Rare Pictures of Hindu Gods from Asiatic Mythology Book (1932)- part 2 (Post No.12,733)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,733

Date uploaded in London – –  –  18 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxxx

 Part 2 from Asiatic Mythology (Year 1932)

GUIMET MUSEUM (MUSEE GUIMET) IS IN PARIS; WE MUST GET BACK ALL OUR TREASURES; FRANCE PLUNDERED ART TREASURES IN SOUTH EAST ASIA AND INDIA.

The Guimet Museum is an art museum located at 6, place d’Iéna in the 16th arrondissement of Paris, France. Literally translated into English, its full name is the National Museum of Asian Arts-Guimet, or Guimet National Museum of Asian Arts. The museum has one of the largest collections of Asian art outside of Asia.

TO BE CONTINUED………………………………………

–subham—

Tags-  rare pictures, part 2, Asiatic mythology

அதிசய பாம்புக் கோவில் -Part 7 (Post.12,732)

THE PICTURE IS FROM SHETPAL VILLAGE OF MAHARASHTRA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,732

Date uploaded in London – –  –  18 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 7

கோவில் எண் 6 –    மன்னார்சாலா பாம்புக் கோவில்

 கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 7

வலிய அம்மா 

மன்னார்சாலா பாம்புக் கோவில் ,  நாகராஜனை வழிபடும் ஒரு ஒப்பற்ற கோவில்.

மன்னார்சாலா பாம்புக் கோவில்  எங்கே இருக்கிறது?

மன்னார் சாலா என்னும் இடம் ஹரிபாட் HARIPAD என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரத்திலும் அம்பலப்புழா ,காயன்குளம், மாவெலிக்கரா ரயில் நிலையங்களிலிருந்து 15 கி.மீ தொலைவு.   

By Rail:

The nearest railway station to Mannarasala Nagaraja Temple is Haripad Railway Station which is situated at a distance of 3.4 Km.

உலகில் பாம்பு வழிபாட்டில் முதன்மையாக இருப்பது பாரதம்; அது மட்டுமல்ல மற்ற இடங்களில் பாம்பு வழிபாடு  மியூசியங்களில் உள்ளது. பாரத நாட்டில் மட்டும்  வீடுகளிலும் பாம்பு வழிபாடு இருக்கிறது.

அதுமட்டுமல்ல; சனாதனாமாம் இந்துமதம் என்று பாரதியார்  பாடும் வரியில் உள்ள சனாதன தர்மத்தின் ஆணி வேறான வேதத்தில் பாம்பு ராணி வருகிறாள். அதையடுத்து வந்த ஸரஸ்வதி – சிந்துவெளி நாகரீகத்திலும் பா ம்பு முத்திரை கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்ல; மேலைக் கடற்கரை முழுதும் உள்ள மாநிலங்களில் நாக பஞ்சமி NAG PANCHAMI விழாக்கொண்டாடி உலகியே வியக்க வைக்கின்றனர் இந்துக்கள். புறச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க இந்துக்கள் கண்டுபிடித்த இந்த விழாவினை வெளிநாட்டினர் புகழ்ந்து புஸ்தகம் எழுதுகின்றனர்; வீடியோக்கள் வெளியிடுகின்றனர். எலிகளை பாம்புகள் சாப்பிடுவதால் வயல் வளம் பெருகுகிறது .

அது மட்டுமல்ல பழைய TELUGU FILMS தெலுங்கு திரைப்படங்களில் பாம்பு வராத திரைப்படமே இராது.

அது மட்டும்மல்ல சங்கதத்தமிழ் நூல்களில் உள்ள மருதன் இளநக நாகன் போன்ற 20 புலவர் முதல் வடக்கேயுள்ள நாகாலாந்து மாநிலம் வரை நாகர் இனத்தைக் காணலாம்.

குப்தர்  கல்வெட்டுகளில் GUPTA INSCRIPTIONS  நாகர்கள் உள்ளனர். இலங்கையில் ஸ்ரீ நாகன் என்ற பெயரில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமண மன்னன் ஆட்சி புரிந்துளான்.

அது மட்டுமல்ல தமிழ்நாட்டின் நாகர் கோவில்கேரளா மன்னர் சாலை, யாழ்ப்பாண நாகத் தீவு முதல் காஷ்மீரில் உள்ள அந்த நாகம் ANANTNAG வரை ஊர்ப்பெயர்கள் முழுதும் பாம்பின் பெயர்கள்தான் .

கேரளத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தென் மேற்கு மூலையில் நாகர் காவு என்ற இடம் இருக்கும்.

அதுமட்டுமல்ல பாம்பின் பெயரில்  பாம்பாட்டி சித்தர்கள் முதலிய பல சித்தர்கள் உடைய நாடு பாரத நாடு.

பாம்பு சக்தியை குண்டலினி என்று பெயர் வைத்த நாடு பாரத நாடு

ஸ்னேக்ஸ் அண்ட் லாடர் SNAKES AND LADDER BOARD GAME என்னும் போர்ட் விளையட்டைக் கன்டுபிடித்தது இந்துக்கள் என்று உலக மியூசியங்களில் பலகை வைத்திருப்பதையும் காணலாம். நம் நாட்டில்

இதைப் பரமபத சோபான படம் என்று எல்லார் வீட்டில் விளையாடுவதையும் காண்கிறோம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நம் வீடுகளிலேயே நாகராஜன்நாகேஸ்வரன்நாகேஸ்வரிவாசுகி என்ற பெயர்களில் உறவினர் இருப்பதையும் காணலாம். இந்தப் பாம்பு வழிபாட்டை  நாம் எகிப்துக்கும் கிரேக்க நாட்டுக்கும் பரப்பினோம். எகிப்திய மன்னர்கள் சிவபெருமான் தலையில் நாகர் முடி இருப்பது போல முடி/ கிரீடம் வைத்துக் கொண்டனர். கிரேக்க நாட்டில் ஒரு தேவியானவள் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகளுடன் காட்சி தரும் சிலைகளை பல மியூசியங்களில் காணலாம். எல்லாவற்றுக்கும் மூலம் ரிக் வேதம் .

பாம்பு இனம், கருட இனம் என்ற இரண்டு இனங்களை நமது நூல்கள் குறிப்பிடுகின்றன. இதை மாயன் MAYAN நாகரீகம் வரையும் பல நாடுகளின் கொடிகளிலும் சின்னங்களிலும் இன்றும் காண்கிறோம்.

SERPENT சர்ப்பன்ட் , SNAKE ஸ்நேக் என்ற ஆங்கிலச் சொற்கள் எல்லாமே சர்ப்பம், ஸ்/நாகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து வந்தனவே; நாம்தான் உலகினுக்கு பாம்பு பற்றி சொல்லிக்கொடுத்தோம் என்பதற்கு இதைவிட சான்று தேவை இல்லை. பாம்பு இல்லாத இந்துக் கடவுள் படங்களைக் காணவும் முடியாது!!!

இவ்வளவு சிறப்புமிக்க பாம்பு வழிபாட்டினை கேரளா மாநில மன்னார் சாலைக்கு கோவிலில் காண்பது போல வேறு எங்கும் காண முடியாது

குழந்தைகளை இல்லாத தம்பதிகள் நிறுவிய  ஏராளமான நாகர் சிலைகளைத்  தமிழ் நாட்டின் பல கோவில்களில் காணலாம்; கர்நாடக குக்கே KUKKE சுப்பிரமானிய சுவாமி  கோவில் ஆனாலும் சரி, மன்னார்சாலை நாகராஜர் கோவில் ஆனாலும் சரி குழந்தை வேண்டுமானால் நாகர் வழிபாடு அவசியம் என்ற எண்ணம் மலிந்து  கிடப்பதைப் காணலாம். இந்த எண்ணம் காரணமாக நாம் பாம்புகளைக் கொல் வதில்லை. அவை வயல்களில் எலிகள் பெருகாமல் காத்து, நம் அறுவைடையைப் பெருக்குகின்றன. இந்துக்கள் புறச் சூழல் பாதுகாவலர்கள் . நிற்க

xxxx

மன்னார்சாலை கோவில் தரிசனத்துக்கு வருவோம்

கேரளத்தில் பெரும்பாலான வீடுகளில் தென் மேற்கு மூலையில் சர்ப்ப காவு என்று நாகர் வழிப்பாட்டுக்கு இடம் ஒதுக்கப்படும்

இங்கே நாகராஜாவும் நாக ராணியும் வழிபடப்படுகின்றனர்

16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தோப்பு இது. ஆயிரக் கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம். பெரிய சந்நிதியில் நாகராஜா, நாக யக்ஷி உருவங்களை வைத்து வழிபடுகின்றனர்.வடக்கில் இல்லம்/ வீடு  இருக்கிறது . அதன் கீழ் நிலவறையில் நாகராஜா சமாதி உள்ளது. குல முதல்வரான அவரை மூத்தாசான் என்பர் அங்குதான் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்ய உரிமை பெற்ற பெண்மணி வசிக்கிறாள் . அவளை நம்பியதி என்பார்கள்  வலிய  அம்மா, மன்னார்சாலா அம்மா என்றும் அழைப்பார்கள். இவர்தான் சிலைகளுக்கு பூஜை செய்வார்.

XXXX

15,000 சர்ப்பக் காவுகள் ! SERPENT GROVES

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கொச்சி திருவாங்கூர் சமஸ்தானங்களில் உள்ள பாம்புக் கோவில்களைக் கணக்கெடுத்ததில் 15,000–க்கும் மேலான சர்ப்பக் காவுகள் SERPENT GROVES இருப்பது தெரியவந்தது.

இந்து ஜோதிட  சாஸ்திரத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தை  பாம்பு என்று சொல்லுவார்கள்; ஆகையால் இங்கு ஆயில்யம் நட்சத்திர நாட்களில் குறிப்பாக துலாம், கன்னி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

சர்ப்ப யக்ஷி, நாக யக்ஷி என்ற நாக தேவதைகளுடன் நாக சாமுண்டி என்பவரின் சந்நிதியும் உளது ; அவர். நாகராஜாவின் சகோதரி.

இங்கு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாக பலி,  நீரும்  பாலும் அஷ்ட நாக பூஜைகள் என்று பல பூஜைகள் இருக்கின்றன. நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு,கேது தோஷங்கள்  இருப்பவர்களும் குழந்தைப் பேறு வேண்டுவோரும் இங்கு சிலைகள் செய்து வைத்து கோவில் விதிகளின்படி வழிபடுகின்றனர். இதே போல கர்நாடக KUKKE SUBRAHMANYA SWAMI குக்கே சுப்பிரமணியர் கோவிலிலும் நடைபெறுகிறது .

30, 000 சிலைகள்

மன்னார்சாலை கோவில் அல்லது காவு (காடு)  காடு போலப் பரந்து விரிந்து கிடக்கிறது அங்கு பக்தர்கள் வைத்த 30, 000 நாகர் சிலைகள் இருக்கின்றன

இங்கு குருவாயூயூர் போல துலாபாரம் கொடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது எடைக்கு எடை அரிசி, பருப்பு முதல் தங்கக்கட்டிகள் வரை துலாபாரம் கொடுக்கலாம். துலா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தராசு என்று பொருள்.

இந்தக் கோவிலில் துலா மதம் ஆயில்யம் வருட உற்சவம் ஆகும்.

வலிய  அம்மா என்பவர் அந்தக் குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் ஆவார். இவர் வலிய அம்மாவாக பொறுப்பேற்ற நாள் முதல்,  

பிரம்மச்சசாரிணியாக வாழ  வேண்டும். இவர் பிராமணர் குலத்தில் பிறந்தவர்.. வெளியே செல்ல மாட்டார் அப்படி உறவினர் வைபவங்களுக்குச் சென்றாலும் மாலை சூரிய அ ஸ்தமனத்துக்கு முன்னால்  கோவிலுக்கு வரவேண்டும் என்பது நடைமுறை..

நீரும் பாலும்உருளி அளித்தல்

ஆண்டுதோறும் நடக்கும் உற்சவத்தில் நாகராஜா, நாக யக்ஷி ஊர்வலம் நடக்கும்; பக்தர்கள் நிறைய காணிக்கைகளை கொண்டு வருவார்கள். இந்தக் கோவிலுக்கு உருளி என்னும் சட்டியை அளிப்பதும் ஒரு காணிக்கைச் சடங்கு .

2 கதைகள்

இந்தக் கோவில் உருவான வரலாறு பற்றிய கதை என்னவென்றால் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் பாம்பினை வழிபட்டனர் என்றும் அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் கோவில் கட்டியதாகவும் அப்போது  அருள்புரிந்த அந்த இறைவனே அவர்கள் மட்டும் இல்லாது அவர்கள் பரம்பரையே வழிபடவேண்டும் என்று சொன்னதாகவும், அதனால் அந்தக் குடும்பம் இந்தக் கோவிலைக் கட்டியதாவதும் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் மன்னர்களும் இந்தக் கோவிலுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

உருளி கதை

ஒரு குழந்தையற்ற பெண்மணி ஒரு உருளியில் / சட்டியில் உணவு கொண்டு வந்ததாகவும் அது அழகாக இருக்கவே வலிய அம்மா அதைப் போற்றிப் பாதுகாத்ததாவுடன் எல்லோரும் உருளையும் கொண்டுவந்து அவரைத் திருப்திப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிலிருந்து நூற்றுக் கணக்கானோர் இப்படிச் செய்யத் துவங்கினர்.

உருளிச் சட்டி கொண்டு வருவோர்  அதை நாகராஜா வின் முன்னர் கவிழ்த்து வைப்பது உருளி கமழ்த்தல் வழிபாடு ஆகும்

நூறும் பாலும் சடங்கில் பால், இளநீர், மஞ்சள் நீர் கலந்த நீரினை பாம்புக் கோலம் அல்லது சிலை மீது விடுவார்கள். சர்ப்ப பலி என்பது இதே போல சிலைகளுக்குச் செய்யும் அபிஷேகம்

XXXX

என் கண் முன் கண்ட காட்சி

யாரோ ஒருவர் அன்பினால் செய்த விஷயத்தை  எல்லோரும் சட்டங்காகப் பின்பற்றத் துவங்கி விடுகிறார்கள்.பல சம்பிரதாயங்கள் இப்படித்தான் உருவாகின்றன.  மதுரை மீனாட்சி கோவிலில் நான் பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில் சென்ற போதெல்லாம் துர்க்கை அம்மனுக்கு முன்னர் எலுமிச்சம்பழ விளக்கினை யாரும் ஏற்றி வைத்ததில்லை. பின்னர் செவ்வாய்க் கிழமைதோறும் நூற்றுக் கணக்கானோர் இப்படிச் செய்யத் துவங்கினர்.   உடனே கோவில் நிர்வாகம் கட்டுப்பாடுகளையும் கட்டணங்களையும் கொண்டுவருகின்றன.

திருவண்ணாமலை கோவில் சந்நிதியில் வரிசையில் நின்று சாமியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்; கைக்கு எட்டாத உயரத்தில் அலங்கார  வளைவில் இறைவன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கொஞ்சம்  உயரமானவர் ஒருவர் அதை கஷ்டப்பட்டு எட்டிக் கைகளினால் தொட்டுக் கும்பிட்டாரா ர்; உடனே அவர் பின்னால்  இருந்த ஒவ்வொருவரும் குரங்கு போல எம்பிக் குதிக்கத் தொடங்கினர். அது பஸ்ஸில் வந்த கிராமத்துக்கு கும்பல்  இப்படி ஆயிரம்பேர் , அனுதினமும்  தொ ட்டால் அந்த உலோக உருவம் தேய்ந்துபோகும் அல்லது கீழே விழுந்துவிடும். ஆகவே பக்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும்,  பாமரன் செய்வதை குரங்கு தொப்பிக்காரன் கதை போல இமிடேட்/ IMITATE செய்யக்கூடாது (குரங்கு- தொப்பி வியாபாரி கதை முன்னரே எழுதியுள்ளேன் )..

XXXX

MANNARSAALA IN KERALA

நம்பூதிரி வீடு முழுதும் பாம்பு

PAMBUMEKKAT NAMBUDIRI RESIDENCE NEAR IRINJALAKUDA

கே ஆர் வைத்திய நாதன் எழுதி பாரதீய வித்யா பவன் வெளியிட்ட 1982-ம் ஆண்டு ஆங்கில நூலில் ஒரு தகவல் தந்துள்ளார். இரிஞ்சலக்குடா அருகில் பாம்பு மேக்காடு  நம்பூதிரி வீடு இருக்கிறது .அவர் வீடு முழுதும் நல்ல பாம்புகள்  நெளித்து ஓடும் . உள்ளெ வருவோர் அவைகளைத் தப்பித் தவறி மிதித்தாலும் அவைகள் கடிக்காது. நம்ப்பூதிரி குடும்பத்தினர் சொற்களுக்கு அவை கட்டுப்படும். அந்தக் குடும்பத்தினரை அவை காப்பாற்றுகின்றன.

  (நான் கூகுள் செய்து பார்த்ததில் தற்போது அந்த இடத்தில் பாம்புகள் ஆடி ஓடும் தகவல் ஏதும் இல்லை; இப்போது அங்கு  பெரிய பாம்புக்காவு, நாகர் சிலைகள் , வழிபாடுகள் உண்டு ஆயினும் குறிப்பிட்ட நாட்கள் மட்டு மே பக்தர்கள் செல்ல முடியும் ஆனால் மகாராஷ்டிர சேத்பல் கிராமம், ஆந்திரத்தில் தேளி னை தைரியமாக  வழிபடும் கிராமம் ஆகியவற்றைப் படிக்கையில்  இதிலும் உண்மை இருக்க வேண்டும். அந்த அர்ச்சகர் பாம்பு கடித்தோரையும் குணப்படுத்துகிறார் /.

Sree Pambummekkattu Mana, Mukundapuram, Thrissur

Blogger

https://devaayanamblog.blogspot.com › 2016/08 › sre…

9 Aug 2016 — The Pambu Mekkattu is spread over six acres of land with five “Serpant Kavus” (Kavu is sacred garden). The Pambummekkattu land is kept in its …

Pambummekkattu Mana situates at Vadama near Mala Town, Mukundapuram Taluk in Thrissur District, Kerala. It is believed that the divine presence of “Vasuki” and “Nagayakshi” are there in the “Kizhakkini” of Pambummekkattu Mana. Daily poojas are offered to Nagaraja and Naga Yakshi residing in the eastern portion of Mekkattu Mana. The Pambu Mekkattu is spread over six acres of land with five sarpakavu. The Mekkattu Namboodiri’s also treated the outsiders but now due to the advance in medical science people rarely comes for it.

XXXXX

மஹாராஷ்டிரா பாம்பு அதிசயம்  SHETPAL SNAKE WONDER

புனே நகரியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் சேட்பால் என்ற கிராமம் இருக்கிறது. சுமார் 2600 குடிகள் . எல்லார் வீடுகளிலும் நல்ல பாம்புகள் ஆடி, ஓடித் திரிகின்றன. . குழந்தைகள் வீட்டில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவது போல  செல்லும். யார்க்கும் எந்தத்  தீங்கும் செய்வதில்லை; பாம்பு கடித்து இறந்த சம்பவமும் இல்லை

A place called Shetpal is located around 200 kilometres from Pune, Maharashtra, in the Solapur district. Cobra snakes have a permanent residence in every house in this community; they are venerated every day in every heart and home!

Shetpal, also known as Shetphal, is a hamlet in the Mohol taluka of the Solapur district of Maharashtra. The nearest town to Shetpal is Kurduvadi, which is around 22 kilometres away. It is the town for all its main commercial activity..

— SUBHAM—–

TAGS–  மன்னார் சாலை, பாம்பு வழிபாடு, சர்ப்ப காவு, நாகராஜா, நாக யக்ஷி, உருளி, குழந்தைப் பேறு , நாகா தோஷம், நாகர் கோவில் , மகாராஷ்டிரம் , பாம்பு வீடு, வலிய அம்மா 

பவணந்தி முனிவரை நன்னூல் இயற்ற வேண்டிய சீயகங்கன்! (Post.12,731)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,731

Date uploaded in London –  –  18 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கொங்குமண்டல சதகம் பாடல் 46

பவணந்தி முனிவரை நன்னூல் இயற்ற வேண்டிய சீயகங்கன்!

ச.நாகராஜன்

தமிழ் இலக்கியங்கள் ஏராளம். தமிழ்க் காப்பியங்களின் ஒப்பு தப்புகளைத் தெரிந்து கொள்வதற்கு – அதாவது குண தோஷங்களைத் தெரிந்து கொள்வதற்கு – ஒரு வழி இல்லையே என நினைத்த போது தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தை மிகத் தெளிவாக விளக்கியது.

ஆனால் இப்பெரும் நூலை சுருக்கி ஒரு நூல் வேண்டும் என்று நினைத்த சீயகங்கன் என்னும் மன்னன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்று பெருமைப்பட்டு தனது 46வது பாடலில் கொங்குமண்டல சதகம் அவனைப் புகழ்ந்து சொல்கிறது.

மைசூர் ராஜ்யத்தை சேர்ந்த ஊர் கோலார் பட்டணம். அதை தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் கங்க வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் அரசாண்டு வந்தனர்.  தங்கள் மெய்கீர்த்திகளில் குவளாலபுர பரமேசுரர்கள் என்றும், நந்திகிரிநாதர் என்றும் அவர்கள் தம்மைக் கூறிக் கொள்கிறார்கள்.

குவளாலபுரம் என்பதே கோலார் என்று மருவி இப்போது அப்படி அழைக்கப்படுகிறது.

இதை ஆண்ட  மன்னர்களில் ஒருவன் சீயகங்கன். அவன் தமிழ்ப் புலவர்களின் ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாக அமையும் தொல்காப்பியத்தை முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்து அறிந்து கொள்ள சிலரால்  மட்டுமே முடிகிறது;  ஆதலால் அந்த நூல் கூறும் எழுத்து முதலிய ஐந்திலக்கணங்களை அனைவரும் எளிதாகக் கற்க ஒரு நூலை இயற்ற வேண்டும் என்று எண்ணினான்.

அதற்குத் தக்கவர் பவணந்தி முனிவரே என்பதை நிச்சயித்த அவன் அவரை அணுகி தன் எண்ணத்தைச் சொல்லி அவரை வேண்டினான்.

அவரும் நன்னூல் என்னும் சிறந்த இலக்கண நூலை இயற்றினார்.

“தமிழ்க் கடலுள்

அரும்பொருளைந்தையும் யாவரு முணர

தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்

இகலற நூறி யிருநில முழுவதுந்

தனதெனக் கோலித் தன்மத வாரணந்

திசைதோறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்

கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்

திருந்திய செங்கோற் சீய கங்கன்

அருங்கலை விநோதன் அமராபரணன்

மொழிந்தனன்”

என நன்னூல் சிறப்புப் பாயிரம் இப்படிக் கூறுவதால் இந்த வரலாற்று உண்மையை நன்கு அறிய முடிகிறது.

 சீயகங்கனுக்கு அமராபரணன், திருவேகம்பன் என்ற பெயர்களும் உண்டு.

கி.பி. 1178 முதல் 1216ஆம் ஆண்டு முடிய அரசு புரிந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தவன் இவன்.

சீயகங்கனின் மனைவியான அரியபிள்ளை திருவல்லத்தில் திருவல்லமுடைய நாயனார் கோவிலில் நந்தாவிளக்கு வைத்ததை ஒரு சாஸனம் குறிப்பிடுகிறது.

“ஸ்வஸ்தி ஶ்ரீ குலோத்துங்க சோழற்கு ஆண்டு 34வது அமராபரண சீயகங்க நம்பிராட்டியான அரியபிள்ளை திருவல்லமுடைய நாயனார்க்கு வைத்தௌ சந்தி விளக்கு ஒன்று நாச்சியார்க்கு வைத்த விளக்கிரண்டுக்கும் …..” என்று இப்படி சாஸனம் விளக்குகிறது.

ஆதாரம்: S.I.I.Vol III Part I Page 122-123.

இந்த வரலாற்றை விளக்கும் கொங்குமண்டல சதகப் பாடல் இது தான்:

சொல்காப்பியத்தின் குணதோடந் தேர்ந்து சொலுவதற்குத்

தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை

யொல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த

வல்கா வலன்சீய கங்கனுந் தான் கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தமிழ்க் காப்பியங்களின் குண தோஷங்களைத் தெரிந்து கொள்வதற்கு தொல்காப்பியம் விரிந்து கிடக்கின்றது. அதை தொகைவகையால் சுருக்கி ஒரு நூல் செய்தருள்க  என்று பவணந்தி முனிவரைக் கேட்டுக் கொண்ட சீயகங்கனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனேயாம்.

Rare Pictures of Hindu Gods from Asiatic Mythology Book (1932)- part 1 (12,730)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,730

Date uploaded in London – –  –  17 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This book contains pictures of Vedic Gods, Ashta Dik palakas, a strange figure of Lord Subrahmanya and some paintings. Asiatic Mythology was published in 1932 to do propaganda against Hinduism. Hindu women are shown in bad light. Book contains lot of Anti Hindu statements. Here are part 1 pictures:

MUSE GUIMET is in Paris

Brahma with Five Heads rare!

IT IS MANMATHA ON PARROT WITH RATHI???

STRANGE SUBRAHMANYA !!!

—subham–

Tags- Asiatic Mythology,  1932, Rare pictures, part 1

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 22 (Post 12,729)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,729

Date uploaded in London – –  –  17 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKAS 71,72,73

SLOKA 71

भवन्ति नम्रास्तरवः फलोद्गमै-

        र्नवाम्बुभिर्दूरविलम्बिनो घनाः ।

अनुद्धताः सत्पुरुषाः समृद्धिभिः

        स्वभाव एवैष परोपकारिणाम् ॥ 71॥

பவந்தி   நம்ராஸ்தரவஹ  பலோத்கமைர்

நவாம்புபிர்தூராவலம்பினோ கனாஹா  |

அனுத்ததாஹா  ஸத்புருஷாஹா  ஸம்ருத்திபிஹி

ஸ்வபாவ ஏஷ பரோபகாரிணாம் || 1.71 ||

பழங்கள் பழுத்தால் மரங்கள் வளைந்து நின்று பலம் கொடுக்கும்;

மேகங்ககளில் நீர் நிறைந்தால் தாழ்ந்து வந்து கொட்டும்;

நல்லோரும் அப்படித்தான்; வளம் நிறைந்தால் வலிய வந்து உதவுவர்– 71

71. Trees are bent low when fruits appear. Clouds hang very low when (filled) with new waters. Good people are modest in prosperity. This is the nature of altruistic people.

காய்த்த மரம் வளையக் கார்மேகம்  நீர்கொண்டு

சாய்த்த பளுவினாற் தாழுமே — வாய்த்த

பொருளுடையார் கர்வம் பொருந்தார் பிறர்பால்

அருளுடையார் ஆவார் அமர்ந்து — 71

XXXX

SLOKA 72

श्रोत्रं श्रुतेनैव न कुण्डलेन

        दानेन पाणिर्न तु कङ्कणेन ।

विभाति कायः करुणापराणां (विभाति कायः खलु सज्जनानां)

        परोपकारैर्न तु चन्दनेन ॥ 72॥

ஶ்ரோத்ரம் ஶ்ருதேனைவ ந  குண்டலேன

தானேன பாணிர்ன து கங்கணேன |

விபாதி காயஹ  கருணாபராணாம்

பரோபகாரைர்ன  து சந்தனேன || 1.72 ||

72. The ear is adorned by learning, not by an earring; the hand is adorned by giving, not by a bracelet. The form of kind people is radiant due to altruism and not sandal-paste.

அருளுடையார் நல்லோர் அருஞ் செவிக்குத் தோடு

பொ ரளுடைய நூற்கேள்வி  பொன்னின் உருளல்ல

கைக்கு நகை காப்பல்ல  காருண்ய தானமவர்

மெய்க்குப் பரோபகாரமே — 72

காதுக்கு அழகு நல்லவற்றைக் கேட்டல் ;;கர்ண குண்டலம் அல்ல;

கைக்கு அழகு வரையாது கொடுத்தல்; கங்கணம் அன்று ;

அவர்கள் மெய்க்கு / உடலுக்கு அழகு பரோபகாரம்; சந்தனப் பூச்சல்ல – 72

XXXX

SLOKA 73

पापान्निवारयति योजयते हिताय

        गुह्यं निगूहति गुणान् प्रकटीकरोति ।

आपद्गतं च न जहाति ददाति काले

        सन्मित्रलक्षणमिदं निगदन्ति सन्तः ॥ 73॥

பாபான்னிவாரயதி யோஜயதே ஹிதாய

குஹ்யம் நிகூஹதி குணான்ப்ரகடீகரோதி |

ஆபத்கதம் ச  ந  ஜஹாதி ததாதி காலே

ஸன்மித்ரலக்ஷணம் இதம் ப்ரவதந்தி ஸந்தஹ  || 1.73 ||

நல்ல நண்பன் யார் என்று சான்றோர் வருணிப்பர்:- நண்பனை தவறான செயல் செய்யாது தடுப்பான்;அவன் நலம்பெற வழி செய்வான்;அவனுடைய ரகசியங்களைக் காப்பான்; அவன் நற்குணங்களை முரசுபோலப் பறைகொட்டுவான்; துன்பம் வந்தால் விலகாமல் துணை நிற்பான் ; தேவையான தருணத்தில் வேண்டியதைக் கொடுத்து உதவுவான் – 73

73. Noble people say that such is the definition of a good friend: he saves one from sin, leads to welfare, protects secrets, publicises one’s virtues, does not leave one in distress, and gives (the needed things) at the right time.

நல்லது செய்வித்தல் நவையது நைவித்தல்

ஒல்லும் மறையுதவி ஓட்டுதல் – நல்ல

குணத்தைப் பலரறியக் கூறுதல் கேடுரின்

தணத்த லின்மை காலத் தருகை – இணக்கங்கூர்

இக்குணங்களெல்லாம் இசைந்த நன்னட்பினர்காஞ்

சற் குணங்களென்று நீ சாற்று  — 73

—subham—

Tags- பர்த்ருஹரி, நீதி சதகம், ஸ்லோகம் 71,72,73, நல்ல நண்பன் , Nitisataka, Good Friend

வற்கலை  ஜனார்த்தனர் கோவில்- 6 (Post No.12,728)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,728

Date uploaded in London – –  –  17 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 6

கோவில் எண் 5 –   வற்கலை  ஜனார்த்தனர் கோவில்

வற்கலையின் உடையானை

    மாசு அடைந்த மெய்யானை

நல் கலை இல் மதி என்ன

    நகை இழந்த முகத்தானைக்

கல் கனியக் கனிகின்ற

    துயரானைக் கண் உற்றான்,

வில் கையின் நின்று இடைவீழ,

    விம்முற்று நின்று ஒழிந்தான்.

என்ற மிகவும் படிக்கப்படும் கம்ப ராமாயணப் பாடலில் வற்கலை  வருகிறது. அதாவது மரவுரி. ; முனிவர்கள் மரத்தின் பட்டையால் ஆன ஆடையையே அணியவேண்டும் என்பது விதி. கைகேயி சொற்படி ராமனும் அப்படித்தான்  முனிவர் வாழ்க்கை வாழ்ந்தான் . அண்ணனைக் காட்டில் சந்திக்கச் சென்ற பரதனும் அப்படி  வற்கலை உடை  அணிந்து  சென்றதை பார்த்த குகன் கண்ணீர் விட்டு அழுதான்; இப்படி ஒரு தம்பி உலகில் இருந்தால் அவன் ஆயிரம் ராமனுக்குச் சமம் என்று கம்பன் புகழ்கிறான். நிற்க

இப்போது வற்கலை என்றால் மரப்பட்டையால் ஆன ஆடை என்பது உங்களுக்குத் புரிந்திருக்கும் . அதுதான் இந்த ஊருக்குப் பெயர். அதன் பின்னால் ஒரு கதை உள்ளது

வற்கலை என்னும் ஸ்தலம்  எங்கே உள்ளது ?

திருவனந்தபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

முதலில் சுவையான செய்திகளைக் காண்போம் :

அரபிக்கடல் அலை புரளும் காட்சிக்கு இடையே , அந்தக் கடற்கரையில் உள்ள குன்றில் ஜனார்த்தன சுவாமி என்ற பெயரில் விஷ்ணு குடி கொண்ட,  கோவில் கொண்ட,  க்ஷேத்ரம் .வற்கலை.

ஆசமனம் செய்யும் நிலையில் விஷ்ணு காட்சி தருகிறார். அவர் ஆசமனம் செய்யும் கை , வாயை நெருங்கினால் உலகமே பிரளயத்தில் அழிந்து விடுமாம். இது பக்தர்களின் நம்பிக்கை !

ஆசமனம் என்றால் என்ன ?

இது ஸம்ஸ்க்ருதச் சொல். உண்மையான பிராமணர்களுக்கு மட்டுமே விளங்கும் சொல்; ,அதாவது ஒரு வேளையாவது, பஞ்ச பாத்திர உத்தரணியை வைத்துக்கொண்டு பிராமணர்கள் தினமும் இதைச் செய்கிறார்கள் . வலது கையில்  ஒரு ஸ்பூன் ஜலத்தை விட்டுக்கொண்டு அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று மூன்று முறை  ஜலத்தை (WATER)  குடித்துவிட்டு பிள்ளையார் வழிபாட்டுடன் காயத்ரீ உபாஸனையைத் துவங்குவர் ( அப்படிக்  குடிக்கும் போது வாயில் எச்சில் படாமல், உறிஞ்சாமல், ஒரு உளுந்து மூழ்கும் அளவுக்கு மட்டுமே ஜலத்தை (WATER) அருந்த வேண்டும் ; இது ஹோமியோபதியின் அடிப்படை; உலகுக்கு இந்துக்கள் இதைக் கற்பித்தது பற்றி முன்னரே எழுதிவிட்டேன் )

வேறு என்ன சிறப்பு ?

இந்தத் தலத்தைச் சுற்றி  மலையில் நிறைய ஊற்றுகள் இருக்கின்றன. மூலிகைகள் நிறைந்த இடத்திலிருந்த நீரைச் அவை சுரப்பதால்  மருத்துவப் பயன்கள் மிக்கது. இதனால இந்தக் கடலில் குளித்தால் கூட நோய்கள் போய்விடும் என்ற நம்பிக்கையும்  உளது .

இன்னும் ஒரு சிறப்பு

16-1-1937ம் ஆண்டில் மஹாத்மா காந்தி இந்தக் கோவிலை தரிசித்துவிட்டு அருகிலுள்ள புகழ்பெற்ற சமூக  சீர்திருத்தவாதி  ஸ்ரீ நாராயண குருவின் ஆஸ்ரமத்துக்கு மூன்றாவது முறையாகச் சென்று சொற்பொழிவு நிகழத்தினார். இதை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் திருவனந்த புரம் சென்று அன ந்த பத்ம நாப சுவாமியைத் தரிசிப்போர் வற்கலை செல்லும்போது ராம நாமம் அகண்ட பராயணம் ஒலிக்கும் அபேதானந்த ஆஸ்ரமத்தையும் , நாராயண குரு மடத்தினையும் தரிசிக்க வேண்டும் (முடிந்தால் மதுமுரளி பத்திரிகையில் முரளீதர சுவாமி விஜயம் செய்த அபேதானந்த் ஆஸ்ரமக் கட்டுரையை வாசியுங்கள். சுவாமி அபேதானந்தா, மதுரைக்கு விஜயம் செய்தபோது நான் பள்ளிச் சிறுவன். அவருக்கு எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் நல்ல வரவேற்பு கிடைக்க வழிசெய்தார் . சுவாமி அபேதானந்தா,. பல ராகங்களில் ஹரே  ராம நாமத்தைப் பாடி பக்கதர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்..)

மேலும் ஒரு சிறப்பு

வற்கலை  ஜனார்த்தன சுவாமி (விஷ்ணு) கோவிலில் டச்சுக்காரர்கள் (ஹாலந்து நாட்டினர்) கொடுத்த லத்தீன் மொழி எழுதப்பட்ட ஒரு பெரிய மணியும் உள்ளது . அவர்கள் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கிய போதும் எல்லோரும் உயிர்தப்பினார்கள்; இதற்கு ஜனார்த்தனன் அருளே காரணம் என்பதைக் கேள்விப்பட்டு அந்த மணியை கோவிலுக்குக் கொடுத்தனர்.

வற்கலை  பெயரின் கதை

பிரம்மா ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த வைஜயந்தி சபையில் த்ரிலோக சஞ்சாரி நாரதர் (INTER GALACTIC TRAELLER NARADA)  நுழைந்தார்; வழக்கம் போல  நாராயணநாராயண  என்ற நாம ஸ்மரணம் செய்துகொண்டே நுழைந்தார். அதைக்கேட்ட பிரம்மாவுக்கு விஷ்ணுவே அங்கு வந்ததாகத் தோன்றியது; நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து நாராயணனே  நமக்கே பறை தருவான் (பறை = விரும்பிய பொருள் 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி ) என்று போற்றினார். சபையில் இருந்தவர்கள் கொல் என்று சிரித்தனர்; பிரம்மரே ! வந்திருப்பவர் விஸ்ணு அல்ல ; நம்ம ஊரு நாரதன்தான்; அவருக்கென்ன இவ்வளவு கும்பிடு? மதி மயக்கமோ  என்று எள்ளி நகையாடினர்; பிரம்மாவின் உயர் நிலை அவர்களுக்குப் புரியவில்லை;  கொடுத்தார் ஒரு சாபம்;!! பூ லோகத்தில  பொறந்து பாடம் கற்று வாருங்கள் என்று சபித்தார்; அனைவரும் குய்யோ, முறையோ என்று அழுது புரண்டு சாப விமோசனம் வேண்டினர்..உடனே நாரதரே பதில் சொன்னார். நான் என் பழைய வற்கலையை (மரவுரி ஆடை old bark clothe ) தூக்கி எரிகிறேன் . அது எங்கு விழுகிறதோ அதுவே உங்கள் சாப விமோசன இடம்; அங்கே தவம் செய்யுங்கள்; உங்களுக்கு பிரம்ம லோக்த்துக்குத் திரும்பி வருவதற்கு return ticket ரிட்டர்ன் டிக்கெட் கிடைக்கும் ; ஒரு பாஸ்போர்ட், விசா neither passport nor visa required தேவை இல்லை என்றார் . அவர்களும் பூவுலகிற்கு வந்து விடுதலை பெற்றனர் . அந்த இடமே புனித வற்கலை . அங்கே அவர்கள் எழுப்பிய கோவில் கடலினால் மூழ்கடிக்கப்பட்டது. இப்போதுள்ள கோவில் கரையில் அமைக்கப்பட்ட புதுக் கோவில் அங்கு 1252- ம் ஆண்டு கல்வெட்டு கோவில் கட்டிய செய்தியைக் கூறுகிறது.. பாண்டிய மன்னன் ஒருவன் தற்போதுள்ள சிலையைக் கடலிலிருந்து மீட்டுப் பிரதிஷ்டை செய்த கதையும் உண்டு.

புரந்தர தாசரால் பாடப்பட்ட இறைவன்;  பலராமன் மகா பாரதப்  போரில் வெறுப்பு கொண்டு கண்ணனுடன் டூ போட்டுவிட்டு (போ, உன்னுடன் நான் பேச மாட்டேன் என்று சொல்லி கோபித்துக் கொண்டு போவதை டூ போடுதல் என்று பள்ளி மாணவர்கள் பகர்வார்கள் ) நாடு முழுதும் யாத் திரை சென்ற பல ராமன் ( கண்ணனுடைய அண்ணன் ) இங்கும் வந்ததாக இந்துமத நூல்கள் செப்பும்.

கடவுளின் தோற்றம்

கையில் சாட்டை வைத்துள்ள  விஷ்ணுவின் பார்த்தசாரதி தோற்றத்தை அம்பலப்புழா கோவிலில் சென்ற கட்டுரையில், கண்டோம்  . இங்கு வற்கலையில் ஜனார்த்தன சுவாமி கும்பம்/பாத்திரம் ஏந்திய கையுடன் ,ஒரு கை ஆசமனம் செய்யும் நிலையில் இருப்பதைக் காண்கிறோம் ; மற்ற மூன்று கைகளில் சங்கு , சக்கரம், ‘கதை’ யுடன் இருப்பார் சுதர்சன சக்கரத்தால் கங்கை நீரை க் கொண்டு வந்ததாகவும் அதுவே இங்கு சக்கர தீர்த்தமாக இருப்பதாகவும் ஐதீகம் (வரலாறு).. அங்கிருந்தே கோவிலுக்குத் தேவையான தண்ணீர் எடுக்கப்படுகிறது. பூதேவி ஸ்ரீ தேவி சஹிதம் ஜனார்த்தன சுவாமி இருக்கிறார்

மூர்த்திக்கு சந்தனத்தால் முகச் சார்த்தும் முழுக் காப்பும் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மீன மாத்தில் (சூரியன் மீன ராசியில் இருக்கும் மார்ச் ஏப்ரல்) பத்து நாள் ஆராட்டு உற்சவம் நடக்கிறது .

இங்குள்ள பாபநாசம் ஊற்று புகழ்பெற்றது ஆரோக்கியத்தை அளிக்க வல்லது . நோய் குணமாவதற்காக வெளிநாட்டிலிருந்தும் மக்கள் வருகிறார்கள் .

17ம் நூற்றாண்டில் உமையம்மா  ராணி 1677- 1684 என்பவர் கோவில் திருப்பணி செய்த கல்வெட்டு ஒன்று இருக்கிறது. மேலும் இங்கு நம்பூதிரிகள் பூஜை செய்யாமல் துளு பிராமணர்களே பூஜை செய்வது தனித்துவத்தைக் காட்டுகிறது  வட்ட வடிவில் அமைந்துள்ள கர்ப்பக்கிரகத்தைக் காண, படிகள் ஏறிச் செல்ல வேண்டும் .

சதுர வடிவில் அமைந்துள்ள முன் மண்பத்தில் மரச் சிற்பங்கள் இருக்கின்றன. கூரையில் நவக்கிரகங்கள் செதுக்கப்பட்டுள்ளன  கோவிலில் கணபதி, சிவ பெருமான் மூர்த்திகளும் வழிபாட்டில் உள்ளன.

இங்கு பித்ருக்களை கரையேற்றும் சடங்குகளும் செய்யப்படுகின்றன

ஆராட்டு  விழாக்காலத்தில் இரவு முழுதும், புராணக் காட்சிகளை சித்தரிக்கும் கதகளி நடனம் நடைபெறுகிறது புதிதாக கதகளி கற்றோர் அரங்கேற்ற வைபவங்களும்  அதில் இடம்பெறுகின்றன

BOOKS USED

TEMPLES AND LEGENDS OF KERALA, K R VAIDYANATHAN, B V BHAVAN, 1982, BOMBAY

THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937

TEMPLE WEBSITES; PICTURES FROM WIKIPEDIA AND WEBSITES

—- SUBHAM —

TAGS- வற்கலை , ஜனார்த்தன சுவாமி, ஆசமனம், பிரம்மா, நாரதர், மரவுரி, வற்கலையில் உடையானை , நாராயண குரு , அபேதானந்தா , சிவகிரி, கேரள கோவில்கள் – Part 6

Forgotten Arts of India! (Post No.12,727)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,727

Date uploaded in London –  –  17 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

Forgotten Arts of India! 

Santhanam Nagarajan 

“Indian art is essentially idealistic mystic, symbolic, and transcendental, the artist is both priest and poet” so says E.B.Havell in his book “Indian Sculpture and painting.

 Indian Science and the Arts ruled the world once. We have forgotten our own glory now. One should at least think about the glorious past and what we were capable of. Susrutha had carried out an operation on skull successfully.

 Vallalar, the great saint of Vadalur, has given the properties of 464 herbs. It seems that one could cure any disease including Covid provided he/she could identify the herbs. Unfortunately the great Siddha Vaidyas are vanishing. Our great researchers say that it is a customary practice for most of the kings of Bharat to have Brahmins who could easily recite one lakh slokas from their memory.

There are poets who called as Asu Kavis, meaning they could compose any challenging poem once the last line is given extembore!

Lakhs and lakhs of slokas are available in Sanskirt as well as in Tamil.

Maha Subhasita Sangraha alone gives thousand of poems in eight volumes.

And to our surprise we learn that there are 4 crore palm leaves left unopened till this day. Who is going to read and interpret all the secrets from those slokas.

 One Tamlil professor of Tanjore has revealed the forming of Magic Squares from only one poem in Tamil which she was able to get from Saraswathi Mahal, Tanjore.

 Needless to say, that everyone knows now, the Vedic Mathematics in 16 simple sutras now rule the world. Several world leading universities are teaching our Vedic Mathematics. This method was discovered by Jagadguru Shri Bharathi Krishna Tirtha in 1911 from Vedic Suktas.

 Sadavadanam is a peculiar memory art practiced by learned pundits. In this one participant will give a difficult problem to solve when some other will give one line of one poem. At the same time one person will be throwing grains at the back of the pundit. Thus 100 things variant in nature will be simultaneously done and the sadavadani should complete his task by composing the poem, telling the correct no grains thrown at him etc.

Amazing but it is true.

 People who had a snake bite usually called a station master and by his mantra he used to cure the person. 

One Vichuli Vithai is an unbelievable art of Tamils. In this the lady will be on a pole and while showing all her magic tricks on the pole suddenly she will throw her nose ring. And like a Vichuli bird she will, in one jump get it fixed on her nose and will again climb. All this will happen in a fraction of a second! This has been enumerated in Kongu Mandala Sathakam, verse no 33. 

One may wonder to know that Nala- Damayanthi story was repeatedly told in our ancient Vedas. Nala is supposed to cook anything without water and fire. Now we are cooking with electric equipments. So we may know what is meant by cooking witout fire. But what about water? The science may answer one day!

 The Yoga is all famous through out the world. Many laboratories are now

experimenting levitation which is one of the eight siddhis. The Science of Yoga may convince the scientists with regard to these eight Siddhis.

 Already universities in US found amazing results with regard to telepathy,

transportation through mind etc.

 Regarding war tactics Gen Choudry has written an article regarding Mahabharat Vyuhas.

 Nobody could forget Indian  Wrestlers including Tara Singh.

 One Subbaraya Sastry has given a long list of special arts in which the Indians excelled. Building a plane is also include in this list. Last but not least we may add Kind Bhoja’s several works on wonderful arts .

 Where and why we have lost our wisdom?

 We will try to find out a fitting answer to this question, of course after 75 years of our independence.

***

New Tamil Lesson 15 (Interrogative Sentences)- Post 12,726

PICTURE – AMMAAVUM PENNUM (MOTHER AND DAUGHTER)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,726

Date uploaded in London – –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 PEN= DAUGHTER OR ANY LITTLE GIRL

(Interrogative= Question)

Where do you live?

எங்கே நீ வசிக்கிறாய் ?

Enge , nee, vasikkiraai ?

Where , you, live= where do you live?

xxx

Where is your house?

எங்கே  உன்னுடைய  வீடு இருக்கிறது?

Enge unnudaiya (or UN) veedu irukkirathu?

Where your house is?

xxx

This is a book/pen/room/kitchen/bed room

இது புஸ்தகம் / பேனா/ அறை /சமையல் அறை / படுக்கை அறை

Ithu , pustakam/ penaa/ arai/ samaiyal arai/ patukkai arai

This (is a ) book/ Pen/ Room/ Cooking room(kitchen)/ bed room

xxx

Is he your father/brother/friend?

அவர் உன் / உன்னுடைய / உங்களுடைய அப்பாவா? அண்ணனா ? நண்பனா / நண்பரா ?

Avar un/ Unnudaiya/ ungkaludaiaya appaavaa/

He your father? / elder brother? Friend? Friend (with respect)?

Avar = he; but respectful HE; the R sound at the end is respectful

UN and UNNUDAIYA= YOUR

But when you say UNGALUDAIYA= plural or respectful singular

xxx

Is she your mother/sister?

அவர்கள் / அவள்/  உன் / உன்னுடைய / உங்களுடைய அம்மாவா ? அக்காவா  ? தோழியா

Avarkal / aval/ un/ Unnudaiya/ ungkaludaiaya Ammaavaa? Akkaavaa? Thoziyaa?

Avarkal + They/ but here it is used for SHE with respect.

When you want to ask question you add AA at the end = akkaaVAA, ammaaVAA/ toziYAA

xxx

There is a new building.

அங்கே ஒரு புதிய வீடு இருக்கிறது

Ange our puthiya veedu irukkirathu.

There , a, new, house , is

xxx

That is an old building

அது ஒரு பழைய கட்டிடம்

Athu , oru, pazaiya, kattidam

That . one or a, building

—சுபம் —

 TAGS-  NEW TAMIL, LESSON,         INTERROGATIVES

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 21 (Post No.12,725)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,725

Date uploaded in London – –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 21

SLOKAS  68, 69, 70

SLOKA 68

प्रीणाति यः सुचरितः पितरं स पुत्रो

        यद्भर्तुरेव हितमिच्छति तत् कलत्रम् ।

तन्मित्रमापदि सुखे च समक्रियं यद्

        एतत् त्रयं जगति पुण्यकृतो लभन्ते ॥ 68॥

ப்ரீணாதி யஹ  ஸுசரிதஹி  பிதரம் ஸ புத்ரோ

யத்பர்துரேவ ஹிதம் இச்சதி தத் களத்ரம் |

தன்மித்ரம் ஆபதி ஸுகே ச ஸமக்ரியம் யத்

ஏதத்த்ரயம் ஜகதி புண்யக்ருதோ லபந்தே || 1.68 ||

நன்னடத்தையால் தந்தையை மகிழ்விப்பவனே நல்ல புத்திரன்கணவனின் நன்மையை மட்டுமே நினைப்பவள்தான் நல்ல மனைவி ;இன்பத்திலும் துன் த்திலும் பங்கு கொள்பவனே நல்ல நண்பன் இந்த மூன்றும் கிடைப்பது அரிது புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் — 69

68. He is a son who pleases his father with good deeds. She is a wife who desires only the welfare of the husband. He is a friend who behaves the same in adversity and in happiness. Only those with merit acquire these three in this world.

தந்தை மனத்திற்குச் சந்தோஷம் நன்னடையால்

சந்ததஞ் செய்வோனே  தனயனாம் — நிந்தையறக்

கொண்டார்க்கு நன்மை செய்க் கோருகின்ற- ஒண் டொடி யே

பெண்டாட்டி செல்வம் பெறும்போதும் திண்டாட்டம்

எய்து பொழுதும்  இணக்கம் விடாதவனே

மெய் திகழும் நண்பனாம் மேலான – செய் கையுள

இன்னோர்கள் எல்லார்க்கும் எய்தார்கள் புண்ணியர்க்கே

உன்னதமாய் கிட்டிடுவர்  என்றோது – 68


XXXX

SLOKA 69

एको देवः केशवो वा शिवो वा

        ह्येकं मित्रं भूपतिर्वा यतिर्वा ।

एको वासः पत्तने वा वने वा

        ह्येका भार्या सुन्दरी वा दरी वा ॥ 69॥

ஏகோ தேவஹ கேஶவோ வா ஶிவோ வா

ஹ்யேகம் மித்ரம் பூபதிர்வா யதிர்வா |

ஏகோ வாஹ  பத்தனே வா வனே வா

ஹ்யேகா பார்யா ஸுந்தரீ வா தரீ வா || 1.69 ||

புத்திசாலியானவன் சிவனையோ விஷ்ணுவையோ மட்டும் வணங்குவான்;

ராஜாவுடனோ ஒரு சாது சன்யாசியுடனோ நட்பு கொள்வான்;

நகரத்திலோ  கானகத்திலோ வசிப்பான்;

அழகான மனைவியுடன் வாழ்வான் அல்லது காட்டிலுள்ள குகையை நாடுவான்— 69

XXXX

SLOKA 70

नम्रत्वेनोन्नमन्तः परगुणकथनैः स्वान् गुणान् ख्यापयन्तः

        स्वार्थान् सम्पादयन्तो विततपृथुतरारम्भयत्नाः परार्थे ।

क्षान्त्यैवाक्षेपरुक्षाक्षरमुखरमुखान् दुर्जनान् दूषयन्तः

        सन्तः साश्चर्यचर्या जगति बहुमताः कस्य नाभ्यर्चनीयाः 70

நம்ரத்வேனோன்னம ந்தஹ   பரகுணகத னைஹி  ஸ்வான்குணான்க்யாபயந்தஹ

ஸ்வார்தான்ஸம்பாதய ந்தோ விததப்ரு துதராரம்பயத்னாஹா  பரார்தே |

க்ஷாந்த்யைவாக்ஷேபருக்ஷாக்ஷரமுகரமுகான்துர்ஜனான்  தூஷயந் தஹ 

ஸந் தஹ  ஸாஶ்சர்யசர்யா ஜகதி பஹுமதாஹா  கஸ்ய நா ப்யர்சனீயாஹா  || 1.70 ||

70. Who would not worship respectable, good people whose conduct is extraordinary – rising due to humility; making their own virtues known by narrating others’ virtues; achieving their own ends by efforts in vast undertakings for others’ sake; vitiating foul-mouthed abusers by their patience alone ?

அடக்கத்தால் நல்லோர்கள் யார்க்கு மேலான

இடத்தைப் பெறுவார்கள் என்றும் — திடத்துடனே

மற்றவரைப்  பூஷித்து  வாழ்த்துவதால் தம்முடைய

கற்றறிவை நன்னி னைவைக் காட்டுவார் உற்ற

பிறர் கருமத்திற்காகப்  பேருதவி செய்து

திறமுடன் தம்ம தெரிப்பார்  — உறவின்றி

தம்மைக் கடினமாத்  தாறு மாறாவேசம்

அ ம்ம தீயோர் பால் அ ரும் பொறுமை செம்மை பெற

காட்டி யவரைக் கலக்குவிப்பார்  இன்னாரை

நாட்டினில் போற்றார் ஆர் நாட்டு—70

–subham—

Tags- Nitisataka, slokas 68,69, 70, part 21, Bhartruhari

Indian Treasures in Switzerland Modi ji Please Bring them Back! (Post No.12,724)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,724

Date uploaded in London – –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Valuable Indian statues and paintings are in Zurich Museum in Switzerland; like Modi ji, Prime Minister of India, brought back Indian art treasures from America and Australia, he must get them back from London and other European cities.

Here are some treasures in Zurich: Ganesh, Siva, Uma, Chandra, Ambika, erotic sculptures and paintings  (Pictures attached)

Ambika

Divine couple 

The catalgue of museum gives ful ldetails of statues.

—subham–

Tages- Indian , art treasures in Zurich museum, Swiss museum , get them back, Rietberg museum