Beautiful Women of Sri Lanka from 100 year old book (Post No.12,754)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,754

Date uploaded in London – –  –  23 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have got beautiful women pictures from 1907 book

Title of the book – Ceylon

By J C Willis, year 1907

There are more pictures; I will post them separately.

—subham—

Tags- Tamil beauty, Sinhalese beauty, rare prictures, Sri Lankan beauties

திருமூழிக்களம் லட்சுமணன்  கோவில் — Part 12 (Post No.12,753)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,753

Date uploaded in London – –  –  23 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 WIKIPEDIA IMAGES; THANKS.

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 12

கோவில் எண் 11 –   திருமூழிக்களம் லட்சுமணன்  கோவில்

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள  லட்சுமணன்  கோவில்  நாலம்பலங்களில் (One among Four Temples) ஒன்று; 108 வைணவ தலங்களில் ஒன்று; ஆழ்வார்கள் பாடி, மங்களாசனம் செய்த கோவில் .

எங்கே இருக்கிறது ?

கூடல் மாணிக்யம் பரதன் கோவிலிலிருந்து 32 கி.மீ; கொச்சி விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ.  திருசூரிலிருந்து 50 கி.மீ. . இங்கிருந்தும் ஆலவாயிலிருந்தும் பஸ்ஸில் வரலாம்.

சாலக்குடி நதியின் கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவில் மூலஸ்தானத்தில் இருப்பது விஷ்ணுவானாலும் அவர் லெட்சுமணனாக வழிபடப்படுகிறார்.

மூலவர் – திருமூழிக்களத்தான் அப்பன், ஸ்ரீ ஸூக்தி நாதப் பெருமாள்

நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய சந்நிதி

தாயார் – மதுர வேணி நாச்சியார்

தீர்த்தம் – பெருங்குளம், சங்க தீர்த்தம் சிற்றாறு

விமானம் – செளந்தர்யா விமானம்

ரிஷி / முனிவர் தொடர்பு – ஹரீத மகரிஷி

கோவிலின் சரியான பெயர் என்ன?

திரு மொழிக் களம் என்பதே மருவி திருமூழிக்களம் ஆனது. அதாவது ஹரித மகரிஷி நீண்ட காலம் தவமிருந்ததன் பயனாக ஸ்ரீ ஸூக்தியை பெருமாளிடம் இருந்து பெற்றதால் இறைவனை ஸ்ரீ ஸூக்திநாதன் என்றும் தலத்தை ஸ்ரீ சூக்தி புரம் = திரு மொழிக்  களம் என்றும் அழைப்பர் .

ஸ்ரீ ஸூக்தி= திரு மொழி என்றால் என்ன?

பகவான் பிரத்தியட்சமாகி (நேரில் தோன்றி), வர்ணாசிரம தர்மங்களையும் ஐந்து காலங்களில்  பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் சொன்னதை திரு மொழி = ஸ்ரீ ஸூக்தி என்பார்கள்.

தலம் தொடர்பான மற்றும் ஒரு சுவையான கதை

ராமன் காட்டில் தங்கியிருந்தான்; அவனை அழைத்துப் போக பரதன் படைகள் சூழ வந்தான்; அதைப் பார்த்தவுடன் முன் கோபக்காரனான லட்சுமணன், அடப்பாவீ ?அண்ணனைக் கொல்வதற்காக காடு வரை படைகளுடன் வந்து விட்டானே என்று எண்ணினான்; குகனும் முதலில் இப்படித்தான் நினைத்தான் என்பதை நாம் அறிவோம்.. பின்னர்தான் தெரிந்தது- அன்பே உருவானவன் பரதன் என்பது; முதலில் தான் நினைத்ததே பாவம் என்பது லட்சுமணனுக்கும் புரிந்தது. ராமனை தழுவிய பரதன் லட்சுமணனையும் தழுவி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினான் ;

இந்துக்களின் கணக்கு உலகில் ஏனைய கலாசாரங்களில் இருந்தும் வேறுபட்டது; மனோ, வாக் , காயம் , அதாவது சொல், செயல் சிந்தனை மூன்றில் தவறு செய்தாலும் அது பாபம் தான் ; தான் தவறாக எண்ணிய பாபத்தைப் போக்க இங்கு லட்சுமணனே விஷ்ணுவை வணங்கியதால்  இது லட்சுமணன் கோவில் ஆயிற்று. மேலும் பக்தர்களும் இங்குள்ள பெருமாளை விஷ்ணுவாகவே காண்கின்றனர் .

ஆழ்வார் பாடல்கள் (மங்களாசாசனம் )-

திருமங்கை ஆழ்வார் – 1553, 2061, 2674, (திவ்வியப் பிரபந்தம்)

நம்மாழ்வார் – 3623- 33 பாடல்கள்

நம்மாழ்வாரால் பாடப்பெற்றதால்  குறைந்தது 1200 ஆண்டுப் பழமையானதாக இருக்க வேண்டும்.

இந்தக் கோவிலில் மற்ற கோவில்களில் உள்ளது போல வாத்திய சங்கீதம் கிடையாது

திப்பு சுல்தான் எரித்த கோவில்

1790ம் ஆண்டில் திப்பு சுல்தானின் படைகள் கோவிலுக்குத் தீ வைத்தது .பின்னர்  மூலம் திருநாள் மஹாராஜா, சித்திரைத் திருநாள் மஹாராஜா ஆகியோர் கோவிலை மீண்டு ம் எழுப்பினர் . கோவிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இதன் பழமையை பறைசாற்றுகின்றன.

திருவிழா

மேடம் / மேஷம் (சித்திரை) மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும்; பூர்ணா நதியில் ஆராட்டு நடக்கும். சாக்கியர் கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

மகர மாதத்தில் நடக்கும் 41 நாள் திருவிழாவில் வேறு வகையான கூத்துக்கள் இடம்பெறும்.

கோவிலின் தோற்றம்

ஐந்து ஏக்கர் பரப்பில் மதில் சுவர் களுடன் அமைந்த கோவில் இது;  நான்கு பெரிய வாசல்கள் இருக்கின்றன; நமஸ்கார மண்டபம் மிகப்பெரியது; தேக்கு மர  சிற்பங்கள் நிறைந்தது  அவைகளில் ராமாயணக் காட்சிக ளை  காணலாம். இரண்டு அடுக்கு கோபுரம் உடையது; கேரளத்தில் இவ்வாறு இருப்பது அபூர்வம்; கோவில் உட்புறமும்  கூம்பு வடிவ தாமிர/ செப்புத் தகடுகளால் மூட்டப்பட்டுள்ளது அழகான நடன மண்டபம் இருக்கிறது; த்வஜஸ்தம்பத்தை குலசேகர வர்மன் நிறுவினான்; பாஸ்கர வர்மன் திருப்பணிகள் செய்தான் .

இங்குள்ள லட்சுமணப்பெருமாள் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை, இடதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர் ஏந்தி விஷ்ணு வடிவமாகக் காட்சி தருகிறார் . கோவிலில் சாஸ்தா, சிவன்; பஞ்ச லோகத்தால் ஆன பகவதி சிலை ஆகிய மூர்த்திகளும் வழி படப்படுகின்றன.

-SUBHAM–

TAGS- திருமூழிக்களம், லட்சுமணன்  கோவில்

எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ சத்யசாயிபாபா! (Post No.12,752)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,752

Date uploaded in London –  –  23 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபாவின் பிறந்த தினத்தை ஒட்டிய சிறப்புக் கட்டுரை (நவம்பர் 23)

ஶ்ரீ சத்யசாயிபாபா அவதாரம் – தோற்றம் : 23-11-1926 சமாதி : 24-4-2011

எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ சத்யசாயிபாபா!

ச.நாகராஜன்

ஶ்ரீ சத்யசாயிபாபா ஷீர்டி சாயிபாபாவைத் தொடர்ந்து பூமியில் எழுந்தருளிய இரண்டாவது அவதாரமாகும்.

நாம் வாழும் காலத்திலேயே லக்ஷக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்த அவதாரமாக விளங்கியது இந்த அவதாரம்.

ஆயிரக்கணக்கான அற்புதங்கள்! அவற்றில் பெரும்பாலானவை நன்கு பதிவு செய்யப்பட்டவையாக இருப்பது இந்த அவதாரத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

பகவானின் அணுக்கத் தொண்டரான திரு என். கஸ்தூரி பகவானின் வரலாற்றை ‘சத்யம், சிவம், சுந்தரம்’ என எழுதி நன்கு ஆவணப்படுத்தியுள்ளார்.

அவர் தனது சொந்த சரிதத்தையும் ‘LOVING GOD : EIGHTY FIVE YEARS UNDER THE WATCHFUL EYE OF THE LORD’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதில் அடியோடும் இழை நாதமாக அமைவது ஒரு பெரும் கருத்து!

பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற கருத்தே அது.

இதை விளக்கும் பல சம்பவங்களை அவர் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

அதில் ஒரு சிலவற்றைக் காண்போம்;

நார்வேயை சேர்ந்த ஒரு எஞ்ஜினியர். அவரது பெயர் டைட்மான் (Tidemann). பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தில் புனர்நிர்மாணம் செய்யப்படவிருந்த ஒரு பெரும் திட்டத்தில் அவர் சென்று சேரவேண்டும். அங்கு செல்வதற்கு முன் பாபாவின் ஆசியைப் பெற்று விடை பெற வந்தார் அவர்.  அப்போது அவருக்கு தனது ஆசியை அளித்த பாபா அவரது வலது கையில் ஆட்காட்டிவிரலில் ஒரு மோதிரத்தை தன் அங்கை அசைவினால் சிருஷ்டித்து அணிவித்தார்.

ஆறு மாதங்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் பெங்களூரில் ஒய்ட்ஃபீல்டில் பிருந்தாவனத்தில் பாபாவின் பங்களா வாசலில் வந்து அவர் நின்றார். பஜனை ஆரம்பமாகவிருந்த தருணம்.

அவர் கஸ்தூரிக்கும் டாக்டர் எஸ்.பகவந்தத்திற்கும் இடையில் வந்து அமர்ந்தார்.

பாபா அவர் அருகில் வந்து அவரைப் பார்த்தார். “மோதிரம் எங்கே?” என்று அவர் கேட்டார்.

டைட்மான் சற்று வெட்கத்துடன் “அது தொலைந்து விட்டது” என்றார்.

“எங்கே?” என்று கேட்டார் பாபா.

“சிட்டகாங்கில் கப்பலின் முகப்பில் ஒரு கயிறில் தொங்கியவாறே கீழே இறங்கிய போது அது தவறி ஆற்றில் விழுந்து விட்டது” என்றார் டைட்மான்.

‘எப்போது?” என்றார் பாபா.

“பிப்ரவரி, 23ஆம் தேதி” என்றார் டைட்மான்.

அருகிலிருந்த கஸ்தூரி அது மூன்று மாதங்களுக்கு முன்னால் என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

உடனே பாபா தனது கையைச் சுழற்றினார். அதிலிருந்து விழுந்த ஒன்றைத் தனது இரு விரல்களால் அவர் பிடித்துக் கொண்டார். அது ஒரு மோதிரம்.

அது பழைய மோதிரம் தானா என்று கஸ்தூரி நினைக்க அதே எண்ணம் ஓட பகவந்தமும் அப்படியே நினைத்துக் கொண்டிருந்த தருணம் பாபா அவரைப் பார்த்து, “இன்னும் உனக்கு நம்பிக்கை பரிபூரணமாக வரவில்லையா?” என்று கேட்டார்.

“அதே மோதிரம் தான்! அது என் கையில் வந்து விழுந்தது. அந்த ஆற்றில் நான் இருந்தேன். நான் எங்கும் இருக்கிறேன். எனது கண்கள், எனது காதுகள், எனது முகம் எங்கும் உள்ளது. நான் அவை அனைத்தையும் சுற்றி உள்ளேன்” என்றார் பாபா.

கஸ்தூரிக்கு புரிந்தது; அவர் கூறுகிறார் – “கண்களில் மூடி இருக்கும் மாயத்திரையை விலக்க வந்தவரே பாபா என்று அன்று மாலை நடந்த உபநிடத உரைகளிலிருந்து அறிந்தோம்.”

பாபா தனது உரை ஒன்றில் மிக அழகாக விளக்கியுள்ளார் இப்படி:

“இந்த உடலில் முதல் 16 வருடங்கள் பால லீலைகளில் கழியும். அடுத்த 16 ஆண்டுகள் மஹிமாவில் கழியும். அதற்குப் பின்னர் உபதேசங்களில் ஈடுபடும். இதை நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

அப்படியே நடந்தது.

பின்னொரு காலத்தில் அவர் கூறியது இது:

“நான் பூமியைச் சுற்றி இருக்கிறேன். ஒவ்வொரு அங்குலத்திலும் இருக்கிறேன். கர்நாடகத்தில் ஜோக் நீர்வீழ்ச்சியில் 800 அடி ஆழத்தில் வீழ்ந்திருந்த ஒரு மனிதரையும் பார்த்திருக்கிறேன். ஆகாயத்தில் விமானம் விபத்திற்குள்ளாக 24000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்தவரையும் பார்த்திருக்கிறேன்.” என்றார்.

அவர் ஹவாய், ரோம், மலாசியா, பிஜி போன்ற இடங்களில் இருப்பதை ஏராளமான சம்பவங்கள் நிரூபித்துள்ளன. பக்தர்கள் தமது அனுபவங்களை விளக்கமாகக் கூறி அதிசயித்துள்ளனர்.

வேதங்கள் அறைகின்ற, “ஏகோஹம் பஹுஸ்யாம் – நான் ஒன்றே – பலவாறாக ஆகிறேன்” என்பதை நிரூபிக்கும் அவதாரமாகத் திகழ்ந்தார் ஶ்ரீ சத்யசாயிபாபா.

அவரது ஜயந்தி தினத்தில்  அவரைத் தொழுது வணங்கி அவரது அருளாசி பெறுவோமாக!

***

ஆதாரம் : என். கஸ்தூரி அவர்கள் எழுதியுள்ள ‘LOVING GOD : EIGHTY FIVE YEARS UNDER THE WATCHFUL EYE OF THE LORD’ என்ற புத்தகம்.

பக்கங்கள் 202,,206, 425

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 27 (Post No.12,751)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,751

Date uploaded in London – –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 27

छिन्नोऽपि रोहति तरुश्चन्द्रः क्षीणोऽपि वर्धते लोके ।

इति विमृशन्तः सन्तः सन्तप्यन्ते न लोकेऽस्मिन् ॥ 87॥

சின்னோ‌அபி ரோஹதி தர்க்ஷீணோ‌உப்யுபசீயதே புனஶ்சந் த்ரஹ  |

இதி விம்ரு ஶந்தஹ  ஸந் தஹ  ஸந்தப்யந்தே ந துக் கேஷு || 1.87 ||

குறைந்த மரந் துளிர்ச்சி கொள்ளு வதைத் தேய்ந்து

மறைந்த மதி வளர்ச்சி வாய்ந்து — நிறைப்பதனைக்

காணும் பெரியோர் கவலார்கள் துன்பமெய்தின்

நாணு  மலர்க்கதுதான் நைந்து– 87

87. A tree grows even after being cut. The moon, though waned, waxes again. Reflecting thus, good people do not suffer pain when troubled.

வெட்டிய பின்னரும் ஒரு மரம் வளர்கிறது; தேய் பிறைக்குப் பின்னரும் முழு நிலவு வருகிறது ; இதை அறிந்த பெரியோர்கள் கஷ்டம் வரும்போது கவலைப்படுவதில்லை- 87

XXXX

नेता यस्य बृहस्पतिः प्रहरणं वज्रं सुराः सैनिकाः

        स्वर्गो दुर्गमनुग्रहः खलु हरेरैरावतो वारणः ।

इत्यैश्वर्यबलान्वितोऽपि बलभिद्भग्नः परैः सङ्गरे

        तद्व्यक्तं ननु दैवमेव शरणं धिग्धिग्वृथा पौरुषम् ॥ 88॥

நேதா யஸ்ய ப்ருஹஸ்பதிஹி  ப்ரஹரணம் வஜ்ரம் ஸுராஹா  ஸைனிகாஹா

ஸ்வர்கோ துர்கம் அனுக்ரஹக  கலு ஹரேரைராவதோ வாரணஹ  |

இத்யைஶ்வர்யபலான்விதோ‌அபி பலபித்பக்னஹ  பரைஹி  ஸங்கரே

தத்வ்யக்தம் நனு தைவம் ஏவ ஶரணம் திக்திக்வ்ருதா பௌருஷம் || 1.88 ||

கோட்டை சுவர்க்கம் குரு வியாழனாஞ் சுரர்கள்

வாட்டமிலா வீரர் வைரங் கை ந் – நீட்டுகின்ற

ஆயுத மால் என்றும் அனுக்கிரகஞ் செய் கடவுள்

காயு மத மா பகைவர் கால் வாங்கி ஓயுமா

செய்யு மயிராவதமாஞ் சீர்களிவை பெற்றிருந்தும்

உய்யுமாறி ல்லாமல் உம்பர்கோன் — மெய்யாய்ப்

பகை வர்தம க்கஞ்சி  பாறினான் என்றால்

தொகையா ம் பலங்கலொரு  தூய வகையாகுந்

தெய்வ பலமின்றிச் சிறப்படையா என்று சொல

ஐயமிலை ஐயமிலை ஆம்– 88

88. Indra (the slayer of Bala) has Brhaspati as his guide, the Vajra as weapon, the gods as soldiers, the heaven as fortress, the blessings of Vishnu and Airavata as elephant.  Even though endowed with such fortunes and power, he was defeated by enemies in battle. It is clear that fate is our refuge. Oh, fie, fie upon valour that is useless.

வலன் என்ற அசுரனை வென்ற இந்திரனுக்கு குரு பிருஹஸ்பதி; வஜ்ராயுதம் ஆயுதம்; தேவர்களே சிப்பாய்கள்; சொர்க்கமே கோட்டை; விஷ்ணு ஆசீர்வதித்தார் ; ஐராவதம் மீதேறி சண்டை செய்தான் இந்திரன்; இவ்வளவு சக்தியும் ஆதரவும் இருந்தும் சில சண்டைகளில் தோற்றுப்போனான்.ஆகையால் விதிதான் பெரிது; வீரம் பயனற்றது. 88

xxxx

कर्मायत्तं फलं पुंसां बुद्धिः कर्मानुसारिणी ।

तथापि सुधिया भाव्यं सुविचार्यैव कुर्वता ॥ 89॥

கர்மாயத்தம் பலம் பும்ஸாம்

புத்தி ஹி  கர்மானுஸாரிணீ |

ததாபி ஸுதியா பாவ்யம்

ஸுவிசார்யைவ குர்வதா || 1.89 ||

89. Salutations to that Order or Karma, by which Brahma is restricted as a potter inside the vessel-like Universe, by which Vishnu was thrown to the very perilous depths of the ten incarnations, by which Rudra was made to wander for alms with a skull in his palm, and by which the sun roams the sky incessantly.

கர்ம வினைக்கு வணக்கம் பல;  பிரபஞ்சம் என்னும் பானைக்குள் பிரம்மாவையே குயவன் ஆக்கிவிட்டது; விஷ்ணுவை பூமியில் பத்து அவதாரம் எடுக்க அனுப்பிவிடுகிறது; ருத்ரனை கையில் கபாலம் ஏந்தி பிச்சை எடுக்க வைக்கிறது. சூரியனையும் சதா சர்வ காலமும் சுற்ற வைக்கிறது – 89

xxxx

खल्वाटो दिवसेश्वरस्य किरणैः सन्तापितो मस्तके

        वाञ्छन्देशमनातपं विधिवशात्तालस्य मूलं गतः ।

तत्रोच्चैर्महता फलेन पतता भग्नं सशब्दं शिरः

        प्रायो गच्छति यत्र भाग्यरहितस्तत्रापदां भाजनम् ॥ 90॥

கல்வாதோ திவஸேஶ்வரஸ்ய கிரணைஹி  ஸந் தாடிதோ மஸ்தகே

வாஞ்சன்ந் தேஶம் அனாதபம் விதிவஶாத்தாலஸ்ய மூலம் கதஹ  |

தத்ராப்யஸ்ய மஹாபலேன பததா பக்னம் ஸஶப்தம் ஶிரஹ

ப்ராயோ கச்சதி யத்ர பாக்யரஹிதஸ்தத்ரைவ யாந் த்யாபதஹ  || 1.90 ||

ஆடைத் தலையொருவன் ஆதித்தன் சூடு பொறான்

கோடைப் பனை நிழலிற் கூடினான் — நீடுமதன்

செங்காய் தலைமேல் தெறித்தி றந்தான்  தெய்வ பலம்

இங்காரறிவார் இயம்பு–90

90. A bald man, tormented by the sun’s rays (falling) on his head, seeking a shaded place, reached the foot of a palm tree by chance. There again, his head was split loudly by a falling big fruit.  Misfortunes generally follow a luckless man wherever he goes.

வழுக்கைத் தலையன் தலையில் வெயில் விளைவே அவன் நிழலுக்காக  பனை மரத்துக்கு அடியில் போய் நின்றான்; பாங்காய் விழுந்து தலை பிளந்தது; பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் – 90

–subham—

Tags- பர்த்ருஹரி , நீதிசதகம் ஸ்லோகம் 87,88,89, 90, விதி, வழுக்கைத் தலையன் , மரம்

Rare Pictures from Anti Hindu Book : Strange Hindu Fakirs of India  – Part 3 (Post.12,750)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,750

Date uploaded in London – –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 3- Strange Hindu Fakirs of India

Book title

Story of The World’s Worships, Frank S Dobbins,

Chicago, 1901

Third part contains strange looking saints of India: This part is mocking at Hindu saints.

Tamils’ Thookku Kaavadi is mocked at.

–subham—

 Tags- rare pictures, Hindu fakirs, Strange saints, anti hindu book, Thookku Kavadi.

கூடல் மாணிக்யம் பரதன் கோவில் — Part 11 (Post No.12,749)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,749

Date uploaded in London – –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 11

கோவில் எண் 10 –   கூடல் மாணிக்யத்தில் பரதனுக்கு கோவில்

ராம பிரான் தம்பிக்கு தனியாக கோவில் இருப்பது அபூர்வமே ; மலையாளி இந்துக்கள் தசரதனின் 4 மகன்களுக்கும் கோவில் கட்டிப் போற்றி வழிபடுகிறார்கள்

ஆயிரம் ராமனுக்கு ஒப்பானவன் பரதன் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்

2337.    ‘தாய் உரைகொண்டு தாதை உதவிய

     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,

     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!

     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,

     தெரியின் அம்மா! — கம்ப ராமாயணம்

பொருள் :–   புகழ் உடையவனே!;  (உன்)

தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  (உன்) தந்தையாகிய தயரதன் அளித்த;  (கோசல நாட்டு) அரசாட்சியை;  தீயவினை வந்து சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு;முகத்தில் கவலை தேங்கியவனாய்; (வனத்துக்கு) வந்தாய்; என்ற காலத்தில்; நல்லியல்புகளை  அறியுமிடத்து, ஆராய்ந்தால் ஆயிரம் இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா!

பரதன் பெயரை நினைத்தாலே ஞானமும் பக்தியும் வரும்; வளரும் என்று ராஜாஜி, ராமாயணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்

பரதன் கோவில் எங்கே இருக்கிறது ?

திருச்சூர் மாவட்டத்தில் திருச்சூர் நகரிலிருந்து 22 கிலோமீட்டரில் உள்ள இரிஞ்சாலக்குடா என்னும் ஊரில் பரதன் கோவில் இருக்கிறது . நாட்டிலேயே பரதனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது ஒன்றுதான்.

ஆயினும் ராமர் கோவில் போலவே இங்கும் விஷ்ணுதான் இருக்கிறார்; அவர் பெயர் சங்கமேஸ்வரன் ; கோவிலில் நான்கு குளங்கள் இருப்பது இதன் தனிச் சிறப்பு. பரதன் நான்கு கரங்களுடன், வலதுபக்க மேற்கரத்தில் தண்டம், கீழ் கரத்தில் அட்சமாலை, இடதுபக்க மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் சங்கும் கொண்டு நின்ற வாறு கரிசனம் தருகிறார் .

குலிப்பிணித் தீர்த்தம் கோவிலுக்குள் இருக்கிறது. ஏனைய 3 குளங்கள் கோவிலுக்கு வெளியே உள்ளன.

வக்கையில் கைமால் என்ற நிலப் பிரபுவிடம் மீனவர்கள் கடற்கரையில் கண்ட ராம லட்சுமண பரத , சத்ருக்கன ஆகிய  4 சிலைகளைக் கொண்டுவந்து கொடுத்தவுடன் அவர் அவைகளை 4 இடங்களில் பிரதிஷ்டை செய்ததால்  அவை நாலம்பலம் (நான்கு+ அம்பலம்) என்று அழைக்கப்பட்டன

XXXX

TAMIL WORD AROUND THE WORLD

TEMPLE டெம்பிள் என்ற ஆங்கிலச் சொல் மத்திய கிழக்கில் மெசபொடோமியாவில் உள்ள தளி TELE  என்ற சொற்கள் எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது

TELE IN MESOPOTAMIA = TE(MP) LE

AMPLE= AMPALA = TEMPLE

XXXX

இனி கோவிலின் சிறப்புகளைக் காணலாம்

மீனவர்கள் அவைகளை மீட்டுக் கொணர்வதற்கு முன்னர், வக்கையில்  கைமால் கனவில் சிலைகளைக் கண்டதாகவும் அதனால்தான் அவர் மீனவர்களுக்கு கட்டளை இட்டார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலில் உள்ள குலிப்பிணி  தீர்த்தக் குளம் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடம் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தன ; காட்டில் தவம் செய்த குலிப்பிணி மகரிஷி கங்கா தேவியை வேண்டிக்கொள்ளவே கங்கை இங்கு பாய்ந்ததாகவும் அதன் ஒரு பகுதியே என்று தீர்த்தக்குளமாக இருக்கிறது என்றும் செப்புவர். அந்தக்குளம் புனிதமாக கருதப்பட்டு அங்குள்ள மீன்களுக்கு உணவு படைப்பது மீனூட்டு என்ற நேர்த்திக் கடனாக இருக்கிறது

கூடல் மாணிக்யம் பெயர்க்காரணம்

இந்தக் கோவிலுக்கு கூடல் மாணிக்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம். இறைவனின் நெற்றியில் ஒரு ஒளிக்கற்றை தோன்றியபோது அதை ஒப்பிட்டுப்பார்ப்பதற்காக காயம்குள ம்  ராஜா கையிலிருந்த மாணிக்கக்  கல்லை கொண்டுவந்தபோது இரண்டும் ஒட்டிக்கொண்டாதாம் ; இவ்வாறு இரண்டு மணிகளும் கூடியதால் கூடல் மாணிக்கம் ஆனது. இவை எல்லாம் செவி வழிக் கதைகள்.

சங்கமேஸ்வரன் பெயர் ஏன் ?

இரண்டு அல்லது மூன்று நதிகள் கூடும்  இடத்தை சங்கம் /  சங்கமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லால் குறிப்பிடுவர். (சம்ஸ்க்ருதத்தில் ச, ஸ ஷ ஆகிய எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்தான் அதிகம். இதனால் தமிழில் ச என்னும் எழுத்தில் சொற்களே இருக்கக்கூடாது என்று தொல்காப்பியன் என்ற பிராமணன் தடை விதித்தார் . சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு லட்சம் சொற்களில் ச எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்; அவையும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!)

முன்னொருகாலத்தில் இரிஞ்சால குடா என்னும் இந்த ஊர் இரண்டு நதிகளின் சந்த்திப்பில்/ சங்கமத்தில்  இருந்தன. காலப்போக்கில் நதிகள் தனது போக்கை மாற்றிக்கொண்டன. ஆயினும் இன்றும் கூட ஆராட்டு என்னும் இறைவனைக் குளிப்பாட்டும் வைபவம் சாலக்குடி ஆற்றில் ஓராண்டும் குரு மலி ஆற்றில் ஓராண்டும் நடைபெறுகிறது .

இதனால் இங்குள்ள இறைவனை  சங்கமேஸ்வரன் என்றும் பக்தர்கள் பகர்வர்.

வினோத வழிபாடு

சங்கம ஈஸ்வரன் பெயருக்கு இன்னும் ஒரு  சுவையான கதை !

இந்தக் கோவிலின் சிறப்பு வினோதம் , விசித்திரம் என்ன வென்றால் பூஜை செய்யும் அர்ச்சகர் இறைவனை  சிவன் , விஷ்ணு, தேவி என்ற பெயர்களில் அர்ச்சிப்பார். இதற்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு. தளிப்பரம்பா என்ற ஊரைச் சேர்ந்த  ஒரு மஹான் கேரளத்தில் பல கோவில்களுக்கு விஜயம் செய்து பல கோவில்களின் சக்தியை அவர் கொண்டுபோன சங்குக்குள் அடக்கினாராம். அவைகளைத் தங்கள் ஊர் தெய்வத்திற்குகே கொடுக்க அவர் இவ்வாறு செய்தார். தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது பழமொழி அல்லவா? அதற்கு ஏற்ப அவர் கொண்டு போன சங்கு கூடல் மாணிக்யம் சந்நிதியில் விழுந்து உடைந்தது. அப்போது அந்த சங்கிலுள்ள எல்லா சக்தியும் இறைவனிடத்தில் சங்கமம் ஆனதால் (இணைந்ததால்) இறைவனின் திருநாமம் சங்கம ஈஸ்வரனாக மாறியது .

XXXX

கோவிலின் தனிச் சிறப்புகள்

கேரளத்தில் எல்லா பெரிய கோவில்களிலும் 5 பூஜைகள் நடக்கும் ; இங்கு மூன்று வேளை பூஜைகள் மட்டும்தான் ( தமிழ் நாட்டில் ஆறு கால பூஜை!)

கோவிலில் பரிவார தேவதைகள் சந்நிதிகள் கிடையாது .

தாமரை, துளசி தெச்சி பூக்கள் போன்ற சில மலர்களை மட்டுமே பூஜைக்கு ஏற்பார்கள் ;

தீர்த்தக் குளத்தில் மீன்களைத் தவிர வேறு தவளை, தண்ணீர் பாம்பு முதலிய பிராணிகள்  இராது ;

வழுதுணங்காய் (கத்தரிக்காய்) நைவேத்யம் : ஒரு பக்தருக்கு வயிற்று வலி ஏற்பட்ட பொழு து இறைவனே கனவில் தோன்றி 101 கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து நைவேத்தியம் செய்யச் சொன்னாராம் அவர் அப்படிச் செய்தவுடன் வயிற்று வலியும் நீங்கியது . அதுமுதல் வழுதுணங்காயை இறைவனுக்குப் படைப்பது வழக்கம் ஆகிவிட்டது .

xxxx

கோவிலின் கலை வேலைப்பாடுகள்

திருச்குர் – எர்ணாகுளம்  பாதையில் உள்ள இரிஞ்சலகுடா ரயில் நிலையத்திலிருந்து   5 மைல் தொலைவில் ஊர் இருக்கிறது. பெரிய கிழக்கு வாயில் வழியாக கோவிலை அடையலாம் அந்த அலங்கார வாயிலில் பல கண்கவரும் சிற்பங்கள் உண்டு.

கோவிலுக்குள் இரு புறச் சுவர்களிலும் வண்ண ஓவியங்கள் நம்மை வரவேற்கும்; இடதுபுறம் கூட்டம்பலம் ; வலது புறம் குளம்;  ஸ்ரீ கோவில் வட்ட வடிவில் இருக்கிறது மேலே தங்க ஸ்தூபி; கூரை முழுதும் செப்புத் தகடுகள் ; வெளிப்புறச்ச சுவர்களில் அழகிய மரச் சிற்பங்கள்

xxx

திருவிழாக்கள்

துலா மாத (அக்டோபர்- நவம்பர்)  திருவோண நட்சத்திரத்தன்று அறுவடையான புது அரிசி ஆண்டவனுக்கு  அர்பணிக்கப்படும் இதைத் தொடர்ந்து பெரிய விருந்து நடக்கும். மறுநாள் முக்கிடி என்னும் ஆயுர்வேத மருந்து நைவேத்யம் நடக்கும். இது பல நோய்களுக்கு நல்ல மருந்து .

மேடம்/ மேஷ மாதத்தில் (ஏப்ரல் – மே ) ஆண்டு விழா நடக்கிறது கேரளத்திலுள்ளா எல்லாக் கோவில்களிலும் நடக்கும் யானைகள் பவனி, சங்கீதம் முதலியன இங்கும் உண்டு.. திருவாங்க்கூர் மஹாராஜா பிரதிநிதி தச்சுடைய கைமால் தலைமையிலுள்ள கமிட்டி,  கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது .

–subham—

Tags- கூடல் மாணிக்யம் , பரதன் கோவில், சங்கமேஸ்வரன், குலி பினி , தீர்த்தம், முக்கிடி, வைக்கையில் ,கைமால் ,

ஸ்டோன் பொய் பேசாது (‘Stones will never lie’) Post N0.12,748)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,748

Date uploaded in London –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 11 

ச.நாகராஜன் 

டிக்கட் ப்ளீஸ்?

பிரபல எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டன் (G.K.Chesterton) (பிறப்பு 29-5-1874 மறைவு 14-6-1936) ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு பத்திரிகையை அவர் படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் வந்த டிக்கட் பரிசோதகர், ‘டிக்கட் ப்ளீஸ்?’ என்று கேட்டார்.

உடனே செஸ்டர்டன் தனது பையில் தேட ஆரம்பித்தார்.

 டிக்கட் பரிசோதகரோ, “பரவாயில்லை, உங்களிடம் டிக்கட் இருக்கும் என்று எனக்குத் தெரியும். திரும்பி வரும்போது டிக்கட்டை பஞ்ச் செய்கிறேன்” என்றார்.

செஸ்டர்டன், “அதில்லை, நான் எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரிய வேண்டுமல்லவா, அதற்கு டிக்கட் வேண்டுமே” என்றார்.

ஸ்டோன் பொய் பேசாது (‘Stones will never lie’)

ஏ.எஸ்.பி. ஐயர் (A.S.P. Iyer) புகழ் பெற்ற எழுத்தாளர், பிரபல நீதிபதியாகவும் திகழ்ந்தவர். (பிறப்பு 26-1-1899 மறைவு 1963)

அவர் கேரளாவில் பிறந்தவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

அவர் ஆக்ஸ்போர்டில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சரித்திரப் பேராசிரியாக இருந்தவர் திரு ஸ்டோன் என்பவர்.  அசோக மன்னரின் ஸ்தூபங்களைப் பற்றி அவர் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.

அசோக மன்னன் அந்த ஸ்தூபங்களை நிறுவவே இல்லை என்றும் அவர் புகழைப் பரப்ப விரும்பிய ஒருவர் அந்த ஸ்தூபங்களில் அவர் பெயரைப் பொறித்து விட்டார் என்றும் ஸ்டோன் கூறினார். இதைப் பொறுக்கமாட்டாத ஏ.எஸ்.பி. ஐயர் தனது இருக்கையிலிருந்து எழுந்தார்.

பேராசிரியர் ஸ்டோனை நோக்கிச் சுட்டிக் காட்டிய வண்ணம் “கற்கள் எப்போதுமே பொய் சொல்லாது, இந்த ஸ்டோன் ஒருவேளை சொல்லலாம்” (Stones will never lie although this Stone may)

என்று கூறி விட்டு அவர் அமர்ந்தார்.

ஆதாரம் : 16-8-2000 அன்று திரு கே.வெங்கடராமன் என்பவர் ஆங்கில நாளிதழான தி ஹிந்துவில் எழுதிய கடிதம்.11-8-2000 அன்று ‘Ashoka’s edict’ என்று பிரசுரமான கடிதத்திற்கு அவர் இப்படி பதில் எழுதியிருந்தார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை!

காலம் சென்ற பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒரு சமயம் பாரிஸ் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைப்பொருள் கண்காட்சிக்குச் சென்றிந்தார். அங்கு கலையம்சம் பொருந்திய ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். அப்போது அவரிடம், “ஓவியங்களைப் பார்க்கிறீர்களே, அவற்றைப் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்ட போது அவர் பெருமூச்சு விட்டபடி கூறினார் இப்படி: “எனது வாழ்க்கை முழுவதும் கழிந்த பின்னர் நான் புரிந்து கொண்டது எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை என்பதைத் தான்!” (With a sigh he said, “It has taken me all my life to understand that it is not necessary to understand everything.”)

ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega என்ற நூல்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 26 (Post No.12,747)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,747

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxxx

PART 26-Slokas     83, 84, 85,86

ऐश्वर्यस्य विभूषणं सुजनता शौर्यस्य वाक्संयमो

        ज्ञानस्योपशमः श्रुतस्य विनयो वित्तस्य पात्रे व्ययः ।

अक्रोधस्तपसः क्षमा प्रभवितुर्धर्मस्य निर्व्याजता

        सर्वेषामपि सर्वकारणमिदं शीलं परं भूषणम् ॥ 83॥

செல்வத்தில் திளைப்பவர்களின் அணிகலன் – கருணை வீரம் மிக்கவர்களின் அணிகலன்- மெளனம் ;

விவேகமுள்ளவர்களின் அணிகலன்– அடக்கம்கற்றோரின் அணிகலன்- பணிவுசெல்வத்துக்கு அழகு பகிர்ந்து கொள்ளுதல்தவ சீலர்களின் அணிகலன் சினமின்மைபலசாலியின் அணிகலன் சகிப்புத்தன்மைநேர்மையாளர்களின் அணிகலன் உண்மைஇவர்கள் எல்லோருக்கும் அணிகலன்—நல்லொழுக்கம்— 83

ஐஶ்வர்யஸ்ய விபூஷணம் ஸுஜனதா ஶௌர்யஸ்ய வாக்ஸம்யமோ

ஜ்ஞானஸ்யோபஶம ஹ ஶ்ருதஸ்ய வினயோ வித்தஸ்ய பாத்ரே வ்யய ஹ |

அக்ரோதஸ்தபஸ ஹ க்ஷமா ப்ரபவிதுர்தர்மஸ்ய நிர்வாஜதா

ஸர்வேஷாம் அபி ஸர்வகாரணம் இதம் ஶீலம் பரம் பூஷணம் || 1.83 ||

83. Kindness is the ornament of prosperity while silence is that of valour. Restraint is the adornment for wisdom and humility, that for learning.  Distribution to the deserving embellishes wealth. Lack of anger is the ornament of penance, forbearance that of a powerful one, and sincerity that of following righteousness. Good character, which is the root cause of all these, is the ornament of all.

XXXXX

निन्दन्तु नीतिनिपुणा यदि वा स्तुवन्तु

        लक्ष्मीः समाविशतु गच्छतु व यथेष्टम् ।

अद्यैव वा मरणमस्तु युगान्तरे वा

        न्याय्यात्पथः प्रविचलन्ति पदं न धीराः ॥ 84॥

நிந்தந்து நீதி நிபுணா யதி வா ஸ்துவந்து

லக்ஷ்மீ ஹி ஸமாவிஶது கச்சது வா யதேஷ்டம் |

அத்யைவ வா மரணம் அஸ்து யுகாந்தரே வா

நியாய்யாத்பத ஹ ப்ரவிசலந்தி பதம் ந தீரா ஹா || 1.84 ||

.தூற்றினால் தூற்றட்டும்; போற்றினால் போற்றட்டும்; தன லக்ஷ்மி  வீட்டுக்குள் நுழையட்டும் அல்லது வெளியேறட்டும் ; இன்றே மரணம் வருவதாக இருக்கட்டும் அல்லது பின்னர் வரட்டும் ; இது எவ்வாறானாலும் துணிச்சசல்மிக்கவர்களும்  புத்திசாலிகளும் நேர்மையான பாதையிலிருந்து விலக மாரட்டார்கள்– 84

84. Experts in policy or ethics may censure or praise (them); The Goddess of wealth may enter (their house) or leave at will; Death may come (to them) today or in a later eon; regardless, wise and courageous people do not swerve from the path of righteousness.

நிந்தனை செய்தாலுமன்றி நேராக வாழ்ந்ததிடி னும்

சந்ததமும் செல்வமிக ச் சேர்ந்தாலும் தீர்ந்தாலும்

விந்தையுடன் மரணம் மேவிடினும் வாழ்ந்திடினும்

சி ந்தை துணிந்த திறமுடையார் நேர்வழியில்

அந்தமு டன் அது தப்பி யோரடியும்

பந்தமுடன் வையாரப்பால்—84

XXXXX

भग्नाशस्य करण्डपिण्डिततनोर्म्लानेन्द्रियस्य क्षुधा

        कृत्वाखुर्विवरं स्वयं निपतितो नक्तं मुखे भोगिनः ।

तृप्तस्तत्पिशितेन सत्वरमसौ तेनैव यातः पथा

        लोकाः पश्यत दैवमेव हि नृणां वृद्धौ क्षये कारणम् ॥ 85॥

பக்னாஶஸ்ய கரண்டபிண்டிததனோர்ம்லானே னி த்ரியஸ்ய க்ஷுதா

க்ருத்வாகுர்விவரம் ஸ்வயம் நி பதிதோ நக்தம் முகே போகினஹ |

த்ருப்தஸ்தத்பிஶிதேன ஸத்வரம் அஸௌ தேனைவ யாதஹ யதா

லோகாஹா பஶ்யத தைவம் ஏவ ஹி ந்ருணாம் வ்ருத்தௌ க்ஷயே காரணம் || 1.85 ||

85. A mouse, making a hole in a basket at night, fell into the mouth of a despairing serpent whose body was constricted in the basket and limbs weak with hunger. Sated with its meat, the serpent quickly exited through the same way.  O people! See, it is fate that causes men’s rise and fall.

பாம்பிருந்த பெட்டியொன்றிற் பாரா தெலியொன்று

தூ ம்பு செய்து செல்லச் சுடு பசியாற் — சாம்பிய பாம்

பவ்வெ லியைத் தின்று பின்னர் அவ்வழியே தப்பியதால்

தெய்வ பலம் ஆரறிவார்  தேர்ந்து – 85

ஒரு பெட்டிக்குள் பாம்பு அடைப்பட்டுக்கிடந்தது ; அதற்கு ஒரே பசி; அப்போது பெட்டிக்குள் இருக்கும் உணவைச்சா பித்த ஒரு எலி ஓட்டை போட்டு உள்ளே புகுந்தது; காத்திருந்த பாம்பு அதைக்கவ் விப் பிடித்து பசியைத் தீர்த்துக்கொண்டது.. விதியின் போக்கை யார் அறிவார் ?-85

XXXX

आलस्यं हि मनुष्याणां शरीरस्थो महारिपुः ।

नास्त्युद्यमसमो बन्धुः कुर्वाणो नावसीदति ॥ 86॥

ஆலஸ்யம் ஹி மனுஷ்யாணாம்

ஶரீரஸ்தோ மஹாரிபுஹு |

நாஸ்த்யுத்யமஸமோ பந்துஹு

குர்வாணோ நாவஸீததி || 1.86 ||

XXXX

“Laziness is a arch  enemy residing  within all .Industry is man’s matchless friend.”– 86

மனிதர்களுக்குள் உறையும் மிகப்பெரிய எதிரி  சோம்பேறித்தனம்அவனுடைய மிகப்பெரிய நண்பன் தொழில் செய்தல் (முயற்சியில் இறங்கல்) – 86

—subham —

 tagss- Nitisataka,   83, 84, 85,86 Bhartruhari,  4 languages, snake and mouse

Rare Pictures from Anti Hindu Book :Dirty Dravidians Source Book– Part 2 (Post.12,746)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,746

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 2- SOURCE OF VATICAN FUNDED DRAVIDIAN ROWDIES

Book title

Story of The World’s Worships, Frank S Dobbins,

Chicago, 1901

For the past 100 years Dravidian rowdies are spreading lies about Hinduism. All those lies are in this book. Of late Vatican is hooking even famous Caranatic Music singers by giving huge sum of money. Now political party scoundrels are spreading the same lies.

For instance, this book also talks about SATI (wives burning in funeral pyre of husbands). But Christian frauds, Caldwell gangs and Max Muller gangs hid one big truth. Neither Manu Smrti, nor Rig Veda mentioned SATI. But 2000 year old SANGAM TAMIL LITERATURE glorified it. A PURA NANURU poem is the verse written by Bhutha Pandyan Devi; she ignored Brahmin ministers’ advise and threw herself in her husbands fire. All these facts were hidden by scoundrels. in North India Hindu women shunned Muslim raping them and threw themselves in Fire before the Muslims’ hands touched them. Whole of India knew the story of the greatest Hindu Woman Rani Padmini who threw herself into fire with hundreds of her palace friends before the Rape Maniac Alauddin Khilji entered the palace.

xxxx

This anti Hindu book showed RESCUED (from SATI) HINDU WOMEN and Odisha Hindus breaking Hindu Chariot of Lord Jagannath after becoming Christians. It says 2000 hHindus converted themselves and brough all Hindu Idols to Bishop’s place. Full of Fiction!!

Book is full of poison which the Dravidian rowdies vomit every day. If Vatican money can poison Carnatic Music Singers, cant they change already dirty mouthed politicians?

Here are some MORE pictures: 

also  read the matter with the pictures 

Read the matter with the pictures.

To be continued……………………..

–subham–

 Tags- Rare pictures, Part 2, Anti Hindu book, Dirty Dravidians ,Source book, 

திப்பு சுல்தான் தாக்கிய ராமர்  கோவில் — Part 10 (Post No.12,745)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,745

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 10

கோவில் எண் 9 – திருப்பரையார் அல்லது த்ருபிரயார்   ராமர்  கோவில்

இந்தக் கோவில்  குருவாயூர் அல்லது திருச்சூரிலிருந்து 25  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவில் தோன்றிய வரலாறு , சிலைகள் நிறுவிய வரலாறு எல்லாம் சுவையான அடிப்படையில் அமைந்துள்ளன; அது மட்டுமல்லாமல் 6 அடி உயர் ராமர் (விஷ்ணு) சிலையின் கையில் அட்சமாலை இருப்பது இன்னும் ஒரு வியப்பான விஷயம்.

கடற்கரையில் ஒதுங்கிய 4 சிலைகளை, வக்கையில் கைமால் என்ற உள்ளூர் பிரபுவிடம் மீனவர்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அவை ராம லட்சுமணபரத , சத்ருக்கனன் என்ற நால்வரின் சிலைகள் ஆகும். அவைகளை அவர் 4 இடங்களில் பிரதிஷ்டை செய்து கோவில் உருவாக்க உதவினார். இப்படி நான்கு/ நாலு

இடங்களில் கோவில்கள் உண்டானதால் அவை நாலம்பலம் FOUR TEMPLES  என்று அழைக்கப்பட்டன.

அவை அமைந்த இடங்கள் :

ராம பிரான் – திருப்பரையார் கோவில்

பரதன் – இரிஞ்சல குடா  கூடல் மாணிக்கம் கோவில்

திருமூழிக்களம் – லட்சுமணன் கோவில்

பையம்மல் – சத்ருக்னன் கோவில்

மலையாள பக்தர்கள் ஆனி / கற்கடக மாதத்தில் இந்த 4 கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

த்ருப்ரையாரில் எங்கே கோவிலை அமைப்பது என்று ஜோதிடர்களுடன் ஆராய்ந்தபோது ஒரு அசரீரி கேட்டது (ஆளற்ற குரல் =  அ +  சரீரம் = BODYLESS  VOICE ) . மயில் எங்கே பறக்கிறதோ அதன் கீழ் கோவிலைக் கட்டவும் என்றது அக்குரல். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் மயில் வரவில்லை. ஒருவர் அங்கே மயில் தோகையுடன் வந்து நின்றார் ஓஹோ! இறைவன் ஓ கே O K சொல்லிவிட்டான் என்று சிலையைப் பிரதிஷ்டை செய்த்தனர். ஆனால் அதன் பிறகு உண்மையிலேயே ஒரு மயில் சற்று தள்ளிப் பறந்து சென்றது. உடனே அங்கே பலிக் (BALI STONE) கல்லை நிறுவினார்கள். அது ஆடிக்கொண்டே இருந்தது. அதாவது நிலையாக நிற்கவில்லை. கேரளத்தில் அபூர்வம் நிகழ்த்தும் சித்தர்கள் , சாமியார்கள் உண்டு. வில்வ மங்கலம் சாமியார் நாரணத்து ப்ராந்தன் (நாராயண பைத்தியக்காரன் ) ஆகியோர் மிகவும் பிரபலம் ஆனவர்கள். பைத்திய (ப்ராந்தன்) சித்தர்,  கோவில் தந்திரியை அழைத்து மந்திரங்களை சொல்லி ஒரு ஆணியை அடிக்கச் சொன்னார். கல்லும் ஆடாது , அசங்காது நின்றது. இன்றும் ஆணியைக் காணலாம் .

ஒரு முறை வில்வமங்கல சாமியார் வந்த போது ஸ்ரீ தேவியும் பூதேவியும் கோவிலின் கிழக்கு நுழைவாயிலைத் தவிர்த்து மேற்கு வாசல் வழியாக வந்ததைக் கண்டார். பின்னர் அவர் அந்தகக் கதவுகளை மூடச் சொல்லிலிவிட்டு ஸ்ரீதேவி ,பூதேவீ  விக்கிரகங்களை நிறுவினார்.

எல்லா வகையிலும் விநோதங்கள் நிறைந்த கோவில் இது; மூலஸ்தானம் ஒரு பக்கம்; பலி-க்கல் இன்னொரு பக்கம். கோதண்ட ராமர் என்றால் வில் மட்டும் இருக்க வேண்டும்; ஆயினும் இங்கு இருப்பதோ நாலு கைகளை உடைய விஷ்ணு; அதிலும் ஒரு கையில் பிரம்மா போல அட்ச மாலை. சங்கு சக்கரம், வில்/கோதண்டம் மற்றும் மாலை!! .அருகில் பெருமாள் போல ஸ்ரீ , பூ தேவிகள்.

ஆயினும் கோவிலில் ராமாயண மரச் சிற்பங்கள் நிறைந்திருப்பதால் இதை ராமர் கோவில் என்று சொல்லுவதும் பொருத்தமே; அது மட்டுமல்லாமல் பழங்கால ஓவியங்கள் அப்படியே இருக்கினறன .

இன்னொரு வினோதம் என்ன வென்றால் தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் , கணபதி சந்நிதிகள்  இருப்பதாகும்.

இவ் வாறு பல அம் சங்கள் கொண்ட இறைவனைப் பலரும் மும்மூர்த்திகளின் வடிவமாகவே காண்பதுண்டு.

வெடி வழிபாடு

ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒரு வினோத வழிபாடு, ஒரு விசித்திர பிரசாதம் இருப்பது  இந்து மதத்தின் சிறப்பு லோகோ பின்ன ருசிஹி = உலகம் பலவிதம் என்பது காளிதாசனின் வாக்கு. இங்கு வெடிகளை வெடித்து காணிக்கை/ நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்; ஆதிகாலத்தில் வன விலங்குகள், பக்தர்களின் பாதைகளில் குறுக்கிடக்கூடாது என்பதற்காக இந்துக்கள் செய்த வேலை இது. இப்போது மனித விலங்குகள் அதிகம் ஆகிவிட்டதால் வன விலங்குகள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன.

தலை திரும்பிய ராம பிரான்

பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையின் தலை பக்கவாட்டில் திரும்பியவாறு இருந்தது. கணிப்பாயூர் நம்பூதிரி வந்து தலையைத் திருப்பிவைத்தார் மேலே பட்டுத்துணிகளைப் போட்டுவிட்டு வெளியே வந்தார்; ராமர் மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டார் காலப்போக்கில் ஒரிஜினல் ராமர் விக்கிரகம் தேய் மானம் அடைந்தது . ஜோதிடர்களை அழைத்து ப்ரச்னம் போட்டுப்பார்த்தார்கள்; சிலையை மாற்றாதே என்ற உத்தரவே ப்ரச்னத்துக்கு (ப்ரஸ்னம் என்றால் கேள்வி) விடையாக வந்தது உடனே அர்ச்சகர்கள் புது வழி கண்டு பிடித்தனர் பஞ்ச லோகத்தில் (ஐம்பொன்) ஒரு ஆடை போல செய்து மேலே வைத்துவிட்டனர். அதிலுள்ள முகம் மிகவும் அழகாக அமைந்துவிட்டதால், பக்தர்கள் வைத்த கண்ணை எடுக்க மாட்டார்கள். அவ்வளவு அழகு ! கொள்ளை அழகு !!

திப்பு சுல்தான் தாக்குதல்

கர்நாடகத்தை ஆண்ட ஹைதர் அலி, அவனது மகன் திப்பு சுல்தான் ஆகிய இருவரும் தாக்காத கோவில்கள் மிகச் சிலவே. இந்தக் கோவிலும் மதவெறியன் திப்புவின் வாளுக்குத் தப்பவில்லை. ராமரின் 4 கைகளில் ஒன்றை வெட்டினான்; ரத்தம் கொட்டியது. உடனே பயந்து போய் என்ன செய்வதென்று திகைத்தான். அறிஞர்களின் கூற்றுப்படி வணங்கிவிட்டு கோவிலுக்கு காணிக்கையும் கொடுத்துவிட்டுச் சென்றான் (see page 131 of Temples and Legends of Kerala, K R Vaidyanathan, B V Bhavan, Bombay, 1982).

நமஸ்கார மண்டபமும் நவக்கிரக சிற்பங்களும்

கோவிலின் நடுப்பகுதி வட்டவடிவில் அமைந்தது. கூம்பு வடிவ கோபுரம். நமஸ்கார மண்டபம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது 24 பிரிவுகள் உள்ளன. அங்கே நவக்  கிரக  மரச் சிற்பங்களும் புராதன ஓவியங்களும் உள .

ஸ்ரீ கோவிலில் ராமாயண சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன .

கூத்து ஆட்டம்

அபிநயங்கள் மூலம் , வாக்கியங்கள் வசனங்கள் இல்லாத கூத்து ஆட்டம் இங்கே நடப்பது கோவிலின் மற்றொரு சிறப்பாகும் ; விருச்சிக மாதத்தில் (நவம்பர் மத்தி ) 12 நாட்களுக்கு கூத்து நடக்கும்; அனுமான் – சீதை சந்திப்பு , மோதிரம் (அங்குலீயம்) கொணர்தல் முதியன கருப்பொருள் ஆக இருக்கும் .

வருடத்தில் இரண்டு  பெரிய விழாக்கள் நடைபெறும்; விருச்சிக (நவம்பர்) மாத ஏகாதசி விழா , மீன மாத (மார்ச்- ஏப்ரல்) பூரம் விழா. ஏகாதசி அன்று ஐயப்பன் பவனி, பெருமாள் பவனிகள்  ஏராளமான யானைகளுடன் நடக்கும்

இந்தக்கோவில் ஜாமோரின் ZAMORIN என்ற இந்து மன்னர்களின் கீழ் இருந்து 1719- ம் ஆண்டு ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது  . பின்னர் திப்பு சுல்தான்,  டச்சுக்காரர்களை  விரட்டி அடித்ததான் . பின்னர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், சுல்தானைத் தோற்கடித்தனர்  கொச்சி மன்னர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து  கோவிலைப் பெற்றனர். இப்போது கொச்சி தேவஸ்வம் போர்டின் கீழ் வந்துவிட்டது .

–subham—

Tags- ராமர் கோவில், கேரளம் , திருப்பறையார் , நாலம்பலம் ராமாயண சிற்பங்கள் ,திருப்ரையார், திப்பு சுல்தான்