை இதயத்தைத் துளைக்கும் அம்புகள் ஆகிவிடும்.
कृत्वा कर्पूरखण्डान् वृतिमिह कुरुते को द्रवाणां समन्तात्
प्राप्येमां कर्मभूमिं न चरति मनुजो यस्तपो मन्दभाग्यः ॥ 100॥
100. The unfortunate man who, being born in this land, the Karma-bhumi, does not practise penance, is like one who, in vessel studded with Vaidurya (gems), cooks sesame oil-cake with sandalwood for fuel, or like one who furrows the earth with a gold ploughshare for the roots of the crown-flower shrub, or like one who makes a fence with camphor plant cuttings, for a millet-field.
இந்த கர்ம பூமியில் பிறந்த ஒருவன் தவம் செய்யாமல் இருப்பது துரதிருஷ்டமானது.சந்தன மரத்தை விறகாக வைத்து வைடூர்ய இரத்தின பாத்திரத்தில் எண்ணெய்ப் பிண்ணாக்கினை சமைப்பவனுக்கு அவன் சமம் ஆனவன் .
கார்த்திகைத் தீபம் பண்டிகையை அறுமீன் விழா எனத் தமிழுலகம் கொண்டாடு கிறது. அது செவ்வேளுக்கு உகந்த நன்னாள். கார்த்திகை மாதத்துக்குத் தமிழில் அறுமீன் எனப் பெயர். அழகன் முருகனை எடுத்து வளர்த்த ஆறு ரிஷி பத்தினி மாரும், நட்சத்திரமாக ஜொலிக்கும் கற்பின் இலக்கணமான அருந்ததியும் சேர்ந்து, ஆர(ற)ல் மீன் வடிவில் வடதிசை வான்வெளியில் மின்னுவதைப் பரிபாடல் (5.43) “மாதவர் (மாமுனிவர்) மனைவியர் பெற்றனர்” என்ற தலைப்பில் புலவர் கடுவன் இளவெயினனாரும், ‘அகலிரு விசும்பின் ஆஅல் போல, வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை’- கார்த்திகை மாதத்தில் தோன்றும்‘ஆஅல் [ஆர(ற)ல்] என்னும் விண்மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம் என மலைபடுகடாம் (பாடல் 10) இயற்றியப் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிக னாரும் எடுத்துரைக்கின்றனர்:
அறல் என்றால் ஆற்று மணலில் உள்ள வரிவரியான கோடுகள்,பெண்ணின் கூந்த லுக்கு உவமையாய் சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிறது. ஆற்றுநீருக்குக் கீழே மணலருகே கிடக்கும் விலாங்கு மீனுக்கு ஆர(ற)ல் என்று பெயர்
மேலும், கௌசிகனார் கூறுகிறார்: “மைபடு மாமலை பனுவலின் பொங்கி கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி., இருங்கல் இகுபத்து..” கார்த்த(கருமை) இகை(திரட்சி)= கார்த்திகை என்பதாகும். இதை, நீருண்ட கருமைநிற மேகங் கள் திரட்சியாகக் காணப்படும் மாதம், நீண்ட வரிசையில் திரண்டிருக்கும் அகல் விளக்கொளி வீசுகின்ற திருவிழா நாள் என்றும் கொள்ளலாம்.
பொருளீட்ட வெளியூர் சென்றுள்ளத் தன் தலைவன், உழவுப்பணி முடிந்து ஏர் கலப்பைகள் இளைப்பாறும் வேளையில், குறுமுயல் நிழல்படியும் முழு பால்நில வுக்குப் போட்டியாக வீதிதோறும் ஜெகஜ்ஜோதியாய் விளக்கேற்றி, வீடு நிறையத் தோரணங்கட்டி, கார்த்திகைத் தீபத் திருவிழாவை மகிழ்ச்சியுடன் எல்லாருடன் கொண்டாட வந்து சேருவானோ என எண்ணி மருகுவதை, ‘உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,மழை கால் நீங்கிய மாக விசும்பில்’ என உணர்ச்சியுடன் விவரிக்கி றார் நக்கீரர் (அகநானூறு 141)
இதிலிருந்து இத்திருக்கார்த்திகைத் தீப வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாட்டவருக்கு உரியப் பண்டிகையாக நடைபெற்று வருவதை அறிகிறோம்.
மேலும், கார்த்திகை விழாவில் நீண்ட வரிசையில் ஏற்றப்படும் அகல் விளக்குகளின் சுடரொளி, இலவம்,நெல்லி மரங்களின் செந்நிறப் பூக்கள் ஒரேநேரத்தில் மலர்ந்து அழகூட்டுவதற்கு நிகராக உள்ளன என்று பிற சங்கப் பாடல்கள் விவரிக்கின்றன.
களவழி நாற்பது பாடியப் புலவர் பொய்கையார், போர்க்களத்தில் சேரநாட்டு வீரர் களும், சோழர்ப் படைப் போராளிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தாக்கிக் கொள் ளும் போது குருதி ஒழுகியோடி ஒளிரும் காட்சியானது, தீபத்திருநாளில் சுடர்விடும் விளக்கொளிக்கு ஒப்பானது எனச் சொல்கிறார் (பாடல் 17)
கார் நாற்பது இயற்றிய மதுரை கண்ணங் கூத்தனார் அதன் 26-வது செய்யுளில் தீபத் திருநாளின் முக்கியப் பின்னணியை எடுத்துக் கூறுகிறார். ‘நலமிகு கார்த்திகை நாட் டவ ரிட்ட தலைநாள் விளக்கிற்…’ என்று- அழகு மிக்க கார்த்திகைத் திருவிழாவில் ‘தேந் திளமுலையார் தையலார்’ ஏற்றி வைத்த ஏற்றமிகு முதல் நாள் அகல் தீபத் தைச் சாரல் மழையினூடே, கார்காலத்துக்கே உரிய மருதோன்றி,மருதாணி பூக்கள் வழியெல்லாம் பூத்துக் குலுங்கி மேலும் அழகுறச் செய்தனவாம்! என்பவர், கார்த்தி கைத் தீபம் முதல்நாள் மகேசன் உமையம்மைக்குத் தன் இடப்பாகம் அளித்து அர்த்த நாரியாகத் தோற்றமளித்ததையும், அரியும்,அயனும் அடிமுடி தேடி வீழ்ச்சியுற்றதை யும், ‘அழலவிர் (தீப்பிழம்பு) சோதி அருமறை இறைவன்’ பொருட்டு எண்ணிறைந்த விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தருணத்தில் நாடு அழகுடன் விளங்குவதால் ‘நலமிகு கார்த்திகை’ என்றும், மூன்றுநாள் விழாவில் முதல்நாள் நிகழ்வே அரனுக் குச் சிறப்புடையது ஆதலின் ‘தலைநாள் விளக்கு’ என்றும் கூறுகிறார்.
யாழ்ப்பாணம் வித்துவ சிரோமணி திரு.பொன்னம்பலப் பிள்ளை இயற்றிய மாவை (மாவிட்டபுரம்) யமக அந்தாதி அங்கு அருள் புரியும் காங்கேயமூர்த்தி என்றழைக் கப்படும் கந்தன் புகழ் பாடுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் நீர்விழா நடத்துவதும்,கடலாடுவதும், சுடர்க்காடு போல் விளக்கேற்றி வைத்துப் பரவுதலும் நிகழக்கூடிய கார்த்திகைப் பண்டிகையை இப்படி விவரிக்கிறது.
இப்பாடலில் ஒரு தனித்துவம் உண்டு. யமக அணித்தொகையில் அமைந்துள்ளக் கார்த்திகை என்ற சொல் ஒவ்வொரு அடியிலும் வெவ்வேறுப் பொருளில் வந்து கார்த்திகைத் தீபவிழா சூழ்நிலையைச் சிறப்பித்துக் கூறுகிறது.
முதல் அடி; கார்த்திகை=செந்நிறக் காந்தள் மரம், கார்+திகை=பெரிய வேங்கைமரம், ஆர்குமிழ்=அரியவகைக் குமிழ மரம், நிலம் கவின தோன்றி= (கார் மாதத்தில்) நிலம் அழகுறப் பூத்துக்குலுங்கித் தோன்ற (குமிழம்=சர்வோபத்ரம், நீண்ட கூம்பு வடிவுடை யது)
2-ம் அடி; கார்த்து=கார்காலத்தில், கார்+திகை=கரிய மேகம் வானமுழுதும் திரண்டி ருக்க, ஐ=மேன்மையான, இகு நீர்விழ=சொரியும் மழைநீர் பொழிகையில், ஓங்கும் கடல் குடைந்தும்=கடலில் நீராடிக் கொண்டு
3-ம் அடி; கார்=மழை, குளிருக்கு, திகை=திகைத்த, கார்த்திகைமீன்=ஆரல் மீனும், அலவன்=நண்டும், சுடர்க்கு ஆடு=வெயிலொளியில் வெளியே தலைகாட்டிக் கரை யில் ஒதுங்கும்
4-ம் அடி:திருக்கார்த்திகை= அழகிய கார்த்திகைத் தீபநாளில், கார்த்த=கரிய, இகை= அடர்த்தியானக் கொன்றை மலர் அணிந்திருக்கும், மாவையன்= மாவைத் தலத்தில் அருள் புரியும் கந்தவேளை, காண்=தரிசிப்பாயானால்,முத்தி கண்டனை= பெரும்பேறு அடைவாய்
அப்படியே நாமும் மாவை கந்தசாமிப் பெருமானைப் போற்றி, கார்த்திகை நன்னா ளில் அவன் அருள் பெற வேண்டுவோம். நகுல முனிவரின் கீரிமுகத்தை நீக்கி ஈசன் சாபவிமோசனம் அருளியதால் அவர் நிர்மாணித்த ஆலயமே மாவை நகுலேஸ்வரர் கோவிலாகும். மேலும், குதிரை முகம் கொண்டு, குன்மநோயால் பீடிக்கப்பட்ட திசை உக்கிரசோழன் மகள் மாருதப்புரவீகவல்லி இத்தலத்து ஈசனை நியமத்துடன் தொழு ததினால் குறை நீங்கப் பெற்றாள். அதனால் இத்தலம் மா=குதிரை(முகம்) விட்ட புரம்=நீங்கிய நகரம் எனவாயிற்று. இளமை எழில்நலம் மீண்டும் பெற்றபோது
அவளுக்கு அழகன் முருகன் நினைவு வர, அங்கு வேலவனுக்கு இப்போது உள்ள ஆலயத்தை எடுப்பித்தாள்.
புகழ்பெற்ற யாழ்ப்பாணத்துப் புலவர் உடுவில் முத்துக்குமார கவிராயர் “கோதை குறமாது குணதேவ மடமாது இருபாலும் உற வீறிவரு குமரேசன்” மாவிட்டபுரக் கந்தன் இந்நாளில் நகர்வலம் வரும் அழகை வர்ணிப்பதைப் பாருங்கள். அதில் இச்சாசக்தியான வள்ளி சூடியிருக்கும் ஓர் அணிகலனின் சிறப்பையும் புகழ்ந்திருக் கிறார். மேலும், மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் எனும் ஊர்ப் பெயர்கள் ஏழும் கருதியப் பொருளை மறைத்திருக்கும் பெயர்களாகும் (ஓரு வார்த்தை இருவிதப் பொருள்). இதோ அந்தப் புகழ் பெற்றப் பாடல்……
சுன்னாகத்தான் மகன்=கயிலைமலை அரசராகிய ஈசனின் மகன், பாவாணர் சொல்= பாக்கள் இயற்றும் திறன் மிக்கவர்களுக்கு, சீர் ஈவினையான்= செல்வம் வழங்கும் குணமுடையவன்,
சுரும்பு ரோதி= கரு வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்கும் நாண் கொண்ட, துன்னாலையானத்தான்= வளைந்த கரும்பு வில்லையுடைய மன்மதனின் மைத்துனன் (ஈசனின் மகள் ரதியின் சகோதரன் முருகன் ஆவான்), சில்லால் ஐ இருள்வென்ற= வியக்க வைக்கும் தகட்டணியால் (வள்ளியின் ஜடைபில்லை) இருளை விரட்டியடித்த, குறக்கொடி காமத்தான்=வள்ளி நாயகியின் மேல்
ஆசைக் கொண்டவன், சிகண்டி= சேவல் கொடி, மயில் வாகனம் உடைய, மாவூர் வல்லானை==மாவூரில் உறையும் பெருமானை, மாவிட்ட…………டேனே= மாவை நகர வீதிகளில் ஊர்வலம் வரக் காணும் பேறு பெற்றேனே!.
(சுரும்பு=வண்டு, சிகண்டி= கோழி, மயில்).
இங்கு பாவலர், வள்ளி அணிந்திருக்கும் ஒரு நகையின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் பிரகாசம் இருளை விரட்டக் கூடியது என்கிறார்.
சில்=தகட்டணி. இது கூந்தலின் உச்சியிலிடப்படும் ரத்தினங்கள் இழைத்த ஒருவகை ஆபரணம். இக்காலத்தில் ஜடைபில்லை என வழங்கப்படுகிறது. இதிலுள்ள ரத்தினங் களிலிருந்து எழும் பிரகாசமான ஒளி இருளை விலக்கக் கூடியது எனக் கவிநயத்து டன் கூறுகிறார் கவிராயர்
Kartikai Constellation
அந்த வள்ளி மணாளன் முருகவேள் நம்மை என்றென்றும் காப்பானாக!
கோவிலுக்கு 4 பெரிய கோபுரங்கள்;கிழக்கு கோபுரம் வழியாகக் கோவிலுக்குள் செல்ல 18 படிகள் ஏற வேண்டும் வடக்கு கோபுர வாசல் 57 படிகள் உடையது.
ஆரண் முழா கண்ணாடியும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. செம்பும் ஈயமும் கலந்த கலவையில் பாலிஷ் செய்யப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது . இதை முதலில் செய்தவர் திருவாங்கூர் மஹாராஜா
திருவாறன் விளை என்பது தலத்தின் இன்னும் ஒரு பெயர் ; அது ஆரண் முழா ஆகிவிட்டது .
மலையாள தேசத்தில் பிரபல கிருஷ்ணன்/ விஷ்ணு கோவில்கள் உள்ளன. அவை :குருவாயூர் , திருவார்ப்பு , அம்பலப்புழா , ஆரண் முழா.
இவைகளில் செங்கண்ணூர் திருத்தலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஆரண் முழா பார்த்தசாரதியை தரிசிப்போம். இந்த ஊரின் பெயரைச் சொன்ன உடனே ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்பனின் விலை உயர்ந்த திருவாபரண ஊர்வலம் ஞாபகத்துக்கு வந்து விடும். அதையும் இறுதியில் காண்போம்
XXX
செங்கண்ணூர் சென்றால் அருகிலுள்ள ஐந்து வைணவ தலங்களைத் தரிசிக்கலாம் ; அவை ஆரண் முழா , திருவார்ப்பு , திருவல்லா , திருப்புலியூர் , திருச் சிற்றாறு , திருவண் வண்டூர் .
எப்படி காஞ்சிபுரம் சென்றால் 13 தொண்டை நாட்டு வைணவ தலங்களை எளிதில் தரிசிக்கலாமோ அப்படி அமைந்த ஊர் செங்கண்ணூர் . அங்கு பகவதி, சிவன் கோவில்களும் உள்ளன .
மஹாபாரத யுத்தத்தில் கர்ணனின் தேரின் இடச் சக்கரம் மண்ணில் புதைந்தது. அதை சரி செய்ய அவன் இறங்கினான்; அப்போது கிருக்ஷ்ணன் அம்பால் அடி என்றான்; அது தவறான செயல்; நேருக்கு நேர் தயாராக இருக்கும்போதுதான் அம்பு விடவேண்டும் ; யுத்தம் முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்ற அர்ஜுனன் , அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக இந்தக் கோவிலைக் கட்டினான் என்பது செவி வழிச் செய்தி .
சிலர் கர்ணனுக்குப் பதில் பீஷ்மருடன் அர்ஜுனன் செய்த சண்டையையும் தொடர்புபடுத்துவர்
இன்னும் ஒரு கதை
ஒரு காலத்தில் மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் இதனால் அவருக்கு சிருஷ்டி என்னும் படைப்புத் தொழிலே மறந்து போனது. உடனே விஷ்ணுவைத் தியானத்தில் துதித்தார். அவருக்கு படைப்பு என்னும் தொழிலை விஷ்ணுவே நினைவுபடுத்திய ஸ்தலம் இது.
பாம்பு வடிவபடகுப்போட்டி Snake Boat Race
இங்கு படகுப்போட்டி ஒன்று ஆண்டுதோறும் நடக்கும்; அதுவும் கோவிலுடன் தொடர்புடையதே.. ஒரு அர்ச்சகர் பிராமணமர் வடிவில் வந்தது பார்த்தசாரயத்தியே என்று அறிந்து படகில் கோவிலுக்கு நிறைய நெல்லைக் கொண்டுவந்த சம்பவம் வருடாந்திர படக்குப் போட்டியாக நடக்கிறது இதற்கு திருவோணச் சிலவு தோணி என்று பெயர். ஒரு முறை அந்தப் படகினைத் தடுக்க எதிரிகள் முயன்றபோது பாம்பு வடிவ படகினைச் செலுத்துவோர் பாதுகாப்பாக வந்தனராம் .பாம்புப் படகுகளுக்கு சுண்டன் வல்லம் என்று பெயர். அதன் நீளம் 103 அடி . நூறு படகோட்டிகளும் 25 வஞ்சிப் பாட்டு பாடகர்களும் படகில் இருப்பார்கள்.அன்றைய தினம் விருந்தும் ஏற்பாடு செய்யப்படும்
ஊர்ப்பெயர் காரணம்
ஆறு என்றால் நதி மற்றும் எண் ஆறு/ 6. முழை என்றால் மூங்கில் ;; முன்னர் இந்த விக்கிரகத்தை நிலக்கல் என்னும் இடத்தில் அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகவும் மறவர்கள் தாக்கும் காட்டுப்பகுதிக்குள் அந்த ஊர் இருந்ததால் அதை ஆறு மூங்கில் கம்புகளினால் ஆன தெப்பத்தில் சுவாமியைக் கொண்டுவந்ததால் ஆறு முழா ஆகிய தாகவும் செப்புவர்.
திருவாபரண ஊர்வலம்
சபரி மலை ஐயப்பனின் விலை மதிப்புமிக்க அணிகலன்கள்/ ஆபரணங்கள் பந்தளம் மஹாராஜா அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அவை பக்தர்கள் புடைசூழ, பெரிய பாதுகாப்புடன் சபரி மலைக்கு எடுத்துச் சென்று தர்ம சாஸ்தாவுக்கு அணிவிக்கப்படும்
ஆபரணங்கள் பந்தளத்திலிருந்து புறப்படும். அந்த ஆபரணப் பெட்டி பந்தளத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலுள்ள ஆரண் முழாவில் தங்கிச் செல்லும். மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.
இந்த திருவாபரணங்கள் அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு , சிறப்பு பூஜைக்கு பிறகு பக்தர்கள்தரிசனத்துக்கு வைக்கப்படும் அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, திருவாபரண ஊர்வலம் புறப்படும்
இந்த ஊர்வலம் ஐயப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப் பயணமாக மறுநாளைக்கு பம்பை வந்தடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்குப் பின்னர் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும் .
இப்படி ஆண்டுதோறும் நாம் பத்திரிக்கைச் செய்தியை படிக்கலாம்.
—subham—
Tags- திருவாபரண பெட்டி ஊர்வலம் , ஆரண்முழா, திருவாறன் விளை , பார்த்தசாரதி கோவில், கேரள, புகழ்பெற்ற 108 கோவில்கள், part 14
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
22-11-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
26-11-23 அன்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும். கட்டுரை இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!
முதல் பகுதி
ச.நாகராஜன்
கந்தனும் கார்த்திகையும்
தமிழர் தம் வாழ்வில் தனி இடம் பெறும் மாதம் கார்த்திகை மாதம். தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.
தமிழர் துதிக்கும் தனிப் பெரும் வெற்றித் தெய்வமான கந்தனையும் கார்த்திகையையும் இணைத்துப் பேசும் புராணக் கதைகள் ஏராளம் உண்டு.
முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் விளக்குகின்றன.
அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப்பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு பேரும் மகிழும் வண்ணம் தனித்தனி உருவம் எடுத்து அவர்களை மகிழ்வித்தான் கார்த்திகேயன்.
முருகனுக்கு ஒரு தனிச் சிறப்பு, அவன் செல்லும் பாதையில் அவனுக்கு முன்னால் வெற்றி தேவதை செல்லும். எடுத்ததெல்லாம் வெற்றி. எப்போதும் வெற்றி.
அதி உஷ்ண நட்சத்திரமான கார்த்திகை (ஆங்கிலத்தில் plieades) அனைத்து தீமைகளையும் சுட்டுப் பொசுக்கி விடும்.
ஆகவே தான் திருக்கார்த்திகை தினத்தில் ஒளி விளக்கேற்றி கந்தனை துதித்தல் மரபு.
துதி, வாணி, வீரம், விஜயம், சந்தானம், துணிவு, தனம், தானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு, அறம், குலம், நோயின்மை, வயது (ஆயுள்) ஆகிய பதினாறு பேறுகளையும் தரும் தெய்வமாக இருக்கும் முருகனை தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கிப் போற்றித் துதிக்கின்றனர்.
இதை சங்க இலக்கியம் உள்ளிட்ட பழைய நூல்களில் பரக்கக் காணலாம்.
அறுமீன், ஆரல், ஆல் என கார்த்திகை நட்சத்திரத்தை நற்றிணை, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை உள்ளிட்ட நூல்கள் குறிப்பிட, கார்த்திகை மகளிர் அறுவர் என்று கார்த்திகை மகளிரை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. முருகனைப் பல்வேறு பெயர்களால் போற்றுகின்றன.
இலக்கியம் காட்டும் விளக்கொளி
விளக்கின் வகைகளையும் அவற்றைத் தமிழ் மகளிர் போற்றித் துதித்து இல்லங்களிலும் கோவில்களிலும் ஏற்றி வந்ததையும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் காணலாம். விளக்கு அணைந்தால் அது அபசகுனம் என்று கருதப்பட்டதை ‘நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா’ என்ற புறநானூற்று வரி (பாடல் 280) விளக்குகிறது.
அருளாளர்கள் அனைவரும் விளக்கைப் போற்றுவதை சமய இலக்கியத்தில் காணலாம்.
நூற்றுக் கணக்கான பாடல்களில் சில எடுத்துக்காடுகள் இதோ :
மாணிக்கவாசகர் : “ஜோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே”
ஞானசம்பந்தர் : “விண்களார் தொழும் விளக்கு” என்று சிவபிரானைத் தொழுது ஞான விளக்கினை ஏற்றுவோம் என்ற அறைகூவலை விடுக்கிறார்.
சுந்தரர்: “பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்”
அப்பர் : “இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமச்சிவாயவே”
இப்படி 22 இடங்களில் அப்பர்பிரான் விளக்கைச் சுட்டிக் காட்டுகிறார்.
திருமூலர் : “விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்”.
காலத்தினால் பிற்பட்ட கவியரசர் கண்ணதாசனும் இல்லத்தரசி ஏற்றும் விளக்கை தன் திரைப்படப் பாடலில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதோ அவர் இயற்றிய பாடலில் ஒரு பகுதி:-
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன பனியாலே என்ற பாடலில் வருவது)
விளக்கை எப்படி எப்போது ஏற்றுவது?
குத்து விளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளையும் குறிப்பதாக ஆகிறது.
ஒரு முகம், இரு முகம், பஞ்ச முகம் என பலவகை விளக்குகள் உண்டு. அனைத்தும் நன்மைகளையே தரும். பசு நெய் உத்தமம், அடுத்து நல்லெண்ணெய் பயன்படுத்தப்படலாம். பருத்தியால் ஆன பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு ஏற்றுதல் உத்தமம். கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.
தீபத்தை வீட்டின் வாயிலில் இரு புறமும் கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றுவது மரபு.
அன்றாடம் காலையிலும் மாலை சந்தியா வேளையிலும் தீபம் ஏற்றுவது நமது மங்கையரின் வழி வழி வந்த மரபுப் பண்பாகத் திகழ்கிறது. கிராமங்களில் இன்றும் பழைய வீடுகளின் திண்ணைச் சுவரில் இரு புறமும் தீபம் ஏற்றுவதற்கான பிறை மாடங்களைக் காணலாம்.
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்கள்
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்களைப் பட்டியலிடவே முடியாது. மஹாலட்சுமி வாசம் புரியும் இடம் என்பதால் செல்வச் செழிப்பு ஏற்படும். துன்பங்கள் தொலையும். கடன் தொல்லை போகும். திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். சகல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர். இப்படி உலகியல் வாழ்க்கைக்கான பல அம்சங்களில் நலம் பெறுவதோடு ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து அரிதான முக்திக்கும் வழி வகை செய்யும் ஒரு வழிபாடே திருவிளக்கு ஏற்றும் வழிபாடாகும்.
‘தமஸோ மா ஜோதிர் கமய’ – இருளிலிருந்து என்னை ஒளிக்கு இட்டுச் செல் என்பதே அனைவருக்குமான வேத முழக்கம்.
கர்மாவுக்கு வணக்கம் சொல்லுவோம். பிரம்மாவை ஒரு குயவன் போல சதா சர்வ காலமும் படைப்புத் தொழில் ஈடுபடுத்துகிறது. விஷ்ணுவை பத்து அவதாரங்கள் எடுக்க அனுப்புகிறது ; சிவ பெருமானை கபாலம் ஏந்தி வீடு வீடாக பிக்ஷை எடுக்க வைக்கிறது ; சூரியனை சதா சர்வ காலமும் சுற்ற வைக்கிறது—95
அண்டத்திடையில் அயநெதானா லேயிருப்பான்
விண்டு வெ தனாற் பரியாய் மேவுதற்கேற்பட்டான்
பண்டுருத்திரன்தான் பலி யோடெ தானாலே
கொண்டிரந்தான் சூரியனுங் கோளமா வானத்தில்
அண்டி எதனாற் றிரிவான் அத்தகைய வூழ் வினைக்குத்
தெண்டனிட்டு வந்தனஞ் செய்வேன்
XXXXXX
SLOKA 96
नैवाकृतिः फलति नैव कुलं न शीलं
विद्यापि नैव न च यत्नकृतापि सेवा ।
भाग्यानि पूर्वतपसा खलु सञ्चितानि
काले फलन्ति पुरुषस्य यथैव वृक्षाः ॥ 96॥
நைவாக்ருதிஹி பலதி நைவா குலம் ந ஶீலம்
வித்யாபி நைவ ந ச யத்னக்ருதாபி ஸேவா |
பாக்யானி பூர்வதபஸா கலு ஸஞ்சிதானி
காலே பலந்தி புருஷஸ்ய யதைவ வ்ருக்ஷாஹா || 1.96 ||
ஒருவன் உலகத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்கு அவனது அழகோ , அவனுடைய குலப்பிறப்போ, கல்வி யோக்கியதாம்சங்களோ குருவுக்கு சேவை செய்வதோ காரண மல்ல. அவனுடைய கடந்த கால நற்செய்கைகளால் கிடைத்த அதிர்ஷ்டமே இதற்குக் காரணம்.
XXXXX
SLOKA 97
वने रणे शत्रुजलाग्निमध्ये
महार्णवे पर्वतमस्तके वा ।
सुप्तं प्रमत्तं विषमस्थितं वा
रक्षन्ति पुण्यानि पुरा कृतानि ॥ 97॥
வனே ரணே ஶத்ருஜலாக்னிமத்யே
மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |
ஸுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா
ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி || 1.97 ||
ஒரு காட்டின் நடுவில் சிக்கித் தவித்தாலோ போரில் அகப்பட்டாலோ , எதிரிகளிடம் சிக்கினாலோ ; கடலில் விழுந்தாலோ ஒருவன் ஒரு காயம் கூட இல்லாமல் தப்பிப்பதற்கு அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த நற்பலன்தான் காரணம், தீயில் விழுந்த பொழுதும் மலை உச்சியில் நின்றபொழு தும், தூங்கும் போதும் குடித்த போதும், கஷ்டத்தில் சிக்கியபோதும் நம்மைக் காப்பாற்றுவதும் நல்ல கர்ம பலனே ,
(பல பர்த்ருஹரி நீதி சதக நூல்களில் மேற்கண்ட ஸ்லோகங்கள் இல்லை.)
—-SUBHAM—-
Tags- Nitisataka, Part 29, Bhartruhari, slokas 95,96,97
pictures are from wikipedia and trip advisor; thanks.
கோவில் எண் 12 – த்ரிசூர் சிவன் கோவில்
திருச்சூர் என்ற பெயரை கேரள அரசு த்ரிசூர் என்று மாற்றியுள்ளது; இங்குள்ள வடக்குநாதன் சிவன் கோவிலும் வருடம்தோறும் நடக்கும் பூரம் விழாவும் பாரதம் முழுதும் பிரசித்தமானவை. கேரள கோவில் விழாக்களில் மிகவும் பிரசித்தமானது த்ரிசூர் கோவில் விழாதான்
திரு — சிவப் — பேரூர் என்பது சுருங்கி த்ரிசூர் ஆனதாக ஒரு கருத்து உளது
ஒன்பது ஏக்கர் பரப்பில் 4 பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில் தேக்கு மரக் காட்டுக்கு இடையே நின்றது இப்பொழுது வெற்று மைதானத்துக்கு பெயர் மட்டும் தேக்கின்காடு!
கோவிலுக்குள் வடக்குநாதன் என்ற பெயரில் சிவ பெருமானும், சங்கர நாராயணன், ராமன் ஆகியோரும் மூன்று முக்க்கிய சந்நிதிகளில் இருக்கின்றனர் கோவிலின் வடக்குப் பக்கத்தில் குடிகொண்டதால் சிவனின் பெயர் வடக்கு நாதன்; அவர் மேற்கு திசையை நோக்கி இருக்கிறார். அதே சந்நிதியில் சிவனும் பார்வதியும் கிழக்கு நோக்கி இருக்கும் மூர்த்திகளும் உண்டு . தென் பகுதியில் ராமர் கோவில்; நடுவில் சங்கர நாராயணன் கோவில்.
பரசுராமருடன் தொடர்புடைய கோவில். சிவனுக்குப் பின்பக்கமுள்ள பார்வதியை பரசுராமர் நிறுவியதாக ஐதீகம் (வரலாறு). மரத்தினால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மேலும் கேரளத்தில் எல்லா வைணவ கோவில்களிலும் உள்ளது போல விஷ்ணு உருவம்.
சிறப்பு அம்சங்கள்
மஹாபாரதக் காட்சிகளை சித்தரிக்கும் 300 ஆண்டுப் பழமையான ஓவியங்கள் .
சிவன் ஒரு பெரிய நெய் மலை ! காஷ்மீர் அமர்நாத் குகையில் பனிக்கட்டி சிவன்; இங்கு நெய் — டன் கணக்கில் — உறைந்து உருவான சிவ லிங்கம் !
எப்போதும் பசு நெய்யினால் அபிஷேகம் செய்து சிவ லிங்கத்தை மலை போன்ற நெய் மறைத்துவிட்டது. சிவலிங்கத்தின் மீது பத்து அடி (Ten Feet) சுற்றளவுக்கு நெய் உறைந்து நிற்பதால் அர்ச்சகர் சுற்றி வர கர்ப்பக்கிரகத்தில் இடம் கிடையாது.
ஆயுர் வேத சிவன்
ஆயுர்வேதத்தில் நெய் ஒரு முக்கிய மருந்துச் சரக்கு; ஆகையால் இங்குள்ள ஆயிரம் ஆண்டு பழமையான நெய்யினை வாங்குவதற்காக ஆயுர்வேத மருத்துவர்களும் வருகிறார்கள்;
யஜுர் வேதப் பகுதியான ருத்ரம்- சமகம் மந்திரத்தில் சிவ பெருமானை MR DOCTOR திருவாளர் டாக்டர் (பிஷக்), MR MEDICINE திருவாளர் மருந்து (பேஷஜம்) என்று ஒரு மந்திரம் வருகிறது. இங்கு அது உண்மையாகிறது.
சிவன் நெய்ப் பிரியர் ; அவருக்கு நெய் அபிஷேகம்; ஆனால் ராமருக்கு எண்ணெய் அபிஷேகம்; சங்கர நாராயணருக்கு பஞ் சகவ்ய அபிஷேகம் !
கோவிலில் கணபதி, காவல் தெய்வம் வேட்டைக்கொருமகன் சந்நிதிகளும் இருக்கின்றன . வலம் வரும் பிரதட்சிணப் பாதையில் பரிவார தேவதைகள் இடம்பெறுகின்றன . பரசுராமர் வசிப்பதாக கருதப்படும் தரா (தரை– மேடை)வடகிழக்கு மூலையில் இருக்கிறது. கேரளத்தில் வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் பரசுராமர் சம்பந்தப்படாத கோவிலே இராது அவர்தான் பல சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். அவருக்கோ திருவல்லம் என்னும் ஓரிடத்தைத் தவிர வேறு எங்கும் பரசுராமர் கோவில் இல்லை!!!
கோவில் சுவரில் ஒரு முக்கோண துவாரம் இருக்கிறது; இதன் மூலம் மூன்று முக்கிய சந்நிதிகளையும் காணலாம்.
ஆதி சங்கரர் தொடர்பு
இந்தியாவே வியக்கும் வண்ணம் தோன்றிய மாபெரும் தத்துவ வித்தகர் ஆதிசங்கரர் பிறப்பதற்கு வடக்குநாதனே காரணம். அவருடைய பெற்றோர்கள் மகப்பேறு இன்றி தவித்து நல்ல புத்திரன் பிறக்க நோன்பு இருந்தது வடக்குநாதன் கோவிலே; இதனால் சங்கரர் காலத்துக்கும் முன்னரே கோவில் இருந்ததை நாம் அறிகிறோம்.
மேற்குக் கோபுரத்துக்கு வெளிய அரசமரமும் மேடையும் இருக்கிறது. அங்குதான் நம்பூதிரி பிராமணர்களிடம் பரசுராமர் சிலையை ஒப்படைத்தார்
கூத்தம்பலம்
மேலைக் கோபுரம் வழியாக நாம் நுழைந்தால் இடது புறம் அழகிய கூத்து அம்பலத்தைக் காணலாம்; கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எல்லா கோவில்களிலும் கூத்தம்பலம் இருந்தாலும் திரிசூர் போல கலை வேலைப்பாடு உடையவை வெகு சிலவே.
கூத்தம்பலம் கட்டுமானம் பற்றிப் ப ல கதைகளும் உண்டு; வெள்ள நாழி நம்பூதிரி என்பவர் கட்டிடக்க கலை நிபுணர் என்றும் அவர் வரைபடம் இல்லாமலேயே சிற்பிகளை வைத்து கட்டிடத்தைக் கட்டி முடித்தார் என்றும் சொல்லுவார்கள். அவரையே மதில் சுவர் கட்டும்படி மன்னர் சொன்னபோது அவர் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செ ங்கற்களைக் கேட்டாராம் . அதே அளவு கற்களைக் கொண்டு வந்து மதில் சுவர் எழுப்பும்படி மன்னர் சொன்னாராம் அவரைச் சோதிப்பதற்காக இரண்டு செங்கற்களை மட்டும் மன்னர் மறைத்து வைத்தாராம்; ம தில் சுவற்றில் இரண்டு செங்கற்களான இடம் அப்படியே காலியாக இருந்தது; மன்னர் , ஒன்றும் தெரியாதவர் போல நடித்து, என்ன அறிஞரே! இரண்டு ஓட்டை தெரிகிறதே!! என்றாராம்; அவர் உடனே சட்டென்று யாரோ இரண்டு செங்கற்களை ஒளித்து வைத்து இருக்க வேண்டும் அல்லது இரண்டு செங்கற்களினை குறைத்து கொண்டு வந்திருக்க வேண்டும் என்றாராம்; உடனே மன்னர் அவரது திறமையை மெச்சி, அவருக்குத் தங்கக் காப்பு செய்து அணிவித்தாராம் .
வெள்ளை நந்தி கதை
ஒரு காலத்தில் ஒரு இளம் துறவி கோவிலுக்கு வந்து தினமும் தியானம் செய்தாராம்; அவரது தேஜஸில் மயங்கிய பெண்கள் குழந்தை பெற்றபோது அக்குழந்தைகள் அந்த துறவியின் முக ஜாடையில் இருந்தவுடன் பலருக்கும் சந்தேகம் துளிர்விட்டது; வதந்தியும் (Gossip rounds) பரவியது. அப்பாவியான துறவி தமிழ் நாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து ஒரு அழகிய நந்தியைச் செய்தாராம்; அதைச் சுற்றி தினமும் பசுக்கள் நின்றனவாம்; அவை கன்று ஈன்ற போது அனைத்தும் வெள்ளை நந்தி போலவே இருந்தவுடன் கிசுகிசுப் பேச்சுக்கள் நின்றனவாம்.
எவ்வளவு சுவையான கதைகள் ; ஒரு வேளை கோவிலின் சிறப்பினை நின்று ஆற, அமர இருந்து ரசிப்பதற்காக இப்படிக் கதைகளை எட்டுக்கட்டினாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உலகப் பிரசித்திபெற்ற பூரம் விழா !
கோவிலில் நடக்கும் ஒரே உற்சவம் சிவராத்திரி உற்சவம்தான் ; அப்போதும் சுவாமி புறப்பட்டு கிடையாது .
மேடம்/ மேஷம் (ஏப்ரல்-மே ) மாத பூரம் விழா நடக்கும். அதை வடக்குநாதன் ஆசீர்வதிப்பார்; கோவில் மைதானத்தில் நடந்தாலும் இது கோவில் விழா அல்ல. எல்லா கோவில் மூர்த்திகளும் சிவ பெருமானை தரிசிக்க வருகை தருவது, பிரமாண்டமான யானைகள் அணிவகுப்பு, மிகப்பெரிய வாண வேடிக்கை , மாபெரும் விருந்து ஆகியன சிறப்பு அம்சங்கள். ஒருகாலத்தில் அருகாமையில் நடந்த ஆறாட்டு விழா மழை காரணமாக தடைபட்டவுடன் மன்னரிடம் மக்கள் முறை செய்தனர். அவர் அந்த வட்டாரத்திலுள்ள கோவில்களை இரண்டாகப் பிரித்து அருகிலுள்ள கோவில் தெய்வங்களுடன் பவனி வர ஏற்பாடு செய்தார் .
நூற்றுக்கணக்கான கலைஞர்கள் விண்ணதிர வாத்ய கோஷங்களை முழக்குவர் . பத்து கோவில் தெய்வங்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றன 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சி மகாராஜா சாக்தன் தம்புரான் செய்த ஏற்பாடு இன்றுவரை பின்பற்றப்படுகிறது . ஆண்டுதோறும் புதிய புதிய வண்ண வண்ண குடைகள் தயாரிக்கப்படும். நெய் திலக்கா விலம்மா என்ற தெய்வத்தை ஏந்திய யானை, கோவிலின் கதவைத் திறக்கும் சம்பிரதாயம் இருக்கிறது. காலண்டரில்/ பஞ்சாங்கத்தில் பூர நட்சத்திரம் வருவதற்கு 7 நாட்கள் முன்னதாகவே விழா துவங்கி விடும்; பூரம் நட்சத்திரத்தன்று பெரிய விழா; லட்சக் கணக்கான மக்கள் இதில் பங்கேற்கின்றனர் . கேரளத்தில் இந்து விரோத அரசுகள் ஆட்சி புரியத் துவங்கியவுடன் அரசு உதவி குறைந்ததோடு கோவில் நிலங்களும் அபகரிக்கப்பட்டன ; ஆயினும் பக்தர்கள் ஆதரவில் இறைவன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் .
இது ஆதி சங்கரர் காலத்துக்கும் முன்னாலிருந்தே பக்கதர்களை ஆகர்ஷித்து வருகிறது
–subham–
TAGS– கேரள மாநிலத்தின், புகழ்பெற்ற, 108 கோவில்கள், த்ரிசூர் சிவன் , வடக்குநாதன், கோவில், பூரம் விழா
நூறு பாடல்களைக் கொண்ட கொங்கு மண்டல சதகத்தில் இறுதிப் பாடலான 100வது பாடலை இங்கு பார்ப்போம்.
நாளும் தவம் புரிகின்ற புண்ணியவான்கள் பொருந்தி இருக்கும் நாடு; வளர்ச்சியுற்றுக் குடிகள் நவநிதியும் பொருந்தி இருக்கும் நாடு; பகைவர் வணங்க, இன்பமோங்க அவநிதன் முதலிய அரசர்கள் வடநாட்டையும் வென்று மகுடம் புனைந்து அரசு புரிந்த நாடு – புகழ் வாய்ந்த கொங்கு மண்டலமே ஆகும்.
இப்படிக் கூறும் பாடல் தான் நூறாவது பாடல்.
தவநித நோற்கு மறவாணர் மேவத் தழைகுடிகள்
நவநிதி யோங்கத் தரியலர் தாழ நலம்பொருந்தி
அவநித னாதியரசர் வடக்கு மடங்க மணி
மவுலி தரித்துப் புகழ்நீண் டதுகொங்கு மண்டலமே
அவநிதன் முதலிய அரசர்கள் என்று இந்தப் பாடலில் மூன்றாவது வரி கூறுகிறது.
அவநிதன், கொங்கணி, பிரதிவி, கொங்கணி முதலிய கொங்கு அரசர்களை இந்தச் சொற்றொடர் குறிக்கிறது.
அவநிதன் என்ற அரசன் பொன்னாடு என்ற கேரளத்தைச் சார்ந்த நாட்டை வென்று ஆண்டிருக்கிறான்.
ஐந்தாம் நூற்றாண்டில் கொங்கணி என்ற அரசன் தானம் செய்த நிலம் வடக்கே நந்திதுர்க்கத்தில் இருக்கிறது.
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவநிதன் தானம் செய்த நிலம் அதற்கு வடக்கே உள்ளது.
எட்டாம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஊரில் பிரிதிவி கொங்கணியின் தான நிலம் இருக்கிறது. ஆகவே அது வரை கொங்கு மண்டல அரசர்கள் ஒரு காலத்தில் அந்த பிரதேசங்களை வென்று ஆண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.
சங்க நூல்கள் கொங்கு – கொங்கர்கள் என்றும் சேரர்- கேரளம் என்றும் இரு விதமாகப் பிரித்துக் கூறுகின்றன.
சேர அரசர் கொங்கு நாட்டை வென்றதும், கொங்கு அரசர் கேரளத்தை வென்றதும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.
பலநாடுகளை ஒரே அரசன் வென்று ஆண்டுமிருக்கிறான்.
கேரள அரசுக்குத் தலைநகர் கள்ளிக்கோட்டை, வஞ்சி.
கொங்குநாட்டிற்குத் தலைநகரம் ஸ்காந்தபுரம் -தவலன புரம் அல்லது குவலாலபுரம்.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழப்பேரரசு வலிமையான ஒரு பெரும் அரசாக உருவெடுக்கும் வரை ஸ்காந்தபுரத்திலிருந்து தான் அவநிதன் உள்ளிட்ட அரசர்கள் புகழோங்கி அரசு செய்து வந்தனர்.
எட்டுத்தொகையுள் ஒன்றான ஐங்குறுநூறு மருதம் – 1- வேட்கைப்பத்தில் கூறும் அவிநி என்பவனோடு பொன்னாடு உள்ளிட்ட சேர ராஜ்யத்தை ஆண்ட அவநிதன் என்னும் அரசனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
வாழீயாதன் வாழீ யவினி
நெற்பல பொலிக பொன் சிறிது சிறக்க
வென வோட்டேளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாண ரூரன் வாழ்க
பாணனும் வாழ்க வெனவேட் டோமே
என வேட்கைப்பத்து கூறுகிறது.
இந்த வேட்கைப்பத்தில் வரும் பத்து பாடல்களிலும் முதல் அடி வாழியாதன் வாழியவினி என்றே வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பலவிதங்களிலும் கொங்குமண்டலம் சிறப்புற விளங்கியதை கொங்குமண்டல சதகம் நூறு பாடல்களிலும் காணலாம்.
இதைத் தக்க முறையில் விரிவாக அழகுற அனைவரும் படிக்கும்படி பெரும் நூலாக வெளியிட வேண்டியது தமிழரின் கடமை.
செய்வோம்; சிறந்து வாழ்வோம்!
கொங்கு மண்டல சதகம் முற்றும்.
ஒரு சிறு குறிப்பு: விநாயகர் காப்பு உள்ளிட்ட காப்புப் பாடல்கள், அவையடக்கப் பாடல், ஆக்கியோன் பற்றிய பாடல் ஆகியவற்றுடன் நாடு, எல்லை, இணைநாடு, தலம், மலை, நதி, குடிவளம் ஆகிய பாடல்களை இன்னும் இரு கட்டுரைகளில் காண்போம். அத்துடன் இந்தத் தொடர் முற்றுப் பெறும்.
मतिमतां च विलोक्य दरिद्रतां विधिरहो बलवानिति मे मतिः ॥ 91॥
சூரியனையம் சந்திரனையும் (கிரகணத்தின்போது) ராகு பீடிப்பதிலிருந்தும் , யானைகளையும் பாம்புகளையும் ( மனிதர்கள்) பிடித்து அடைப்பதிலிருந்தும் அறிஞர்களை வறுமை பீடிப்பதிலிருந்தும் விதிதான் வலிமையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.—91
91. Seeing the eclipse of the sun and the moon by the planet Rahu, the captivity of the elephant and the snake and the poverty of intelligent people, my conclusion is: Oh, Fate is mighty!
மனிதர்களுள் மாணிக்கத்தைப் படைத்துவிட்டு பூமிக்கே ஆபரணத்தை அணிவித்துவிட்டு , அவனை அல்பாயுசு ள் சாக வைத்தால் அந்த பிரம்மாவின் விவேகத்தை என்னவென்று சொல்லுவது? –92
92. Having created a gem of a man, an adornment to the earth and a repository of all virtues, yet if the Creator makes him short-lived, alas, woe to His indiscretion.
93. When the Karira tree’s branch has no leaf, what is the fault of the spring? If the owl does not see by day, what guilt is there on the Sun’s part? If the shower does not fall into the mouth of the Chataka, what is the cloud’s fault? Who can erase what is written on one’s forehead by Fate beforehand.
கரீர மரத்தின் கிளைகளில் ஒரு இலையும் இல்லாவிட்டால் வசந்த காலத்தின் பயன் தான் யாது? ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது;அதற்கு சூரியன் மீது பழி சுமத்த முடியுமா? மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது ; ஆயினும் சாதகப் பறவையின் வாயில் ஒரு சில துளிகள்தான் விழுகின்றன . இது மேகத்தின் குற்றமா? ஒருவரின் நெற்றியில் (பிரம்மா) எழுதியதை யார்தான் மாற்ற முடியும் ?
94. We would salute the gods, but they too are under the control of accursed Fate. Brahma is venerable, yet, He too, gives only the results assigned to each action. Results depend on action. So what is the use of gods and Brahma? Salutations to that action, Karma, which even Brahma cannot overpower.
நாம் கடவுளுக்கு வணக்கம் செலுத்துகிறோம்;ஆனால் அவர்களும் விதிக்குக் கட்டுப்பட்டவர்களே ; பிரம்மா வணக்கத்திற்கு உரியவரே ; ஆயினும் அவரும் அவரவர் செயலுக்கு ஏற்ற பலனைத் தரும் கணக்குப்பிள்ளை தான் செயலுக்கு ஏற்ற பலனே கிடைக்கும்; பிரம்மா , கடவுள் ஆகியோரால் என்ன உபயோகம்? கர்மா பலனுக்கு வணக்கம் போடுவோம்; பிரம்மாவும் அதை மீற முடியாது ( நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்பதை வலியுறுத்த இவ்வளவையும் சொல்கிறார்—94
—subham—
Tags- விதியே வலியது , விதி, வலிமை, பர்த்ருஹரி 91, 92, 93, 94, ஸ்லோககங்கள் , Nitisataka, Part 27சாதகப் பறவை