
Post No. 12,797
Date uploaded in London – – – 4 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
காந்திஜி சொற்பொழிவுகளில் தீவிரம் காட்டினாலும் சம்பாஷணைகளில்/ உரையாடல்களில் ஜோக் Joke அடிப்பார்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசி கிண்டல் செய்வார்.
காந்திஜி சென்ற பாதையெல்லாம் அவரைக்காண பிரமாண்ட கூட்டம் கூடி விடும்; இதனால் அவருக்கு தூக்கம் என்பது கூட கிடையாது
1937 ஜனவரி, சங்கரன்கோவில்

ரயில் நிற்காத ஸ்டேஷன்களிலும் கூட ரயில் பாதையை ஒட்டி ஏராளமான மக்கள் நிற்பார்கள்; இதனால் ரயில் மெதுவாகச் செல்லும். இதற்கு இரண்டு காரணங்கள்; 1.தேசபக்திக்கனல் நாடு முழுதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது 2 பாரதி பாடியதை அவர் இறந்த பின்னர் காந்திஜி நடைமுறைக்கு கொண்டுவந்தார். பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை, பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை என்று பாடிய சுப்பிரமணிய பாரதி 1921ம் ஆண்டில் இறந்துவிட்டார். அந்த ஆண்டுதான் வைக்கம் போராட்டம் துவங்கியது. 1936ம் ஆண்டு நவம்பரில் 2200 கோவில்களை திருவாங்கூர் மஹாராஜா எல்லா ஜாதியினருக்கும் திறந்து விட்டதால் வைக்கம் சத்தியாக்கிரக புரட்சி வீரர் காந்திஜியின் மீது கீழ்ஜாதி மக்களுக்கு பேரார்வமும் பேரன்பும் ஏற்பட்டது.
சங்கரநாராயணார் கோவில் ஸ்டேஷனில் ரயில் சில நிமிடங்களுக்கு நின்றது. ஹரியும் சிவனும் ஒன்று என்று அறிவிக்கும் புகழ்பெற்ற கோவிலை ஸ்டேஷனிலிருந்தே பார்க்க முடியும்.
கூட்டத்தைப் பார்த்து காந்திஜி கேட்டார்:
இதோ நான் பார்க்கும் கோவிலை எப்போது ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்போகிறீர்கள்?
உடனே கூட்டத்தினர் உற்சாகமாக வெகு சீக்கிரத்தில் என்று பதில் குரல் கொடுத்தார்கள் .
அப்படியா ! நான் திருவாங்ங்கூரிலிருந்து திரும்பி வருகையில் என்னை கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பீர்கள் இல்லையா? சரி தானே !
உடனே கூட்டத்தில் பெரும் சிரிப்பும் பேரார்வமும் கூச்சலும் கிளம்பியது
ஆமாம், ஆமாம்
ஆனால் எங்கு மிருகங்கள் பலியிடப்படுகின்றனவோ அந்தக் கோவிலுக்கு நான் வரமாட்டேன். ஒரு பாவமும் செய்யாத பிராணிகளை நம்முடைய பாவத்தைக் கழுவ பலியிடக்கூடாது; இந்து மத்தில் எந்த சட்ட புஸ்தகமும் அப்படிச் செய்ய சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அது ஸ்மிருதியே (இந்து சட்டப்புஸ்தகம் ) இல்லை; அப்படி பலி இட்டால் அதை நிறுத்தி விடுங்கள் .
உடனே ரயில் விசிலை ஊதிக்கொண்டு புறப்பட்டது.
xxxxx
இதையெல்லாம் தேதிவாரியாக காந்திஜியின் அந்தரங்க செயலர் மஹாதேவ தேசாய் , திருவாங்க்கூர் இதிகாசம் என்ற நூலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்
xxxx
திருவாங்கூர் சமஸ்தானத்தில் 24 கோவில்களை தரிசித்துவிட்டு திரும்பிய காந்திஜியை பலரும் பேட்டி எடுத்தார்கள்.அதற்கு காந்திஜி அழைத்த பதில்:
“புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷத்தோடு திருவாங்கூரிலிருந்து திரும்பி வந்துள்ளேன். நான் அங்கே கண்டவை என் கற்பனைக்கு அப்பாற்பட்டவை;அவை என் இதயத்தைத் தொட்டுவிட்டன. கோவில்கள் பற்றியும் கோவில் வழிபாடு பற்றியும் உயர்ந்த , மதிப்புமிக்க எண்ணங்களை அவை என் மனதில் பதித்துவிட்டன ; நான் இதற்கு முன்னர் வட இந்தியாவிலும் பல கோவில்களுக்குச் சென்றேன்; ஆனால் அவை என் உள்ளத்தில் பக்தியை ஏற்படுத்தவில்லை; என்னைத் தட்டி எழுப்பவும் இல்லை.ஆனால் பிரமிக்க வைக்கும் திருவாங்கூர் கோவில்கள் என்னுடன் பேசின. அங்குள்ள ஒவ்வொரு படமும், சிற்பமும், சிறிய எண்ணெய் தீபமும் எனக்கு ஒவ்வொன்றைக் கற்பித்தன; அதற்காக அங்கு கண்ட எல்லாம் எனக்கு திருப்தி அளி த்ததாகவும் சொல்லமாட்டேன். நான் என்னுடைய புரட்சிகரமான திட்டத்தை மகாராஜாவுக்கு முன் வைத்தேன். மகாராஜா செய்த பிரகடனத்தை புரட்சி என்றே சொல்லுவேன்.
xxxx
ஹரிஜன்
தாழ்த்தப்பட்ட மக்களை நான் ஹரிஜன் = இறைவனின் புதல்வர்கள் என்று அழைக்கிறேன். இது நான் உருவாக்கிய சொல் அல்ல. ஒரு ஹரிஜன்தான் இந்த சொல்லை உருவாக்கினார். நான் தென் ஆப்பிரிக்க நாட்டில் வக்கீலாக தொழில் செய்தபோது என்னை கூலி வக்கீல் என்று அழைத்தனர். நாம் இங்குள்ள கீழ்ஜாதிக்காரர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொன்னது போல. தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர் பாஷையில் கூலி என்றால் இந்தியர்; நான் அதை ஆட்சேபித்தேன். நான் இந்தியன்; என்னை இந்திய வக்கீல் என்று சொல்லுங்கள் என்று அறிவுறுத்தினேன்.
திராவிட கன்னட நாயக்கர் கடவுளையும் அவரைக் கும்பிடுவோரையும் அயோக்கியன், காட்டுமிராண்டி என்று சொன்னதை கோவில் வாசலில் வைத்தவர்கள் அயோக்கியர்கள் என்பதை காந்திஜியின் சொற்பொழிவு தெளிவாக்குகிறது; அந்த சிலைகளை தமிழர்கள் அகற்றாத வரை காந்திஜியின் பெயரைச் சொல்லவோ படத்தை வைத்துக்கொள்ளுவதோ மஹா பாவம்; சுத்த நடிப்பு; பித்தலாட்டம் என்றும் சொல்லலாம். மனச் சாட்சி உள்ளவர்கள் அவற்றை அமைதியாக அகற்ற வேண்டும். மலையாளி இந்துக்கள் இந்த வாசகங்களை பொறிக்க வைக்கத்தில் கூட அனுமதிக்கவில்லை.
–சுபம் —
Tags- ஹரிஜன் , திருவாங்கூர்,சங்கரன்கோவில், காந்திஜி